BREAKING NEWS
Search

வவுனியா ஆயுத முகாம் வெடித்துச் சிதறியது… புலிகளின் தாக்குதலா?

வவுனியா ஆயுத முகாம் வெடித்துச் சிதறியது… புலிகளின் தாக்குதலா?

வவுனியா: வவுனியா மாவட்டத்திலுள்ள ஈரப்பெரியகுளம் ஜோசப் முகாமின் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது. இதில் சிதறிய பாகங்கள் வவுனியா நகரின் மக்கள் வசிப்பிடங்கள் வரை விழுந்ததாகவும் வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. Joseph camp

இது வெடி விபத்து இல்லையென்றும், விடுதலைப் புலிகள் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதல் முயற்சியே இது என்று அதன் முக்கிய பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தின் காரணமாக, வவுனியா நகரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கித் தவிக்கிறது. இன்னமும் தொடர்ந்து வெடிச் சத்தங்கள் கேட்பதாகவும், வவுனியாவையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் எங்கும் புகை மண்டலமாகமாகக் காட்சி தருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

45 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பல ராணுவத்தினர் காயமடைந்து அம்பூலன்ஸ் வண்டிகளில் கொண்டு செல்வதைப் பார்க்கக் கூடியதாக உள்ளதாகவும், பலியான ராணுவத்தினர் உடல்கள் விமானங்களில் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதற்கான காரணம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த முகாம்தான் வன்னி ஆயுதப் படை தலைமயகமாக செயல்பட்டு வந்தது என்பது கூடுதல் தகவல்.

மயிலிட்டி ஆயுதக் கிடங்கிலும்…

இதேவேளையில் இருதினங்களுக்கு முன் மயிலிட்டிப் பகுதியில் உள்ள இலங்கை இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்திலும் பெரும் ‘தீ விபத்து’ ஏற்பட்டது.

‘இது ஒரு விபத்து என்றே நாம் எண்ணுகிறோம். ஆயினும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களையும் நாம் புறக்கணிக்கவில்லை’ என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் பொறுப்பேற்பு!

பிந்திக் கிடைத்த தகவலின் படி விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர் ஒருவர் மேற்கு நாடுகளின் செய்தியாளர்களைச் தொடர்பு கொண்டு, மயிலிப்பிட்டி, ஜோசப் முகாம்கள் மீதான தாக்குதலை தாமே மிகநுட்பமாக திட்டமிட்டு நடத்தியதாக உரிமை கோரியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் புலிகளால் நடத்தப்பட்டதா… அல்லது மிச்சமிருக்கிற தமிழரையும் கொன்றழிக்க திட்டமிட்டு சிங்கள ராணுவம் செய்கிற சூழ்ச்சியா என்பது போகப்போகத்தான் தெரியும்.




One thought on “வவுனியா ஆயுத முகாம் வெடித்துச் சிதறியது… புலிகளின் தாக்குதலா?

  1. Thamilan

    vavunuiya Ayutha Kalanjiyam mattum alle… Alari Maligaiyum vedithu sitharum nal thurathil illai

    Athu sari… Prabaharan than sethu poie vittare…. Puligal than alikkapattu vittathe appuram eppadi ungalukku oru santhegam.. புலிகளின் தாக்குதலா? endru.

    May be Prabaharans’ Avi attacking…. these places. Holmang (in singhala Peyi)….. kavanam…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *