BREAKING NEWS
Search

…வடை போச்சே!

…வடை போச்சே!

மல் ரசிகர் மன்றம் ரேஞ்சுக்கு விழா எடுத்து, கமலை விடிய விடிய vijay-tv-awardsகுடும்பத்தோடு உட்காரவைத்து ஆறு விருதுகளையும் விஜய் டிவி கொடுத்ததன் பின்னணியில் பெரிய பிஸினஸ் ப்ளான் இருந்தது.

விஜய் டிவியைப் பொருத்தவரை, எல்லோருமே அவர்களது விளம்பரத் தூதுவர்கள் என்ற நினைப்பு. விஜய், அஜீத்… இப்போது கமல், சூர்யா என சீசனுக்கேறே்ப பெரும் நடிகர்களின் பெயரை உரக்கச் சொல்லி தங்களை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இவர்களில் யாரெல்லாம் கைகொடுக்க மாட்டார்கள் என முன்கூட்டியே தெரிகிறதோ, அப்போது உடனடியாக இவர்கள் சூப்பர் ஸ்டார் நாமத்தை ஜெபிக்கத் துவங்கிவிடுவார்கள் (இப்போதும் ரஜினி 60-க்கு பக்காவாக ப்ளான்கள் ரெடியாம்!).

இதற்கு முக்கிய காரணம்… இவர்களிடம் சொல்லிக் கொள்ளும்படி எந்தத் தமிழ்ப்படங்களின் உரிமையும் இல்லை. புதுப்படங்களை வாங்கும் போட்டியிலும் இவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ஆனால் மற்ற சேனல்கள் முடிந்தவரை தம் கட்டி வாங்கி வருகின்றன. ராஜ் டிவி, புதிதாக வந்த ஜீ டிவி கூட புதுப் படங்களின் தொலைக்காட்சி உரிமையை பெரும் பணம் கொடுத்து வாங்குகின்றன.

தங்களது இந்த மகா குறையைச் சரிகட்ட விஜய் டிவி செய்யும் தந்திரம்தான் நட்சத்திரங்கள் தங்கள் பக்கம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் திட்டம்.

இந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதிதான் கமல் திரையுலகுக்கு வந்ததன் பொன்விழா நிறைவு நாள் வருகிறது. அந்த நாளில் பெரிய அளவு விழா எடுத்து, நிகழ்ச்சிகளை இன்னொரு ஆறேழு மணி நேரத்துக்கு ‘சுட்டு’ வருஷக் கணக்கில் ஒளிபரப்பி கல்லா கட்டத் திட்டமிட்டிருந்தது விஜய் டிவி. கமல் என்ற கலைஞரை முழுமையாக தங்கள் வர்த்தக முன்னேற்றத்துக்கு வளைத்துப் போடும் திட்டம் அது. தமிழ்த் தொலைக்காட்சிகளில் தாங்கள்தான் கமலுக்கு ‘அஃபிஷியல் மீடியா பார்ட்னர்’ என்பது போல அவர்கள் காட்டிக் கொண்டிருந்தனர்.

இப்படிச் சொல்லிச் சொல்லியே, ரஜினி உள்ளிட்ட எல்லா பிரபலங்களிடமும் கமலின் பொன்விழா சாதனை குறித்து பேட்டிகள் எடுக்கத் திட்டமிட்டனர். ஒரு நட்சத்திரம் அல்லது விஐபியின் பைட்ஸுக்கு முன் குறைந்தது 20 விளம்பரங்களை ஒளிபரப்பிக் கொள்ளலாம் அல்லவா… இதற்காக ஏகப்பட்ட விளம்பரதாரர்களைப் பிடித்துவிட்டனர். குறிப்பாக ரஜினியின் பைட்ஸை மட்டும் தனி பகுதியாகவே காட்டிவிடும் திட்டமிருந்தது அவர்களுக்கு.

இதையெல்லாம் கமலின் அனுமதியோடுதான் அவர்கள் செய்தார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இந்த நேரத்தில்தான் விழித்துக் கொண்டது கலைஞர் டிவி நிர்வாகம்.

கமல்ஹாசனுக்கு கலைஞர் டிவி சார்பில் பிரமாண்ட பொன்விழா நடத்துவதென முடிவு செய்து, அது குறித்து கமலிடமே நேரில் பேசி சம்மதமும் வாங்கிவிட்டது. விஜய் டிவியின் நிகழ்ச்சியை முழுவதுமாக நிறுத்தவேண்டும் என்றும் சொல்கிற விதத்தில் கமலிடம் சொல்லிவிட்டனராம் கலைஞர் டிவி நிர்வாகிகள். அதைவிட முக்கியம், விஜய் டிவியை அன்று அமைதியாக இருக்கச் செய்யும் பொறுப்பும் கமலிடமே விடப்பட்டது.

அவரும் சொல்கிற விதத்தில் சொல்லி, விஜய் டிவியை ஆஃப் செய்துவிட்டார்.

இனி… கலைஞர் டிவியில் கமல்ஹாஸனின் திரையுலகப் பொன் விழா கொண்டாட்டங்களைப் பார்க்கலாம். ரஜினி உள்ளிட்ட விவிஐபிக்களிடன் பேட்டியும் இதில் இடம்பெறுகிறது.

கலைஞர் டிவி கேட்டதும் கமல் ஒப்புக் கொள்ளக் காரணமிருந்தது… திரையுலகுக்கு எந்த நன்மையும் செய்யாமலேயே எல்லா நன்மையும் அனுபவிக்கும் விஜய் டிவியை விட, தசாவதாரம் உள்ளிட்ட படங்களுக்கு 6 – 7 கோடிகளை அள்ளி வழங்கிய கலைஞர் டிவிக்கு இந்த நிகழ்ச்சியை செய்வதுதானே பொருத்தமாக இருக்கும், என்ற எண்ணமே இதன் பின்னணி!

-விதுரன்
12 thoughts on “…வடை போச்சே!

 1. வழிப்போக்கன்

  விஜய் டிவிக்கும் உங்களக்கும் ஏதாவது பிரச்சனையா, இந்த தாக்கு தாக்குறீங்க?
  ஒரு ரசிகனா சொல்றேன், சண் மற்றும் கலைஞர் டிவி… ரொம்ப கொடுமைசார்!
  அப்பரவ ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன்! இந்த சண் மற்றும் கலைஞர் டிவி காரங்களை சொந்தமா யோசிக்காட்டியும் பரவாயில்லை, வெளிநாட்டு சானல் இருந்து சுடச்சொல்லுங்க! பாவம் விஜய் டிவி, அவுங்க வயித்திலே அடிக்கிறாங்க! சாரி… அவுங்க சுட்டதையே… சுடுறாங்க!

 2. Raja

  டீவி விளையாட்டில் கமல் கொளரவம் குறையாமல் இருந்தால் சரி. கமல் 50 க்கு தலைவரைப் போல நாமும் வாழத்துவோம்

 3. lakshmi

  HI VINO,

  I don’t know whats wrong in that? its all comes under bussiness. Is there any personal problems between u and vijay tv?

 4. envazhi Post author

  Hi Lakshmi
  தனிப்பட்ட காரணங்களை ஒருபோதும் எழுத்தில் நாம் காட்டியதில்லை. உண்மையைச் சொல்கிறோம். அவ்வளவுதான்.

 5. Valluvan

  //கமல் ரசிகர் மன்றம் ரேஞ்சுக்கு விழா எடுத்து, கமலை விடிய விடிய குடும்பத்தோடு உட்காரவைத்து ஆறு விருதுகளையும் விஜய் டிவி கொடுத்ததன் பின்னணியில் பெரிய பிஸினஸ் ப்ளான் இருந்தது……….

  ……இதையெல்லாம் கமலின் அனுமதியோடுதான் அவர்கள் செய்தார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

  கலைஞர் டிவி கேட்டதும் கமல் ஒப்புக் கொள்ளக் காரணமிருந்தது… திரையுலகுக்கு எந்த நன்மையும் செய்யாமலேயே எல்லா நன்மையும் அனுபவிக்கும் விஜய் டிவியை விட, தசாவதாரம் உள்ளிட்ட படங்களுக்கு 6 – 7 கோடிகளை அள்ளி வழங்கிய கலைஞர் டிவிக்கு இந்த நிகழ்ச்சியை செய்வதுதானே பொருத்தமாக இருக்கும், என்ற எண்ணமே இதன் பின்னணி!//

  Engada romba naala kamalai patri kusumbu onnum kaanomae appidinnu nenachaen. Aarambichiteenga! Congrats!

  Please understand one thing. Like how Envazhi feels that they have got all the rights to boast of Rajinikanth, there could be other agencies and media also to boast other actors. Why your stomach has to burn? At the end of the day it’s all only business whether it is Kamal, Rajinikanth, Vijaykanth or Vijay.

  With TN Govt’s aid of 6 or 7 Crores only a film like Dasaavatharam which garnered around 250 Crores gross should get financial support???? Thanks for the joke of the year. Vidhuran I should admit that you have very good humour sense.

  Hope you would have appreciated Kamal if his 50th year celebration is done like how ‘Rajini 25’ was done (by his own family members).

  And most importantly I wonder how you only get such background news as if you were one among those present during these dealings???????????

  Let me await your biassed / unbiassed comment after the telecast of the show where Rajini also would be participating or talking about Kamal.

 6. Malar

  Vanthuttanya Loosu…

  Valluvar peyaril ippadiyum sila mundangal… Mudiyala…

  Mr Valluvan… first you should keep away from here and look after your ‘Business’ man.

  As you said, all are know that this is a Pro Rajini website. So it celebrates Rajini. Are you trying to say that Vijay TV is a Pro Kamal channel? If it is a neutral channel, there is no need to ‘beating Jaalra’ upto damaging the hears of others for Kamal.

  Also, the writer is criticizing Vijay TV for its tricky approaches that he knows well as a media man. So there no point in your criticism. It ‘Simply’ shows your stomach burning over envazhi’s way of publishing news on different issues.

  Also, your intention is not discussing about the issues published in the site… you are clearly motivating to tarnish the site. I’d seen most of your comments in Sruthi and Vijay TV award show articles…

  If you thought that envazhi is publishing biased news… you should keep away from here man…

  Kamal pathi nallave ezhuthinaalum Kurai solrathu… its ‘Simply’ a kind of mental disease.

  Dont try to dictate any one to publish items which you like… It is there freedom. If you don’t like it… no issues… it is ‘Simple’… get out from here!

 7. Valluvan

  Mr (or Ms) Malar (or) Adhipudhisaali

  Pro Rajinikanth website dosen’t have any right to tarnish others.

  If your stomach burns and ears pain when you hear Vijay TV’s Jaalra on Kamal, I have to give you (and also envazhi) the same advice you gave it to me ….//If you thought that envazhi (Vijay TV) is publishing biased news(telecasting Kamal’s function)… you should keep away from here man…… It is there freedom. If you don’t like it… no issues… it is ‘Simple’… get out from here!//….

  //Vanthuttanya Loosu… Valluvar peyaril ippadiyum sila mundangal… Mudiyala… // – Definitely I’m not hurt. Thanks for exhibiting your character and quality to the world. What else can I expect from people like you? Your claims of Rajinikanth is a great humble personality suits only him and not his fans like you??????? Strange.

 8. அட ராமா!

  Mr. Valluvan,
  First of all what is your motto????
  Why your stomach burns when the right things published? Moreover this article fully exploits about the underground nature of vijay tv?
  Media persons know what is happening and where is happening? So it may be wonder to you. OK.
  So please SIMPLY SHUT your mouth and learn the truth.
  otherwise SIMPLY say அட ராமா!

 9. vibin

  Karuna helped to solve a land/property issue of kamal. Using that kalaignar tv pushed kamal to give his function rights to them from vijay tv.
  Is that true????

 10. ramji_google

  But vijay tv is much better than sun tv, kalaignar tv, Vijay TV has creative poragrames like cofee with anu, airtel super singer, anu alavum bayam illai, boys vs girls etc

 11. tamil

  ஏன் சார் மக்கள் விஜய் டிவி பார்த்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறது உங்களுக்கு கஷ்டமா இருக்குதா? ஏன் மத்த சேணல்ல சீரியல் பார்த்து அழுதுகிட்டே இருக்கனுமா? நான் இப்படியெல்லாம் வேப்சிடேல போய் எழுதுனது இல்ல. விஜய் டிவி யும் குத்தாட்டம் காமிக்கனும்னு நினைக்கிறிங்களா? மத்த சேணல்ல லேடீஸ் பண்ற ப்ரோக்ராம்மே ladiessaalaye paarkka mudiyala. adhai dhan neenga edhiparkireenkala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *