BREAKING NEWS
Search

வா… நீ… வந்துவிடு!

வா… நீ… வந்துவிடு!

சிங்கத்தின் இரைக்காய்

அடைக்கப்பட்டிருக்கும்

இந்த ஆட்டு மந்தைகள்

என் தூக்கத்தை

கெடுத்துவிட்டன..!

எல்லாம் சதி என்று குரலெடுத்து

கதறி குதிக்கிறேன்..

கண்டுகொள்வாரில்லை..

காது பணிப்பாருமில்லை..

எல்லாம் சோர்ந்தும்

அவர் வருவார்…

அவர் உயிர்த்தெழுந்து வருவார்..

மீண்டும் மந்தையை மேய்ப்பார்..

என்ற என் நம்பிக்கை இந்த

இரவு அழுகையில் கரைகிறது..

நீ ஒருவன் தவிர இந்த மந்தையை

நிசமாய் நேசித்தவன்

யாருமில்லையோ?

நீ ஒருவன் தவிர இந்த மந்தையை

வளமான சமவெளியில் நடத்தியவன்

யாருமில்லையோ?

உன்னால் உன் மந்தையை

சிங்கத்தின் வாயில் கொடுத்துவிட்டு

வேடிக்கை பார்க்க முடியாது..

இங்கே சிங்கம் சிங்கமாயில்லை..

அசிங்கமான தந்திர நரியாய்

மாறியிருப்பதையும் நீ அறிவாய்…

நீ உயிர்த்தெழுந்தால்

மட்டுமே இங்கே துரோகம்

திசை மாறும்..

திசையும் வசமாகும்..

சிங்கத்தின் இரைக்காய்

அடைக்கப்பட்டிருக்கும்

இந்த ஆட்டு மந்தைகள்

என் தூக்கத்தை

கெடுத்துவிட்டன..!

வா… நீ… வந்துவிடு..

எங்கள் உண்மையான மேய்ப்பனே..

உன் வருகைக்காக

விழித்திருக்கிறேன்…

வா… நீ… வந்துவிடு..

-ஏ ஜான்




13 thoughts on “வா… நீ… வந்துவிடு!

  1. p

    நீ உயிர்த்தெழுந்தால்

    மட்டுமே இங்கே துரோகம்

    திசை மாறும்..

    திசையும் வசமாகும்..

  2. Ravanan

    என்ன கொடுமையா இது….. கிருஸ்துவ கவிதை போல் உள்ளது….. திருந்தவே மாட்டிங்களா….. கொஞ்சம் விட்ட போதும் உங்கள் பிழைப்பை தொடங்கிவிடுவீர்கள்…..

  3. NTI

    Mr.john,

    i think you wrote this kavithai after finish your prayer from chruch!!!!

    மீண்டும் மந்தையை மேய்ப்பார்..

    what is the meaning of above, you mean all are mandhai!!!

  4. Karthik

    Hi NTI & Ravan,

    Take the meaning alone, it doesnt matter in which format it was told.
    we never do any initiatives against the wrong things. we always want some people to comeup. in that sense, yes we are all mandhais 🙂

    Im not pinpointing anything, just wana say take everything lightly

    Thanks
    Karthik

  5. raj.s

    கொடுமையிலும் கொடுமை .ஐயா சிவத்தம்பி இன்று அவரது வாயால் துரோகியை தமிழர்க்கு எல்லாம் தலைவர் என்று சொல்ல வைத்து விட்டாரே கடவுள்.

  6. Ravanan

    karthik,

    how can you say that “we never do any initiatives against the wrong things. we always want some people to comeup” – I disagree with you…. wanna take example how Mr.Vino is performing against wrong things through this website and you can’t say he is manthai….

    Also, i can give you more examples…..

    This type of “kavitha” should put in church (thier format) and not in public format as everyone who reads this…..

    Don’t try to take everything easier then one day you will loosse your identity….

  7. siva

    ஜான் அவர்களே

    அவர் இறந்து 2000 ஆண்டுகள் ஆகின்றன. நிச்சயம் திரும்ப வரமாட்டார். கல்கி தான் வருவார்.

  8. Manoharan

    எங்களுக்கும் அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்கிற நம்பிக்கை மட்டும்தான் கொஞ்சமேனும் கவலைகளை போக்குகிறது.

  9. p

    Ravanan & NTI

    மந்தை என்றால் கூட்டம் அல்லது கும்பல் என்று தமிழில் பொருள்படும், மந்தை என்றால் ஆடு மாடு கூட்டம் மட்டும் அல்ல தமிழனும் தான். ஏன் என்றால் தமிழன் தன் ஆறாவது அறிவை எப்போதும் பயன் படுத்துவது இல்லையே…

    Mr . Siva
    jesus இறந்து ௨௦௦௦ ஆண்டுகள் ஆனாலும் அவர் ஒவ்வொரு கிறிஸ்தவன் உள்ளும் வாழ்கிறார். அது போல் எங்கள் தலைவர் ஒவ்வொரு உண்மையான தமிழன் உள்ளும் வாழ்கிறார். அவர் வருவார்…. துரோகிகளை அளித்து தமிழ் தேசம் உருவாக்குவர்…..

    தமிழனின் தாகம் தமிழ் ஈழ தாயகம்.

  10. Ravanan

    P……

    “தமிழன் தன் ஆறாவது அறிவை எப்போதும் பயன் படுத்துவது இல்லையே… ”

    எந்த அறிவை பயன் படுத்தி தமிழன் பல அற்புதங்களை நமக்கு கொடுத்துள்ளான்…. தமிழன் தான் ஆறு அறிவையும் செவ்வனே பயன் படுத்துவான்…. தமிழனின் சாகசங்களை சற்று படித்து தெரிந்து கொண்டு கருத்து சொல்ல வேண்டும் ஹலோ கந்தசாமி (P )…..

  11. p

    “தமிழன் தன் ஆறாவது அறிவை எப்போதும் பயன் படுத்துவது இல்லையே… ” இப்படி நன் கூறியது இன்றைய தமிழனை. ஒவ்வொரு தமிழனும் தன் ஆறு அறிவை தன் இனத்திட்டகாக செவ்வனே பயன்படுத்தி இருந்தால் இன்று ஈழ போராட்டம் இந்த நிலைக்கு வந்திருக்காது. துரோகிகளும் சுயநலவாதிகளும் உருவானது தமிழன் தன் ஆறாவது அறிவை ஒழுங்கஹா பயன்படுத்தாததால் தான்.

    தமிழ் தலைவர் என தன் பெருமை பாடும் கருணாநிதி தமிழுக்கு என்ன செய்தார்???? தன் குடும்பத்துக்கு என்ன செய்தார்????? இந்த தமிழன் தன் ஆறாவது அறிவை செவ்வனே பயன்படுத்தி இருந்தால் தமிழ் நாடு எங்கேயோ போய் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *