BREAKING NEWS
Search

வருது வருது வருது… ஓடுஓடுஓடு…!

வருது வருது வருது… ஓடுஓடுஓடு…!

popcornநாம் என்னவோ விஜய்யைக் கிண்டலடிப்பதாக சிலர் தப்பா நினைக்கக் கூடும். சன் பிக்சர்ஸ் இப்போது வெளியிட்டு வரும் படத்தின் முன்னோட்டக் காட்சியைக் காட்டும்போதே பின்னணியில் ஒலிக்கும் பாடல்தான் இந்த ‘ஓடு ஓடு ஓடு…’

இதற்கு முன், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக, ஒரு வாரம் முழுக்க, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலுமாசம் தூங்க மாட்டே, வீடுபோயி சேர மாட்டே…” என்று தொடர்ந்து ஒளிபரப்பியதில் நிஜமாகவே பலர் Mentally sick – ஆக உணர்ந்தார்களாம்.

ஒரு நாள் இந்த வசனத்தை விஜய் ராகம்போட்டு இழுக்க ஆரம்பித்தபோதே, பக்கத்து வீட்டில் ஒரு அம்மா இப்படிக் கத்தினார்  ‘ராஜி.. அந்தக் கருமத்தை நிறுத்தித் தொலையேன்டி!’

விஜய்யின் பல்டியால் சீமான் ‘கோபம்’!

popcornவிஜய் தனது 51 வது படத்துக்கு இயக்குநர் ஜெயம் ராஜா என்று முடிவு செய்துவிட்டதாக, அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மூலமே அறிவித்திருந்தார்.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ.. திடீரென்று இயக்குநர் மாற்றப்படுவதாக பேச்சு அடிபட்டது. சீமான் இயக்கும் கோபம் படத்தில் நடிக்க உடனடியாகக் கால்ஷீட் கொடுத்துவிட்டார் என பல முன்னணி நாளிதழ், இணைய தளங்களும் செய்திகளை பரபரப்பாக வெளியிட்டன. கூடவே, இந்தத் தலைப்பை தேர்வு செய்ததே, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்தான் என்று வேறு கொளுத்திவிட்டன. செம பப்ளிசிட்டி.

இப்போது அப்படியே யு டர்ன் அடிக்கிறது செய்தி…

51 வது படத்தை ஜெயம் ராஜாதான் இயக்குகிறாராம். 52வது படத்தை லிங்குசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழப்ப எபிசோடைப் பார்த்து கடுப்பானவர் நமது ‘செந்தமிழன்’ சீமான்தான்!

அடுத்த குறி நடிகர் சங்கம்?

popcornனது அரசியல் ஆசைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்துவிட்டார் விஜய் என்பது தெரிந்த செய்தி. தெரியாத சமாச்சாரம்,திரையுலகின் முக்கிய பதவியைப் பிடித்து இங்கே கோலோச்ச வேண்டும் என தந்தைக்குலம் அவருக்கு அட்வைஸ் செய்திருப்பது.

இதற்கான லாபியையும் இப்போதே தொடங்கிவிட்டாராம் தந்தை.

‘ண்ணா.. இந்த விஷயம் நடிகர் சங்கத்தின் நிரந்தர பொதுச் செயலாளர், தலைவருக்கு தெரிஞ்சா, அவங்க அடிப்பொடிகள் ரியாக்ஷனை நினைச்சுப் பார்த்தீங்களா… காங்கிரசை விட மோசமான கோஷ்டிப் பூசலாச்சே அங்கே!’
7 thoughts on “வருது வருது வருது… ஓடுஓடுஓடு…!

 1. Suresh

  “” இதற்கு முன், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக, ஒரு வாரம் முழுக்க, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலுமாசம் தூங்க மாட்டே, வீடுபோயி சேர மாட்டே…” “”

  அப்ப இது இல்லையா உண்மையான வரி….

  “நான் நடிச்சா தாங்க மாட்ட, நாலுமாசம் தூங்க மாட்டே, வீடுபோயி சேர மாட்டே…”

 2. bharathapriyan

  இது ஒரு பாட்டு இதுல வரி ரொம்ப முக்கியம் !!

 3. Manoharan

  Mr.Anonymus , its excellent video. My stomach is paining by laughing. தேங்க்ஸ் a lot .

 4. damildumil

  //நான் நடிச்சா தாங்க மாட்ட, நாலுமாசம் தூங்க மாட்டே//

  நீங்க அடிச்சா கூட தாங்கிப்போம், ஆனா நடிச்சாதான்ங்கணா எங்களால தாங்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *