BREAKING NEWS
Search

வஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க!

ஜினி என்பவர் தனது புதிய படம் வெளியாகும் சமயங்களில் மட்டும் தான் நிருபர்களை சந்திப்பார்.. அதில் ஏதாவது சர்ச்சைக் கருத்தை இட்டு விட்டுச் சென்று விடுவார்.. இது படத்திற்கான விளம்பர உத்தியேயன்று வேறேதுமில்லை.. இது தலைவர் ரஜினி பிரஸ்மீட்டின் போது, பல எச்சைகளால் பரப்பப்படும் வதந்தியே தவிர வேறொன்றுமில்லை!

நேற்றைக்கு, ஒரு திருமண நிகழ்விற்காக பெங்களூரு சென்ற போது, தலைவர் ரஜினி நிருபர்களை சந்தித்தார்.. அதன்பின் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் அறிந்ததே.. எந்த 7 பேர் என்று எதேச்சையாய் கூறியதைக் கூட, விவாதப் பொருளாய்.. ரஜினிக்கு எதிரான விஷமப் பொருளாய் மாற்றின ஊடகங்கள்.. ரஜினியை எப்படியாவது மக்களுக்கு எதிராய் மாற்றி விடலாம் என்ற வஞ்சக எண்ணத்தில்!

இன்றைக்கு அதற்கு விளக்கம் தெரிவிக்க, மீண்டும் பிரஸ்மீட் அரேஞ்ச் செய்தார் தலைவர்.. விளக்கமும் அளித்தார்.. இருந்தும் விடவில்லை வியாபார ஊடகங்கள்.. பிஜேபி குறித்துக் கேட்டனர்.. பதிலளித்தார்.. இலவசம் குறித்து கேட்டனர்.. பதிலளித்தார்.. தணிக்கை குறித்து கேட்டனர்.. பதிலளித்தார்.. ஜெயக்குமாரின் பேச்சு குறித்து கேட்டனர்.. பதிலளித்தார்.. கமலின் விமர்சனம் குறித்து கேட்டனர்.. பதிலளித்தார்.. இறுதியில் வாட்டாள் நாகராஜ் குறித்து கேட்டனர்.. பதிலளித்தார்!

ஊடகங்களே, இன்னும் மூன்று நாளைக்கு, ‘எந்த ஏழு பேரை’ விட்டு விடுவீர்கள். ‘யார் பலசாலி’ என்பதை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.. ஸ்டாலின் முதற்கொண்டு பாஜவின் எதிராளிகள் அனைவரும் கருத்திடுவர்.. விமர்சிப்பர்.. அதுதானே உங்களுக்கு வேண்டும்.. தலைவரை மக்களுக்கு எதிரான தலைவராய் காட்டுவது தானே உங்கள் பணி.. செய்யுங்கள் நண்பர்களே!

ரஜினி பாஜக ஆதரவாளர் என்று உங்களால் பரப்பப்பட்ட செய்திகளை அறிந்தும், தன் மனதில் உள்ள எண்ணத்தை தெளிவாய் வெளிப்படுத்திய தலைவரை அடைந்ததற்காய் நாங்கள் பெருமிதம் கொள்கிறோமே தவிர, சிறிதும் மனம் வருந்த மாட்டோம். ஏனென்றால் தலைவர் ரஜினி, ஏற்கனவே ஒருமுறை, தான் பாஜக ஆதரவாளன் அல்ல என்ற செய்தியைக் கூட வெளியிட மறுத்த சுயநல ஊடகங்கள் தாமே நீர்!

நாட்டின் நன்மை தீமைகளை கண்காணித்து மக்களுக்கு சேவை செய்யும் சேவகப்பணி தான் பத்திரிகைகளின் பணி.. ஆனால் இன்றைக்கு ஒற்றை மனிதரை அரசியல் கட்சி தொடங்கும் முன்பே தடுக்க நினைப்பது, உங்களுக்கே ஆபத்தன்றி எம் தலைவருக்கு அல்ல.. யாருடைய நிர்ப்பந்தம் காரணமாக நீங்கள் இப்படி செயல்படுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை.. ஆனால் அவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்லி விடுங்கள்.. ரஜினி என்பவர் சாதனையாளர் மட்டுமல்ல, அவர் ஒரு சரித்திரர் என்று!

ஜனங்க பார்த்துட்டு தான் இருக்காங்க மீடியாஸ்.. கவனம்!

தலைவரின் அன்பன்,

மு.அங்குராஜ், மதுரை




4 thoughts on “வஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *