BREAKING NEWS
Search

வன்முறையைத் தூண்டியதாக சீமான் மீது வழக்கு!

வன்முறையைத் தூண்டியதாக சீமான் மீது வழக்கு!

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர் சீமான் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சீமானை கைது செய்யத் தேடுகிறது போலீஸ்.

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்தும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், “ஐ.நா. குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நி்ரூபிக்கும். அப்படி நிரூபித்து விட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும். எனவே தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்து விடாதீர்கள்.

இது வரை 500 மீனவர்கள் சிங்களவர்களால் பலியாகியுள்ளனர். ஆனால் இப்போது ஒருவர் பலியானதற்கு மட்டும் கலைஞர் அக்கறை செலுத்துவது ஏன்? பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? இவரின் குடும்பத்திற்கு மட்டும் 3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பது ஏன்? எல்லாம் தேர்தல் நெருங்கி விட்டது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன் என்றார் ஆவேசமாக…,” என்றார்.

சீமானின் இந்த பேச்சு இனக்கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் 153-ஏ ஐ.பி.சி. (வன்முறையை தூண்டும் வகையில் 2 பிரிவினருக்கிடையே மதம், மொழி, இனத்தில் அடிப்படையில் மோதலை ஏற்படுத்தும் விதத்தில் பேசுவது, செயல்படுவது. 188 ஐ.பி.சி. (நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் பேசியது) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமானை கைது செய்ய நேற்று இரவு விருகம்பாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சீமான் இல்லை. விடிய விடிய அங்கேயே போலீசார் காத்து கிடந்தனர். ஆனால் இரவு முழுவதும் சீமான் வீட்டுக்கு வரவில்லை.

அவரது செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டனர். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் சீமான் தலைமறை வாகிவிட்டார் என போலீசார் அறிவித்துள்ளனர்.

சீமானை போலீசார் தேடுவதை அறிந்ததும் அவரது வீட்டு முன்பு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு போலீசார் ரகசிய கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக இயக்குநர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய பேச்சுக்காக, என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை. ஆனால் நான் பேசிய பேச்சுக்கள், சிங்களர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கூறி என்னை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம், எண்ணற்ற மீனவர்களின் உயிருக்கு சிறு அசைவை கூட தெரிவிக்க மறுக்கிறது.

இன விடியலுக்கான பணியை செய்தே தீருவோம். அடக்கு முறை சட்டங்களால் எங்களை அச்சுறுத்த முடியாது. இதற்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம். என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன். நான் பார்க்காத வழக்கா? நான் எதற்காக தலைமறைவாக வேண்டும்…?” என்று கூறியுள்ளார்.
5 thoughts on “வன்முறையைத் தூண்டியதாக சீமான் மீது வழக்கு!

 1. niyayam

  இது வரை 500 மீனவர்கள் சிங்களவர்களால் பலியாகியுள்ளனர்

  கடந்த 60 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

  கணக்கு போட்டு தந்ததது யாரு சீமானே!!!!!!!!!?

 2. niyayam

  நான் எதற்காக தலைமறைவாக வேண்டும்…?” என்று கூறியுள்ளார்.

  நித்தியானந்தா சொன்னது போலவே இருக்குது

 3. Thamilan

  மத்திய அரசுக்கு இந்திய ஒருமைப்பாடு என்றால் என்ன என்று யாரவது விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்…. மிகவும் அபத்தமாக இருக்கிறது காவல் துரையின் நடவடிக்கை!!! இதுவரை மீனவர்களை கொன்றவர்களை என்ன செய்தார்கள் இவர்கள் இப்படி பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க??? இப்படி ஒருவரை பேச தூண்டியதே இதுவரை மீனவர்கள் கொல்லபடுவதை வேடிக்கை பார்த்த மாநில மத்திய அரசுகள் தானே… இப்போது வழக்கு பதிய என்ன அருகதை இருக்கிறது!!! பிரச்சனையை தீர்க்காமல் அடுக்குமுறை என்பது நீண்ட நாளைக்கு நீடிக்காது … ஒன்றும் மட்டும் நமக்கு புரியவில்லை… மத்திய அரசுக்கு உண்மையில் தமிழர்கள் உயிர் மீது அக்கறை இல்லையா அல்லது இலங்கைக்கு பயந்து அவர்களை தட்டி கேட்காமல் இருகிறார்களா???
  நம்முடைய அரசியல் கட்சிகளும் வழக்கம் போல ஒருபடியான நடவடிக்கை ஏதும் எடுக்க முயலாமல் லாவணி பாட ஆரம்பித்துவிட்டார்கள் !!!! தமிழ் மக்களும் இலவச தொலைகட்சிக்கும் பிரியாணிக்கும் ஒட்டு போட்டு இன உணர்வுகளை அடகு வைத்துவிட்டார்கள்…. தமிழர்கள் எப்போது இதையெல்லாம் உணர்ந்து வாக்களிகிரர்களோ அப்போது தான் தமிழ் இனத்திற்கு ஒரு விடிவு…. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இவர்களே தனிநாடு கேட்டு போராடவேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களை தள்ளி விடுவார்கள்…

 4. naam tamilar

  வரலாற்றை திரும்பி பாருங்கள் ,, கிளர்ச்சி க்கு பின் தான் எழுச்சி ,,சீமான் கைது செய்யப்படுவது ,, மக்கள் சிந்திக்க வாய்ப்பு ,,சீமான் அரசியல் புரட்சியிலும் பிரபாகரன் தம்பி என்று நிருபியுங்கள் வாழ்த்துகள்

 5. PROMISE

  சீமான் வழி தான் சரி ,,, வன்முறை என்பது வேறு ,,எதிர்ப்பை தெரிவிப்பது வேறு ,, இங்குள்ள சிங்களனை அடியுங்கள் இதுவரை மீனவர் பிரச்னை பேசாத இந்திய ,, நிச்சயம் பேசும் ,, இலங்கை முதலாவதாக பேச்சிவார்தைக்கு ஓடிவரும் ,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *