BREAKING NEWS
Search

விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!

விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!

லண்டன்: வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர்.

இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 நேற்று வெளியிட்டது. பார்ப்பவர்களை கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர்.

வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வை பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது, ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் வெளிவந்தவண்ணம் உள்ளது.

இந்த காட்சிகள் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நெஞ்சை பதறச் செய்து வருகிறது. அது தொடர்பான வீடியோ காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற தொலைக்காட்சி அவ்வப்போது ஒளிபரப்பி அம்பலப்படுத்தி வருகிறது.

இந்த கோரங்கள் அனைத்துக்கும் முக்கிய காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டனில் தங்கியுள்ள நிலையில், அதே நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4, புதிய வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பியது.

விடுதலைப் புலிகளின் நிருபராகவும், போராளியாகவும் செயல்பட்டவர் இசைப்பிரியா.

இலங்கை ராணுவத்தின் கர்னல் நிலை அதிகாரி ரவிப்பிரிய என்பவரின் தலைமையில்தான் இந்த சித்திரவதை அரங்கேறியுள்ளது. அவர் கண்முன்னாலேயே இசைப்ரியா சிதைத்து சீரழிக்கப்பட்டுள்ளார்.

இசைப்பிரியா கைது செய்யப்பட்டது முதல் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்த ரவிப்பிரியவின் தலைமையில் வழிநடத்தப்பட்ட படையணியே காரணமாக இருந்திருக்கின்றது.

இசைப்பிரியாவின் சித்திரவதையின் போது அவர் கதறிய ஓலங்களை அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் சிலரும் கேட்டுள்ளனர். சத்தம் வராமலிருக்க அவர் வாயில் துணியை அடைத்து கொடுமைகளை அரங்கேற்றியுள்ளனர்.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட ரவிப்பிரியாவின் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த சிங்கள ராணுவத்தினர் தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியினரை கற்பழித்துக் கொன்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது போர்க் குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் தெரிகிறது.

இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே, “இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உளவுத் துறை வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் முகமாகவே இசைப் பிரியா சிதைக்கப்பட்டதாகவும்” செய்தியைப் பரப்பியது ராணுவம். போர்க் குற்றத்திலிருந்து தப்பிக்க இந்த உத்தியைக் கையாண்டுள்ளனர்.

ஊடகங்களும் ஏமாந்து போய் இந்தத் தகவலை வெளியிட்டுவிட்டன. ஆனால் உண்மையில் இப்படி நடக்கவில்லை என்கிறார்கள்.

நிராயுதபாணியாக நின்ற செய்தியாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்கவே அவரை பெண்புலியாக சித்தரித்து செய்தி பரப்பியுள்ளனர் சிங்களத் தரப்பில்.

அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான வீடியோவை முழுமையாக பார்த்தால் அவர் ஒரு நிராயுதபாணியாக இருப்பது தெரியவரும்.

“சிங்களத்தின் பரப்புரைகளை நம்ப வேண்டாம். செய்தியை ஆய்வு செய்த பிறகே வெளியிடவும். இசைப்பிரியா ஒரு நிராயுதபாணி. அதுமட்டுமல்ல, அவர் ஒரு இசைக் கலைஞர், செய்தியாளர், படங்களில் நடித்தவர்… இத்தகைய ஒருவரை ராணுவத்தினர் வெறியுடன் கற்பழித்து கொன்றுள்ளனர்.. இது மிகப் பெரிய போர்க்குற்றம் என்பதை தமிழர் ஊடகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.




7 thoughts on “விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!

  1. குமரன்

    க(கோ)லைஞர் அவர்கள் கவனத்துக்கு,

    இந்த இசைப் பிரியாவும் ஒரு தமிழருக்கு மகள்தான்…..
    கனிமொழி மட்டும் தான் பெண் என்பது போல கனிமொழியின் தகப்பனாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.

    மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட அப்பாவி ஈழத்தமிழர்களை உங்கள் அரசியல், குடும்ப, பண, பதவி லாபங்களுக்காக பணயம் வைக்காதீர்கள்.

    நேற்று நீங்கள் பேட்டியளிக்கும்போது “மகாபாரதத்தில் தர்மருக்கு வந்த சங்கடம் போல எனக்கு வராது” என்று கூறியிருக்கிறீர்கள். ஆம், உங்களை தர்மருடன் ஒப்பிட முடியாதுதான். உங்களுக்கு அதற்குத் தகுதி இல்லைதான்.

    ஆனால், தர்மர் தனது அரசப் பதவியையும் மனைவியையும் சூதாட்டத்தில் பணயம் வைத்தார். ஆனால் நீங்களோ,

    உங்கள் மகன், பேரன், மகளுக்காக ராசா ஆகியோர் மத்திய மந்திரி பதவி பெற ஈழத்தமிழ் மக்களின் உயிரை, மானத்தை, உடமைகளை, சுதந்திரத்தை, தேசத்தை சோனியாவிடம் விட்டுக் கொடுத்தீர்கள்.

    திரவுபதி பணயம் வைக்கப் பட்டாலும் மானம் இழக்கும் முன் காக்கப் பட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

    ஆனால் உங்களால் பணயம் வைக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களோ உயிரை, மானத்தை, உடமைகளை, சுதந்திரத்தை, தேசத்தை இழந்தனர். சொந்த நாட்டில் அகதிகளாக, ஆதரவற்று முள்வேலிக்குள் முடக்கப் பட்டனர். இன்னமும் அவர்களது சோகம் தீரவில்லை.

    மிச்சம் மீதி இருப்பதையும் / இருப்பவர்களையும் உங்கள் மகள் கனிமொழிக்காக விட்டுக் கொடுத்து விட நீங்கள் இப்போது உங்கள் பழைய பல்லவியை எடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கு பயமாக இருக்கிறது. உங்கள் மகள் கனிமொழிக்காக இன்னமும் எத்தனை இசைப் பிரியாக்கள் இப்படி கற்பைப் பறிகொடுத்து உயிரையும் பறிகொடுக்கப் போகிறார்களோ?

  2. manikandan

    இந்த பாவங்களுக்கான தண்டனை இதை செய்தவர்களும் பார்த்துகொண்டு சும்மா இருப்பவர்களும் சத்தியமாக அனுபவிப்பார்கள் கருணாநிதி ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் மக்கள் உட்பட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *