BREAKING NEWS
Search

ராவணன் – திரை விமர்சனம்

ராவணன் – பட விமர்சனம்

டிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ். கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதா

ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பிஆர்ஓ: நிகில் முருகன்

இயக்கம்: மணிரத்னம்

தயாரிப்பு: மணிரத்னம் – ஷாரதா திரிலோக்

ல்லவன் வாழணும் கெட்டவன் அழியணும் என்பது பொது நியதி. ஆனால் கெட்டவன் வாழ்வதும் நல்லவன் அழிவதும், ராவணன் படத்தில் சொல்லப்பட்டுள்ள மணிரத்ன நியதி.

வழக்கம்போல நடப்பு செய்திகள் மற்றும் காப்பிய சம்பவங்களிலிருந்து ஒரு கதையைத் தயார் செய்துள்ளனர் மெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவினர்!

மகாபாரதம், சத்யவான் சாவித்ரி, மும்பை வெடிகுண்டு சம்பவம், உல்பா விவகாரம், திருபாய் அம்பானி கதை… இந்த வரிசையில் இப்போது ராமாயணத்தையும் சந்தனக் காட்டு ராஜா வீரப்பன் கதையையும் கலந்தடித்து ராவணனாக்கியிருக்கிறார் மணிரத்னம்.

மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை வைத்து படங்களை உருவாக்குவது கூட ஒரு தனி பாணிதான்… ஆனால் ராவணன் விஷயத்தில், அடுத்தடுத்த காட்சிகளை பார்வையாளர்கள் போகிற போக்கில் கணித்துவிடக் கூடிய அளவுக்கு சுவாரஸ்யமற்ற திரைக்கதை கவிழ்த்துவிடுகிறது. இன்னொன்று, ஒரே திரைப்படத்தை மூன்றென்ன, முப்பது மொழிகளில் கூடத் தரலாம்… ஆனால் அந்தந்த மொழிக்குரிய நியாயத்தை செய்தே தீர வேண்டும். மணிரத்னம் படங்கள் பெரும்பாலானவற்றில் இது மிஸ்ஸிங்!

அம்பாசமுத்திரம் அருகே ஒரு மலைக்கிராம பழங்குடி மக்களுக்கு எல்லாமுமாக இருப்பவர் விக்ரம் (உருவகப்படி ராவணன் – வீரப்பன்). அண்ணன் பிரபு (அதாவது கும்பகர்ணன்- மாதையன்), தம்பி முன்னா (விபீஷணன் – வீரப்பன் தம்பி அர்ஜூனன்), தங்கை ப்ரியாமணி (சூர்ப்பனகை) என உறவுகளுடன் நானே ராஜா நானே மந்திரி ஸ்டைலில் வலம் வருகிறார்.

ஊருக்காக எல்லாம் செய்கிறான்… அவனுக்காக ஊர் எல்லாவற்றையும் இழக்கத் தயாராகிறது. ஆனால் சட்டம் அவனை வேட்டையாடத் துடிக்கிறது.

வீராவைச் சுட்டுக் கொல்ல சிறப்பு அதிரடிப்படை வருகிறது, பிருத்வி ராஜ் (அதாவது ராமன்) என்ற அதிகாரி தலைமையில். தேவின் காதல் மனைவி ஐஸ்வர்யா ராய் (சீதா). இந்த ராம சேனையில் அனுமாராக, அதே சேட்டைகளுடன் கார்த்திக் வருகிறார்.

அப்போது விக்ரமின் தங்கை திருமணம் நடக்கும்போது அதிரடிப்படை நுழைகிறது. விக்ரமுக்கு பிருத்வி குறி வைக்க, காயத்துடன் அவர் தப்பிக்கிறார்.

உடனே ப்ரியாமணியைத் தூக்கிப் போகும் அதிரடிப்படை, அவளை சிறைக்காவலில் வைத்தே கூட்டாகக் கற்பழிக்கிறது. வீடு திரும்பும் அவள் அண்ணனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

கடும் கோபத்துடன் கிளம்பும் விக்ரம், பிருத்வியைப் பழவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்தி, காட்டுக்குள் பதுக்குகிறார். அங்கே ஆரம்பிக்கிறது சேஸிங். மனைவியைத் தேடி பெரும் படையுடன் காட்டுக்குப் போகிறார் பிருத்வி.

இங்கோ… தான் கடத்தி வந்த ஐஸ்வர்யா ராயின் அழகில் தன்னை இழக்கும் விக்ரம், அடுத்தவன் மனைவி என்று தெரிந்தும் அவர் மீதுள்ள மோகத்தைச் சொல்கிறார்.

ப்ரியாமணிக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்த பின் விக்ரம் மீது அனுதாபம் பிறக்கிறது ஐஸுக்கு.

ஒரு கட்டத்தில் விக்ரமின் தம்பியையும் பிருத்வி கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் விக்ரமும் ப்ருத்வியும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ஐஸுக்காக பிருத்வியைக் கொல்லாமல் விடுகிறார் விக்ரம். ஐஸை விடுவித்து கணவனுடன் அனுப்பிவிடுகிறார்.

கணவனோடு ரயிலில் ஊர்திரும்பிக் கொண்டிருக்கும் ஐஸின் கற்பைச் சந்தேகப்படுகிறார் பிருத்வி. இதனால் மீண்டும் விக்ரமிடமே திரும்புகிறார்… அதன் பிறகு.. யோசனைக்கு வேலை வைக்காத சாதாரண க்ளைமாக்ஸ்தான்!

படத்தில் நிறைய ஏன்? எதற்கு? எப்படி? கேள்விகள்… என்னதான் மணிரத்னம் படம் என்றாலும் இந்தக் கேள்விகள் புறந்தள்ள முடியாதவையும் கூட!

நேட்டிவிட்டி என்ற ஒரு விஷயத்தை எப்போதும்போல இந்தப்படத்திலும் கோட்டைவிட்டுள்ளார் மணிரத்னம்… இதை அவர் தெரியாமல் செய்கிறாரா அல்லது காட்சியை அழகாகக் காட்டினால் போதும் என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் விடுகிறாரா?  இல்லையெனில் அம்பையில் நடக்கும் கல்யாணத்தின் பின்னணியில் வடநாட்டு ஸ்டைல் மாளிகைகள், கோபுரங்கள்… நெல்லைச் சீமையின் சற்றே வளர்ந்த கிராமமான அம்பையில் ஏது இதெல்லாம்..!

காட்டருவி… கட்டற்று ஓடும் வெள்ளம்… நடுவே ஒரு மெகா சிலை, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு அவை தனியாக நிற்கும் நிலையில். பார்த்தவுடன் பளிச்சென்று தெரிகிறது இது செட்டப் சமாச்சாரமென்பது.

அந்த அடர் காட்டில் விக்ரமின் இருப்பிடமோ நீரில் மிதக்கும் கோட்டை கொத்தளம் மாதிரி. நாயகனோ போலீசால் தேடப்படும் ஒரு குற்றவாளி… சமீர் சந்தாவின் கலை இயக்கம் படத்தை ரொம்பவே அந்நியமாக்கிவிடுகிறது. கிட்டத்தட்ட படத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் விஷயம் இது.

திருநெல்வேலித் தமிழ் இத்தனை கொடூரமானதா என் சந்தேகத்தையே எழுப்பி விட்டது சுஹாஸினி படத்தில் வைத்திருக்கும் ஸ்லாங்கைப் பார்த்து!

மேட்டுக்குடி, வீர்ர்ரைய்ய்ய்யாயா, எஸ்ஸ்ப்ப்பீபீபீ, ஆஆஆஆ, ப்பக் ப்பக் ப்பக், டன்டன்டன்டன்…. சுஹாஸினியின் அறிவுஜீவித்தனமான இந்த டயலாக்குகள் படத்தில் எத்தனை முறை வருகின்றனவென்று அவர்தான் எண்ணிச் சொல்ல வேண்டும்!

தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்க, அவன் மனைவியைக் கடத்தி வந்த வீரய்யா, அடுத்த இரண்டு நாட்களில் மாற்றான் மனைவியைப் பெண்டாளத் துடிப்பது, அந்த பாத்திரத்தின் மீதான மரியாதையையே சிதைக்கிறதே… அல்லது வீரய்யா போன்ற பழங்குடிகளுக்கு பாசம், சோகமெல்லாம் கிடையாது… சாவு வீட்டிலும் அழகான பெண்ணைப் பார்த்தால் ரொமான்ஸுக்கு அலைவார்கள் என நிரூபிக்க முயல்கிறார்களா…

அட, கூடப் பிறந்த தம்பியை அதே போலீஸ்காரன் போட்டுத் தள்ளியும் கூட, அவன் மனைவி மீது கொண்ட ஆசையால், அவனைத் தப்பிக்க வைக்கிறான் ஹீரோ என்பதாக வரும் காட்சியை ஏற்க முடியவில்லை.

ரஹ்மான் இசையில், எல்லோரும் ஓஹோவென்று கொண்டாடும் உசுரே போகுதே… பாடல் படத்தில் எந்த பாதிப்பையும் தரவில்லை. அடுத்தவன் மனைவியைக் கடத்தி வந்த சில நிமிடங்களுக்குள், அவள் மீது மோகம் முற்றிப் போய் உசுரே போகுதே என்று பாடுவது எந்த ஊர் நியாயம்? பெருத்த ஏமாற்றம்தான் மிச்சம். பின்னணி இசையும் எதிர்ப்பார்த்தபடி இல்லை. கெடாக்கறி பாட்டு ஓகே. அதென்ன… நாயகனிலிருந்து சொல்லி வைத்த மாதிரி இந்த ரகப் பாடல்களில் எல்லோரும் சகதி பூசிக் கொண்டு ஆடுகிறார்கள்!

எந்தக் காட்சியிலும், இது தமிழகத்தில் நடக்கிற ஒரு சம்பவம் என்ற உணர்வே வரவில்லை. அதுதான் மிகப் பெரிய மைனஸ்.

எத்தனை சிறுபிள்ளைத்தனமான க்ளைமாக்ஸ் பாருங்கள்… பெரும் இக்கட்டிலிருந்து மனைவியைக் கூட்டிக் கொண்டு ரயிலில் ஊருக்குப் போகிறான் கணவன். வழியில் மனைவியின் கற்பைச் சந்தேகிக்கிறான். 14 நாட்கள் அவனுடன் இருந்தாயே… உன்னைத் தொடாமல் விட்டுவைத்திருப்பானா? என்று கேட்க, அங்கேயே சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி இறங்குகிறாள். அங்கிருந்து நேராக விக்ரமிடம் போகிறாள்.. ‘என் கணவன் என்னைச் சந்தேகப்படுகிறான்… என்ன சொன்னாய் அவனிடம்…?’ என்று கேட்க.

இது சாத்தியமா… காட்டில் எங்கோ மறைந்து வாழும் ஒருவன் வீரா… இவளுக்கோ அந்த இடத்தின் வழிகூடத் தெரியாது.. அட போங்கய்யா நீங்களும் உங்க லாஜிக்கும்!

படத்தில் சில நிறைகளும் உண்டு…

அதில் முதலில் நிற்பது சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு. தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே மனசு ஜில்லிடும் அளவு அசத்தலான ஒளிப்பதிவு.

அடுத்து விக்ரமின் நடிப்பு. விக்ரமுக்கு பெரிய ஸ்கோப் இல்லாத பாத்திரம் இது. ஆனால் அதற்காக அவர் உழைத்துள்ள உழைப்பு சாதாரணமானதல்ல. விக்ரம் போன்ற நல்ல கலைஞர்களுக்கு இப்படி நேர்வதும் இயற்கைதான். உண்மையில் விக்ரம் இதைவிடச் சிறப்பான பல ரோல்களில் கலக்கியவர். அவற்றுக்கு முன் வீரா ஒன்றுமேயில்லை.

ஐஸ்வர்யாராயின் தோளில்தான் பெரும்பகுதி சுமையை இயக்குநர் இறக்கி வைத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சி தவிர, மற்ற இடங்களில் ஐஸின் அழகு, அந்த அதிரப்பள்ளி அருவியை விட ஜில்!

பிருத்விராஜ் எதற்காக கத்திக் கொண்டே திரிகிறார்… அவருடன் கார்த்திக் ஏன் குரங்கு சேட்டை பண்ணிக்கொண்டே அலைகிறார் என்பதெல்லாம் இயக்குநருக்கே வெளிச்சம்!

பிருத்விராஜுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், ஜூவாலஜி எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. ப்ரியாமணிக்கு தந்திருப்பது சூரப்பனகை வேடம்தான் என்பதைச் சுட்டிக்காட்ட மூக்கைப் பிடித்து ‘அறுத்துவிடட்டுமா’ என்பதெல்லாம்… மணிரத்னம் படமா இது என கேட்க வைக்கிறது.

கம்பீர எண்ட்ரிக்கு காத்திருந்த கார்த்திக்கை காமெடி பீஸாக்கிவிட்டிருக்கிறார் மணி ரத்னம்.  பிரபுவை மகா குண்டாகக் காட்டியுள்ளார். ஆனாலும் மனிதர் நடிப்பு இயல்பாகவே உள்ளது.

பெரிய பில்டப் தரப்பட்ட ரஞ்சிதாவை ஸ்கிரீனில் தேட வேண்டியிருக்கிறது. ஒரு மசாஜ், ஒரு குளியல் காட்சியுடன் அவர் கதையை முடித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்தப் படத்தில் மணிரத்னத்தின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. தளபதி, நாயகன், பம்பாய் என அவரது முந்தைய படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் படம் ஒன்றுமே இல்லைதான். ஆனால் படமாக்கப்பட்ட விதம், ஐஸ்வர்யா ராய், விக்ரம் என சில நியாயமான காரணங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்!

சாதாரண படம், சில அசாதாரண காட்சியமைப்புகளுடன்!

– வினோ

என்வழி
75 thoughts on “ராவணன் – திரை விமர்சனம்

 1. krishsiv

  போலாமா வேணாமா
  …………………………………
  போலாம் சொல்றீங்க

 2. ragavan

  அப்ப உலகத்தில வரப்போற எந்திரன் தான் நல்லபடமாக்கும்

 3. kannan

  ரசினி ரசிகர்ளெல்லாம் மணிரத்தினம் படத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க ….உங்க தலைவன் மாதிரி சொல்லனும்னா என்ன கொடும சார் இது …ஹஹஅஹா..விமர்சனத படிச்சா சிரிப்பு தான் வருது….

 4. vaas

  ரஜினி ரசிகன் என்றல் உங்கள்ளுக்கு என்ன அவ்வளவு கேவலமா?
  மணிரத்னம் படம் பார்த்தல் நீங்கள் பெரிய அறிவு ஜீவி என்று நீனைபோ?
  நானும் ரஜினி ரசிகன் தான், ஆஸ்திரேலியாவில் M.S., படித்தவன், உலக சினிமா அனைத்தையும் பார்ப்பவன்…
  உங்கள் தகுதி என்ன என்பதை நினைத்து பாருங்கள்?
  கீழ தட்டு மக்களுக்கு தான் ரஜினி படம் பிடிக்கும் என்ற உங்கள் அதி மேதாவி தன்னதை மாற்றிகொள்ளுங்கள்.
  நல்ல படமாக இருந்தால் தான் (யார் நடித்தாலும், எடுத்தாலும்) பார்க்க முடியும்.
  மணிரத்தனம் படம் எடுத்து விட்டார் என்பதற்காக, ரஜினி ரசிகர்கள் எல்லாம் வாய் முடி, இறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 5. rasigan

  ஐயா வினோ தெரியாம தான் கேக்கிறேன். நேர்மையா விமர்சனம் எழுதுங்க…
  நேராக விக்ரமிடம் போகிறார்.. ‘என் கணவன் என்னைச் சந்தேகப்படுகிறான்… என்ன சொன்னாய் அவனிடம்…?’ இப்படியா கேட்பார் ஒரு மனைவி?
  பின்ன எப்பிடி ஐயா கேட்பாள்?
  நாயகன் என்னவோ ரேஷன் கார்டு வச்சிருக்கிற மாதிரி அந்த சிலை இருக்குமிடத்த எப்பிடி நாயகன் வசிக்குமிடம் என்று சொல்லலாம்.
  கண்ணன் சொன்னமாதிரி சிரிப்பு தான் வருது…….

 6. Rajan

  //இந்தப் படத்தில் மணிரத்னத்தின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. தளபதி, நாயகன், பம்பாய் என அவரது மாஸ்டர் பீஸ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் படம் ஒன்றுமே இல்லைதான். ஆனால் படமாக்கப்பட்ட விதம், ஐஸ்வர்யா ராய், விக்ரம் என சில நியாயமான காரணங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்!//

  இதே காரணங்களுக்காக ஒரு முறை பார்த்து விட்டேன். இது மட்டுமல்ல இத்துடன் சந்தோஷ் சிவனின் அருமையான ஒளிப்பதிவையும் ஏ ஆர் ரகுமானின் இசையையும் சேர்த்து கொள்ளுங்கள். இது தவிர சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை.

 7. balu

  trailer பார்க்கும் போதே படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லிவிடலாம். trailer சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மணி ரத்தினத்தின் ஓரிரு படங்கள் தவிர மற்றவை எல்லாம் சலிப்பு தான்.

 8. ramya

  கரெக்டா சொன்னீங்க கண்ணன் ராகவன்.. ராவணன் படம் வினோ வுக்கு நியூஸ் இல்ல.. ராவணன் படம் பாக்க போன ரஜினி தான் நியூஸ்… கடவுளே… தமிழ் ல எப்போவாவது தான் எஅதோ கொஞ்சம் நல்ல படம் வருது.. அதுக்கும் இவ்ளோ மோசமா விமர்சனம் தரணுமா .. ஒன்னும் சொல்றதுகில்ல..
  ___________

  நிச்சயமாக…

  மணிரத்னம் எனக்கு செய்தியல்ல. ரஜினிதான் செய்தி. அதைப் புரிந்து கொள்ள நீங்கள் ஒரு செய்தியாளராகவும் இருந்து பார்க்க வேண்டும்!

  -வினோ

 9. raja

  thatstamil review and this review almost same… looks like same person wrote both reviews..Just curious ..I noticed same in other movie reviews also..

  __________
  Hi,
  This is my 5th review for this film!
  Don’t try to trace my roots… Just read the review and share your views. Thats enough! 🙂

  Vino

 10. simple fan of superstar!

  //உல்டாவா… நீங்க திருந்த மாட்டிங்க… மற்றவர்களின் படத்தை மட்டம் தட்டி, ரஜினி ரசிகர்னு சொல்லி ரஜினியையும் கேவல படுதரத நிறத்து… நூறு சதவீதம் உண்மை ………..//

  -வந்துட்டா வெளக்கெண்ணெய் கருத்து சொல்ல… ரஜினியை ஒரு விருந்துக்கு கூப்பிடுகிறார்கள். அது நன்றாக இருக்கோ இல்லையோ, கைநனைத்த மரியாதைக்காக நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு வருவது தமிழ்ப் பண்பாடு. அதைத்தான் அவர் செய்கிறார். இதே விருந்துக்கு நீ போனால், தூ என்று துப்பிவிட்டா வருவாய்? அறிவோடதான் பேசுறியா…

  அவர் நல்லாருக்குன்னா… அவர் ரசிகர்கள் எல்லாரும் ஏத்துக்கணும்னு அர்த்தமில்ல. இஷ்டமி்ருந்தா, காசிருந்தா பாருங்க, உங்க விருப்பப்படி கருத்து சொல்லிக்கங்கன்னு அர்த்தம். ரஜினி ரசிகர்கள் யாரும் யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. சுயமா யோசிக்கிறவங்க. ராவணன் படத்தை நீ பார்த்தியா முதல்ல… பார்த்துட்டு எழுது.

  அப்புறம், இங்க எவனோ ஒருத்தன், ரஜினி ரசிகன்லாம் விமர்சனம் எழுதறாங்கன்னு சொல்லியிருக்கான். அட, அறிவு கெட்டவனே- தமிழ்நாட்ல எல்லோருக்குமே ரஜினி படம் பிடிக்கும். அவங்க ரஜினிக்கு ரசிகன்னு வெளியே சொல்லிக்காவிட்டாலும். அப்படிப்பார்த்தா மணிரத்னம் போன்ற அறிவுஜீவி படத்துக்கு யாரும் விமர்சனமே எழுத முடியாதே.

  வினோ ஒரு பத்திரிகையாளர். பிஎச்டி படித்தவர். வேற என்ன வேணும் உனக்கு? ரஜினி ரசிகர்கள்னா ரொம்ப அடிமட்டத்துல இருக்கிறவங்கன்னு நெனப்பா உனக்கு?

  நீ சொன்னாலும் சொல்லலன்னாலும் ராவணன் 100 சதவிகிதம் உல்டாதான்… வீரப்பன் கதை.

 11. krishsiv

  மணிரத்னம் எனக்கு செய்தியல்ல. ரஜினிதான் செய்தி//
  சும்மா நச்சு பதில்

 12. mukesh

  //அப்ப உலகத்தில வரப்போற எந்திரன் தான் நல்லபடமாக்கும்//

  ஆமாப்பா ஆமா இப்ப அதுக்கு என்ன? போயி வேலையை பாப்பிங்களா!!!
  உங்களுக்கெல்லாம் கமல், சுகாசினி,அனுஹாசன் இவங்கதான் அறிவு கொழுந்துகள். போதுமா.

 13. sureshkumar

  மணிரத்னம் குசு விட்டாகூட, ஆஹா என்ன அறிவு ஜீவித்தனம்னு பேசுற அபத்தக் களஞ்சியங்களுக்கான படம் இது.

  ஆமா, ராவணன் படம் பத்தி எழுதங்கடான்னா எதுக்கு எங்க எங்க தலைவர் எந்திரன்கிட்ட வர்றீங்க?

  அறிவே கிடையாதா, மணிரத்னம் மாதிரியே சம்பந்தமில்லாம உளறாதீங்க.

 14. Cinema Rasigan

  In your site except Rajini movies for all the other movies u r giving more negative points and bad comments,try to change the attitude.

  Ippadikku,
  Cinema Rasigan
  ____________

  இந்த தளத்தையோ அதில் வெளியாகியுள்ள விமர்சனங்களையோ நீங்கள் ஒழுங்காகப் படித்ததில்லை என்பதற்கு இதுவே சான்று. இதுவரை ஒரு ரஜினி பட விமர்சனமும் இதில் வெளி வந்ததில்லை என்பது உமக்குத் தெரியுமா?

  உமக்குப் பிடித்த மாதிரி விமர்சனம் எழுத வேண்டிய கட்டாயம் எமக்கில்லை. படம் நன்றாக இருந்தால் யார் எடுத்திருந்தாலும் பாராட்டுவோம். நன்றாக இல்லை என்றால், அதை பூசி மெழுக வேண்டிய அவசியமென்ன. எல்லோரையும் போல மணிரத்னமும் ஒரு சாதாரண சினிமா இயக்குநர். அவருக்கும் சறுக்கல் சகஜமே.

  ரஜினி பற்றி செய்திகளை என்வழியை விட அதிகமாக ஆனந்தவிகடன் வெளியிடுகிறது. இதே கருத்தை அவர்களிடமும் சொல்ல முடியுமா உம்மால்? ரஜினி என்றாலே எல்லோருக்கும் உற்சாகம். அவர் அப்படிப்பட்ட celebrity. அவரைப் பற்றி இன்னார்தான் செய்தி வெளியிட வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியாது. எதற்கெடுத்தாலும் அவர் காலடி மண்ணைத் தேடும் உம்மைப் போன்றவர்களை திருத்த முடியாது.

  பெயருக்கேத்த மாதிரி நல்ல சினிமா ரசிகனா யோசிச்சு எழுதுங்க!

  -Vino

 15. mukesh

  வினோ தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் தனக்குப் பிடித்த மனிதர் என்றும் பல முறை தெளிவு படுத்தியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் அறிவிலித்தனமாக இங்கு சிலர் இந்த ஆசிரியருடைய ரஜினி நிலைப் பாட்டை கேள்வி கேட்டு மல்லாந்து படுத்து எச்சில் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். பாவம். இத்தனைக்கும் ரஜினியின் சமகால கலைஞனான கமலை எனக்குத் தெரிந்து இந்த தளத்தில் தரக்குறைவாக எழுதியவரில்லை வினோ.

 16. Prasanna

  வினோ உங்க விமர்சனம் சூப்பர் !!!!!!!!!!!!!!!!!!
  மகாபாரதம், சத்யவான் சாவித்ரி, மும்பை வெடிகுண்டு சம்பவம், உல்பா விவகாரம், திருபாய் அம்பானி கதை… இந்த வரிசையில் இப்போது ராமாயணத்தையும் சந்தனக் காட்டு ராஜா வீரப்பன் கதையையும் கலந்தடித்து ராவணனாக்கியிருக்கிறார் மணிரத்னம்.
  இதில் இருவர் படத்தை விட்டீர்களே வினோ ( MGR- கருணாநிதி ) கதை
  அப்புறம் சும்மா தலைவரை பத்தி ஏன் இங்கு பேசணும் !!!!!!!1 வெட்டி பசங்க

 17. Prasanna

  krishsiv says:

  போலாமா வேணாமா
  …………………………………
  போலாம் சொல்றீங்க
  ———————————————
  ஹிஹிஹெஹிஹி :)))))))

 18. r.v.saravanan

  ரஜினி பற்றி செய்திகளை என்வழியை விட அதிகமாக ஆனந்தவிகடன் வெளியிடுகிறது. இதே கருத்தை அவர்களிடமும் சொல்ல முடியுமா உம்மால்? ரஜினி என்றாலே எல்லோருக்கும் உற்சாகம்.

  good vino

 19. kiri

  சந்திரமுகியும், குசேலன் & சிவாஜியும் நல்ல லாஜிக் ஆனா படம் .

 20. kiri

  நல்லவன் வாழணும் கெட்டவன் அழியணும் என்பது பொது நியதி. ஆனால் கெட்டவன் வாழ்வதும் நல்லவன் அழிவதும், ராவணன் படத்தில் சொல்லப்பட்டுள்ள இப்பொழுது நடக்குற நியதி.

 21. Raj Devar

  hi friends……….this website is only for rajini fans……..not for all…..so dont worry…….

 22. Rasigan

  மறுபடியும் ஒரு சந்தேகம். நீங்க படத்த நல்லா பார்த்தீங்களா . இல்ல கிளைமாக்ஸ் கு முன்னமே வந்திடீங்களா?
  “காட்டில் எங்கோ மறைந்து வாழும் ஒருவன் வீரா… இவளுக்கோ அந்த இடத்தின் வழிகூடத் தெரியாது.. அட போங்கய்யா நீங்களும் உங்க லாஜிக்கும்!”
  என்னையா சின்னப்புள்ள தனமா இருக்கு உங்க விமர்சனம்…..
  விக்ரம் போனதும் ப்ரிதிவிராசும் என்ன கண்ணை கட்டியா மனைவியை கூட்டி கொண்டு வந்திருப்பார்? சரி அதைகூட விடுவோம் . இறுதியில் பிரபு ஐஸ்வர்யாவிடம் அவன் எங்க இருக்கான் என்று தெரியல அவன் வருவானா என்று தெரியல என்று சொல்கிறாரே… அப்பா நீங்க என்ன காத்து குடைஞ்சிட்டு இருந்தியலோ?

 23. ss

  டிக்கெட் வாங்கிட்டேன்.. உங்க விமர்சனத்தை பார்த்த பிறகு, எதிர்பார்புகளை கொஞ்சம் குறைத்து கொண்டேன்.. காட்சிகளுக்கவும் கலைஞர்களின் நடிப்புக்காகவும் ஒருமுறை பார்த்து விடுகிறேன்

 24. krishsiv

  இங்க படம் நல்ல்லா இருக்குனு சொல்ற
  எத்தன பேரு தியேட்டர்ல போயி காசு கொடுத்து பார்த்தாங்க தெரியல
  ஒருத்தருக்கு பிடிப்பது இன்னொருத்தருக்கு பிடிக்கணும் கட்டாயம் இல்லை
  புடிச்சுருந்தா தியேட்டர்ல போயி பாருங்க
  இல்ல எப்போதும் பண்றது போல (சீடி ) பாருங்க
  நானும் இதை படித்தேன்
  ஆனா தியேட்டர்ல போயி பார்க்காம இல்ல
  பார்த்தாச்சு ….. இங்கு படித்த பின்பு கொஞ்சம் எதிர்பார்ப்பு குறைந்தது
  அதனால ரொம்ப பாதிப்பு இல்ல …நன்றி வினோ
  சும்மா பார்த்துட்டு வரலாம் ……

 25. chittu

  ஒருத்தருக்கு பிடிப்பது இன்னொருத்தருக்கு பிடிக்கணும் கட்டாயம் இல்லை
  புடிச்சுருந்தா தியேட்டர்ல போயி பாருங்க இல்ல வேலைய பாருங்க யாரையும் கிண்டல் பண்ண வேண்டாம்

 26. Cinema Rasigan

  Hi, please understand that i am not telling don’t write good things of super star,i am great fan for him,but in the the same time u should give some good points of other movies as well,For example ur comments on the recent movie Singam is very bad,but it is done very well in the box office,because that movie’s main minus point is only unbeleivable stunts and comedy track of Vivek,other than that so many good points,but not mentioned in the review.

  Ippadikku,
  Cinema Rasigan

 27. கிரி

  படத்தில் திரைக்கதை சரி இல்லை மற்றும் அனைவரும் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை. கண்டிப்பாக A கிளாஸ் க்கான படம் அதிலும் அனைவரும் விரும்புவார்களா என்று தெரியவில்லை.

  எந்தவித சுவாராசியமான திருப்பமும் இல்லை பல கேள்விகள்..

  படத்தின் பலம் ஐஸ் விக்ரம் சந்தோஷ் சிவன்.. உசிரே போகுதே என்ற அருமையான பாடலை பொருத்தமில்லாத இடத்தில் வைத்து பாட்டையே கெடுத்து விட்டார்கள்.

  படம் பாருங்கள் பிறகு விமர்சியுங்கள்.. மணிரத்னம் சிறந்த இயக்குனர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை அவர் மீது உள்ள நம்பிக்கையில் படத்தை பார்க்காமலே விமர்சித்தால்… நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் என்றே கூறுவேன். இது என் கருத்து.

 28. Manoharan

  இது நல்ல படமும் இல்லை,மோசமான படமும் இல்லை. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, ரகுமானின் பாடல்கள், விக்ரமின் நடிப்பு, ஐஸ்வர்யாவின் அழகு என்று நல்ல விஷயங்களும் இருக்கின்றன,ஆனால் திரைக்கதை ….? ஒன்று மணிரத்னம் தமிழில் படம் எடுக்கட்டும் அல்லது இந்தியில் எடுக்கட்டும். இப்படி இரு மொழிகளில் எடுப்பதால் ஒரு நேட்டிவிட்டியே இல்லாமல் போய்விடுகிறது. கிளைமாக்சில் ஒரு கோழை ஜெயிக்கிறான் . ஒரு வீரன் தோற்கிறான். எரிச்சல் தான் வருகிறது. தங்கையின் சாவுக்கு மூல காரணமானவன்.தம்பியை கொன்றவன். ஆனால் அவனை கொல்லாமல் தப்பிக்கவிடுகிறான் நாயகன். காரணம் அவன் மனைவியை இவனுக்கு பிடித்திருக்கிறது. இதிலுள்ள நியாயத்தை மணிரத்னம்தான் சொல்லவேண்டும். இடைவேளைக்கு பிறகு படம் நன்றாக இருந்தாலும் கிளைமேக்ஸ் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. இது கிட்டத்தட்ட ராமாயணக் கதைதான் . ஆனால் இந்த ராமன், ராவணனை நேரடியாக மோதி ஜெயிக்காமல்,சீதையின் பின்னால் ஒழிந்து சென்று அவனை கொல்கிறான். படம் முடிந்து வரும்போது ஒளிப்பதிவும்,விக்ரம் நடிப்பும்தான் மனதில் நிற்கிறது. ஒருதடவை பார்க்கலாம்.

 29. rasa

  “தளபதி, நாயகன், பம்பாய் என அவரது மாஸ்டர் பீஸ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால்…”

  அடங்கக்கொயல! தளபதி எப்போ மாஸ்டர் பீஸ் ஆயிச்சு

 30. Srinivas

  // rasa says:
  June 20, 2010 at 4:39 am
  அடங்கக்கொயல! தளபதி எப்போ மாஸ்டர் பீஸ் ஆயிச்சு//

  டேய்…வெளக்கெண்ணை….நீயெல்லாம் படம் பாக்கவே லாயக்கில்லை….
  போடா ………………………..கொய்யாங்கோ !!!

 31. krishsiv

  //தளபதி எப்போ மாஸ்டர் பீஸ் ஆயிச்சு//
  தளபதி மகா மோசமான படம்
  வேஸ்ட் ….மொக்கை…………….
  மொத்தத்தில் அது ஒரு படமே இல்ல ….

  ராசா இப்ப சந்தோசமா உங்களுக்கு

 32. காத்தவராயன்

  ம‌ணிர‌த்ன‌ம் அறிவுஜீவி இய‌க்குன‌ர், இந்திய‌ சினிமாவின் அடையாள‌மாய் என்றுமே இருந்த‌தில்லை என்ப‌து ச‌த்திய‌மான‌ உண்மை.

  ம‌ணியின் முத‌ல் வெற்றிப்ப‌ட‌மான‌ “மெள‌ன‌ ராக‌ம்” கூட‌ கே.பாக்கிய‌ராஜின் “அந்த‌ 7 நாட்க‌ள்” ப‌ட‌த்தின் அப்ப‌ட்ட‌மான‌ காப்பி. ஒரு க‌தாசிரிய‌ராக‌ கே.பாக்கிய‌ராஜின் கால் தூசுக்கு கூட‌ பெறாத‌ ம‌ணிர‌த்த‌ன‌த்தை சிற‌ந்த‌ ப‌டைப்பாளி என்று சில‌ர் கொண்டாடுவ‌து பேத‌மையிலும் பேத‌மை.

  “என‌க்கு ச‌ர்வ‌தேச‌ த‌ர‌த்திலான‌ இசை தேவைப்ப‌ட்ட‌தால் AR.ர‌குமானுட‌ன் இனைந்தேன் ம‌ற்ற‌ப‌டி ராஜாவுட‌ன் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லை” என்று ஒருமுறை ம‌ணிர‌த்ன‌ம் உள‌றியிருந்தார், இதுவா உண்மையான‌ ந‌ட்பு? உண்மையான‌ ந‌ட்பு என்ப‌து த‌ன்னுடைய‌ வ‌ள‌ர்ச்சியிலும் ந‌ண்ப‌னையும் கைய‌னைத்து செல்வ‌துதான். ராஜாவின் த‌ர‌த்தை ப‌ற்றி “ப‌ல்ல‌வி அனுப‌ல்ல‌வி”க்கு முன்ன‌ரே ம‌ணிர‌த்ன‌ம் க‌ண்ட‌றிந்திருந்தால் ம‌ணிர‌த்ன‌த்தை ஓர் அறிவுஜீவி என்று கொண்டாலாம். இளைய‌ராஜா ம‌ட்டும் இல்லை என்றால் ம‌ணிர‌த்ன‌ம் என்றோ ஒழிந்து போயிருப்பார்.

  ம‌ணிர‌த்தின் த‌னித்துவ‌ம் கூட‌ PC. ஸ்ரீ ராம் – ஆல் வ‌ந்த‌து (இருட்டுக்குள்ள‌ ப‌ட‌ம் எடுக்குற‌து).

  த‌மிழில் ம‌ணிர‌த்ன‌த்தின் க‌டைசி வெற்றிப்ப‌ட‌மான‌ அலைபாயுதேவின் க‌தைகூட‌ ம‌ணிர‌த்ன‌த்தின் சொந்த‌க்க‌தையில்லை. ப‌ழ‌ம்பெரும் க‌தாசிரிய‌ர் R.செல்வ‌ராஜிட‌ம் இருந்து வாங்கி த‌ன‌து பெய‌ரையும் அதில் ஒட்டிக்கொண்டார். அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் அலைபாயுதேவின் இந்திப்ப‌திப்பில் க‌தை: ம‌ணிர‌த்ன‌ம் என்று த‌ன‌து பெய‌ரை ம‌ட்டும் போட்டுக்கொண்டார்.ஒரு ப‌டைப்பாளிக்கு உரிய‌ குறைந்த‌ப‌ட்ச‌ நேர்மை கூட‌ இல்லாத‌வ‌ரை இந்திய‌ சினிமாவின் ச‌ர்வேதேச‌ முக‌ம் எனக்கொண்டாடுவ‌து அப‌த்த‌திலும் அப‌த்த‌ம்.

  ம‌ணிர‌த்ன‌த்தின் சினிமா ப‌ற்றி ஒரு க‌ட்டுரை எழுத‌லாம் என்று வினோவிட‌ம் அனும‌தி வாங்கி வைத்திருந்தேன், இனி அத‌ற்கு அவ‌சிய‌மில்லை.

  செத்த‌ பாம்பை அடிப்பானேன்.

  ‍‍‍காத்த‌வ‌ராய‌ன்

 33. raja

  I am not trying to trace any roots..just noticed the similarities between both site reviews..I am not sure why u upset by my comment.Did i say anything wrong??????? .And i will continue post my comments/my questions in future..Or change the comment title from “Speak your mind” to “Speak Envazhi.com mind” and Rajesh u like me reply??

 34. vicky

  ravanan is a good movie for the good people, photography is a mind blowing.. chance less

 35. rajank kamala sankar

  ethukkuya enthranku supporta pechina kamal, suhasini, anuthan arivu jeevi nu kopa padduringa. Ana onnu vikram ennathan talenta irunthalam enga thalaivan Rajani, upathalaivan Kamal, kutty thalaivan Karthik kittakuda vikram ala poga muddiathu.

 36. rajank kamala sankar

  See, one man is supporting Enthran, but other men is cursing as Kamal, Suhassini, Anu are only brilliant. Why so irrelveant becuase if anybody attacking kamal’s family nobody will object is in it. But one thing eventhough Vikarm may be a great actork, he can not reach near by our great thalaivan Rajani, Upathalaivan Kamal, Kutty thalaivan Navarasa Nayagan Karthic. thats all kannu.

 37. Manoharan

  ///குறிப்பு: ஐஸ்வர்யா ராய் தோன்றும் காட்சியை விட ரஞ்சிதா தோன்றும் காட்சியில் தான் ரசிகர்களின் விசில் பரகிறது…..///

  @Sam . ஊமை குசும்பு சார் உங்களுது. ஆனால் இதில் உண்மை இருக்கே.

 38. Manoharan

  மணிரத்னம் டாப் 10 படங்கள் : ( தரத்தில் )

  1 . நாயகன்.
  2 . ரோஜா .
  3 . தளபதி
  4 . மவுனராகம்
  5 . இருவர்
  6 .அலைபாயுதே
  7 .அக்னி நட்சத்திரம்
  8 .அஞ்சலி
  9 .இதயத்தை திருடாதே
  10 .பம்பாய் .

  மணிரத்னம் டாப் 10 படங்கள் : ( பொழுது போக்கில் )

  1 .தளபதி
  2 .நாயகன்
  3 .ரோஜா
  4 .அலைபாயுதே
  5 .அக்னி நட்சத்திரம்
  6 .இதயத்தை திருடாதே
  7 .மவுனராகம்
  8 .திருடா திருடா
  9 .பம்பாய்
  10 .அஞ்சலி.

 39. Mahesh (bangalore)

  //இது சாத்தியமா… காட்டில் எங்கோ மறைந்து வாழும் ஒருவன் வீரா… இவளுக்கோ அந்த இடத்தின் வழிகூடத் தெரியாது.. அட போங்கய்யா நீங்களும் உங்க லாஜிக்கும்!///

  வினோ சார் ,
  ரஜினி சார் படத்தில எவளவோ லாஜிக் மிஸ் இருக்கு , அதெல்லாம் accept பண்ணறீங்க , இத மட்டும் கிண்டல் பணரீங்கலே இது நியாயமா

 40. kiri

  //இது சாத்தியமா… காட்டில் எங்கோ மறைந்து வாழும் ஒருவன் வீரா… இவளுக்கோ அந்த இடத்தின் வழிகூடத் தெரியாது.. அட போங்கய்யா நீங்களும் உங்க லாஜிக்கும்!///

  வினோ சார் ,
  ரஜினி சார் படத்தில எவளவோ லாஜிக் மிஸ் இருக்கு , அதெல்லாம் accept பண்ணறீங்க , இத மட்டும் கிண்டல் பணரீங்கலே இது நியாயமா//

  அதைத்தானே நானும் கேக்கிறன்?

 41. Muthukumar

  முதலில் தமிழ் சினிமா விமர்சனத்தை படியுங்கள் அதன் பின் வினோவை பற்றி எழுதுங்கள்

 42. mukesh

  விமர்சனம் என்பது வேறு. ரசிகனாய் இருப்பது என்பது வேறு.

  ரஜினி படம் லாஜிக் ஆக இருக்கும் என்று யார் சொன்னது. ரஜினி படம் எவ்வளவோ விமர்சன கிண்டல்களை படித்திருக்கிறோம். இதை எல்லாம் மீறி ஒரு படம் வெற்றி அடைகிறதென்றால் அது மக்கள் ரசனை சம்பந்த பட்டது.

  வீரா படத்தில் ரஜினி கத்தியை வீசுவார். அது சுற்றி போய் அவர் கைக்கே வரும். ரஜினி செய்யும்போது லாஜிக் இல்லை என்றாலும் மக்கள் ரசிக்கிறார்கள். superman மாதிரி superstar .

  வினோ இங்கு ஒரு விமர்சகர் மட்டுமே என்பது எனக்கு புரிகிறது. ரஜினி படம் மட்டும்தான் அவருக்கு பிடிக்கும் என்போர் இவரின் அங்காடி தெரு, பசங்க விமர்சனங்களையும் படியுங்கள்.

 43. Manoharan

  சீசரின் மனைவி சந்தேகத்திற்க்கு அப்பார்ப்பட்டவள் . அது மாதிரி ரஜினி படம் லாஜிக்கிற்க்கு அப்பாற்ப்பட்டது .

 44. வள்ளுவன்

  ராவணன் படத்தை பற்றி சுஹாசினி “ஹாசினி பேசும் பட”த்துல பேசுவாங்களா? இந்த படத்தை பற்றி அவங்க “தராசு, தட்டு” அப்படீன்னு அலசறதை பார்க்க ஆவலா இருக்கேன்.
  —————————
  //Manoharan says:
  June 22, 2010 at 10:23 pm

  சீசரின் மனைவி சந்தேகத்திற்க்கு அப்பார்ப்பட்டவள் . அது மாதிரி ரஜினி படம் லாஜிக்கிற்க்கு அப்பாற்ப்பட்டது .//

  மனோகரன், ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா? நீங்க நல்லவரா? கெட்டவரா?
  ——————–
  அப்புறம், நேத்து விஜய் டிவி யில, போன வருஷம் “6 மணி நேரம் காத்திருந்து கமல் வாங்கிட்டு போன டுபாகூர் விருதின்” 2009 ஆம் ஆண்டின் விருதுகள் நிகழ்ச்சியை ஒளிபரப்புனாங்க. ரஜினியும் ஏதோ விருது வாங்குனாப்பல தெரியுது. வினோ இதை பத்தி உங்க பார்வையில ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

 45. mukesh

  வள்ளுவன்…… மனோகரனுக்காக நான்…..

  வள்ளுவன், ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா? நீங்க நல்லவரா? கெட்டவரா?

  //அப்புறம், நேத்து விஜய் டிவி யில, போன வருஷம் “6 மணி நேரம் காத்திருந்து கமல் வாங்கிட்டு போன டுபாகூர் விருதின்//

  இந்த வருஷம் பல மணி நேரம் காத்திருந்து விஜய் டிவி ரஜினிக்கு கொடுத்துட்டு போன டுபாகூர் விருதின்(?)

  வித்தியாசம் தெரிகிறது.

  கமல் ரசிகர்கள் உடனே வர வேண்டாம் வக்காலத்துக்கு. இதை நான் ஆரம்பிக்கவில்லை.

 46. வள்ளுவன்

  mukesh says:

  //இந்த வருஷம் பல மணி நேரம் காத்திருந்து விஜய் டிவி ரஜினிக்கு கொடுத்துட்டு போன டுபாகூர் விருதின்(?) வித்தியாசம் தெரிகிறது.//

  அட்ரா சக்கை!!! அட்ரா சக்கை!!! அட்ரா சக்கை!!!

  ஹூம்!!! எப்படி எல்லாம் டிஸ்கி போட வேண்டியிருக்கு!!! அவ்வவ்!!!

  இந்த வருஷமாவது அது “விஜய் விருது” தானா, இல்லை இந்த வருஷமும் அது “டுபாக்கூர் விருது” தானா? (இல்ல… கமல் இந்த வருஷம் எதுவும் வாங்கலே…அதான்….).

 47. mukesh

  இதிலே போய் என்ன சந்தேகம். டுபாக்கூர் விருதுதான். இதுக்கு போய் 6 மணி நேரம் காத்திருந்து……. தேவையா……. அடங்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்களே……அழுவாதீங்க ராசா…

  //கமல் இந்த வருஷம் எதுவும் வாங்கலே…அதான்….).//

  நம்மை யாரும் அசைச்சிக்க முடியாது……இப்படியே maintain பண்ணுவோமா….. .

 48. வள்ளுவன்

  mukesh says:
  //இதிலே போய் என்ன சந்தேகம். டுபாக்கூர் விருதுதான்//

  அப்படி போடு. இதை தான் எதிர்பார்த்தேன்.

  அப்போ ஒரு “டுபாக்கூரை” கொடுக்கறதுக்காக ரஜினியை, சிவாஜி வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்க…அவரும் ஒரு “டுபாக்கூரை” வாங்கறதுக்காக வேலை எல்லாம் விட்டுட்டு காரை எடுத்துக்கிட்டு போய், ரொம்ப பவ்யமா, கண் கலங்க, வாங்கிட்டு வந்து இருக்கார். அட்டகாசம்யா….

  Football season தான். அதுக்காக same side goal போடாதீங்க முகேஷ்.

  இப்போ உங்களை கேக்கறேன்…நீங்க நல்லவரா? கெட்டவரா?

 49. krishsiv

  விஜய் டிவி விருது நிகழ்ச்சி ……

  இனி ஜாலியா இருக்கும் ….

  அனல் பறக்க போகுது

 50. valluvan

  ஆமாம் krishsiv, சண்டையும் சச்சரவும் புலவர்களின் சொத்து மாதிரி, நாம ஒருத்தரை, ஒருத்தர் (கமல் vs ரஜினி) கலாய்க்கிறது இன்னைக்கு நேத்தா நடக்குது. எனக்கு தெரிஞ்சு ஒரு 30 வருஷத்துக்கும் மேல நடக்குது. என்னோட உயிர் நண்பர்கள் பாதி பேர் ரஜினி ரசிகர்கள் தான்.

  யாரு கிட்ட போய் சண்டை போடப் போறோம். எல்லாம் நம்ம பங்காளிகள் தானே. நீங்க சொன்ன மாதிரி (இந்த தளத்துலயும்) ஜாலியா தான் இருக்கணும்னு எனக்கும் ஆசை…இல்ல..வேண்டுதல் கூட…பார்க்கலாம்…

  Just sit back and relax! எங்கே என் நண்பன் முகேஷ்…அடுத்த round க்கு ரெடியா…..

  mukesh says:
  //இதிலே போய் என்ன சந்தேகம். டுபாக்கூர் விருதுதான்//

  முகேஷ், ரஜினி மரியாதையோடும், பணிவோடும், உணர்ச்சி வசப்பட்டு வாங்கின ஒரு விருதை போய் “டுபாக்கூர்னு” சொல்லிட்டீங்களே, நியாயமா? அடுக்குமா? நீங்க ரஜினி ரசிகர் தானா?

  இப்போ புரிஞ்சிடுச்சி. கமல் விருது வாங்கலைன்னாலும், விழாவுக்கு போய், மேடை ஏறி, ஒன்னு, ரெண்டு விருது கொடுத்தார் இல்லையா, அதனால அது உங்களுக்கு டுபாக்கூர் விருதா தான் தெரியும்.

 51. K. Jayadeva Das

  தங்கையை கற்பழித்தவனுங்களோட கூட்டத் தலைவன் ராமனா? என்ன கொடுமை சார் இது? தங்கை கற்பழிப்பு, தம்பி கொலை, ஆளைக் கடத்திபோய் காட்டில் வைப்பது இது எல்லாம் வீரப்பன் விஷயத்தில் செய்தித் தாட்களில் வந்த செய்திகள் என்பது கூடுதல் தகவல், மீதியெல்லாம் ராமாயணத்தில் இருந்து சுட்டது. அடடடா!

 52. Manoharan

  @முகேஷ் & வள்ளுவன். எனக்கு ஒண்ணுமே புரியலை.

 53. bala

  மணி சார் பேசாம நீங்க அபிஷேக் பச்சன் விட்ல ___________ வேலை போங்க நீங்க அதுக்கு குட லாயக்கு இல்லை படம் உங்க பொண்டாட்டி முஞ்சி மாதிரி அசிங்க ம இருக்கு

 54. mukesh

  மனோகரன் உங்களுக்கு வள்ளுவன் கிழே கொடுத்த பதிலில் ஆரம்பித்தது எங்கள் விவாதம். இப்போதாவது புரிகிறதா?

  //Manoharan says:
  June 22, 2010 at 10:23 pm

  சீசரின் மனைவி சந்தேகத்திற்க்கு அப்பார்ப்பட்டவள் . அது மாதிரி ரஜினி படம் லாஜிக்கிற்க்கு அப்பாற்ப்பட்டது .//

  மனோகரன், ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா? நீங்க நல்லவரா? கெட்டவரா?
  ——————–
  அப்புறம், நேத்து விஜய் டிவி யில, போன வருஷம் “6 மணி நேரம் காத்திருந்து கமல் வாங்கிட்டு போன டுபாகூர் விருதின்” 2009 ஆம் ஆண்டின் விருதுகள் நிகழ்ச்சியை ஒளிபரப்புனாங்க. ரஜினியும் ஏதோ விருது வாங்குனாப்பல தெரியுது. வினோ இதை பத்தி உங்க பார்வையில ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

 55. krishsiv

  ஆமாம் krishsiv, சண்டையும் சச்சரவும் புலவர்களின் சொத்து மாதிரி//
  புலவரா சரி சரி எதோ திடத்தோட தான் இருக்கீங்க …

 56. saranya

  its jus a review of raavanan…… y r u unnecessarily bringing rajini into this? is this film which is worth for 5 out f 5 stars? not at all… we can watch it only once for how it has been taken…. it is a stupid story with a worst screenplay… only the last fight was appreciable..

 57. Maniratnam

  படத்தில் வரும் ஒரு வசனம் “மசுரு” – அதே தான் இந்த படமும்.

 58. ஆனந்த் - ஷா

  கண்டனத்திற்குரிய வணக்கங்கள்….
  ஒரு சினிமா புதுசா பிறந்த குழந்தை மாதிரி இயக்குனர்கள் குழந்தையை பெற்ற தாய் மாதிரி… ராவணன் மணிரத்னத்துக்கு 2 வருஷ project எங்களுக்கு அது 2 வருஷ தவம்… எங்க ஊர்ல (srilanka ) ராவணன் வெளியிட்ரதுக்கு பெரிய எதிர்ப்பு குறிப்பா தமிழ் ஈழத்தில … ஒரு தியேட்டரைவேற கொளுத்தீட்டாங்க ஏண்டான்னு காரணம் கேட்டால் மணிரத்னமும் ஐஸ்வர்யாவும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு வரல்லையாம் ( வந்தால் அவங்க விடமாட்டேன்றாங்க வராததால இவங்க விடமாட்டேன்றாங்க )
  இந்த படத்துக்காக நாங்க எவளவு கஷ்டப்படிருக்கோம் தெரியுமா ??? உலக சினிமா வரலாறில ஒரு நடிகனுக்கு கட்அவுட் வச்சு பாத்திருப்பிங்க ஒரு இயக்குனருக்கு கட் அவுட் வச்சு பாத்திருக்கிங்களா ??? நாங்க வச்சோம்.. ஒரு சந்து பொந்து விடாம போஸ்டர் ஒட்டி நோட்டீஸ் அடிச்சு எல்லாம் எங்க சொந்த செலவில இதெல்லாம் ஏன் எண்டால் இந்த படம் நல்லா ஓடணும் என்றதுக்காக…. இது எங்க பிரச்சனை இப்போ உங்க பிரச்சனைக்கு வருவோம்…

  விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவைகள்தான் ஆனால் அந்த விமர்சனங்கள் எதையும் பாதிக்கக் கூடாது. ராவணன்ல மணி சொல்ல வந்த கருத்து புரியவேண்டியவங்களுக்கு நிச்சயம் புரியும். எல்லாருக்கும் சரியா புரியுற மாதிரி படம் எடுத்திருந்தால் ஒண்டு எல்லா தியேட்டரும் எரிஞ்சிருக்கும் இல்லை படத்துக்கு தடை விதிச்சிருப்பாங்க. காரணம் இன்றைய சினிமாவை நிர்ணயிக்கிறது அரசியல் மட்டும்தான். ராவணன்ல மாவோயிஸ்ட் பிரச்சனை வீரப்பன் பிரச்சனை இது எல்லாத்தையும் தாண்டி எங்க தமிழ் ஈழபிரச்ச்னைகூட நிறைய இருக்கு (ராவணன் சீதைய தூக்கிட்டு வந்து வாச்சிருத இடமே இலங்கைதான்) புரியாட்டி படத்தை மறுபடியும் ஒரு முறை திருப்பி பாருங்க…
  “அனுமார் வேடம் என்றால் மரம் விட்டு மரம் தாவித்தான் ஆக வேண்டுமோ.. கார்த்திக்கு அதனைக் கொடுத்து தாவ விட்டிருக்கிறார்கள்.. ஆனால் என்னவோ படத்தில் எனக்கு எரிச்சலைக் கொடுத்த கேரக்டர் இது ஒன்றுதான் “ sir மரம்விட்டு மரம் தாவுரதாலதான் அது அனுமார் கேரக்டர் எண்டு தெரியுது… உங்க மனசாட்சிய தொட்டு சொலுங்க ஒருவேளை சாதாரணமா அந்த கேரக்டரை காட்டி இருந்தால் உங்களுக்கு அது அனுமார் எண்டு புரிஞ்சிருக்குமா ??? அதை பார்த்திட்டு வந்து “படத்தில் எனக்கு யாரென்று புரியாத கேரக்டர் இது ஒன்றுதான்“ எண்டு விமர்சனம் எழுதி இருப்பிங்க… உங்களுக்கு தரமான எல்லாருக்கும் புரியுரமாதிரி நல்ல படம்தான் வேணும் எண்டால் / குணா / மகாநதி / பாரதி / பெரியார் / ஒன்பது ருபாய் நோட்டு / எவனோ ஒருவன் / காஞ்சிவரம் / மாயக்கண்ணாடி / நான்கடவுள் / இந்த படத்தை எல்லாம் நூறு நாட்களுக்கு மேல ஒடவச்சிருக்கலாமே… விமர்சனம் மட்டும்தான் எழுதுவிங்களா ??? நல்ல தரமான படம் எண்டு பாராட்டி விருது குடுப்பிங்க படம் எடுத்தவன் விருதவாங்கி வைக்ககூட இடம் இல்லாம நடுத்தெருவில நிப்பான் அடுத்தபடம் வரும் நீங்க “தரமான படம் வேண்டும்“ எண்டு விமர்சனம் எழுதுவிங்க…

  என்னைப்பொறுத்த வரைக்கும் ஒரு படத்தோட நிறைகளை நிறைவா சொல்லுங்க ஒருபடத்தில 100% தில at least 1% மாவது நல்ல விஷயங்கள் இருக்காதா ??? குறைகளை விமர்சனம் பண்றதால அதை படிக்கிறவங்க படத்தைப்ப் பார்க்காமலே படத்தைப்பற்றி ஒரு தவறான முடிவுக்கு வந்திருவாங்க… அதுவே அந்த படத்தோட தோல்விக்கு காரணமா அமைஞ்சிரும்… நிறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுங்க அப்போதான் கடைசி அந்த படத்தில அப்பிடி என்னதான் இருக்கு எண்டு பாகிறதுக்காகவாவது தியேட்டருக்கு போவாங்க….
  விஜய் நடிச்ச சச்சின் படத்துக்கு ஒரு பத்திரிகைல வந்த விமர்சனம் “ 30 நாட்களில் ஒரு பெண்ணை correct பண்ணுவது எப்படி பதில் சொல்லி இருக்கும் படம் சச்சின்” இதை படிச்சிட்டு அந்த படத்தை நான் பார்க்கல்லை 2 வருஷத்துக்கு பிறகு எதேட்சையா tvல போடும்போது தான் பார்த்தேன்… அப்போதான் நினைச்சேன் எவளவு பெரிய தப்பு பண்ணி இருக்கோம் என்று (ஒரு ரசிகனா என்னைஅந்த படம் திருப்தி படுத்திச்சு ) விஜய் நடிச்சதிலையே எனக்கு ரொம்ப பிடிச்ச படம் சச்சின்….

  இது எல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்து. யாரையும் புண்படுத்த எழுத்தல்ல….தயவுசெய்து விமர்சனம் எழுத முதல் அதோட விளைவுகளையும் கொஞ்சம் யோசியுங்க….. காரணம் அதில பலபேருடைய உழைப்பு , வாழ்க்கை , முதலீடு , முயற்சி , நேரம் , எல்லாம் தங்கி இருக்கு…

 59. siva

  ஹலோ வினோ , எந்த ஒரு படத்தையும் விமர்சனம் பண்றதுக்கு ஒரு வரைமுறை இருக்கு. உங்க விமர்சனத்தில ஆரம்பம் முதல் முடிவு வரை ராவணன் படத்த ஏளனம் பண்றதுக்காகவே எழுதி இருக்கீங்க. படத்தில எவளோ நல்ல points இருக்கு . This is not the right way of commenting the movie, especially veteran director “Mani ratnam” . Its our gift that we have got him in tamil cinema.

 60. nan

  எந்த படத்திலும் மணி ரத்தினம்
  தமிழ் சொன்னதில்லை
  இந்த படத்திற்கு ஏன் சொல்ல வேண்டும்
  மணிரத்தினத்தின் எந்த படத்திலும் நாம் (தமிழன்)
  இருக்க மாட்டோம் ,
  இது மணியின் சூத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *