BREAKING NEWS
Search

விகடன், விமர்சனம் வெளியிடாமலேயே இருந்திருக்கலாம்!

விகடன், விமர்சனம் வெளியிடாமலேயே இருந்திருக்கலாம்!

த்தனை கடுப்போடு, வேண்டா வெறுப்போடு ரஜினியின் எந்திரன் படத்துக்கு விகடன் விமர்சனம் எழுதியதைவிட, எழுதாமலேயே இருந்திருக்கலாம்!

-ஆனந்த விகடனில் வந்த எந்திரன் விமர்சனத்தைப் படித்ததும், அந்த அலுவலகத்தில் முன்பு பணியிலிருந்த நம் நண்பர் சொன்ன கமெண்ட் இது.

“அப்படியா… ‘ரசிக கடிதம்’ என டெஸ்க் ஒர்க்கை ஆரம்பித்தவர்கள் இன்னும் நிறுத்தவே இல்லையா” என்ற நினைப்போடு, இணையத்தில் வாசித்தேன்.

நண்பர் சரியாகத்தான் சொல்லியிருந்தார்!

சந்திரமுகிக்கு 40 மார்க்கும் மும்பை எக்ஸ்பிரஸுக்கு 41 மார்க்கும் கொடுத்த ரசனையாளர்களல்லவா… இதோ இவர்களின் ரசிப்புத் தன்மைக்கு ஒரு உதாரணம், அவர்களின் விமர்சனத்திலிருந்து:

“…ஆனாலும், அதகளம் பண்ணி, அடித்து நொறுக்குவது நிக்கல் மீது தோல் போர்த்திய இயந்திரம் என்பதும், அதை அடக்குவதற்குப் படாத பாடுபடுவதுதான் ஒரிஜினல் ரஜினி என்பதும் விசில் பார்ட்டி ரசிகர்களின் உற்சாகத்துக்குக் கொஞ்சம் மைனஸ் போடுகிறது!”

-அட பெட்ரோமாக்ஸ் மண்டைகளே… நிக்கல் பிளேட் மூடிய பொம்மையா படத்தில் நடித்திருக்கிறது? அந்தப் பாத்திரம் ஒரு ரோபோ என்று காட்ட அப்படி ஒரு காட்சியை வைக்கிறார்கள். அதற்குப் பிறகு, அந்த எந்திரன் பாட்டுப் பாடுகிறான், டான்ஸ் பண்ணுகிறான், ரொமான்ஸ் பண்ணுகிறான்… இதெல்லாம் கூட ரஜினி இல்லை பொம்மைதான் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால், அதற்கு யார் பொறுப்பு? அதை விமர்சனத்தில் காட்டி உங்கள் அறியாமையையும் காட்டிக் கொள்ள வேண்டுமா? நாங்கள் விசில் பார்ட்டிகள்தான், ஆனால் விகடனை விட விவரமான பார்ட்டிகள் என்பது உங்களுக்கு என்றைக்குதான் புரியப் போகிறதோ… முழுசா சர்க்குலேஷன் சறுக்கிய பிறகா!

ரோபோதான் அட்டகாசம் பண்ணியிருக்கிறதாம். அதாவது இவர்கள் மெமரியிலிருந்து ரஜினியை அழித்துவிட்டு, வெறும் ரோபோவை மட்டும் ஏற்றிக் கொண்டார்கள். அவ்வளவுதான்… எல்லா கிரெடிட்டும் ரோபோவுக்குதான். கூடவே நாலு வரி ரஹ்மானையும் ஷங்கரையும் கூடுதலாகப் புகழ்ந்துவிட்டால்… வயிற்றெரிச்சல், காதுவழிப் புகை எல்லாம் போயே போச். ரஜினி மீது எவனெல்லாம் பொறாமை கொள்வதென்ற விவஸ்தையே கிடையாது!

‘கொச கொச தாடியாம்…’ , கொய்யால… ரஜினி வைத்தால் கொச கொச தாடி. கமல் வைத்தால் அறிவு ஜீவி தாடியா!

அடுத்த கடுப்பை எப்படிக் காட்டுகிறார்கள் பாருங்கள்: “எந்திரன் கும்பலுக்குள் ஊடுருவிவிட்ட விஞ்ஞானி ரஜினியை ‘ஹூ இஸ் த ப்ளாக் ஷீப்?’ என்று கண்டுபிடிக்கத் தேடும்போது, ‘ரோபோவ்வ்வ்’ என்று பழிப்புக் காட்டுவதும், ‘ம்ம்ம்ம்மே’ என்று ஆடு கணக்காக ராகம் போடுவதுமாக… அபூர்வமாக வெளிப்படும் ரஜினி ஸ்டைல்கள்!”

அதென்ன, ‘அபூர்வமாக வெளிப்படும் ரஜினி ஸ்டைல்கள்?’

எப்போதுமே, ஒவ்வொரு படத்திலும் பல அபூர்வ ஸ்டைல்களை அறிமுகப்படுத்துவதுதான் ரஜினியின் பாணி. மூன்றுமுகம், நினைத்தாலே இனிக்கும் தொடங்கி, இதோ இந்த எந்திரன் மேஹ்ஹ்.. வரை. அப்படின்னா… “லகலகலகவை” எதுல சேர்ப்பீங்னா… வழக்கமான ஸ்டைல் என்றா?

அவர் என்னவோ இத்தனை நாள் எந்த ஸ்டைலும் காட்டாமல் அபூர்வமாய் காட்டியதாய் எழுத முயன்றால் உங்களுக்கும் மேஹ்ஹ்தான், உங்க பத்திரிகை பொழப்புக்கும் மேஹ்ஹ்தான்… ஜனங்கள புரிஞ்சிக்குங்க!

அப்புறம் கட்டக் கடேசியாய் விகடன் கேட்டிருக்கிறதே ஒரு கேனத்தனமான கேள்வி… அது அவர்களின் ‘மேல்மாடி’ எந்த அளவு விவரமாக உள்ளது என்பதற்கு ஒரு சாட்சி.

“கோடரியால் வெட்டினாலே கை பிளந்துகொள்கிற ரோபோவுக்கு, லாரிகளை இழுத்து வளைப்பதற்கும், காரைத் தூக்குவதற்கும் எங்கே இருந்து அந்தப் பலம் வந்தது?!”

-காலம் போன காலத்துல பத்திரிகை நடத்தினா இப்படித்தான் சந்தேகம் வரும் கண்ணா. காரை தூக்கி நிறுத்தற ஜாக்கி இருக்கே ஜாக்கி… அது தம்மாத்துண்டு ராட்தான். ஒரு சின்ன போல்ட்தான் மேட்டர். அதை தட்டினாலே ஜாக்கிக்கு பலம் போயிடும். ஆனா எவ்ளோ பெரிய வேலையெல்லாம் காட்டுது! இந்த அஞ்சாங்கிளாஸ் பிஸிக்ஸ் மேட்டர் விகடன் ‘மேல்மாடிக்கு’ எட்டாமலே போயிடுச்சே!

அப்புறம் சந்தானம் கருணாஸ் காமெடி தோல்வியாம்.

-அட கிறுக்கனுங்களா… அவங்க ரோல், லேப் அஸிஸ்டென்ட்ஸ், அவ்வளவுதான். அதுக்கு நாலு சீனே ஜாஸ்தி. உங்க விகடன் ஆபீஸ்ல, ஆபீஸ் பாயை கூப்பிட்டு எடிட்டர் சேர்ல உட்கார்த்தி வெச்சி அழகு பாப்பீங்களோ!

பொல்லாத மார்க்கு!

அடப்பாவிகளா… இரண்டு வருஷம் கஷ்டப்பட்டு ஒரு பெரிய படைப்பை ஜனங்கள் முன் வைத்திருக்கிறார்கள் ரஜினி, ஷங்கர் போன்ற உன்னதக் கலைஞர்கள். முதலில் அதை மக்களை ரசிக்க விடுங்கள். விமர்சனம் என்ற உங்கள் ஸ்பீட்பிரேக்கர்கள் எந்திரன் போன்ற ரஜினியின் மாஸ் படங்களுக்கு அனாவசியம். ‘சிவா மனசுல சக்தி’ போன்ற படங்களை புரமோட் பண்ண வேண்டுமானால் அவை உதவும்!

அது என்னமோ… இவர்களது பள்ளியில் படித்து பரீட்சை எழுதிவிட்டுக் காத்திருக்கும் கலைஞர்களுக்கு மார்க் போடுவதாய் நினைப்பு இந்த மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்களுக்கு. வேட்டைக்காரனுக்கு 42 மார்க், எந்திரனுக்கு 45 மார்க்காம் (இதற்கு வந்திருக்கும் கைப்புள்ளைகளின் கமெண்ட்… மருந்தடிச்சுக் கொல்ல வேண்டிய மனோவியாதி பிடித்த கொசுத் தொல்லை!).

அடேங்கப்பா… என்னா ரசனை விகடன் தாத்தாவுக்கு. கண்ணா… இந்தத் தாத்தாவோட ரசனை கெட்டுப் போய் ரொம்ப நாளாகுது. எந்திரன் காலத்திலாவது அப்கிரேட் பண்ணுங்கப்பா…!

குறிப்பு: விகடன் விமர்சனத்தை ஒரு ரஜினி ரசிகன் விமர்சனம் பண்ணா… எவ்ளோ கோபம் வருது…? அப்படித்தான், அரைவேக்காட்டுத்தனமா எந்திரனுக்கு விமர்சனம் எழுதினா எங்களுக்கும் வரும்!!

-ரஜினி ரசிகன்
46 thoughts on “விகடன், விமர்சனம் வெளியிடாமலேயே இருந்திருக்கலாம்!

 1. Muthu Kumar

  உண்மை தான் நண்பா . ரோபோ செய்யும் பல வேலைகளுக்கும் அறிவியல் விளக்கம் இருக்கிறது. எதையும் அவர்கள் படத்தில் மிகை படுத்தவில்லை. (சில இடங்களை தவிர). . அனால் விமர்சனம் செய்பவர்கள் அவற்றை ஆராய்ந்து விட்டு எழுதி இருக்கலாம் . . போதம் பொதுவாக லாஜிக் இல்லை என்று அவர்கள் சொல்வது அறிவியலை மட்டம் தட்டுவதாக இருக்கிறது.

 2. prakash

  Fans ignore Vikatan group in all forms of digital media(magazine,tv,movie). Endhiran polae oru landmark film ku 45 thooooooooo. Ithae anthae aaasar nayagan nadithirunthal 50-60 pothu irupanungae. Yethukku thalaivar malae ivangalakku kaduppu? athan puriyae villai..I am shocked to hear 42 for vettaikaran..even for nan mahan allae they given around 45..those 2 movies are horrible..what vikatan trying to prove her? At the end of the day, just ignore his marks..Endhiran is rocking..

 3. kicha

  /சந்திரமுகிக்கு 40 மார்க்கும்
  மும்பை எக்ஸ்பிரஸுக்கு 41
  மார்க்கும் கொடுத்த
  ரசனையாளர்களல்லவா//

  Idha vittuteengale…., ‘sachin’ku 42 mark.

  /‘கொச கொச தாடியாம்…’ , கொய்யால…
  ரஜினி வைத்தால் கொச கொச தாடி. கமல்
  வைத்தால் அறிவு ஜீவி தாடியா!//

  Avar eppadi vandhalum engaluku azhagudhamppa.

  /அபூர்வமாக
  வெளிப்படும் ரஜினி ஸ்டைல்கள்!”/

  Apoorva raagathil irundhe velipadum stylenu podungayya

  /“கோடரியால்
  வெட்டினாலே கை பிளந்துகொள்கிற
  ரோபோவுக்கு ,
  லாரிகளை இழுத்து வளைப்பதற்கும்,
  காரைத் தூக்குவதற்கும்
  எங்கே இருந்து அந்தப் பலம்
  வந்தது?!”//

  Yaanaiyoda thumbikaiya kooda vetta mudium, adhukaga adhuku manushana thookara balam illainu aayiduma?

  CHUMMA KIZHI KIZHINNU KIZHICHITEENGA VINO. Thanks

 4. mathan

  well said vino. their vimarsanam is வஞ்சப்புகழ்ச்சி.they just wanted to confuse rajini fans and tease rajini and rajini fans.their magazine should be in garbage bin.ignore it.

 5. eppoodi

  உலக மக்கள் எல்லோருமே பாக்ஸ் ஆபீசில 100 % மார்க் குடுத்திட்டாங்க, நம்ம தலைவரர் படத்துக்கு மார்க் போடுறதுக்கு விகடன் யாரு ?

 6. Hari hara krishnan

  நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

  விகடன் விமர்சனம் ரஜினியை புகழ்வது போல் ரோபோவை புகழ்கிறார்கள்

  ரோபோவா நடிச்சதும் ரஜினி தான் என்று இவர்களுக்கு புரியாமலே வஞ்சபுஹழ்ச்சி பண்ணுவதாக நினைத்து கொண்டு விமர்சனம் பண்ணுகிறார்கள்.

 7. Robo Venkatesh

  I HAVE STOPPED BUYING KUMUDAM VIKATAN AND OTHER NEEDLESS BOOK WHO CRITICISE RAJINI FOR THEIR PUBLICITY.

 8. Suryakumar

  வினோ, தோரணம் கட்டிட்டீங்க… இப்போதான் மனசு திருப்தியா இருக்கு…

 9. sathaiyan

  தயவு செய்து இதை ஒரு போஸ்டரா சென்னை புல்லா ஓட்டுங்க ப்ளீஸ்

 10. rasigan

  அடப்பாவிகலா இந்த படத்துக்கு இந்த மார்க் ரொம்ப அதிகம்பா

 11. rasigan

  எந்திரன் Vs அவதார்
  **************
  ________________
  நாலுவரின்னாலும் சொந்தமா எழுதக் கத்துக்கங்க. எவனோ வாந்தி எடுத்ததை எடுத்து சாப்பிட முயற்சிக்காதீங்க… உடம்பு பத்திரம் கண்ணா!
  -வினோ

 12. MS

  கிழிச்சு தோரணம் கட்டிடீங்க வினோ. மேலும் தினமணி பற்றிய எனது பார்வை மாறிவிட்டது. மிக மிக சூடான பதில். தலைவர் வேறு தளத்திருக்கு சென்று விட்டார். நன்றி.

 13. santhosh

  விகடன் விமர்சனம் படித்தால் கவுண்டர் காமடி தான் நாபகம் வருது ” நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல””………….

  விகடன் நிறுவனத்துக்கு ஒரு ரஜினி ரசிகனின் சவால்” உங்களால் ஒரு மாதம் என் தலைவர் பற்றி ஒரு சின்ன செய்தி போடாமல் உங்களால் பத்திரிக்கை விற்க முடியுமா”””””””

  உங்க பத்திரிக்கை சர்க்குலேஷன் பண்ண தலைவர் வேணும். அது எப்படி உங்க மனசாட்சி(இருந்தா) தோட்டு சொல்லுங்க எத்தனை வாரம் தலைவர் பற்றி சேதிகள்( இமயமலை பயணம், பெங்களூர் வீடு பேட்டி, மகள் கல்யாணம், எந்திரன் பாடல் வரிகள் …………………………………) போட்டு காசு பார்த்தவன் நீ……

  தலைவர் படத்தை விமர்சனம் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்கு.

  எது போதும் என்று நெனைக்கிறான்……………

  என்றும் ரஜினி பக்தன்………………….

 14. நைனா

  வினோ நான் இன்னும் படம் பார்க்கவில்லை அதனால் விகடன் சரி நீங்கள் தவறு அல்லது vice-versa என்று கூற நான் தயாரில்லை.

  ஆனால் ஒரு ஜன நாயக நாட்டில் எல்லோர்க்கும் தங்கள் கருத்தை பதிவு செய்ய உரிமை உண்டு. விகடன் விமர்சனம், ‘உங்கள் கருத்தின்படி’ நடுநிலையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எப்படி படம் “அட்டகாசம்” என்று கூற உரிமை உள்ளதோ அது போலத் தானே மற்றவர்க்கும் தங்கள் பார்வையில் படம் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்ய உரிமை இருக்கிறது. எல்லோரும் நீங்கள் சொல்வது போல் படம் நன்றாக (மட்டும் தான்) இருக்கிறது என்று பதிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லையே.

  சரி, விகடன் நியாயமான குறைகளை சொல்லி இருக்கலாம் என்று நீங்கள் கருதினால் அதை ஏன் நீங்களே உங்கள் விமர்சனத்தில் செய்திருக்ககூடாது?

  ஆனந்த விகடன் “ரஜினி 25” பதிவை வெளியிட்ட போது (அது ரஜினியின் சிறப்பை கூறுவதாக அமைந்ததால் தானே) அதை என்வழியிலும் நீங்கள் வெளியிட்டு மகிழ்ந்தீர்கள். விகடனுக்கு அப்போது என்ன உள்நோக்கம் இருந்திருக்கக்கூடும். ரஜினியை பற்றி செய்தி வெளியிட்டால் அது positive ஆக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு ரசிகனாய் உங்கள் நிலையை புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் ஒரு வலை மனையின் ஆசிரியர். காந்தி, பெரியார், அம்பேத்கர் ஏன் அன்னை தெரேசா கூட விமர்சனத்திற்கு தப்பியதில்லையே.

  மேலும் தேவையின்றி கமலை இதில் உங்கள் ஒப்பீட்டுக்கு இழுத்திருப்பது காழ்புணர்ச்சி போல அல்லவா தெரிகிறது. வேறு நடிகர்களின் படங்களையும் விகடன் விமர்சித்திருக்கிறதே. அவர்களின் பட விமர்சனம் எதுவும் உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா?
  ___________________

  நிச்சயம் விமர்சனம் செய்ய உரிமையுள்ளது, அது நேர்மையாக இருக்கும்பட்சத்தில். தேவைப்படும்போது தூக்கி வைத்து விளையாடுவதும், நினைத்தபோது ‘ரசிகனின் கடிதம்’ என்று டெஸ்க் ஒர்க் செய்து, தூக்கிப் போட்டு உடைக்கவும் இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

  படம் நன்றாக இருக்கிறது… அல்லது நன்றாக இல்லை… இதைத்தான் சொல்ல வேண்டும் விமர்சனத்தில். ஆனால் நடித்திருப்பது ரஜினியில்லை தோல்போர்த்திய பொம்மை என்று விஷமத்தனம் காட்டும் இவர்களை என்னவென்று சொல்வீர்கள்? ரோபோவாக நடித்தவரும் ரஜினிதான் என்பது இந்த அறிவாளிகளுக்குப் புரியாதா.. அதென்ன விசில் பார்ட்டி? ரஜினி ரசிகர்கள் விசில் பார்ட்டிகள்… இவர்களென்ன வானத்திலிருந்து குதித்தவர்களா…

  கமல் விஷயத்தில் விகடன் பார்வையே வேறு. ஹேராம், பஞ்சதந்திரத்தில் கமல் வைத்த தாடி இன்டலெக்சுவலாக இருந்தது விகடனுக்கு. ஆனால் ரஜினி வைத்தால் அது ‘கொச கொச’ வா? உள்ளூர் ரேஞ்சுக்கு படமெடுத்தா இவனுங்களுக்குப் பிடிக்காது. உண்மையிலேயே உலகத் தரத்தில் எடுத்தாலும் அதில் ஆயிரம் நொட்டை சொல்ல வேண்டியது. அப்புறம் எப்படி நல்ல சினிமா வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள்?

  அவர்களின் இந்த உள்குத்துக்காகத்தான் நாம் இப்படி வெளிப்படையாக குத்த வேண்டி வந்தது!

  எனது விமர்சனத்தைப் படியுங்கள். நல்ல படத்தில் உள்ள சின்னச் சின்ன குறைகளை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அங்காடித் தெருவாக இருந்தாலும், களவாணியாக இருந்தாலும், எந்திரனாக இருந்தாலும் என் பார்வை அதுதான். மாற்றமில்லை.

  மத்தபடி, படம் பாருங்க. நீங்களும் தனியா ஒரு விமர்சனம் எழுதுவீங்க, விகடனைத் திட்டி!

  -வினோ

 15. ப.பாலமுரளி

  ஒரு படம் பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்(நினைவில் கொள்க). விமர்சனம் உட்பட. ரோபோ ரஜினி என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரோபோவாக நடித்திருப்பது ரஜினியே. இதைக்கூட புரிந்துக்கொள்ளமுடியவில்லையா?…. அனுதாபங்கள்…. விமர்சனத்தை மறுமுறைப் படிக்கவும்..

  இவண்
  திரை ரசிகன்.

 16. சகோதரன்

  ரஜினி நடித்ததே மறந்து போய் ரோபோவையே நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். என்றால் அது தலைவருக்கு கிடைத்த வெற்றிதானே@.

 17. santhosh

  @நைனா :

  //ஆனந்த விகடன் “ரஜினி 25″ பதிவை வெளியிட்ட போது (அது ரஜினியின் சிறப்பை கூறுவதாக அமைந்ததால் தானே) அதை என்வழியிலும் நீங்கள் வெளியிட்டு மகிழ்ந்தீர்கள். விகடனுக்கு அப்போது என்ன உள்நோக்கம் இருந்திருக்கக்கூடும். // “ரஜினி 25 ” வெளியிட்டால் லாபம் அடைந்தவர்கள் இவர்கள். அதில் குறிப்பிட்டவை அனைத்தும் ரஜினி ரசிகனுக்கு தெரியும்.

  விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமையுள்ளது, அது நேர்மையாக இருக்கும்பட்சத்தில் அதை ஏற்போம், இல்லையனில் அதை எதிர்க்கிறோம்…

  நீங்கள் சொல்வதை பார்த்தல் ஒரு காமடி நினைவுக்கு வருது ” உனக்கேன் அக்கறை யாருக்கும் இல்லாத அக்கறை…………………

 18. chozhan

  வினோ, நான் தினமும் 10 – 20 முறை உங்களின் வலை மனையை பார்ப்பது வழக்கம் செய்தி இருந்தாலும் இல்லை என்றாலும் ஏனெனில் உங்களின் நடுநிலையான எழுத்துக்காக ஆனால் கடந்த ஒரு வாரமாக மிகவும் ஓவராக எழுதுகிறிர்கள். தயவு செய்து விமர்சனத்தையும் ஏற்றுகொள்ளுங்கள் இந்த படத்தில் பல இடங்களில் லாஜிக் இல்லை என்பதும் உண்மையே மற்றும் தேவையே இல்லாமல் கமலை இழுக்கவேண்டாம் மும்பை வந்த ரஜினி தாக்கரேவை கடவுள் என்று சொன்னவர்தான் நானும் ஒரு சராசரி மனிதன் என்பதை நிருபித்த சம்பவம் இது. ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் நானும் மும்பையில் தான் இருக்கிறேன் எனக்கு பால் தாக்கரேவை நன்றாக தெரியும். தயவு செய்து ரஜினி ரசிகனாக இல்லாமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவும். இலங்கை விஷயம் மற்றும் தமிழ்நாட்டு அரசியலின் நீங்கள் நடு நிலையாக எழுதிவருகிறிர்கள் என்பதால் உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் என்னைப்போல் பலர் வைத்திருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம். இது just ஒரு படம் அவ்வளவே இதில் அறிவியல் & தொழில்நுட்பம் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம் என்பதும் திரைக்கதையில் நன்றாக கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதும் நீங்களும் மறுக்கமுடியாத உண்மையே. மேலும் இதில் ரஜினியை தவிர வேறுயாராவது நடித்து இருந்து சன் குரூப் பண்ணுகிற அராஜகத்தை உங்கள் பார்வையில் எப்படி எழுதி இருப்பிர்கள் என்பதையும் சிந்தித்து பார்க்கவும்.

 19. Mahesh

  இதுவும் கூட நம்ம தலைவருக்கு கிரெடிட் தான் . ஒரு ஆந்திரா பொண்ணு என்கிட்டே சிட்டி கேரக்டர் நிஜமா ஒரு ரோபோ நே நினைச்சுட்டு கேட்டா. அந்த அளவுக்கு தலைவர் நடிப்பு accurate a இருக்கு.Rediff layo வேற ஏதோ ஒரு famous site la ipdi எழுதி இருக்காங்க “KAMAL,SHARUKH,AMIR யாரு நடிச்சு இருந்தாலும் பிரமண்டம்மா இருந்திருக்கும், ஆனா ரஜினி நடிச்சதால பிரமாண்டத்திலும் பிரமாண்டம இருக்குநு.” .Moreover NDTV Poll la தலைவர் Superstarr nu 83% votes, Amitab only 3 % and Sharukh around 8%. See the difference beteween first and second.
  கமல் அல்லது யாரு நடிச்சு இருந்தாலும் “நடிகரங்கன்னு’ நல்லா தெரியும். ஆனா தலைவர் நடிக்கரதே தெரியாம இயல்பா நல்லா பண்ணிடுவார் . அதுதான் தலைவர் ஸ்டைல். இது அசோக மிதிர்ரன் விமர்சனம் – தலைவர் அக்டிங் பத்தி.

  உள்ளூர் கொசு தொல்லைகளை விடுங்க . விகடன் ல 41 என்ன 100 mark எடுக்குருவங்க கூட 250 crores வசூல் pannatumae. ஏன் அவங்களே produce panni 100/100 eduthukattae. Enna Ippa !! These fools must see the North Indian media’s criticisms about the movie before penning. Thalaivar has become Asian Super Star. No one can stop , they can only comment idiotically !!!

 20. Venky

  They are out of standards now a days..I stopped buying AV book long back (during Baba review itself)….actually speaking no one will care abt AV rating for Thalaivar movies…Chandramukhi got only 40 whereas ME and Sachin got more than that (during that time only Vijay was writing some weekly strory in AV)….But ppl gave the correct mark to each films…All media are praising Endhiran with 4 STAR ratings..who are they to give 45 out of 100….Same grp only published D-grade letter in the form of Rajini fan during Soundarya marriage…..If we start giving rating to AV for each week, they wont get even 30 out of 100….JUST IGNORE AV…

 21. ADIYAVAN

  ‘கொச கொச தாடியாம்…’ , கொய்யால… ரஜினி வைத்தால் கொச கொச தாடி. கமல் வைத்தால் அறிவு ஜீவி தாடியா

  VINO உங்களிடம் இருந்து இதை எதிர்பார்கவே இல்ல.

  தேவையே இல்லாமல் எதற்காக கமலை வம்புக்கு IZHUTHU தலைவருக்கு கேட்ட பெயர் எடுக்குறீங்க?

 22. நைனா

  @ santhosh
  // “ரஜினி 25 ” வெளியிட்டால் லாபம் அடைந்தவர்கள் இவர்கள். அதில் குறிப்பிட்டவை அனைத்தும் ரஜினி ரசிகனுக்கு தெரியும்.//

  விகடன், “ரஜினி 25 ” ஐ வெளியிட்டு லாபம் அடைந்தவர்கள் என்றால், ஏற்கனவே வெளியானதை, அதுவும் ரசிகர்களுக்கு தெரிந்த விபரங்களை, என்வழி மீண்டும் மறு பதிவிட்டதன் நோக்கம்?

  லாபம் என்ற உள்நோக்கத்துடன் தான் விகடன் அதை வெளியிட்டார்கள் என்றால் “பாரீர் ஆனந்த விகடனின் (லாப) உள்நோக்கத்தை” என்று தலைப்பிட்டு என்வழியில் அதை பதிவு செய்து இருக்கலாமே.

 23. Suresh

  பாஸ் இந்த மங்க மண்ட பசங்க எந்த படத்துக்கு தான் 100 poduvangalam …
  Kodaliyala adicha rajini train a thakkutham, doctor oru chinna adila post moterm panum pothu manaiya pilaparu parthu irukingala vikatan editors mokkaigala vimarsanam endra peyaril 35-45 lae pottu pottu kalam oturanga entha padathuku than ivanga 100 90 ellam poduvangalm…. siva manasula sakthika illai own productions la edutha mokkai padathuka,

  Chinna adipothu manaya pilaka kandu pudichavaruku theriyatha enga thattanum nu… ada bettermox mandaigala… poga da pulla kuttiya padika vainga vimarsanam nu summa 32-48 pottu polapa otturathu ivanga 40 mela pottale athu superam illai na athu papadam nu nenapa …

  Thalaivar padathuku ellam vimarsanam poda thaguthiyae illai

 24. noushadh

  டியர் வினோ,

  பல சமயங்களில் உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன். சில நேரம் நான் மிகவும் முரண்படுகிறேன். இந்த விகடன் விசயத்தில் நான் முரண்படுகிறேன்.

  ஆனந்தவிகடன் என்று தன் விலையையும் அளவையும்(சைஸ்) மாற்றியதோ அப்பொழுதே தன் தரத்தையும் குறைத்து விட்டது. சச்சினுக்கும் வேட்டைக்காரனுக்கும் 40 க்கு மேல் கொடுத்து தன் தரத்தை எல்லோருக்கும் புரியவைத்துள்ளது. இந்த பத்திரிக்கையின் விமர்சனத்தரம் என்றோ குறைந்து விட்டது. நான் ரஜினி படத்திற்கு மார்க் போடவில்லை என்ற கரத்திர்க்கமட்டும் சொல்ல வில்லை. நிறைய நல்ல படங்களுக்கு மார்க் போடாமலும் பல சோதா படத்திற்கு நல்ல மதிப்பெண்ணும் போட்டுள்ளனர். நான் இந்த எதைப்பற்றியும் மறுக்கவில்லை. ஆனாலும்…

  எந்திரன் விமர்சனத்தை நானும் படித்தேன். இதில் நான் கண்ட குறைகள் சில தான்.

  – மார்க் அதிகம் போட்டிருக்கலாம். (முதலில் கூறியதைப்போல் valuation சரியில்லை. Exam board தரம் இழந்து நீண்ட நாட்கள் ஆகிறது.)
  – சிறிது யோசித்தால் தெரியக்கூடிய கேள்விகள், ரோபோட் எப்படி சக்திமிக்கவன் ஆகிறான் போன்ற கேள்விகள் தவிர்த்திருக்கலாம். இதற்கு சுஜாதா வேண்டும் என்பதில்லை. என்னைப்போன்ற சுஜாதா ரசிகர்கள் போதும்.
  – விசில் அடிக்கும் ரசிகர்களைப்பற்றி என்றிலிருந்து ஆனந்த விகடனுக்கு எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. பெருஜனம் ரசிக்கும் படங்களுக்கு என்றும் மார்க் போடாதவர்கள் ரசிகர்களின் ஏமாற்றம் பற்றி பேசுவது விந்தை. இல்லை விகடனார் மசாலா படத்தை தான் விரும்புகிறாரா? (ஒருவேளை அதனால் தான் வேட்டைகரனுக்கு >40 கிடைத்ததோ? )
  – கோச கோச தாடி: இது சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தை தான் வினோ. இதற்கு எதற்கு கமல் எல்லாம்? நானே முதலில் ஒரு செகண்ட் athirndhu vitten. rajiniya இது? enna dedication ? (இதையும் complement ஆகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.)
  – எத்தனை நாள் ஆச்சு இப்படி ரஜினியைப்பார்த்து என்று நாம் சொல்வதற்கும் அவர்கள் அபூர்வமாக வெளிப்படும் ரஜினி ஸ்டைல் என்பதற்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.

  உண்மையில் விமர்சனம் பார்த்து நான் சந்தோசப்பட்டேன். என் நண்பர்களோடு உரையாடினேன். ஏனெனில் இதில் தான் சில குறைகள் மட்டும் போட்டிருந்தனர். குறைகள் கண்டுபிடித்தாக வேண்டுமே என்பதற்காக. ஆனால் நீங்கள் கூறியது போல் அவ்வளவு தவறாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

  romba tenision vendam வினோ. importance kodukka vendiyathilla visayam இது.

 25. rajasekar

  ஆனந்த விகடன் இப்பொழுது ஆரம்பிக்கவில்லை இந்த வேலையை, தலைவரின் ஒவ்வொரு ஸ்டைலையும் அணு அணுவாக ரசித்த பல படங்களுக்கு கூட விகடன் ஏனோ தானோ என்றுதான் விமர்சனம் தரும். ஏன் தலைவரிடம் விகடனுக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?

 26. Manoharan

  விகடனுக்கு விமர்சிக்க உரிமையுண்டு என்று வாதிடும் அறிவுஜீவிகளுக்கு அவர்கள் போடும் முரண்பட்ட மதிப்பெண்கள் அவர்களுக்கே புரியாத ஒன்று என்பது தெரியாமல் போனது ஏன் ? ஏதோ கமலை இழுக்கக் கூடாது என்று சொல்லும் “ரொம்ப நல்லவர்களுக்கு” ரஜினியின் படத்தை வைத்தே ஒப்பிடுகிறேன். மனிதன் படத்துக்கு விகடன் 45 மார்க் கொடுத்தது, அது சரியென்றே வைத்துக் கொள்வோம். மனிதன் படத்தைவிட ரஜினியின் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, ஆர்ட் டைரக்சன், காஸ்டியூம்ஸ் , மேக்கப் போன்ற எல்லாவற்றிலும் பலமடங்கு உயர்ந்த படம் எந்திரன் என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியும். எல்லாவற்றையும் விட இந்திய படவுலகமே பார்த்திராத Special Effects எந்திரனில் உண்டு. அப்படிப்பட்ட எந்திரனுக்கும் 45 மார்க். இதைவிட ஒரு முரண்பாடான விமர்சனம் உண்டா ? இவர்கள் மார்க் போடுவது வரவர தண்ணியடித்துவிட்டு படம் பார்ப்பார்களோ என்று சந்தேகப்பட வைக்கிறது.

 27. kpr

  I think this blog owner is kind of political person………….I have wrote some comments for this article and it was for a whlie and now he removed it and it’s disappeared now.

  So he can write anything but if the user comments are not upto his mark then he remove it,………Then how can he comment on vikatan or dinamani……..
  ________________

  Your previous comment is really not up to the mark. Try to deliver your comment in decent manner.
  -Vino

 28. Vivek

  வினோ நான் உங்கள் எழுத்து மீது மரியாதையை வைத்து இருந்தேன் ஆனால் இப்போது… தயவு செய்து நடு நிலையோடு சிந்திங்கள். நன் மகான் அல்ல விமர்சனம் செயும்போதே உங்களுக்கும அவர்களுக்கும் எதோ தனிப்பட்ட விரோதம் போல் இருந்தது… இப்போது விகடன்…. எந்திரன் நன்றாக இருக்கிறது அல்லது இல்லை என்பது அவர்களின் கண்ணோட்டம் அதற்காக தலைவர் படத்தை மக்கள் பார்க்காமல் இருக்கப் போவது இல்லை… நாட்டில் இதை விட பெரிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது…

  எல்லோரும் நீங்க நினைப்பது போல் நடக்கவேண்டும் என்று எதிர் பார்க்க நியாயம் இல்லை .. இதே அக்ரமத்தை வேறு படத்திற்கு விகடன் செய்து இருந்தால் நீங்க இப்டி ஒரு கட்டுரை எழுதி இருப்பீர்கள???

 29. Manoharan

  ///இதே அக்ரமத்தை வேறு படத்திற்கு விகடன் செய்து இருந்தால் நீங்க இப்டி ஒரு கட்டுரை எழுதி இருப்பீர்கள???///

  @ விவேக். வேறு படத்துக்கு விகடன் செய்யும் அக்கிரமத்தை தட்டி கேட்பது நம் வேலை அல்ல. இது ரஜினி தளம் . ரஜினியை பற்றி வரும் செய்திகளுக்கு பதில் அளிப்பது நம் கடமை.

 30. கோய்ந்து

  This is not a Rajini Movie, Shankar spoils Rajini hype. Compare with rajini’s last two movies “Chandramugi”, “Shivaji” Endhiran is worst. we have to accept this. I am always said this is not a 100% Rajini movie. They makes money using Rajini’s hype. Even 5 years old kids also not surprised with all graphics other things. Hi Rajini sir, we need a movie with your 100% full style, action, comedy. We like superstar only not a super man.

 31. bala

  விகடன் ஒரு கிழடு பேப்பர் . அவன் எடுத்த வால்மீகி படம் பப்படம் , இவனுகள நல்ல திங்கறகு தான் ஆவணுக .

 32. bala

  இவர்களுக்கு சன் டிவி மீது காண்டு குங்குமம் சர்குலட்சன் அதிகமா இருப்பதால் பொறமை .கலாநிதி மாறன் தொட்டதெல்லாம் வெற்றி இவனுகளுக்கு அத பாத்து எரிச்சல் பேசாம இருந்தா ரொம்ப நல்லது

 33. M.GURUPRASATH

  first when i see their rating about this film i was little bit confused whether they were praising the film or scolding it….. they don’t have sense and brain….
  they commented like as u said ” கோடரியால் வெட்டினாலே கை பிளந்துகொள்கிற ரோபோவுக்கு, லாரிகளை இழுத்து வளைப்பதற்கும், காரைத் தூக்குவதற்கும் எங்கே இருந்து அந்தப் பலம் வந்தது?”

  when SUPER STAR “Vasee” crushed “chitti” he used a special axe (fire extinguisher) .First he broke the glass and then he took that special axe (u can clearly see it in the film)….so to break a ROBOT Of metal he used a special device…..

  i feel sorry for ” vikadan” & for their team…..

 34. Vivek

  @மனோகரன்: இது ரஜினி தளம் சரி.. பிறகு என் மற்ற படங்களை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள்?? .. மற்றவர்கள் தலைவர் படத்தை பற்றி விமர்சனம் செய்தால் அதை உங்களால் தாங்கி கொள்ள முடியவில்ல??

 35. Kicha

  @ Vivek .

  சார், இப்போ உங்க வீட்ல திருட்டு போய்டுச்சுன்ன, நான் அதை பார்த்த திருடன், திருடன்னு கத்துவேன். ஆனா என் வீட்ல திருட்டு போனா உடனே போலீஸ் ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன். இன்னும் நான் எவ்ளோ கஷ்டப்பட்டு சேர்த்த பொருளை கொண்டு போறனேன்னு ஆதங்க பட்டு அவனை திட்டுவேன். உடனே நீங்க வந்து என் வீட்ல திருட்டு போனப்போ நீ ஏன் கம்ப்ளைன்ட் பண்ணலன்னு கேட்ட என்ன சொல்ல? இது ஒரு உணர்வு.

  ரஜினி படம்ன இது நம்ம படம்னு ஒரு உணர்வு தோணுது. அதுக்காக, மத்த படத்தை குறை சொல்லி விமர்சனம் போடுங்கன்னு இங்க யாரும் சொல்லலியே? அதுக்கு சம்பந்தப்பட்ட ஆட்கள் அதை தட்டி கேக்கட்டுமே?

 36. Aravindan

  Hi to all Rajni fans. I kindly request to ignore the comment about Kamalhassan. He is a good friend to our thalaivar. Already our THALAIVAR told in one stage that, “no one is having a good friendship than us(Rajni & Kamal) and the young actors should take us as an example”.
  And I’m also not going to buy Vikatan books here after.
  இப்படிக்கு ரஜினியின் கோடி ரசிகர்களில் ஒருவன்
  Always THALAIVAR RAJNIKANTH and ULAGA NAAYAGAN ROCKS.

 37. Vivek

  @கிச்சா : நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள்… மற்றவர்கள் வீட்டில் நாம் திருடுகிறோம் ஆனால் மற்றவர்கள் நம் வீட்டில் திருடும்போது நமக்கு கோபம் வருகிறது.. சம்பதபட்டவர் வந்து கேக்கும் வரை நாம் நாம் திருடிக்கொண்டே இருப்போம் என்பது நல்ல மனிதர்களுக்கு அழகல்ல…

 38. Akramulla

  After reading the vikatan review I decided to stop buying Vikatan circulations. I hate Vikatan.

 39. ram

  எல்லாருக்கும் விமர்சனம் எழுத உரிமை உண்டு. இதில் ரஜினியா இருந்தால் என்ன யாரா இருந்தால் என்ன. அவர் அவர் விருப்பம். இதில் குறை சொல்ல ஒன்னும் இல்லை.
  நமக்கு பிடித்த ஒன்று அடுத்தவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதை அவர்களுக்கு சொல்ல உரிமை உண்டு. இதில் தவறு ஒன்றும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *