BREAKING NEWS
Search

ராவணன்… கொழும்பு விழா… மணிரத்னத்தின் வில்லங்க பதில்!

‘ஆமாங்க.. தமிழ் உணர்வாளர்கள் போராட்டத்தை மதித்து இந்த விழாவை நான் புறக்கணிக்கிறேன்’ என்று சொன்னால், கிரீடம் சாய்ந்துவிடுமா என்ன!

பொதுவாகவே ‘மேல்தட்டு கம்யூனிஸ்டு’களும் அறிவு ஜீவிகளும் ‘சாதாரண’ பத்திரிகையாளர்களைக் கண்டாலே எரிந்து விழுவார்கள்… அல்லது ஏடாகூடமாகத்தான் பேசுவார்கள். இல்லாவிட்டால் எல்லாம் தெரிந்தவர்களாக ‘ஜர்னலிஸம்னா…’ என வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் (நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற விதிவிலக்குகள் இதில் சேரமாட்டார்கள்).

ஏதாவது ஆங்கிலப் பத்திரிகை அல்லது அவர்களைத் தாங்கும் வார இதழ்கள்தான் இவர்கள் சாய்ஸ்.

மணிரத்னமும் அவர் மனைவி சுஹாசினியும் கிட்டத்தட்ட இந்த ரகம்தான். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது… பிரச்சினையின் மையம் என்னவென்று தெரிந்தாலும், ‘ஸோ வாட்?’ என்று நாசூக்காய் சதாய்ப்பது இவர்கள் பாணி.

இவர்களின் இந்த குணத்தைப் பிரதிபலிக்கும் சம்பவம் ஒன்று இன்றும் (திங்களன்றும்) நடந்தது, சென்னை கம்யூனிஸ்ட் அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில்.

நாம் என்ற ஒரு மகளிர் அமைப்பில் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர் மணிரத்னமும் சுஹாசினியும்.

அந்த அமைப்பின் சார்பில், தனித்து வாழும் சில பெண்களின் ஆளுமைத் திறன் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் மணிரத்னமும், சுஹாசினியும் கலந்து கொண்டனர். ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்களை அழைத்திருந்தார் மணிரத்னத்தின் பிஆர்ஓ. மதிய வேளை… கொளுத்தும் வெயிலில் கடும் போக்குவரத்து நெரிசலிலும் குவிந்துவிட்டனர், மணிரத்னம் வருகிறார் என்பதால். அனைவரது நோக்கமும் ராவணன்-கொழும்பு விழா குறித்து கேட்பதாகவே இருந்தது. இந்த சூழலில் அது இயல்பானதும் கூட.

நிகழ்ச்சி முடிந்ததும் மணிரத்னத்தை நிறைய நிருபர்கள் மொய்த்துக் கொண்டு ஆர்வத்தோடு பேட்டி கேட்டனர். அவர்கள் ஆசையோடு ‘மணி சார்… மணி சார்’ என கெஞ்ச, அவரோ, நேரம் காலம் தெரியாம என்ன பேட்டி வேண்டியிருக்கிறது என்று கோப முகம் காட்டினார்.

அப்படியும் நிருபர்கள் விடுவதாக இல்லை. நிகழ்ச்சி நடந்த ஹாலுக்கு வெளியே வந்தவரை கிட்டத்தட்ட 15 தொலைக்காட்சி கேமராக்களும் தொடர்ந்தன. தேனாம்பேட்டை வி்வி கோயில் தெரு வரை ஓடி வந்தனர் நிருபர்கள். அங்குதான் மணிரத்னம் காரும் நிறுத்தப்பட்டிருந்தது. காரில் ஏறும் முன், ஒரு நிமிடம் நின்று நிமிர்ந்து பார்த்தார்.

கொழும்பு பட விழாவுக்கு ராவணன் படம் போகுமா, போகாதா? பளிச்சென்று சொல்லிவிடுங்கள் என்றார் ஒரு செய்தியாளர்.

உடனே அவர், “இன்னும் படமே தயாராகல. அதுக்குள்ள இந்தக் கேள்வியா.. இப்படிக் கேட்க வேண்டிய அவசியமில்லை. படம் தயாரகலை… அதனால போகல. அவ்வளவுதான்”, என்றார் டென்ஷனாக.

உங்க பட ஹீரோயின் ஐஸ்வர்யா ராய் போறதா செய்தி வந்திருக்கே? என்றார் இன்னொரு நிருபர்.

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்… போறதும் போகாததும் அவங்க இஷ்டம். நான் அட்வைஸ் பண்ண முடியாதே” என்றார்.

‘அவங்க கொழும்பு போனா, உங்க படத்தை ரிலீஸ் பண்ண விட மாட்டோம்’ என்று இங்கே சில அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனவே? என்றார் இன்னொரு நிருபர் விடாமல்.

ஒரு நிமிடம் அவரைப் பார்த்தவர், சட்டென்று காருக்குள் புகுந்து கண்ணாடியை ஏற்றிக் கொண்டார்.

அதாவது, தமிழ் அமைப்புகள் சொன்னதால் போகலைன்னு நினைக்க வேண்டாம். என் படம் முடியல. அதனால போகலை.. அவ்வளவுதான் என்கிறார். ஆடியோ ரிலீஸ் முடிந்து, படத்தின் பிரமோஷன் பணிகள் துவங்கிவிட்டன. 14-ம் தேதி பிரஸ் மீட் வேறு வைத்துள்ளார். ஜுன் மாதம் இரண்டாவது வாரம், அதாவது இன்னும் 20-25 நாட்களில், இரண்டு வருடங்களுக்கும் மேலாக எடுக்கப்பட்ட அந்தப் படம் ரிலீஸ் என்பதை நினைவில் கொள்க!

சரி, அவர் பாணிக்கே வருவோம்… ஒருவேளை ராவணன் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்தால், இலங்கை விழாவுக்குப் போய் ராஜபக்சேயிடம் பரிசு பெற்றிருப்பாரோ?

ஒரு படைப்பாளிக்கு எப்போது கூடுதல் மதிப்பும் மரியாதையும் வருகிறது தெரியுமா… அவரது படைப்புக்கும் அப்பால் சக மனிதனின் உணர்வைப் புரிந்து கொள்ளும்போதுதான். அதிலும், தன் இனத்துக்காக ஒரு வார்த்தை பரிந்து பேசிவிட்டால், அந்த படைப்பாளியைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுவார்கள்.

‘ஆமாங்க.. தமிழ் உணர்வாளர்கள் போராட்டத்தை மதித்து இந்த விழாவை நான் புறக்கணிக்கிறேன்’ என்று சொன்னால், கிரீடம் சாய்ந்துவிடுமா என்ன? ராவணன் படம் எந்த அளவுக்கு முடிந்துள்ளது, அங்கே என்னென்ன நடந்தது என்பது கூட தெரியாத அளவுக்கா தமிழ்ப் பத்திரிகையாளர்கள் உள்ளனர்?

-வினோ

‘ஆமாங்க.. தமிழ் உணர்வாளர்கள் போராட்டத்தை மதித்து இந்த விழாவை நான் புறக்கணிக்கிறேன்’ என்று சொன்னால், கிரீடம் சாய்ந்துவிடுமா என்ன?36 thoughts on “ராவணன்… கொழும்பு விழா… மணிரத்னத்தின் வில்லங்க பதில்!

 1. Prem

  There is nothing wrong in what Manirathnam said. People must separate arts from politics.

 2. Sivaji Rao Veriyan

  ஒழுங்காக படித்துப் பார்த்தால், அவர் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை.

 3. சே குவேரா

  சினிமாக்காரர்களை விட சினிமா ரசிகர்கள் படுகேவலமானவர்கள். இவர்கள் எந்த அளவு பிற்போக்குத்தனமானவர்கள் என்பதற்கு இந்த செய்திக்கான கருத்துக்களே சான்று. இந்த வட்டத்துக்கு வெளியே வாங்க எடிட்டர்.

  நீங்கள் இன உணர்வில் எழுதுகிறீர்கள். அவர்களும் தங்கள் ‘இன’ உணர்வைக் காட்டுகிறார்கள். நீங்கள் கொஞ்சம் முயற்சித்தால் நம் மக்களுக்கான ஒரு அருமையான செய்தித் தளமாக இது திகழும். என்னமோ தோன்றியதைச் சொன்னேன்.

  -சே குவேரா

 4. சே குவேரா

  //There is nothing wrong in what Manirathnam said. People must separate arts from politics.//

  அட உலக்கைக் கொழுந்தே-
  இப்போ நடக்கிறதே கலையை மையப்படுத்திய அரசியல் எதிர்ப்புதான். அதுகூட புரியாம கருத்து சொல்ல வந்துட்டியா. அங்கு நடந்த இனப்படுகொலைக்கு இப்பவாவது எதிர்ப்பு காட்டுங்கப்பா. கலை வேற, கொலை வேறன்னு கடுப்படிக்காதீங்க.

  அடச் சே-

  கருத்து எழுதக் கூட பிடிக்கலப்பா. இப்படியெல்லாம் கூடவா ஜனங்க இருக்கீங்க?

  சே குவேரா

 5. சே குவேரா

  //Raj Devar says:
  May 11, 2010 at 1:13 am
  Right said manirathnam sir…..//

  -ஏங்க இவனுங்க கமெண்டையெல்லாம் அனுமதிச்சு கடுப்பேத்தறீங்க. உங்களுக்கு கமெண்ட்தான் முக்கிம்னா சொல்லுங்க, ஓராயிரம் கமெண்ட் போடறேன். இந்த மாதிரி வெறிபிடிச்சவனுங்க கருத்தை அனுமதிக்காதீங்க. ஏதோ ஒண்ணு ரெண்டு சைட்லதான் நம்ம மக்களோட செய்திய பார்க்க முடியுது.

  -சே குவேரா

 6. Malar

  மணிரத்னமா இப்படிப் பேசினார்? என்ன கொடுமை இது? ஏன், தமிழன படுகொலையைக் கண்டிச்சிதான் என் படத்தை அனுப்பாம நிறுத்தறேன்னு சொன்னா எஎன்ன?

 7. கிருத்திகன்

  எல்லாம் சரிதான்… ஐஸ்வர்யா ராய் எங்கு போகலாம், எங்கு போகக்கூடாது என்று முடிவெடுக்க மணிரத்னம் யார்??? எதற்கு அடிமுட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறீர்கள் பத்திரிகையாளர்களே?

 8. metha

  This is the best example to understande “Not only Ilayaraja is the reason—————- , i hope everybody knows the answer.

 9. sakthivel

  தமிழனை ஏமாற்றுவதில் தமிழனுக்கே முதலிடம்……
  ராவணன் படத்தை புறக்கணிப்பதில் தவறேதுமில்லை.

 10. ராம்குமார் சிங்காரம்

  //எல்லாம் சரிதான்… ஐஸ்வர்யா ராய் எங்கு போகலாம், எங்கு போகக்கூடாது என்று முடிவெடுக்க மணிரத்னம் யார்??? எதற்கு அடிமுட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறீர்கள் பத்திரிகையாளர்களே?//

  -அட முட்டாளே, அடி முட்டாளே
  நியூஸை முதல்ல ஒழுங்கா படி.
  ஐஸ்வர்யா ராய் ராவணன் பட நாயகி. அவர் கொழும்பு போனால் இங்கே ராவணன் படம் பாய்காட் பண்ணுவாங்கன்னு அறிவிச்சிருக்காங்க. அதனாலதான் அந்த கேள்வியைக் கேட்டிருக்காங்க. மண்டைக்குள்ள இருக்கிறதை கழட்டி வச்சிட்டு கமெண்ட் போட வந்துட்டியா?

 11. pream

  dei irukardhe oru nalla director thaan.. avanaiyum ipdi adiche thorathiraadheenga.. aprom avanum hindi la settle aaiduvan…

 12. damildumil

  //sakthivel says:
  May 11, 2010 at 9:55 am
  தமிழனை ஏமாற்றுவதில் தமிழனுக்கே முதலிடம்……
  ராவணன் படத்தை புறக்கணிப்பதில் தவறேதுமில்லை
  //
  அப்போ கண்டிப்பா படம் சூப்பர் ஹிட்.

  //ராம்குமார் சிங்காரம் says:
  -அட முட்டாளே, அடி முட்டாளே
  நியூஸை முதல்ல ஒழுங்கா படி.
  ஐஸ்வர்யா ராய் ராவணன் பட நாயகி. அவர் கொழும்பு போனால் இங்கே ராவணன் படம் பாய்காட் பண்ணுவாங்கன்னு அறிவிச்சிருக்காங்க. அதனாலதான் அந்த கேள்வியைக் கேட்டிருக்காங்க. மண்டைக்குள்ள இருக்கிறதை கழட்டி வச்சிட்டு கமெண்ட் போட வந்துட்டியா?
  //

  மணிரத்தனம் படத்துல ஐஸ்வர்யா நடிச்சா அது மணிரத்தினத்தினம் சொல்றதை தான் கேக்குமா? நீங்க போவிங்களா உங்க பொண்டாட்டியை அனுப்பிவீங்களான்னு கேட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.

  பிரபாகரன் உயிரோட இருக்காறான்னு வைகோவை கேட்ட மாதிரி இருக்கு உங்க கேள்வி.

  பத்திரிக்கையாளர்களும் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணனும் பிரபலங்களிடம் கேள்வி கேட்பதற்க்கு முன்பு. சும்மா எதோ கேக்கனுன்றதற்காக கேட்டா இப்படி தான் பதில் வரும்.

 13. Manoharan

  மணிரத்னம் ஓர் அற்ப்புதமான கலைஞர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு தமிழுணர்வு எந்தளவுக்கு இருக்கிறது என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு. நாயகன்,மௌனராகம்,அக்னி நட்சத்திரம்,இதயத்தை திருடாதே,அஞ்சலி,தளபதி போன்ற அவரின் அனைத்து படங்களுக்கும் பெரும் வரவேற்ப்பு கொடுத்தனர் தமிழ் ரசிகர்கள். தமிழின் நெ.1 டைரக்டர் என்கிற அந்தஸ்த்தும் அவருக்கே கொடுத்தனர். பின்பு ரோஜா வந்தது. எப்போதும் போல அதையும் சூப்பர் ஹிட்டாக்கினர் நம் ரசிகர்கள்.( இத்தனைக்கும் வேட்டைக்காரன் டைப் உதார் விளம்பரங்கள் அப்போது கிடையாது ).ரோஜாவை இந்தியில் டப் செய்து வெளியிட்டார் மணி, அது மிகப் பெரிய ஹிட். அதனால் அடுத்து நேரடி இந்தி படமாக பம்பாயை எடுத்தார். இருந்தாலும் எதற்க்கு ரிஸ்க் என்று தமிழிலும் எடுத்தார். ஏனென்றால் எப்படியும் தமிழில் படம் சூப்பர் ஹிட்டாகும் என்பது அவருக்கு தெரியும். எதிர்பார்த்தது போலவே தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் படம் ஹிட். உடனே இந்தியில் மட்டும் தில் ஸே எடுத்தார். படம் அவுட். அதன் தமிழ் டப்பிங்கும் அவுட்.பின்னர் எதற்க்கு வம்பு என்று தமிழில் மட்டும் அலைபாயுதே எடுத்தார். படம் சூப்பர்ஹிட். அதன் பின்னர் வந்த கன்னத்தில் முத்தமிட்டால் சரியாக போகவில்லை. அதாவது ஏறக்குறைய 15வருடங்களில் தமிழில் அவரின் முதல் தோல்விப் படம்.(இருவரும் தோல்விதான். அது காமர்ஷியல் படமல்ல.ஆனால் அது விமர்சகர்களால் பாராட்டுப்பெற்ற படம்) ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அவர் தமிழில் எடுத்த ஒரே படம் ஆயுத எழுத்து. அது கூட இந்தியிலும் சேர்த்தே எடுக்கப் பட்டது. ஆக கடந்த 9 வருடங்களாக தமிழுக்கென்று மணிரத்னம் எந்தப் படமும் எடுக்கவில்லை. இப்போது கூட ராவணன் இந்தியிலும் சேர்த்தே எடுக்கப் படுகிறது. ஏன் இந்திக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? மணிரத்னம் என்கிற கலைஞனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் அவருக்கு இரண்டாம் பட்சம் ஆகி விட்டார்களா ? இதற்க்கும் மணியிடமிருந்து பதில் வராது. ஆனால் இன்றும் அவரின் ராவணனுக்காக தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழ் மக்களுக்கு பரிந்து பேச மணிரத்னத்துக்கு என்ன தயக்கம் ?

 14. simple fan of superstar!

  அருமை அருமை அருமை மனோகரன். வினோவின் கட்டுரை, அதற்கு நீங்கள் தரும் பதில்கள் இரண்டும் எப்போதுமே சிறப்பாக உள்ளன. நீங்கள் கட்டுரையாகவும் எழுதுங்களேன். வினோவுக்கும் இதைக் கோரிக்கையாக வைக்கிறேன்.

  ________________
  கோரிக்கை? 🙂
  தாராளமாய் எழுதுங்கள் நண்பர்களே…
  இது உங்கள் தளம். நன்றி
  -வினோ

 15. தேவகுமாரன்

  வாழ்த்துக்கள் எடிட்டர். தமிழன் காசுகுடுத்து மணிரத்திணம் படத்தை தியேட்டர்ல போய் பார்க்கணும். ஆனா கணவுலயும் கூட தமிழன் சுயமரியாதயோட வாழ்ந்துட கூடாது. நாய் வித்த காசு கொழைக்கவா போகுதுன்னு நிணைக்கிற ரகம் இந்த மணிரத்தினம் வகையரா! இவர தமிழ்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துல சேர்க்கவே எஸ்.ஏ.சி அவ்ளோ போராடியிருக்காரு. இத்த்ன வருஷம் உருப்பினராவே இல்ல இந்த ஆளு!

 16. Manoharan

  @ simple fan of Superstar & Vino. Thanx a lot. I am not that good to write an article. But thanx a ton for your words.

 17. Raj Devar

  /Raj Devar says:
  May 11, 2010 at 1:13 am
  Right said manirathnam sir…..//

  -ஏங்க இவனுங்க கமெண்டையெல்லாம் அனுமதிச்சு கடுப்பேத்தறீங்க. உங்களுக்கு கமெண்ட்தான் முக்கிம்னா சொல்லுங்க, ஓராயிரம் கமெண்ட் போடறேன். இந்த மாதிரி வெறிபிடிச்சவனுங்க கருத்தை அனுமதிக்காதீங்க. ஏதோ ஒண்ணு ரெண்டு சைட்லதான் நம்ம மக்களோட செய்திய பார்க்க முடியுது.

  -சே குவேரா

  ஓராயிரம் கமெண்ட் போடு பாக்கலாம்…………எதுக்கு வெட்டி பேச்சு பேசுற சே குவேரா……..ஆமா நீ எதவசுடா வெறிபிடிச்சவன்னு. சொல்லற …..i can guess about you from your comment ….. you are a cyco…..

 18. Raj Devar

  ஓராயிரம் கமெண்ட் போடு பாக்கலாம்…………எதுக்கு வெட்டி பேச்சு பேசுற சே குவேரா…….

 19. vasu

  ஹிந்தியில் படம் எடுத்தால் தமிழில் எடுக்கும் படத்தை விட அதிக விளம்பரம் வியாபாரம் மற்றும் அதிக மக்களை பொய் சேருகிறது அதனால் தான் இந்திரன் படத்தை கூட ஹிந்தியில் எடுகிறார்கள்.ஹிந்தியில் படம் எடுத்ததற்காக மணி ரத்னத்திற்கு தமிழ் பற்று இல்லை என்றும் தமிழ் திரைப்பட ரசிகர்களை உதாசீனப்படுதுகிறார் என்று கூறுவது முட்டாள் தனமானது.மணி ரத்னம், ஷங்கர் போன்றவர்கள் தமிழ் நாட்டை தாண்டி இந்திய அளவில் பேசப்படும் தமிழ் இயக்குனர்கள் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
  பொதுவாக பத்திரிகை பெட்டி கொடுங்கும்போடு திரைப்பட துறையினர் கொஞ்சம் உஷாராக இருப்பார்கள் ஏனென்றால் தான் ஒன்று கூறப்போக பத்திரிகையில் அதை வேறு விதமாக அச்சிடுவார்கள் இதனால் பிரச்னைகள் தான் வரும்.தலைவர் பத்திரிகைகளுக்கு பெட்டி கொடுப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருவதற்கான காரணமும் இதுவே.
  எனவே மணி ரத்னம் பட்டும் படாமல் பதில் கூறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

 20. johnradus

  ராவணன் படத்திற்கு ராவணனிடம் (ராஜபக்ஷே) பரிசு வாங்குவது தானே சரி.. அதனால் படத்தை அங்கு அனுப்ப யோசித்திருப்பார் 🙂

 21. Manoharan

  @வாசு.

  மணிரத்னம் இந்தியில் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு தமிழ் ரசிகன் என்கிற முறையில் அவர் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதே போல் ஒரு தமிழனாக இலங்கை விழாவுக்கு என் படத்தை அனுப்ப மனம் ஒப்பவில்லை என்று மணி சொல்லியிருந்தால் என்ன பிரச்சனை வரப்போகிறது ? அவர் மரியாதை இன்னும் கூடியிருக்கும்.

 22. Raghavan

  எழுதப்படும் கமெண்ட்கள் “என்வழி” யின் தரத்தை தாழ்த்துகின்றன.நிர்வாகிகள் கவனிக்கவும்.

 23. காத்தவராயன்

  //தாராளமாய் எழுதுங்கள் நண்பர்களே…
  இது உங்கள் தளம். நன்றி
  -வினோ//

  திரு. வினோ,

  மணிரத்தினத்தின் சினிமா குறித்து ஒரு கட்டுரை எழுதி உங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன் (இப்போ அல்ல இந்த சர்ச்சைகள் எல்லாம் முடியட்டும், ஆனால் ராவணன் ரிலீஸுக்கு முன்னால்). அதை எப்படி உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்புவது? அது தெரியாமல்த்தான் கமெண்ட்ஸ் பகுதியில் வந்து இதை கேட்கிறேன்..

  _______________
  பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் நண்பரே.

  envazhi@gmail.com
  info@envazhi.com

  நன்றி

  -வினோ

 24. raja

  நாம் அவரின் இராவணன் படத்தினை புறக்கணிக்க வேண்டும் அப்போது தான் இவனை போன்றவர்களுக்கு புத்தி வரும்.

 25. vasu

  @மனோகரன்

  மணி ரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து ஹிந்தியில் யுவ என்று வெளிவந்தது நான் இரண்டு படங்களையும் பார்த்தேன் இரண்டுமே பிடிதிறிந்தது.ஹிந்தியில் எடுத்தற்காக அவர் எந்த விதத்திலும் ஆயுத எழுத்தின் தரத்தை தாழ்த்தவோ அல்லது முக்யத்துவம் தராமலோ இருந்ததில்லை என்பது நன்கு தெரிந்தது.ராவணன் படத்திலும் நாம் அதையே எதிர்பார்க்கலாம்.
  முந்தய பதிவில் சொல்லியது போல் தேவையில்லாத விளம்பரம் வேண்டாம் என்பதற்காகவும் பத்திரிக்கையாளர்கள் தான் கூற விரும்பிய கருத்தை வேறு விதமாக சித்தரித்தி விடலாம் என்பதற்காகவும் பட்டும் படாமல் பேசி இருக்கிறார்.நமக்கு வேண்டியது என்ன?.,இராவணன் படம் இலங்கையில் திரை இட கூடாது..அது நடந்து விட்டது..

 26. r.v.saravanan

  ஒரு படைப்பாளிக்கு எப்போது கூடுதல் மதிப்பும் மரியாதையும் வருகிறது தெரியுமா… அவரது படைப்புக்கும் அப்பால் சக மனிதனின் உணர்வைப் புரிந்து கொள்ளும்போதுதான்

  அவரின் ராவணனுக்காக தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழ் மக்களுக்கு பரிந்து பேச மணிரத்னத்துக்கு என்ன தயக்கம் ?

  குட் வினோ ,மனோகரன்

 27. Vazeer Abu Bilal Kuwait

  Manoharan says:
  மணிரத்னம் ஓர் அற்ப்புதமான கலைஞர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு தமிழுணர்வு எந்தளவுக்கு இருக்கிறது என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு. நாயகன்,மௌனராகம்,அக்னி நட்சத்திரம்,இதயத்தை திருடாதே,அஞ்சலி,தளபதி போன்ற அவரின் அனைத்து படங்களுக்கும் பெரும் வரவேற்ப்பு கொடுத்தனர் தமிழ் ரசிகர்கள். தமிழின் நெ.1 டைரக்டர் என்கிற அந்தஸ்த்தும் அவருக்கே கொடுத்தனர். பின்பு ரோஜா வந்தது. எப்போதும் போல அதையும் சூப்பர் ஹிட்டாக்கினர் நம் ரசிகர்கள்.( இத்தனைக்கும் வேட்டைக்காரன் டைப் உதார் விளம்பரங்கள் அப்போது கிடையாது ).ரோஜாவை இந்தியில் டப் செய்து வெளியிட்டார் மணி, அது மிகப் பெரிய ஹிட். அதனால் அடுத்து நேரடி இந்தி படமாக பம்பாயை எடுத்தார். இருந்தாலும் எதற்க்கு ரிஸ்க் என்று தமிழிலும் எடுத்தார். ஏனென்றால் எப்படியும் தமிழில் படம் சூப்பர் ஹிட்டாகும் என்பது அவருக்கு தெரியும். எதிர்பார்த்தது போலவே தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் படம் ஹிட். உடனே இந்தியில் மட்டும் தில் ஸே எடுத்தார். படம் அவுட். அதன் தமிழ் டப்பிங்கும் அவுட்.பின்னர் எதற்க்கு வம்பு என்று தமிழில் மட்டும் அலைபாயுதே எடுத்தார். படம் சூப்பர்ஹிட். அதன் பின்னர் வந்த கன்னத்தில் முத்தமிட்டால் சரியாக போகவில்லை. அதாவது ஏறக்குறைய 15வருடங்களில் தமிழில் அவரின் முதல் தோல்விப் படம்.(இருவரும் தோல்விதான். அது காமர்ஷியல் படமல்ல.ஆனால் அது விமர்சகர்களால் பாராட்டுப்பெற்ற படம்) ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அவர் தமிழில் எடுத்த ஒரே படம் ஆயுத எழுத்து. அது கூட இந்தியிலும் சேர்த்தே எடுக்கப் பட்டது. ஆக கடந்த 9 வருடங்களாக தமிழுக்கென்று மணிரத்னம் எந்தப் படமும் எடுக்கவில்லை. இப்போது கூட ராவணன் இந்தியிலும் சேர்த்தே எடுக்கப் படுகிறது. ஏன் இந்திக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? மணிரத்னம் என்கிற கலைஞனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் அவருக்கு இரண்டாம் பட்சம் ஆகி விட்டார்களா ? இதற்க்கும் மணியிடமிருந்து பதில் வராது. ஆனால் இன்றும் அவரின் ராவணனுக்காக தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழ் மக்களுக்கு பரிந்து பேச மணிரத்னத்துக்கு என்ன தயக்கம் ?

  வாவ்…. கிரேட் மனோகர். கிப் இட் அப் …….. வெறி நைஸ் ஆர்டிகல்

 28. Anand

  மீண்டும் நாம் தவறு செய்கிறோம் தோழர்களே …… மணிரத்தனம் ஒரு அற்புதமான படைப்பாளி …. இங்கு எத்தனையோ அரசியல்வாதிகள் ( தென்னாட்டு பிரபாகரன் என்று தன்னை சொல்லிகொள்ளும் ) ஸ்ரீ லங்கா செல்கிறார்கள், ராஜபக்சேயை சந்திகிறார்கள் , தமிழன் ரத்தம் சிந்தும் நேரத்திலும் , அந்த …. வைத்த உணவை உண்டு நாடு திரும்பினார்கள்.. …அவர்களை நாம் என்ன செய்தோம் …… வேடிக்கை பார்ப்பதை தவிர …

  vழித்து கொள்.. தமிழா !!!!!

  எங்கு விளம்பரம் கிடைக்கமோ … அங்கு தான் இந்த போராட்டங்கள் வெடிக்கிறது !!!

 29. lakshmi

  மணிரத்னம் ஒரு சிறந்த படைப்பாளியாக இருக்கலாம்…. சிறந்த கலைஞ்சராகவும் இருக்கலாம்……

  ஆனால் …………..

  சற்று மனித தன்மையுடன் இருக்க வேண்டுமே!!!! எபொழுது ஒருவன் பிரபலம் ஆகிறானோ அவனுடைய செயல்களை உலகமே பார்கிறதே……….

 30. Saleem

  Pls. forgive Manirathnam…. We respect his talent. He is a short termper man but really talented director. These reporters ask only irritating questions but he can NOT answer for all the question. Because all the human has a different temperment.

 31. Maria

  ஈழத்து மக்கள் தமிழ் நாட்டுத்தொலைக்காட்சிகளை, திறைபடங்களை, செய்திகளை அறவே புறக்கணிக்க வேண்டும்.

 32. Sivakumar

  Hi editor,

  Thanks for initiating to place this news into this web. But before criticising this kind of director (beyond his talent we need to see the history ROJA, BOMBAY, the one & only KANNATHIL MUTHAMMITTAL) where he has shown INDIAN & TAMIZHANIN unarvugal in a best way. We should recall all those things before asking these idiotic questions.

  Thanks for understanding.

 33. Ravanan

  வினோ,

  நீங்கள் எதிர் பார்த்த கருத்துக்கள் கிடைத்துவிட்டதா இந்த கட்டுரைக்கு?

 34. Viththakan

  மனோகரன்….

  உங்கள் பின்னுட்டத்தில் பல பிழைகள். ரோஜாவைத் தொடர்ந்து மணி ரத்னம் தமிழில் திருடா திருடா என்ற படம் எடுத்தார். அதன் பின் பம்பாய் படத்தையும் தமிழில்தான் எடுத்தார். அது இந்தியில் டப்பிங் மட்டுமே செய்யப் பட்டது.அதன் பின் இருவர் என்ற படத்தையும் தமிழில் எடுத்தார். அதற்கும் பிறகுதான் தில் சே இந்தியில் உருவானது. எனவே ரோஜாவிற்குப் பிறகு அவர் இந்திக்குப் பிரதானம் தருகிறார் என்பது பொய். அது மட்டுமல்ல திருடா திருடா, இருவர் இரண்டும் தோல்விப் படங்களே. கன்னத்தில் முத்தமிட்டாலுக்கு முன்பு 15 வருடங்கள் அவர் தோற்றதில்லை என்பது தவறு. மேலும் இடையில் அலை பாயுதே என்ற அக்மார்க் தமிழ்ப் படமும் எடுத்து இருக்கிறார் மணி. மொத்தத்தில் உண்மையாக எதுவுமே எழுதாமல் அவரை தமிழ் விரோதியாக சித்தரிக்க முயற்சித்து இருக்கிறீர்கள். உங்கள் மன நோய்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *