BREAKING NEWS
Search

வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்கள் டிசம்பர் 1-ம் தேதி விடுவிப்பு!

டிசம்பர் 1-ம் தேதி வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்கள் விடுவிப்பு! – இலங்கை அறிவிப்பு

வவுனியா: வரும் டிசம்பர் 1-ம் தேதி வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் திறந்துவிடப்பட்டு, அங்கு வசிக்கும் தமிழர்கள் நாட்டில்

image0051

சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகர் பசில் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்த மக்கள் அனைவரும் மீண்டும் அவரவர் பகுதிகளில் உரிய வசதிகளோடு மறுகுடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சே இன்று காலை வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமுக்கு வருகை தந்தார்.

முள்கம்பி வேலிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல வரும் டிசம்பர் 1 முதல் அனுமதியளிக்கப்படுகிறது எனவும், ஜனவரி 31-க்கு முன்னதாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மறுகுடியேற்றப்படுவர் என்றும் அப்போது அவர் கூறினார்.

அதேநேரம் இலங்கையில் தேர்தல் நெருங்குவதால், இந்த முடிவை உடனடியாக அரசு வெளியிட்டுள்ளதாக தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன.

நேற்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சனிக்கிழமை காலையில், பசில் ராஜபக்ச வரலாற்று ரீதியான ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




One thought on “வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்கள் டிசம்பர் 1-ம் தேதி விடுவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *