BREAKING NEWS
Search

குண்டுவீச்சில் இளந்திரையன் படுகாயம்

சிங்கள ராணுவ குண்டுவீச்சில் இளந்திரையன் படுகாயம்

வன்னி: தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் இளந்திரையன் என்று அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் இன்று ilanthirayan001அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இரு தினங்களுக்கு முன்புதான் இளந்திரையன் ஆஸ்திரேலிய வானொலிக்கு பேட்டியளித்திருந்தார்.

பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள கொலைக் களத்தில் மக்களின் நி்லைமை சொல்லொனாத துயரத்துக்கு ஆட்பட்டிருப்பதையும், இலங்கை ராணுவத்தினரின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் மிகத் தீவிரமாகவும், பயங்கரமாகவும் இருப்பதாகவும் கூறியிருந்தார் இளந்திரையன்.

இதற்கு ஆதாரமாக ஐநாவின் பயிற்சி மற்றும் ஆய்வுகளுக்கான மையத்தின் செயற்கைக்கோள் படங்களை ஆதாரம் காட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

நிலப்பகுதியில் மூன்று புறங்களிலும் ராணுவத்தினரின் நெருக்குதல் அதிகரித்துள்ள நிலையிலும், கடற்பகுதியில் இன்னமும் ராணுவத்தினரை நிலைகொள்ள விடாமல் விடுதலைப்புலிகளின் கடற் புலிகள் விரட்டியடித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் இலங்கை கடற் படையினர் மேற்கொண்ட தரையிறக்க முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் எட்டு இராணுவக்கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். கடற்புலிகளின் மிகத் தீரமான செயல் இது என அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் வலிந்து தாக்கும் நடவடிக்கை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது வலிந்த தாக்குதலை விடுத்து, தற்காப்பு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், வலிந்து தாக்குவதற்குரிய சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதாகவும், உரிய நேரத்தில் தலைமை அதுகுறித்த முடிவெடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

நேற்றைய தாக்குதல்களில் அவர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதற்கிடையே, கடற்புலிகளின் துணை தளபதி செழியன் போரில் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *