BREAKING NEWS
Search

விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமானது! – மத்திய அரசு அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமானது! – மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவசர கெஜட் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை சட்டவிரோதமாக அறிவித்திருப்பதற்குக் காரணம், புலிகளை ஆதரிக்கும் பத்திரிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தவே என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவரச அரசணையில் (எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும் எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், இந்திய அரசு மற்றும் இலங்கை அரசை பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத் தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.டி.டி.இ. போராளிகள், அந்த அமைப்பைவிட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.டி.டி.இ. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது.

2) புலிகள் மீது தடை அமலில் இருந்தும், இந்தியாவில் எல்.டி.டி.இ. ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

3) இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.டி.டி.இ. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

எல்.டி.டி.இ. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

மேலும் அ) எல்.டி.டி.இ. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும்,

ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை (எல்.டி.டி.இ) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது.

இவ்வாறு இந்த அவரச கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




15 thoughts on “விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமானது! – மத்திய அரசு அறிவிப்பு

  1. karthik

    உங்களின் இந்த பயம் தாண்ட எங்களுக்கு ரொம்ப புடுச்சு இருக்கு..

  2. gobinath

    hahahahaha

    hiyo hiyo

    poda poi soniyavukku bra,jutty thovachi podu
    thunai venumna unga elavuthurai sorry ulavuthurai,chidamparam,kelattu nai karunanithi
    ellathaiyu kuttikkittu po

    prabakaran nizhala kuda touch panna mudiyatdu

  3. palPalani

    @karthik: உங்களோட கமெண்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

  4. vasanth

    செத்து போனவன் நிழல யார் டச் பண்ண முடியும் ,இலங்கை தமிழர்களில் முக்காவாசி பெரிய அறிவழிகள் ,அதற்கு சான்று மேல இரண்டு மன்கிகள்

  5. வடக்குப்பட்டி ராமசாமி

    எங்களுக்கு ஒரு அறிவாளி கிடச்சுட்டாறு!
    எங்களுக்கு ஒரு அறிவாளி கிடச்சுட்டாறு!!
    எங்களுக்கு வசந்த் -ன்னு ஒரு அறிவாளி கிடச்சுட்டாறு!!!

  6. sathish

    இந்தியாவில் இருக்கும் அனைவரும் புத்திசாலிகள் அதற்கு சான்று மேலே உள்ள அன்பர்

  7. sathish

    நான் குறிபிட்டது வசந்த் அவர்களை

  8. ந.நவில்

    புலி மிகவும் அபாயகரமான் விலங்கு என்பதால் இனி சிங்கமே தேசியவிலங்காக அறிவிக்க படுகிரது

  9. Raja

    //இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.//
    அப்ப பொது மக்களுக்கு பாதிப்புனா எதும் செய்ய மாட்டீங்க. பொது மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை தர மாட்டீங்க.
    வாழ்க ஜனநாயகம் !!!

  10. Manoharan

    இவர்களை பொருத்தவரை விடுதலை புலிகளை அழித்தாகிவிட்டது. அப்புறம் எதற்க்கு இந்த தடையெல்லாம்..? உலகிலேயே ஒரு பயந்தாங்கொள்ளி அரசாங்கம் என்றால் அது தற்போதய காங்கிரஸ் அரசுதான். புலிகள் அமைப்பின் ஒரு ஆள் உயிரோடு இருந்தால் கூட பயந்து நடுங்கும் தொடைநடுங்கிகள் சோனியா வகயறாக்கள். இந்த பயம்தாண்டா தமிழனின் வீரத்துக்கு சாட்சி. புலி என்ற பெயரை கேட்டால் கூட இவர்கள் நடுங்கியே செத்துவிடுவார்கள்.

  11. சரவணன்

    இந்திய அரசே மக்கள் விரோதமானது.இங்கே சட்டமே இல்லை.இத்தாலிகாரி அடி வருடிகளாக மாறியது தமிழ் (சிங்கம்.) சங்கம்.இனி இங்கே தமிழ்த் தாய் வாழ்த்து கிடையாது.இத்தாலி தாய் வாழ்த்துதான்.எல்லோரும் லத்தீன் படியுங்கள்.

  12. virudhai puli

    வசந்த் மாதிரி ,தமிழன் அல்லாத மானம் கெட்ட ஈத்தரை எல்லாம் ,தமிழ் லையே தமிழ் உணர்வ புன்படுத்துது ,,,உயர் பதவியில் இருக்கும் சோனியா கருணாநிதி முதற் கொண்டு ,இந்த வீனா போனவன் ****** வசந்த் போன்ற மனிதம் மறந்த ****** கேவலமா எப்படி வாய் பேசி வாழறாங்க ??????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *