BREAKING NEWS
Search

விடுதலைப் புலிகளின் புதிய வியூகம்!- இலங்கையின் ‘கண்டுபிடிப்பு’

விடுதலைப் புலிகளின் புதிய அணுகுமுறை அபாயகரமானது! – இலங்கை

கொழும்பு: விடுதலைப் புலிகள் தங்கள் அணுகுமுறையை அடியோடு மாற்றிக் கொண்டுள்ளனர். இது இலங்கைக்கு பெரும் சவால்… அபாயகரமானது என்று கூறியுள்ளார் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிஎல் பெரீஸ்.

இலங்கையில் அவசர நிலைச் சட்டம் நீட்டிப்பு மற்றும் விடுதலைப்புலிகள் விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அவர் பேசுகையில், “விடுதலைப் புலிகள் முன்பு போர்க்களத்தில் இருந்தவாறு, இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தனர்.

போர்க்களத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட உடன், தங்கள் நடவடிக்கைகளை வேறு விதமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு வெளியில் வேறு நாடுகளில் இருந்தவாறு, தூதரக ரீதியாக தற்போது புலிகளின் ஆதரவாளர்கள் செயல்படத் துவங்கியுள்ளனர். அவர்களின் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

வேறு புதிய வழிகளில் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது மிகவும் அபாயகரமான நடவடிக்கை. எனவே இது குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேணடும்” என்றார்.

இரு தினங்களுக்கு முன்பு, விடுதலைப் புலிகள் புதிய அமைப்பைத் தோற்றுவித்து போராட்டத்தைத் தொடர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைப் பிரதமர் ஜெயரத்ன கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால் புலிகளின் பெயரைச் சொல்லிக் அவசர நிலையை நாட்டில் நீட்டித்துக் கொள்வது மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களைத் தவிர்ப்பதே இவர்களின் நோக்கம் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *