BREAKING NEWS
Search

வன்னியில் சிங்களர்களுக்கு உழவு கருவிகள்… கண்ணீர் விட்ட செஞ்சிலுவை சங்க அதிகாரி!

வன்னியில் சிங்களர்களுக்கு உழவு கருவிகள்… கண்ணீர் விட்ட செஞ்சிலுவை சங்க அதிகாரி!

வன்னி: வன்னியில் தமிழர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட உழவு எந்திரங்கள் மற்றும் கருவிகளை சிங்களர்களுக்கு வழங்கியதைக் கண்டு செஞ்சிலுவைச் சங்க அதிகாரி கண்ணீர் விட்டு அழுதார்.

வன்னியில் அண்மையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வழங்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உழவுக் கருவிகள் தரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை சிங்களவர்களுக்கு வழங்கியதாக செய்திகள் வெளியாகின.

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் சிலரே இந்த வேலையைச் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீயின் உத்தரவின் பேரிலேயே வழங்கப்பட்டதாக இப்போது தெரிய வந்துள்ளது.

உழவு இயந்திரங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் கண்ணீர் விட்டு அழுதார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பட்டினியிலும் வெட்ட வெளியிலும் கிடக்க, அனைத்து வகையிலும் பாதுகாப்பான சிங்களர்களுக்கு இந்த எந்திரங்கள் வழங்கப்படுவதை கண்டு அவர் கண்ணீர்விட்டு அழுதார்.

இந்த சம்பவம் புகைப்படமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் பிரசுரமாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உழவுக் கருவிகள் வழங்கிய விவகாரத்தில் நடந்தது அனைத்தையும் தனது உயரதிகாரிக்கு செஞ்சிலுவைச் சங்க ஊழியர் அறிக்கையாக அனுப்பியுள்ளாராம்.




One thought on “வன்னியில் சிங்களர்களுக்கு உழவு கருவிகள்… கண்ணீர் விட்ட செஞ்சிலுவை சங்க அதிகாரி!

  1. Muthu

    தமிழர்களை ஒரு மனித இனமாக மதிக்காத அந்த சிங்கள கேடுகெட்ட நாய்கள் எங்கே அவர்களின் வாழ்க்கையை உழவு கருவிகள் கொடுத்து உயர்த்த போகிறது. பேயாட்டம் போடும் அந்த அரக்கர்கள் ஒரு நாளில் எரிந்து நாசமாக போவது காலத்தின் கட்டாயம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *