BREAKING NEWS
Search

வணங்காமண்ணை அனுமதிக்க ஒப்புக் கொண்ட இலங்கை!

வணங்காமண்ணை அனுமதிக்க ஒப்புக் கொண்ட இலங்கை!

டெல்லி: இலங்கைத் தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்கள் அனுப்பிய firstநிவாரணக் கப்பலான வணங்காமண்ணை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

நேற்று டெல்லி வந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆலோசகரான பாசில் ராஜபக்சேவும், பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோதபய ராஜபக்சேவும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராஜபக்சேவின் சகோதரர்களான இந்த இருவரும் மூத்த ஆலோசகர் லலித் வீராதுங்கேவும் கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினர்.

அப்போது வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கையில் அனுமதித்து அதை போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை கிருஷ்ணா முன் வைத்தார்.

இதற்கு இலங்கை குழு சம்மதம் தெரிவித்ததாக பின்னர் கிருஷ்ணா நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் பற்றி இரு தரப்பும் பேசியுள்ளது.

இந்தக் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்ததால் அது இந்திய கடல் எல்லைக்கு வந்து சென்னை துறைமுகம் அருகே நங்கூரமிட்டது.

ஆனால், அதை சோதனையிட்ட இந்திய கடற்படை அது சந்தேகத்திற்கிடமான கப்பல் என்று கூறி விரட்டியது. எனவே வேறு வழியின்றி சர்வதேச கடல் எல்லையில் நின்று கொண்டுள்ளது வணங்காமண் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுத்து, மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை நடத்த கடந்த ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டும் என இச் சந்திப்பின் போது இலங்கையிடம் வலியுறுத்தியதாகவும் கிருஷ்ணா கூறினார்.

வணங்காமண் கப்பல் விஷயத்தில் இலங்கை அரசின் அனுமதி உண்மையானதுதானா எ கோத்தபாய ராஜபக்சேவிடமும்  நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், வணங்காமண்ணை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதில் உள்ள பொருட்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு தரப்படும், என்றார்.

மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் விரைவில் அவரவர் பகுதிகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றார்.
2 thoughts on “வணங்காமண்ணை அனுமதிக்க ஒப்புக் கொண்ட இலங்கை!

 1. m

  நன்றாக நாடகம் ஆடுகிறது மத்திய அரசு. இலங்கை அரசு நிவாரண கப்பலில் ஆயுதம் ஏதும் இல்லை எனத் தெரிந்தும் அனுமதி மறுத்ததன் மூலம் சிங்கள அரசின் இனவெறியிலும், இந்திய அரசின் பழிவாங்கும் நோக்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இப்படி தமிழ்மக்களை ஏற்றுக் கொள்ளாத சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து வாழச் சொல்லி கட்டாயப்படுத்திய இராஜீவ்காந்தியின் செயலில் அரசியல் அனுபமோ, வரலாற்று ஞானமோ இல்லை என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒர் எடுத்துக்காட்டு. பிரதமர் என்ற மமதையால் எழுந்த ஆணவத்தில் எடுத்த ஒருதலை பட்டசமான முடிவினால் இன்றும் இலங்கை அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி ஈழத்தமிழர்களின் பூர்வீக உரிமை, மலையகத்தமிழர்களின் குடியுரிமை பறிப்பு, கச்சத்தீவு விவகாரம் என மொத்தத்தில் தமிழர்களின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி சூறையாடிவிட்டது

  இந்தியா என்ற ஒரு பெரிய தேசம் அழிய போகிறது. அதற்குக் காரணம் ஒருவர் என்றால் அது சோனியாதான். ஈழத்தமிழினம் ராஜீவால் அழிந்தது. அதே போல் இந்தியாவும் தவறான வெளியுறவுக் கொள்கையால் அழியப் போகிறது. இவ்வளவு பெரிய நாட்டிற்கு ஒரு தலையாட்டி பொம்மை பிரதமராக இருக்கிறார். அவர் ஆலோசகராக இருக்கதான் லாயக்கு.

 2. வடக்குப்பட்டி ராமசாமி

  அய்யா m, பிரதமர தலையாட்டி பொம்மைன்னு சொல்லாதீங்கா!

  அட ச்சே…… அதுதானே உண்மை!

  தங்கபாலு… please, ஆட்டாதீங்க! ….. அய்யய்யோ! சிதம்பரம், உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா! அட… புதுசா ஒரு போம்மா வந்திருக்கு, சுதர்சனம்…. உங்கள்ளுக்கு தமிழ் தெரியமா?

  please, ஆட்டாதீங்க! ….
  அயோ எம்பூட்டு பேரு ஆடறாங்க…

  இவனுக திருந்திவாங்களா?

  அப்போ நம்ம பிரதமரு, தலைமை தலையாட்டி பொம்மைன்னு சொல்லணும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *