BREAKING NEWS
Search

விஜய் படங்களுக்குத் தடை?

விஜய் படங்களுக்குத் தடை? திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை!

விஜய் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதோடு பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி வருவதால் அவரது படங்களைத் தொடர்ந்து வாங்குவதா தடை விதிப்பதா என்பது குறித்து  தியேட்டர் உரிமையாளர்கள் முக்கிய முடிவை இன்று எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் நடித்து ஆதி, போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய 7 படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் போக்கிரி மட்டுமே ஹிட் படம். ஆனால் மற்ற படங்கள் வணிக ரீதியாக பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியவையாக விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நஷ்டக் கணக்கை விஜய் தரப்பிடம் கூறியபோதெல்லாம் அடுத்த படத்தில் சமாளித்து விடலாம் என்று ஆறுதல் சொல்வது வழக்கம் என்கிறார்கள். ஆதி படத்திலிருந்தே இதே பதிலைத்தான் விஜய்யும் அவரது அப்பாவும் கூறிவருகின்றனராம். ஆனால் வருகிற அத்தனை படங்களும் தோல்வியைத் தழுவுவதாகவே இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த முறை பெரும் நெருக்கடியை விஜய்க்கு ஏற்படுத்தியுள்ளனர்.

வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து மூன்று படங்களும் பெரும் தோல்விப் படங்களாக திரையரங்க உரிமையாளர்களால் கூறப்படுகின்றன. இதனால் பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனராம். சன் பிக்சர்ஸின் விளம்பர உத்தியெல்லாம் சுறாவில் எடுபடாமலே போய்விட்டன.

எனவே அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் இன்று சனிக்கிழமை சென்னையில் கூடுகிறார்கள். இந்த கூட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.

இதன்படி, தன் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களை சரிக்கட்டும் வகையில், தங்களுக்காக ஒரு படத்தை விஜய் நடித்துத் தர வேண்டும். இதற்கு யார் வேண்டுமானாலும் தயாரிப்பாளராக இருக்கலாம். அல்லது திரையரங்க உரிமையாளர்களே தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய் நடித்துத் தர வேண்டும்.

இதற்கு விஜய் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவருக்கு ரெட் கார்ட் போடுவது பற்றியும் நாளை அறிவிக்க உள்ளனர்.

விஜய் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த புதிய நெருக்கடிதான் கோடம்பாக்கத்தின் பெரும் பரபரப்பாக உள்ளது.




5 thoughts on “விஜய் படங்களுக்குத் தடை?

  1. endhiraa

    ரொம்ப லேட்…இப்பவாவது சுதாரித்துகொண்டால் நல்லது !!!

  2. Rajan

    //தன் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களை சரிக்கட்டும் வகையில், தங்களுக்காக ஒரு படத்தை விஜய் நடித்துத் தர வேண்டும்//

    அடப்பாவிகளா மறுபடியும் தப்பு பண்ணுறீங்களே .. இன்னொரு படமா …அய்யோ …..
    விஜய் நடிக்க தடை விதித்தாலாவது தமிழ் மக்களாவது தப்பிப்பார்கள் .

  3. M.Mariappan

    இவனை வச்சு எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க கூடாது, திரை அரங்கு உரிமையாளர்கள் இனி அதிக விலை கொடுத்து விஜய் படத்தை வாங்க கூடாது இவனுக்கு அதிகம் சம்பளம் தரக்கூடாது இப்படி எல்லாம் செய்தால் தான் இவனும் இவன் அப்பனும் திருந்துவார்கள் எக்காரணம் கொண்டும் இவன் படத்தை சன் டிவி வாங்க கூடாது யாரையும் COPY அடிக்காமல் எந்த மொழி படத்தையும் ரீமேக் செய்யாமல் சுயமாக படம் எடுக்க சொல்லுங்க அப்படியாவது இவன் படம் ஓடுதான் பார்ப்போம்

  4. குமரன்

    சொல்லி அடிக்கும் கில்லி.
    சொல்லி சொல்லி அடித்தார் திரை அரங்க உரிமையாளர்களை நஷ்டத்தால்.
    மொத்தமாக போண்டி ஆகாமலிருக்க விஜய் படத்தைத திரியிடாமல் ஒதுங்குவதே வழி.

  5. Raj Devar

    * அடுத்த படத்தில் விஜய், வில்லனை வேகமாக மிதிவண்டியில் துரத்தும் அசத்தல் சீன் ஒன்று வருகிறது. அந்த காட்சியில் வில்லன் எந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    1. ஸ்போர்ட்கார்
    2. புகைவண்டி
    3. கப்பல்
    4. ஜெட்

    * விஜய் ஓட்டும் அந்த மிதிவண்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

    1. இரண்டு சக்கரங்களும் ஒரு கைப்பிடி (ஹேண்டில் பார்) மட்டும்
    2. இரண்டு சக்கரங்கள் மட்டும்
    3. ஒரு கைப்பிடி மட்டும்
    4. எதுவுமே தேவையில்லை. அவரே ‘புர்ர்ர்ர்’ரென்று வாயில் சத்தம் செய்து கொண்டே மிதிவண்டி ஓட்டுவது போல் ஓடி வில்லனை துரத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *