BREAKING NEWS
Search

லஷ்கர் இ தொய்பாவுக்கு இலங்கையில் பயிற்சி?- அலறும் கோத்தபாய

லஷ்கர் இ தொய்பாவுக்கு இலங்கையில் பயிற்சி?- அலறும் கோத்தபாய

கொழும்பு: பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுவதாக புனே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி கூறியுள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ‘இந்தத் தகவல் தவறானது, இலங்கையில் யாருக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை..’ என்று இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரான கோத்தபாய ராஜபக்சே அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் 29 வயதான மிர்ஸா ஹிமாயத் பேக். இவர்தான் இந்த சதித் திட்டத்தின் முக்கிய காரணகர்த்தா. இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “லஷ்கர் போராளிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது” என்று கூறியுள்ளார்.

இதை கோத்தபயா மறுத்துள்ளார். இதுகுறித்து கோத்தபயா கூறுகையில், “இலங்கையில் தற்போது எந்த தீவிரவாத இயக்கமும் இல்லை, தீவிரவாதிகளும் இல்லை. யாருக்கும் இங்கு எந்தப் பயிற்சியும் கொடுக்கப்படவும் இல்லை. பயிற்சி முகாம்களும் நடத்தப்படவில்லை.

இலங்கை தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு விட்டது. இங்கு தீவிரவாதிகள் நடமாட இடமே இல்லை, வாய்ப்பும் இல்லை,” என்றார்.

இந்தியாவுக்கு எதிரான சில தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இலங்கை மறைமுகமான ஆதரவை வழங்கி வருவதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கமான நட்பு பாராட்டி வரும் இலங்கை, இந்த நாடுகளுக்கு இலங்கையில் களம் அமைத்துக் கொடுப்பதில் முன்னிலும் அதிக முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
6 thoughts on “லஷ்கர் இ தொய்பாவுக்கு இலங்கையில் பயிற்சி?- அலறும் கோத்தபாய

 1. eelamtamil

  Thanks to Seeman and all people who helped to achieve this. Pls see the news below.. However sad to see what is going on now… Asin getting important place SunTV and people start forgetting… Seeman in jail… no one talk about.. Even Vino was happy to write in fast about “seeman moddival” article.. now forgot seeman and in the dream of enthiran release…

  http://www.sundaytimes.lk/100912/News/nws_10.html
  IIFA tamasha costs State dearly

  The Sri Lanka Tourism Promotion Bureau had incurred Rs. 475 million as total expenditure for the Indian International Film Award (IIFA) ceremony held in Colombo earlier this year while the total sponsorship by private companies came to only Rs.10.6 million, documents tabled in Parliament last week revealed.

  Of the 84 film stars and those in other categories who were nominated for awards, only 38 had attended the ceremony.

  In addition to them there were 72 film stars, music directors, cricketers and fashion designers who attended the event, the answer tabled in the House by Chief Government Whip Dinesh Gunawardena in response to a query by UNP MP Dayasiri Jayasekera, revealed.

  Meanwhile several contractors who were employed by the Bureau to do up the interior of the Sugathadasa Stadium said they are yet to be paid for their work. “We worked in good faith to finish the work on time but so far we have not been paid,” one contractor said

 2. கடலூர் சாந்தகுமார்

  நட்பு நாடு என்று கூறிய வாயெல்லாம் இப்ப என்ன பண்ணுது. இலங்கையின் உண்மை முகத்தைப் பற்றி பேசிய நம் செந்தமிழன் சீமான் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம், சிகப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்தவன் உண்மை முகத்தைப் பார்த்தாயா !. அடப்பாவி தேச பக்த்தர்கலே இப்பவாவது இலங்கை ஒரு இனப் படுகொலை செய்த நாடுன்னு இன்னுமா இந்த மரமண்டங்களுக்குப் புரியல. தமிழனை கொன்னாலும் புரியாது ! மீனவனக் கொன்னாலும் புரியாது ! அட கூட்டிக் கொடுத்தவன் காட்டிக்கொடுத்தவன் எல்லாம் இனி என்ன செய்யிறதா இருக்கீங்க… இந்தியா மூடிகிடிருந்தாலே நம் தமிழ் உறவுகளுக்கான நீதி அவர்களே பெற்றுக் கொள்வார்கள். உங்கள் இறையாண்மையில் இமாலய ஓட்டை விழுந்திருப்பது கூட தெரியாமல் திட்டம் வகுக்கிறார்கள் இந்த தேச பக்த்தர்கள். உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிச்சே ஆகணும் “சர்வதேசம் இந்த இனப்படுகொலை செய்தவர்களையும் அதற்க்கு துனைநின்றவர்களையும் ஒருநாள் நீதியின் முன் நிறுத்தப் படுவார்கள்.

 3. thendral mani

  நீயும் தமிழன் நானும் தமிழன் “நாம் தமிழராய்” ஒன்றிணைவோம் ,,களை எடுப்போம் இந்த கொலைகாரர்களை

 4. sakthivel

  சிங்கள ஓநாய்களுக்கு ஈழரத்தம் மட்டும் போதாதாம், இந்தியனின் ரத்தமும் வேண்டுமாம்….

  சிங்களனிடம் இந்தியா எதிர்பார்க்கும் விசுவாசம், சாக்கடையில் புரளும் பன்றியிடம் சுத்தத்தை எதிர்பார்ப்பது போல் இருக்கிறது.

 5. palPalani

  பட்சேஸ் பாராட்டு விழா எடுத்தாகூட, குஷ்பூவோட குத்தாட்டத்தை ஆறு மணி நேரம் அசராம பார்க்க ரெடியிருக்குற எங்க தலைவரை போயி இப்படி கேட்கலாமா??

 6. Ezhathu Raja

  http://in.news.yahoo.com/43/20100917/876/twl-62-killed-in-sri-lanka-blast.html

  62 killed in Sri Lanka blast

  Fri, Sep 17 02:25 PM

  Colombo, Sep 17 (IANS) At least 60 policemen and two Chinese nationals were killed Friday in a massive blast in containers filled with explosives at a police station in eastern Sri Lanka, the Daily News reported quoting a military official.

  The toll in the blast at the Karadiyanaru police station, some 260 km from Colombo, has risen to 62, including 60 policemen and two Chinese nationals, military spokesman Major General Ubhaya Medawala said.

  The containers belonged to a Chinese company that is undertaking construction work in the east.

  Three containers, loaded with explosives meant to be used to blast a rock for the construction work, were kept at the Karadiyanaru police station for safety, the Spokesman said.

  The two Chinese officials unloaded the explosives according to their requirement. One container exploded while the explosives were being shifted, triggering blasts in other containers.

  The injured have been admitted to the Batticaloa hospital.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *