BREAKING NEWS
Search

விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது ! – எஸ்ஏ சந்திரசேகர்

விஜய்யை வைத்து நான் சிவப்பு மனிதன் படத்தை ரீமேக் செய்கிறேன்! – எஸ் ஏ சந்திரசேகர்

திருச்சி: விஜய் நடிக்கும் படங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அவரது ரசிகர் மன்றங்கள் மிக வலுவாக உள்ளன. விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது என்று திருச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெளுத்துக்கட்டு’ திரைப்படத்தின் பாடல் அறிமுக விழா திருச்சியில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான்.

இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கிறது.

விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு!

நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் எனக்கு மகனாக கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சிவப்பு மனிதன்  ரீமேக்கில் விஜய்

ரஜினியை வைத்து நான் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ‘ரீமேக்’ செய்து தயாரிக்க இருக்கிறேன். அதில் விஜய் நடிக்கிறார். ஆனால் நான் இயக்கவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் படத்தை மட்டும் தயாரிக்க இருக்கின்றேன்.

இது போன்ற என்னுடைய பழைய படங்கள் சிலவற்றை இந்த காலத்துக்கு ஏற்ப ‘ரீமேக்’ செய்யப் போகிறேன்,” என்றார்.
24 thoughts on “விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது ! – எஸ்ஏ சந்திரசேகர்

 1. ஜெகதீஸ்வரன்

  விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது ..

  தொடர்ந்து ஐந்து படங்கள் பிளாப் கொடுத்தாலும்,. எப்படி இவங்களால மட்டும் இப்படி பேச முடியுது!…

  ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com/

 2. krish

  பேசு பேசு இன்னும் பேசு ….
  நேத்து நடந்த பிரஸ் மீட் இவருக்கும் சமந்தமே இல்ல்லாத மாத்ரி …

 3. சூர்யகுமார்

  டேய், போன் ஒயர் பிஞ்சி 1 வாரம் ஆகுதுடா….

 4. Rajan

  //ரஜினியை வைத்து நான் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ‘ரீமேக்’ செய்து தயாரிக்க இருக்கிறேன். அதில் விஜய் நடிக்கிறார்//

  அட பாவிகளா நீ எடுத்ததுலேயே அது தான் கொஞ்சம் உருப்படியான படம் . அதையும் கெடுக்க போறியா ……….

  ஐயோ கடவுளே …. ரஜினி நடித்த காலேஜ் professor ரோலில் இவனா ?நினைத்து கூட பார்க்க முடியாது ….

 5. Robo Venkatesh

  sac wont change he is no1 fool vijay no2 fool. sac pottai your son is going to be next ramarajan. Nan asinga manithan best title for vijay film

 6. கிரி

  //சூர்யகுமார் says:
  May 30, 2010 at 5:42 pm
  டேய், போன் ஒயர் பிஞ்சி 1 வாரம் ஆகுதுடா//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா 😀

 7. stone cold

  எப்படி டா கொஞ்சம் கூட வெட்கமே இலமா பேசுறிங்க … அட வெட்கம் கெட்டவனுங்களா…

 8. சூர்யகுமார்

  நண்பர்களே… இந்த செய்தி தினமலர் சினிமா பகுதியிலும் வந்துள்ளது. அங்குள்ள வாசகர் கமெண்ட்டுகளை கண்டிப்பாக படியுங்கள். சிரித்து சிரித்து வயிறு வலித்துப் போகும்.

 9. SHARVES MALAYSIA

  தமிழ்த்திரையுலகின் மிகமிக மட்டமான நடிகர்களில் கேவலமான நடிகன் விஜய்தான் என்பது ஊரறிந்த விழயம்.அப்பனுக்கும் மகனுக்கும் என்னதான் பிரச்சனையோ தெரியல இந்த விஜய்யை எப்படியாவது காணாமல் அடிக்க சந்திரசேகர் திட்டம் போட்டுள்ளார்.அவரது திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.இவன் சினிமாவைக்கெடுத்தது போதாதென்று அரசியலுக்கும் வருகிறான். இவனது வருகையால் பாவம் ரஜினி மண்டை காய்ந்து போயிருக்கிறாராம்.

 10. prasanna

  விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது
  ஹ்ம்ம் சொந்த செலவில் சூனியம் !!!!!!!!
  Own money Self Damage :):):):):)

 11. guru

  டே ! மக்கள் என்ன கேனயன் நு நேனுசுதன பேசறிங்க

 12. palPalani

  கடைசியா நடித்த(மன்னிக்கவும்) ஆறு படங்களும் அவுட், ஆனா சம்பளம் 50 கோடிக்கு மேலையாம், பின்ன அவ்வளவு பணத்தை எப்படி செலவளிப்பது? வாங்க!! பிரியாணி வாங்கித்தர வாங்க!!!

 13. Vadivel

  இப்படி உசுப்பேத்தியே அவன ஒரு வழி ஆக்கிவிட்ட……….. இன்னமுமா உன்னைய இந்த ஊரு நம்புது….

  விஜய் -க்கு எதிரி வேற எங்கயும் இல்லை..வீட்டுக்குள்ளயே….

  இதல்லாம் கேட்டா மறுபடியும் தி.மு.க அவனை நொங்கு எடுக்கப்போகுது,

  அவனே இப்பதான் பேதி நின்னு வெளிய வந்திருக்கிறான்..நீ அடுத்த குழிய வெட்டற……

  உலகத்திலேயே பெத்த புள்ளைக்கு தொடர்ந்து சுருக்கு வைக்கும் அப்பன் நீதான்…………

  நீ கொடுக்கும் பில்டப் கேட்டு அவனும் தலைகால் புரியாம ஆடி …கடைசியில் குட்டி சுவற்றில் முட்டி மூக்க ஒடைச்சுக்கிறான்……

 14. r.v.saravanan

  சூர்யகுமார் says:
  May 30, 2010 at 5:42 pm
  டேய், போன் ஒயர் பிஞ்சி 1 வாரம் ஆகுதுடா….

  ஹா….ஹா….

 15. srini

  டேய், போன் ஒயர் பிஞ்சி 1 வாரம் ஆகுதுடா…//ha ha ha ultimate surya

 16. Sangavi

  “””””””””””””””அப்பனுக்கும் மகனுக்கும் என்னதான் பிரச்சனையோ தெரியல “””””””””””
  ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்ததால் வந்த பிரச்சனை

 17. Manoharan

  தமிழகத்தில் வெயில் ஜாஸ்தி என்பதை எஸ்.ஏ.சந்திரசேகரின் பேச்சு தெளிவாக..? காட்டுகிறது.

 18. barathy

  இந்த வருடம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய ஒரே படம், பையா. பையாவுக்குப் போட்டியாக வந்திருக்கிறது ஹ‌ரியின் சிங்கம். ஆம், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் சிங்கத்தின் வசூல் கர்ஜனைதான் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.

 19. Raj Devar

  அருணாசலம் ரீமிக்ஸ் ;

  * ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?

  ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,

 20. Raj Devar

  * விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே… இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?

  பிரபுதேவா : டேய்… நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *