BREAKING NEWS
Search

வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு தந்த ரஜினி! – நெகிழும் நிகில்

வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு தந்த ரஜினி! – நெகிழும் நிகில்

நிகில் முருகன்… திரைத் துறையில் இன்று முதலிடத்தில் உள்ள மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ).

பிஆர்ஓவா… என்று மற்றவர்கள் கிண்டலடித்த ஒரு வேலையை பக்கா ‘ப்ரொஃஷனலாக’ மாற்றிக் காட்டியவர். ஒரு படத்தின் வெற்றிக்கு நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரம் முக்கியமல்ல… மக்கள் தொடர்பு மூலம் கிடைக்கும் ‘பப்ளிசிட்டியே’ பிரதானம் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

ரஜினி மற்றும் கமல் இருவருக்குமே ஒரே சமயத்தில் பிஆர்ஓவாகப் பணியாற்றுபவர். எந்திரனுக்கு பிஆர்ஓவும் இவர்தான்.

சமீபத்தில் இவருக்கு ரஜினி ஒரு விலை மதிப்பில்லாப் பரிசளித்துள்ளார். என்ன அது?

பாபா முத்திரை பதித்த தங்க மோதிரம்!

இதுகுறித்து நிகில் இப்படிச் சொல்கிறார்:

என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இதுதான். வாழ்க்கையில் யாரை முன்மாதிரியாகக் கொண்டு இந்த சினிமாவுக்குள் நுழைந்தேனோ, அவர் கையாலேயே பரிசு வாங்கியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு.

அவர், இந்தியத் திரையுலகின் அடையாளம்… கடின உழைப்பு மற்றும் மனிதாபிமானத்துக்கே உதாரணமான சூப்பர் ஸ்டார் ரஜினி. அவருடனும் அவரது குடும்பத்துடனும் பணியாற்றியதற்காக  ரஜினி தந்ததுதான் இந்த பாபா முத்திரை மோதிரம்.

மனதளவில் சற்றே நான் தளர்வுற்ற நேரத்தில், ‘இதோ உன் உழைப்புக்கான பரிசு. நம்பிக்கையுடன் முன்னேறு’ என்று இந்த மோதிரம் மூலம் ரஜினி கூறியதாகவே நான் எடுத்துக் கொண்டேன்.

அவர் தந்த இந்த பரிசு, என் மனதுக்கு புத்துணர்ச்சியையும், இன்னும் வேகமாக செயல்படும் ஆற்றலையும் தந்துள்ளது. ரஜினியைப் போன்ற ஒரு மாபெரும் மனிதருடன் பணியாற்றினோம் என்பதே என்னை எல்லையில்லா பரவசத்தில் ஆழ்த்துகிறது..,” என்றவர், இறுதியாக,

“உழைப்பையும் திறமையையும் மதிப்பதில் சூப்பர் ஸ்டாருக்கு நிகரில்லை” என்று முடித்தார்.

அது பெருமைக்காக சொன்ன வார்த்தையில்லை… அனுபவ மொழி!

-வினோ

என்வழி ஸ்பெஷல்




6 thoughts on “வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு தந்த ரஜினி! – நெகிழும் நிகில்

  1. Bahrain Baba

    kilimanjaro song + kalabhavan mani = may be chopped, but crores of rupees have been spent on those sequences & Shankar knows the best!

  2. karthik

    ஹே கட் எல்லாம் பண்ணாதிங்க.. நாங்க இன்னும் படம் பாக்கள..

  3. Manoharan

    அந்த கொசு சீனும் , கலாபவன் மணி சீனும் தேவையேயில்லை. அதை வெட்டிவிட்டால் படம் இன்னும் வேகமாக நகரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *