BREAKING NEWS
Search

வணங்கா மண்: எஸ் எம் கிருஷ்ணாவின் உறுதியும் கோத்தபாய சொல்லப் போகிற பதிலும்!

வணங்கா மண்: எஸ் எம் கிருஷ்ணாவின் உறுதியும் கோத்தபாய சொல்லப் போகிற பதிலும்!

டெல்லி: ஐரோப்பியத் தமிழர்களால் வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் கூடிய வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக sm-krishnaதேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்துள்ளார்.

இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்ட வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை வன்னிப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு விநியோகிக்க உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில்,உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் டெல்லி விரைந்து கிருஷ்ணாவிடம், முதல்வரின் கடிதத்தை நேரிலும் வழங்கி கோரிக்கை விடுத்தார்.

இதைப் பரிசீலித்த கிருஷ்ணா, நிச்சயம் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.200px-gotabaya

சில வாரங்களுக்கு முன், ஈழத் தமிழர்களை முகாம்களிலிருந்து விடுவித்து அவர்களின் சொந்த இடங்ககளில் மீளக் குடியமர்த்த வேண்டும் என இலங்கை அரசுக்கு கிருஷ்ணா கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நேரடியாக பதிலேதும் கூறாத இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் ராணுவ இணையதளத்தில் தனது நண்பரை விட்டு ஒரு கட்டுரை எழுத வைத்தார்.
அதில் இந்தியா தன் வேலையே மட்டும் ஒழுங்காக பார்த்துக் கொண்டு போகட்டும். எங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை என்று அந்த நபர் கட்டுரை எழுதி பரபரப்பேற்படுத்தினார்.

இப்போதும், வணங்கா மண்ணைத் திருப்பி அனுப்பியுள்ளவர் கோத்தபாய ராஜபக்சேதான். அடுத்த எந்த மாதிரி பதில் வரப்போகிறதோ இந்த பண்புகெட்ட  பக்ஸே பிரதர்ஸிடமிருந்து!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *