BREAKING NEWS
Search

விஜய்க்கு ரெட் கார்டு? – நாளை அறிவிக்கிறது திரையரங்க உரிமையாளர் சங்கம்

விஜய்க்கு ரெட் கார்டு குறித்து நாளை முடிவு: திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

விஜய்க்கு நெருக்கடி முற்றுகிறது.

அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரது படங்களுக்கு நாளை ரெட் கார்டு போட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அங்காடித் தெரு தவிர சமீபத்தில் வெளியான எந்தத் தமிழ்ப் படமும் வெற்றியைப் பெறவில்லை என்று விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் புலம்பி வருகின்றனர்.

விஜய்யின் குருவி, வில்லு, வேட்டைக்காரன் மற்றும் சுறா ஆகிய படங்கள் தொடர்ச்சியான தோல்வியைத் தழுவி, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக வெளிப்படையான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நஷ்டத்தை விஜய்தான் ஈடு செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எப்படி ஈடு செய்ய வேண்டும் என்றும் ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து விஜய் தரப்புக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை மே 26-ம் தேதி பிற்பகல், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமும் அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்கிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஆர் எம் அண்ணாமலை இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். சேலம் டிஎன்டி ராஜா, கோவை ராயல் சுரேஷ் போன்ற நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், தனது படங்களின் நஷ்டத்தை விஜய் ஈடுகட்ட வேண்டும் அல்லது அவரது எதிர்வரும் படங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து படுதோல்வியைத் தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் குறித்தும் அந்த நஷ்டத்தை திரும்பப் பெறுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
15 thoughts on “விஜய்க்கு ரெட் கார்டு? – நாளை அறிவிக்கிறது திரையரங்க உரிமையாளர் சங்கம்

 1. பரதேசி

  விஜய் அரசியலுக்கு வருவார் என்று தெரிந்த இந்தியாவும், கருணாநிதியும் சதி செய்து அவரின் படங்களை ஓடவிடாமல் செய்தது. இப்போது அவரது சினிமா கேரியரைக் கெடுக்கும் விதம் தியேட்டர் உரிமையாளர்களை ஒருங்கிணைத்து அவரை சினிமாவிலிருந்தும் ஓரங்கட்ட முயற்சிகளை நடைபெறுகின்றது மிகவும் வேதனையான விசயம்.
  அடுத்து ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடித்து தமிழக மக்களின் மத்தியில் நீங்கா இடம் பிடிப்பார் என நம்புகிறோம்.

 2. Raja

  இன்னொரு படம் ப்ரீ யா நடிச்சி குடுத்த மட்டும் அது ஓடிடுமா என்ன ???

  ஹி ஹி

  அவர்கிட்ட இருக்குற சொத்தெல்லாம் புடுங்க சொல்லுங்க சார்

 3. Ramesh

  அப்ப அவங்கப்பா சொன்ன மாதிரி அவார்டு படங்கள் எதுவும் வெளிவர வாய்ப்பில்லையா அல்லது வெளிவந்தது அனைத்தும் ஒரு வகையில் அவார்டு தானா…..?

 4. Babu

  அறிவு இல்லாம எல்லா படத்தையும் ஒரே மாதிரி குப்பையா தந்தா பட வேண்டியது தான்….

 5. Manoharan

  இந்த செய்தி சன் செய்திகளில் வருமா..? குசேலனில் ஆடிய ஆட்டமெல்லாம் எங்கே..?
  சன் இப்போது கேட்கவேண்டிய பாடல் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்கு தெரியுமா..?

  விஜய்யின் கில்லி வசனம் அவருக்கே :

  கபடி ஆடலாம்,கில்லி ஆடலாம்,கிரிக்கெட் ஆடலாம் வேறு என்ன வேண்டுமானாலும் ஆடலாம். ஆணவத்தில் மட்டும் ஆடக்கூடாது. அப்படி ஆடினால் மவனே ஆப்புதான். அண்ணா உலகம் உருண்டைங்ணா…இதுவும் உங்க வசனம்தாங்ணா…உங்களுக்கே திருப்பி அடிக்குது…

 6. SVR

  இந்த செய்தி சன் செய்திகளில் வருமா..? குசேலனில் ஆடிய ஆட்டமெல்லாம் எங்கே..?
  சன் இப்போது கேட்கவேண்டிய பாடல் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்கு தெரியுமா..?

  GEETHACHARAM: ETHU NADANTHA THO ATHU NANDRAGA NADANTHATHU ETHU NADAKIRATHO ATHU NANDRAGAVEY NADAKKUM, ETHU NADAKKA IRUKIRATHO ATHU NANDRAGAVEY NADAKKUM.

  கபடி ஆடலாம்,கில்லி ஆடலாம்,கிரிக்கெட் ஆடலாம் வேறு என்ன வேண்டுமானாலும் ஆடலாம். ஆணவத்தில் மட்டும் ஆடக்கூடாது. அப்படி ஆடினால் மவனே ஆப்புதான். அண்ணா உலகம் உருண்டைங்ணா…இதுவும் உங்க வசனம்தாங்ணா…உங்களுக்கே திருப்பி அடிக்குது…

 7. Kumaran

  அடுத்த படத்தில் விசய் தியேட்டர் காரர்களை பத்தி பஞ்ச டயலாக் பேசுவர் காட்டமாக…..

 8. r.v.saravanan

  சன் இப்போது கேட்கவேண்டிய பாடல் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்கு தெரியுமா..?

  repeat

 9. Chozhan

  விஜய்யும் ஒரு நல்ல நடிகர் என்பதை மறக்க வேண்டாம். ஒரே வட்டம் என்று இல்லாமல் வெளிய வந்து (இமேஜ் பார்க்காமல்) வித்தியாசமான கதைகலத்தில் நடித்தால் நல்லது. இன்னும் நிறைய நல்ல படங்களை கொடுக்கலாம்.

 10. gobinath

  50,000 கையொப்பம் கிடைத்தால் ஐ நா சபையினால் இலங்கையில் நடத்தப் பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடத்த முடியாது என்று நிராகரிக்க முடியாது.. தங்களின் கையொப்பத்தை Amnesty International என்னும் இணைய தளத்தில் பதிவு செய்து ஐ நா வின் கவனத்தை ஈர்க்கலாம்..

 11. gobinath

  http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations

  50,000 கையொப்பம் கிடைத்தால் ஐ நா சபையினால் இலங்கையில் நடத்தப் பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடத்த முடியாது என்று நிராகரிக்க முடியாது.. தங்களின் கையொப்பத்தை Amnesty International என்னும் இணைய தளத்தில் பதிவு செய்து ஐ நா வின் கவனத்தை ஈர்க்கலாம்

 12. RAMAN/

  இதுல எதாவது ஒன்னுனாவே ஒன்னுக்கு போற அளவுக்கு அடிப்பாங்க…. மூணுன்ன மோசன் போற அளவுக்கு இல்ல அடிப்பானுக ……

 13. Raj Devar

  * அடுத்த படத்தில் விஜய், வில்லனை வேகமாக மிதிவண்டியில் துரத்தும் அசத்தல் சீன் ஒன்று வருகிறது. அந்த காட்சியில் வில்லன் எந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

  1. ஸ்போர்ட்கார்
  2. புகைவண்டி
  3. கப்பல்
  4. ஜெட்

  * விஜய் ஓட்டும் அந்த மிதிவண்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

  1. இரண்டு சக்கரங்களும் ஒரு கைப்பிடி (ஹேண்டில் பார்) மட்டும்
  2. இரண்டு சக்கரங்கள் மட்டும்
  3. ஒரு கைப்பிடி மட்டும்
  4. எதுவுமே தேவையில்லை. அவரே ‘புர்ர்ர்ர்’ரென்று வாயில் சத்தம் செய்து கொண்டே மிதிவண்டி ஓட்டுவது போல் ஓடி வில்லனை துரத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *