BREAKING NEWS
Search

‘வணங்காமண்’ணை இலங்கையில் அனுமதிக்கக் கோரி தமிழக முதல்வர் கடிதம்!

‘வணங்காமண்’ணை இலங்கையில் அனுமதிக்கக் கோரி தமிழக முதல்வர் கடிதம்!

சென்னை: ஈழத் தமிழர்களுக்காக புலம்பெயர் உறவுகள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களைச் சுமந்து வந்துள்ள வணங்காமண் கப்பல், இப்போது சென்னை துறைமுகத்தை ஒட்டி நிற்கிறது.maalaimalarsiddb1540b6-40a8-4908-98fd-5763edec285egif

இந்த கப்பலில் உள்ள உணவுப் பொருட்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக முள்கம்பி சிறைக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களுக்குத் தர அனுமதிக்க முடியாது என்று மனிதாபிமானமற்ற முறையில் கூறிவரும் இலங்கை அரசை சம்மதிக்க வைக்க தமிழ் உணர்வாளர்கள் சிலர் தமிழக அரசு மூலம் முயன்று வருகிறார்கள்.

அவர்களின் வேண்டுதலின் பேரில், தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு வணங்காமண்ணில் உள்ள உதவிப் பொருட்கள், மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

இந்தக் கடிதம் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு எழுதப்பட்டுள்ளது.
அதை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்துக் கொடுக்கவுள்ளார்.

இலங்கையில் நடந்த போரில் காயமடைந்தும், வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டும் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் ராணுவம் அமைத்துள்ள திறந்த வெளி முகாம்களி்ல் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள பெண்களிடம் ராணுவ வீரர்கள் முறைகேடாக நடப்பது, இளைஞர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று கொல்வதுமாக கொடுமைகள் நடந்து கொண்டுள்ளன.

இந்த மக்களுக்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இந்த கப்பலை இலங்கை கடல் எல்லையில் மறித்து நிறுத்திய இலங்கை கடற்படையினர், முழுமையாக சோதனையிட்டனர். அதில் ஆயுதங்களோ, சந்தேகத்துக்கிடமான பொருட்களோ இல்லை என இலங்கை ராணுவம் உறுதிப்படுத்தியது.

ஆனாலும், அந்த கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் வந்த பொருளுடன் திரும்பப் போகவேண்டும் என்றும் அநியாயமாகத் திருப்பி அனுப்பினார் கோத்தபாய ராஜபக்சே.

அந்தக் கப்பல் திரும்ப ஐரோப்பாவுக்கு செல்லாமல் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்துள்ளது. சென்னை துறைமுகத்தை ஒட்டி நிற்கும் அந்தக் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை எப்படியாவது ஈழத்துச் சொந்தங்களுக்கு சேர்த்துவிட வேண்டும் என்ற தவிப்புடன், தமிழ் உணர்வாளர்கள் சிலர் தமிழக அரசைத் தொடர்பு கொண்டு உதவுமாறு மன்றாடினா்.

தன்னால் முடிந்த அளவு உதவுவதாகக் கூறிய தமிழக முதல்வர் கருணாநிதியும், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

பாதிப்புக்கு உள்ளான மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்காக சர்வதேச சமுதாயம் நிவாரணப் பொருட்களை அளிப்பது வழக்கம். இதை தடுப்பது மனிதாபிமானமல்ல.

போர் நடைபெறும் காலத்திலேயே இத்தகைய உதவிகளை வழங்க சர்வதேச சட்டம் அனுமதிக்கும் போது, போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசே அறிவித்துவிட்ட இந்த நேரத்தில் நிவாரணப் பொருட்களை வழங்குவதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்?

எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அந்தக் கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்களை இறக்குவதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் இவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அதில் எழுதியுள்ளார் கருணாநிதி.

இந்தக் கடிதத்தை அமைச்சர் பொன்முடி டெல்லிக்கு விரைந்து அதை நேரடியாக கிருஷ்ணாவிடம் வழங்கவுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *