BREAKING NEWS
Search

வட மாகாண புணரமைப்பு: கேபியுடன் கைகோர்க்கும் முக்கிய புலித் தலைவர்கள்!

வட மாகாண புணரமைப்பு: கேபியுடன் கைகோர்க்கும் முக்கிய புலித் தலைவர்கள்!

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் அரசுடன் கைகோர்த்து, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணப் புணரமைப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்.

இதில் அவருக்கு உதவ 9 பேரைக் கொண்ட தமிழ் நிபுணர் குழு முன் வந்துள்ளனர். இந்த தகவலை இலங்கையின் அரசு செய்திதாளான ‘சண்டே அப்சர்வர்’ வெளியிட்டுள்ளது.

கனடா, சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவையும் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பெரீஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

குமரன் பத்மநாதனே இந்த 9 பேரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக சண்டே அப்சேவர் தெரிவித்துள்ளது.

இந்த ஒன்பது பேரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களாக அந்தந்த நாடுகளில் செயற்பட்டவர்கள் என்றும், புலிகளின் சர்வதேச வலையமைப்பு அறுக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை கேபி வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்ததன் மூலம் இவர்கள் அரசு ஆதரவாளர்களாக மாறியதாகக் கூறப்படுகிறது.

கேபிக்குப் பொது மன்னிப்பு மற்றும் அரசுப் பதவி அளிக்கப்படும் என சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு செயலாளரின் அலுவலகம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




2 thoughts on “வட மாகாண புணரமைப்பு: கேபியுடன் கைகோர்க்கும் முக்கிய புலித் தலைவர்கள்!

  1. eelam tamilan

    Note for Vino… Most tamils lived in Sri Lanka don’t care about Sunday Observer news… Anyway we will wait and see..

  2. palPalani

    1. கேபி – உணமையான நிலை என்ன? நல்லவரா? கெட்டவரா?
    http://veltharma.blogspot.com/2010/06/blog-post_450.html

    2. இதுவரை எவ்வளவு போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர்? இன்னும் எவ்வளவு பேர் ராணுவத்திடம் உள்ளனர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *