BREAKING NEWS
Search

லஞ்சம் கொடுத்தா வேலை நடக்குதா?

லஞ்சம் கொடுத்தா வேலை நடக்குதா?

indian-rupees_230x230ண்பர்களே..

இது நிஜமாகவே மகா சூடான விவகாரம். அதுவும் என்வழியில் இப்படி ஒரு பகுதியை ஆரம்பித்த பிறகு, இதை ஒரு ரசிகர் மூலம் கேள்விப்பட்ட திருவாளர் பொதுஜனம் ஒருவர் கொண்டு வந்திருக்கிற -புகார் என்று சொல்ல முடியாது- ஒரு அவமானகரமான, வெளியில் சொல்ல முடியாத, ஒரு அனுபவம் இது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இப்போதைக்கு அந்த மனிதரின் ஊர், பெயர் மட்டும் தருகிறேன். மற்ற விவரங்கள் வேண்டாம். பெரிய இடத்துப் பொல்லாப்பு எதற்கு என்று மிரள்கிறார்.

தமிழகத்தின் மிக முக்கிய புள்ளியின் அரசாங்க இல்லம், சென்னை… கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்திருந்தார் சின்னத்தம்பி. நடுத்தர வயது மனிதர். பருகூரில் ஐடிஐ முடித்த தனது மகனுக்கு வேலை கேட்டு மகனுடன், லோக்கல் கட்சிக்காரர் ஒருவரையும் கூட்டி வந்திருந்தார்.

ஒரு முக்கியப் புள்ளியைப் பார்த்து நேரடியாகப் பேசப் போகிறோம் என்று சொல்லித்தான் அவரை அழைத்து வந்திருந்தார் லோக்கல் பார்ட்டி. ஆனால் பார்த்தது முக்கியப் புள்ளியின் அரசியல் எடுப்பு ஒருவரை. ஒரு கட்டடத்தின் பெயரை தனது பெயருடன் சேர்த்துக் கொண்டு அலப்பரை பண்ணும் எடுப்பு அவர்.

அவரிடம் தனது மகனைக் காட்டி இவனுக்குதான் அந்த வேலை வேணும் என்று கேட்டாராம். அடுத்து… நீங்க எதிர்ப்பார்ப்பதுதான்… பணம் கொடுக்கல் வாங்கல்!

சரி… எவ்வளவு என்று கேட்க, பெரிய நோட்டில் இரண்டு என்று நச்சென்று பேரத்தை முடித்தாராம் லோக்கல்.

ஒப்புக்கொண்டு போன சின்னத்தம்பி, ஜீவனத்துக்கு வழிகாட்டும் வயலில் ஒரு ‘துண்டை’ விற்றுவிட்டு, தேவையான பணத்துடன் சென்னைக்கு வந்து அரசியல் எடுப்பிடம் அதை ஒப்படைத்தார். ஆனால், அவர் மகனுக்கென்று கேட்ட வேலை, இப்போது வேறொருவருக்கு வழங்கப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட அந்த இடத்தில் (சேலத்தில்) வேலை வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு பணம் கொடுக்கவே ஒப்புக் கொண்டாராம்.

லஞ்சமாகக் கொடுத்த பணம்…? ரசீதா கேட்க முடியும்? என்னதான் செய்வது என்று கை பிசைந்து நிற்க, லோக்கல் பிரமுகரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாராம்.

போதும் பொறுமை என வெகுண்டவர் நேராக முக்கியப் புள்ளியின் வீட்டுக்கு மீண்டும் போயுள்ளார் போனமாதம். முக்கியப் புள்ளியைப் பார்த்து புகாரைச் சொல்ல முயற்சித்த போது, அந்த புள்ளி, பணத்தை ஏப்பம் விட்ட எடுப்பையே கூப்பிட்டு, ‘இவருக்கு எனன வேணும்னு பாருய்யா’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாராம்.

‘என்னா தைரியம் இருந்தா நீ அவர்கிட்ட போயி கம்ப்ளெயின்ட் குடுக்கப் பார்ப்பே…’ என்று கேட்டுக் கொண்டே, அந்த அறையிலேயை சின்னத்தம்பியை அடித்துள்ளார் அந்த எடுப்பு. அவமானம் தாங்காமல் அங்கிருந்து வந்த மனிதர், இப்போது முதல்முறையாக நம்மிடம்தான் விஷயத்தைச் சொல்கிறாராம்.

‘தம்பி… ஏதாவது பண்ண முடியுமா? இந்தப் பணத்தை வாங்க முடியாதா?’ என்றார். இந்தக் கேள்வியுடன் நிற்கும் ஏராளமான மனிதர்களை ஏற்கெனவே நமக்குத் தெரியும் என்ற உண்மையை அவரிடம் சொல்லாமல், ஒரு புகார் மனுவை ‘முதல்வர் செல்’லுக்குத் தரச்சொன்னேன். ‘அதெல்லாம் வேண்டாங்க… பிரச்சினை பெருசாயிடும்’ என்றார் சட்டென்று.

வேறு எப்படித்தான் பிரச்சினையைத் தீர்ப்பது?

‘வேற ஒண்ணுமில்ல… இந்தப் பணத்தை வாங்கி… வேலையை உடனே முடிச்சிக் கொடுக்கிற வேற யாருட்டயாவது கொடுக்க முடியுமா? அப்படி யாராவது உங்களுக்குத் தெரியுமா?’ என்றார்.

வுடு ஜூட்!

-வினோ

குறிப்பு: உலக அளவில் ஊழல் செய்வதில் இந்தியாவுக்கு 84வது இடமாம். ஒருவேளை முதல் பத்து இடத்துக்குள்  வராமல் இருக்க ‘வெயிட்டா’ கவனிச்சிருப்பாங்களோ!
6 thoughts on “லஞ்சம் கொடுத்தா வேலை நடக்குதா?

 1. r.v.saravanan

  உலக அளவில் ஊழல் செய்வதில் இந்தியாவுக்கு 84வது இடமாம். ஒருவேளை முதல் பத்து இடத்துக்குள் வராமல் இருக்க ‘வெயிட்டா’ கவனிச்சிருப்பாங்களோ

  vandha mattum avamanapada porangala enna

 2. r.v.saravanan

  வேற ஒண்ணுமில்ல… இந்தப் பணத்தை வாங்கி… வேலையை உடனே முடிச்சிக் கொடுக்கிற வேற யாருட்டயாவது கொடுக்க முடியுமா? அப்படி யாராவது உங்களுக்குத் தெரியுமா?’ என்றார்.

  indhu bol makkal irupadal than முக்கியப் புள்ளியின் அரசியல் எடுப்பு pilaippu
  nadakkudu

 3. டவுட் தங்கபாலு

  சும்மா அதிருதில்ல!!! கொய்யால இவனுகள தான் ஷங்கர் முன்னாடி முதல்ல நிறுத்தனும்!

 4. charles

  இந்திய்ர்கள் லஞ்சத்திற்கு பழ்கிவிட்டார்கள் என்பது உலகறிந்த விஷயம,இனி அவர்களைத் திருத்த முடியாது, இவர்கள் கொடுத்து கொடுத்து சோர்ந்து போய்
  பலமிழந்து ஒருநாள் புறட்சியாய் வெடித்தாலொழிய இந்தியா மாற் வநியில்லை.,வ்ல்லரசு என்கிற கனவுகளெல்லாம் வெறும் வெத்துவெட்டு
  என்பதுதான் உண்மை.

 5. SenthilMohan K Appaji

  //* ‘வேற ஒண்ணுமில்ல… இந்தப் பணத்தை வாங்கி… வேலையை உடனே முடிச்சிக் கொடுக்கிற வேற யாருட்டயாவது கொடுக்க முடியுமா? அப்படி யாராவது உங்களுக்குத் தெரியுமா?’ என்றார்.**/

  இது தான் இந்தியா. எப்படியாச்சும் நமக்கு மட்டும் காரியம் நடந்தா சரி என்று நினைப்பவர்கள் அதிகம். இப்படி சொல்வதால் என்னை வித்தியாசமாக நினைக்காதீர்கள். நானும் இவர்களைப் போல், மாற்றங்களை விரும்பும், ஆனால் மாற்றத்திற்கு தயாராக இல்லாத ஒருவன் தான். ஒட்டு மொத்த அமைப்பும் மாறினால் தாமும் மாறிக்கொள்ளலாம் என்று சுயசமாதானம் செய்துகொண்டு, அந்த அமைப்பில் தானும் ஒரு அங்கம் என்பதை மறந்துவிட்டு… என்ன செய்வது? பழகி விட்டது. கொஞ்ச காலம் ஆகும் அன்று நினைக்குறேன். எப்பனு பாப்போம்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *