BREAKING NEWS
Search

வட மாகாண ‘முதலமைச்சர்’… குமரன் பத்மநாதனுக்கு ராணுவத்தினர் சல்யூட் மரியாதை!

வட மாகாண ‘முதலமைச்சர்’… குமரன் பத்மநாதனுக்கு ராணுவத்தினர் சல்யூட் மரியாதை!

கொழும்பு: ‘வடக்கிற்கான எமது முதலமைச்சர்’, என்ற அறிமுகத்துடன், வட மாகாணப் பகுதிகளுக்கு குமரன் பத்மநாதன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ராணுவத்தினர் அவருக்கு சல்யூட் அடித்து வரவேற்பளித்தனர்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுலகத் தொடர்பாளர் கேபி, மலேசியாவில் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை ராணுவ முகாமில் ‘சிறை’ வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் கேபி கைது செய்யப்படவில்லை என்றும், புலிகளின் ரகசியங்கள் அனைத்தையும் அவர் ராணுவத்துக்கு சொல்லிவிட்டதால், அரசு விருந்தினராக, சுதந்திர வாழ்க்கைய அனுபவித்து வருவதாகவும் ஆரம்பத்திலிருந்தே செய்திகள் வெளியாகின.

பின்னர் அவற்றை உறுதிப்படும் வகையில் நிகழ்ச்சிகள் படிப்படியாக அரங்கேறின. இப்போது வட மாகாண முதல்வர் பதவியில் கேபி அமர்த்தப்படக் கூடும் என்று தெரிகிறது.

சமீபத்தில் முல்லைத்தீவில் உள்ள முத்தையன் கட்டுப் பகுதிக்கு ஒரு குழுவுக்கு தலைமை வகித்து பயணம் மேற்கொண்டார் கேபி. அவரை அழைத்துச் சென்ற ராணுவ அதிகாரிகள், முல்லைத் தீவிலிருந்து பிற அதிகாரிகளுக்கு, “வட மாகாணத்துக்காகன நமது முதலமைச்சர் இவர்” என்று அறிமுகம் செய்து வைத்தனர்.

கேபியின் வருகை பற்றிய தகவல் முற்கூட்டியே அப்பகுதி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், அவரையும் உடன் வருபவர்களையும் உயர் மரியாதையுடன் நடத்தும்படி கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, விசேஷ ஹெலிகாப்டரில் முத்தையன் கட்டுப் பகுதிக்கு வந்த கேபிக்கு, முல்லைத் தீவுக்கான இராணுவ முக்கிய அதிகாரி ‘சல்யூட்’ மரியாதை அளித்து வரவேற்றுள்ளார்.

அங்கிருந்த அனைவரிடமும், “இவர்தான் வட மாகாணத்தின் முதல்வராக பதவியேற்கப் போகிறவர்”, என்றும் அறிமுகப்படுத்தப்பட்டார்.
6 thoughts on “வட மாகாண ‘முதலமைச்சர்’… குமரன் பத்மநாதனுக்கு ராணுவத்தினர் சல்யூட் மரியாதை!

 1. vkthirunavukkarasu

  உங்கள் செய்தி நன்றாக இருந்தது .திருநாவுக்கரசு

 2. mathan

  இவன் புத்த பிக்குவாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதர்த்கில்லை.இந்த ஆடையில் தொப்பியை கழட்டினால் பிக்குத்தான்.இவன் கருணாவை எல்லாம் உயிரோடு கொழுத்த வேண்டும்.dot.

 3. G.RAGUNATHAN

  கருணா மற்றும் இவன் மரணசெய்தி விரைவில் வரும்.. ஆவலுடன்..

 4. saravanaraj .s.p

  பாதியில் வெளியேறிய விவேக் ஓபராய்! – ரத்தசரித்திரம் இசை வெளியீட்டின் அலங்கோலம்! (புது சினிமா நிகழ்வுகள் இணைப்பு) :-
  கார்நாடகாவில் போய் உட்கார்ந்துகொண்டு தமிழர்களின் காதுகளுக்கு போய் விடாது என்ற கற்பனையில், இலங்கை நடந்த இந்திய திரைப்பட விழா ஒரு செத்துபோன விவகாரம் என்று திமிராக பேட்டி அளித்ததோடு, விவேக் ஓபராயுடன் சேர்ந்து வவுனியாவில் பள்ளிக்கூடம் கட்ட உதவி செய்வேன் என்றார்.இயக்கம் இந்த பேட்டி உண்மையா என்று கேட்டதற்கு “ உண்மைதான். இப்போதும் அதையேதான் சொல்கிறேன்” என்று சூரியா பதில் அனுப்பி இருந்தாரம். இப்படி பட்ட நிலையில்தான் ரத்தசரித்திரம் படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்க யாரும் முன்வராத நிலையில், அதை வாங்கினார் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி.

  ஆளும் வர்க்கத்தின் கைகளுக்கு ரத்தசரித்திரம் சென்றதும் பெப்ஸி உள்ளிட்ட சங்கங்களே மௌனம் சாதிக்க ஆரம்பித்து விட்டன. இந்நிலையில்தான் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் எண்ணத்தோடு ரத்தசரித்திரம் இசை வெளியீட்டை ஏகப்பட்ட பிரபலங்களை அழைத்து சென்னையில் நடத்தினார்கள். ஒரு டப்பிங் படத்தின் நாம் தமிழர் இசைவெளியீட்டுக்கு இத்தனை அழைப்பாளர்கள் எதற்கு என்று பார்த்தால் எங்கள் ஆள் பலத்தை பாருங்கள் என்று காட்டுவதற்காகத்தானாம்.

  நிகழ்சியில் இசையை வெளியிட வந்திருந்த மணிரத்தினம் அருகில் அமர்ந்திருந்த ராம்கோபால் வர்மா, மணிரத்தினத்துக்கு திரும்பி ஒரு ஹாய் கூடச் சொல்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். மணி பலமுறை திரும்பி பார்த்தும் அசையவில்லை வர்மா. மணிரத்னம் பேசும்போது வர்மா வயலன்ஸ் ஸ்பேஷ்லிஸ்ட் என்பதை பெருமையாகச் சொன்னார். தொடர்ந்து பலர் வர்மாவின் ரத்தவெறி பற்றியே பேசிக்கொண்டிருக்க இந்த டப்பிங் படத்துக்கு மொத்த பாடல்களையும்
  எழுதியிருக்கும் விவேகாவையும் பேசகூப்பிட்டார்கள். “ நான் இந்தப் படத்துக்கு பாடல் எழுதும்போது கையில் கையில் பேனா இருந்த மாதிரியே நினைவில் இல்லை. பேனாவுக்கு பதிலாக கத்தியைக் கொண்டு பாடல்களை எழுதியது போல ஒரு உணர்வு.” என்று உண்மையைச் பேசிவிட்டுப்போக சூரியா உட்பட பலரும் அவரை முறைத்தாலும் அரங்கத்தில் அவருக்கு கரவொலி. எதற்காக கைதட்டுகிறார்கள் என்று முதல்முறையாக மணிரத்தினம் பக்கம் திரும்பி கேட்டார் வர்மா. விஷயத்தை மணி ஆங்கிலத்தில் சொல்ல, வர்மா முகத்தில் வன்மச்சிரிப்பு. இந்த படத்தோடு சம்பந்தமில்லாத பாடலாசிரியர்கள் யுகபாரதியையும் முத்துகுமாரையும் நிகழ்சிக்கு அழைத்திருந்தார்கள்.

  ஆனால் தமிழின உணர்வாளரான யுகபாரதி விழாவை தவிர்த்திருந்தார். தான் வராதது விழா மேடையில் தெரியட்டும் என்று விழாவுக்கு வரவில்லை என்பதயும் அவர் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளருக்கு சொல்லவில்லை போலும். இதனால் யுகாபாரதியை பேச வரும்படி நிகழ்ச்சிதொகுப்பாளர் அழைத்தார். பிறகு முத்துகுமாரை அழைத்தார்கள். தனக்கு எழுதும் தொழிலும் பணமும் மட்டுமே முக்கியம் என்பது போல “ சூரியாவுக்கு அதிகமாக பாடல் எழுதும் பாடலாசிரியர் நான் ” என்று பெருமைபட்டு விட்டு , ரத்தசரித்திரம் பாடலாசிரியரைகூட பாராட்டாமல் போய் விட்டார். இதற்கிடையில் விவேக் ஒபராய் நிகழ்சி முடிந்து வெளியே வரும்போது அவருக்கு கருப்புகொடி காட்டுவதற்காக திடீரென்று நிகழ்ச்சி நடந்த தியேட்டருக்கு வெளியே கூடிய நாம் தமிழர் இயக்க தொண்டர்களை அப்புறபடுத்தியதாம் போலீஸ். மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தினர் கூடிவிடுவார்கள் என்பதை மோப்பம் பிடித்து விவேக் ஓபராயின் மேனேஜருக்கு போலீஸ் போட்டுக்கொடுக்க, அடுத்து பேச வந்த விவேக் ஓபராய் “ இல்லோருக்கும் வண்கம். நான் டமிள் மூவி பன்னியிருக்கு. உங்க அதரவு கெக்குறன்” என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு கடகடவென்று வெளியேரினார் பாடி காட் சூழ…கடைசியாக பேச சூரியா மைக்கைப் பிடித்ததும் பத்திரிகையாளர்கள் சொல்லி வைத்த மாதிரி வெளிநடப்பு செய்தார்கள் அவர் கண் முன்னே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *