BREAKING NEWS
Search

விஜய்யின் 52-வது படம் ‘வேலாயுதம்’!

விஜய் படம் வேலாயுதம்!

விஜய் தன் அடுத்த படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.

சித்திக் இயக்கத்தில் ‘பாடிகார்டு’ படத்தின் ரீமேக்கில் இப்போது நடித்து வரும் விஜய், அடுத்த மாதம் வேலாயுதம் வேலைகளைத் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமின் அடுத்தபடம் ‘வெடி’!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு வெடி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘கந்தசாமி’க்குப் பின் விக்ரம் நடிக்கவிருந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. மணிரத்னத்தின் ‘ராவணன்’, செல்வராகவனின் பெயரிடப்படாத படம் என விக்ரம் திடீரென்று பிஸியாகவிட்டதால் பூபதியின் படம் தள்ளிப் போனது.

இப்போது திரைக்கதை உருவாக்கம் முழுமையாக முடிந்த நிலையில் மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கத் தயாராகிறார் விக்ரம். படத்துக்கு ‘வெடி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. செல்வராகவன் படம் முடிந்த கையோடு, இந்த வெடியைக் கொளுத்துகிறார்களாம்!

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி!

தோ நிகழ்ச்சிக்கான அறிவிப்பு என்று நினைத்துவிடாதீர்கள். இதுவும் ஒரு படத்தின் பெயர்தான்.

மதுரை டு தேனி – வழி ஆண்டிப்பட்டி என்ற படத்தைத் தயாரித்தவர்கள்தான் இந்த சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி படத்தையும் தயாரிக்கின்றனர்.

ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி அடுத்த சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் கதையாம். ரவி பாரதி என்ற புதியவர் இயக்கும் த்ரில்லர் படம் இது!

-என்வழி




2 thoughts on “விஜய்யின் 52-வது படம் ‘வேலாயுதம்’!

  1. Vijay Rasigan

    51. காவல்காரன் (தியேட்டரில் மொய்க்கும் ஈக்களுக்கு)

    52.வேலாயுதம் (THE – VETHUVETTU)

    53. மானங்கெட்டவன்

    54. வெட்கங்கெட்டவன்

    55. சொரணை என்ன விலை?

    56. எதையும் தாங்கும் இதயம்

    57. சாகச தோல்வி

    58. மீண்டும் சுறா

    59. நினைத்தாலே வலிக்கும்

    60. S . பிளாட்பாரம் S/o (S . A . C)

    61. தோல்வியின் ரகசியம்

  2. r.v.saravanan

    விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு வெடி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
    செல்வராகவன் படம் முடிந்த கையோடு, இந்த வெடியைக் கொளுத்துகிறார்களாம்!

    நல்லா வெடிச்சா சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *