BREAKING NEWS
Search

வன்னியில் உச்சகட்ட அவலம்: ஒரே இரவில் 2000 தமிழர்கள் கோரப் படுகொலை!

வன்னியில் உச்சகட்ட அவலம்: ஒரே இரவில் 2000 தமிழர் கோரப் படுகொலை!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 2000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.mulli_8509_5

கொலையானோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணியிலிருந்து அனைத்துவித கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலினால் பதுங்கு குழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக் கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.

பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்கு குழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக் குரல் எழுப்புவது நெஞ்சைப் பிளப்பதாக உள்ளதென்றும்  புதினம் இணையத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.vanni_20090509004

தெருவெங்கும் சிதறிக்கிடக்கும் மனித உடல்களைக் கூட மீட்க முடியாத அளவு இலங்கை ராணுவத்தின் தாக்குதல் மிகக் கொடூரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்களை அப்புறப்படுத்தக் கூட பணியாளர்கள் யாருமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாம்.

இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.mulli_8509_6

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அதிகாரி வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடல்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
10 thoughts on “வன்னியில் உச்சகட்ட அவலம்: ஒரே இரவில் 2000 தமிழர்கள் கோரப் படுகொலை!

 1. ஈ ரா

  இந்த கொடுமை தீர வழியே இல்லையா…
  கடவுளே உனக்கு இன்னும் இரக்கம் பிறக்கவில்லையா? –

  வினோ, இது போன்ற செய்திகளை படிக்கும்போது,
  எமது கையாலாகத்தனம் நெஞ்சைத் தைக்கிறது.

  ஈ ரா

 2. sivakumar

  வினோ சார் சோனியாவின் பிரச்சார செய்தியை போட்ட நீங்கள் எப்படி இந்த செய்தியை போடலாம் .உங்கள் நடுநிலமை என்னாவது என்று சூரியன் போன்ற மிகபெரிய நடுநிலமையாளர்கள் கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்.நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சூரியனை பொறுத்தவரை நடுநிலைமை எனபது தமிழர்கள் அங்கு செத்தாலும் அதற்க்கு காரணமான சோனியா மற்றும் அவருக்கு துணைபோன மிகபெரிய தமிழின தலைவர்களை நீங்கள் புகழவேண்டும்.
  தலைவர் ரஜினி சொன்னதுபோல் அப்பாவி மக்களின் ரத்தத்தை சிந்த வைக்கும் எந்த நாடும் நன்றாக இருந்ததாக சரித்திரமே இல்லை.

 3. உ.பி

  திரு Simple Sundar அவர்களே, நீங்கள் என்ன சொல்ல வருகிரீர்கலென புரியவில்லை! இப்போதே இலங்கையை பற்றி கவலைபடுகிறீர்களா?

 4. Dev

  If we have useless and ignorant leaders like sonia and group even a single tamil people will not survive in Sri Lanka.

  Dev

 5. நினைவுகள்

  s.vasanth: தம்பி தெரிஞ்சா பேசுங்க இல்லன்னா மேலுயும், கீழையும் பொத்திக்கிட்டு சும்மா போங்க. விடுதலைபுலகள் ஒன்றும் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்களில்லை, மக்கள்தான் அவர்கள், அவர்கள்தான் மக்கள்.

  மேலும் அவர்கள் மக்கலின் பாதுகாப்புக்காக சுற்றி நிற்பதாகத்தான் செயதிகள் வருகிறது, ஆனால் இலங்கை ராணுவம்தான் அநியாயமாக மக்கள்மீது குண்டுகளைப்போடுகிறது, மேலும் நேற்று நடந்த ஒருதாக்குதல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருபகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *