BREAKING NEWS
Search

ராவணனுக்கு பெரும் சிக்கல்!

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!

ணிரத்னத்தின் ராவணன் படம் வெளியாக இன்னும் 4 தினங்களே உள்ளன. அதற்குள் சிறப்புக் காட்சிகள் பார்த்தவர்கள் படம் குறித்து ஓஹோவென பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். இதுவும் ஒருவித கார்ப்பரேட் ஸ்டைல் விளம்பரம்தான். அதில் மணிரத்னமும் அவர் மனைவி சுஹாஸினியும் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ள நிலையில், படத்துக்கு பெரும் சிக்கல் சூழ்ந்து நிற்கிறது… அண்டை மாநிலங்களின் உருவில்.

முதலில் கேரளா…

பிற மொழிப் படங்களை இரு வாரங்களுக்குப் பிறகே கேரளாவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக பெரும் சவாலைச் சந்தித்துவரும் மலையாளத் திரைப்படங்களை காக்க இந்த ஏற்பாடு.

இந்த கட்டுப்பாட்டை அலட்சியம் செய்துவிட்டு, பிக் பிக்சர்ஸ் ‘கைட்ஸ்’ படத்தை கேரளா முழுவதும் ஏராளமான தியேட்டர்களில் வெளியிட்டது. இதனால் கொதித்தெழுந்த கேரள திரையுலகினர் ரிலையன்ஸின் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரெட் கார்டு விதித்துவிட்டனர். இந்த பிக் பிக்சர்ஸ்தான் கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், ராவணன் படத்துக்கு விநியோகஸ்தர்கள்.

எனவே, உலகெங்கும் ராவணன் அல்லது ராவண் அல்லது வில்லன் வெளியாகும்போது, கேரளாவில் மட்டும் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் ரிலீஸாக முடியும். அதுவும், ரெட் கார்டு விலக்கிக் கொள்ளப்பட்டால்!

அடுத்து கர்நாடக சிக்கல்…

இங்கு பிற மொழிப் படங்களை மொத்தம் 15 தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

அதன்படி ராவணனுக்கு 15 தியேட்டர்களைத் தந்துள்ளது கர்நாடக திரைத்துறை. ஆனால் மணிரத்னமும் அவர் மனைவியும், “இந்தப் படம் மூன்று மொழிப் படம். ராவண், ராவணன், வில்லன் ஆகிய மூன்று படங்களுக்குமே தனித் தனி சென்சார் சான்று, நெகடிவ்கள் உள்ளன. எனவே மூன்றுக்கும் சேர்த்து 45 தியேட்டர்கள் வேண்டும்” என்று பிலிம்சேம்பரில் கேட்டுப் பார்த்தனர். ஆனால் அசைந்து கொடுப்பதாக இல்லை கர்நாடக சினிமா நிர்வாகிகள்.

‘எங்களைப் பொறுத்தவரை மூன்றும் ஒரே படம்தான். மணிரத்னம் இயக்கி, மெட்ராஸ் தயாரித்துள்ள ஒரு படம் இது. எனவே 15 தியேட்டர்களை ஒதுக்குகிறோம். உங்கள் இஷ்டப்படி மூன்று படங்களையும் திரையிட்டுக் கொள்ளுங்கள்..” என்று மடக்க, ‘எந்திரனுக்கும் இப்படித்தான் செய்வீர்களா?’ என்று சம்பந்தமே இல்லாமல் ‘பற்ற வைத்துள்ளனர்’.

அந்தப் படம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம். உங்கள் படத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று அவர்கள் கண்டிப்பு காட்ட, கெஞ்சிக் கூத்தாடி கூடுதலாக 8 தியேட்டர்களைப் பெற்றுள்ளனர்.

இப்போது ராவண் இந்திப் படத்தை 16 தியேட்டர்களிலும், ராவணன் தமிழ்ப் படத்தை 7 தியேட்டர்களிலும், வில்லன் தெலுங்குப் படத்தை 1 தியேட்டர்களிலும் திரையிடவுள்ளனராம்.

பெங்களூர் மல்டிப்ளெக்ஸ்களில் கட்டணம் எக்கச்சக்கம். சென்னையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் மேல். அதிக தியேட்டர்களில் மூன்று மொழிகளிலும் வெளியிட்டு கலெக்ஷனை அள்ளும் பிக் பிக்சர்ஸ் மற்றும் சுஹாஸினி திட்டங்கள் இங்கும் எடுபடவில்லை!

குறிப்பு: இந்த செய்தியில் முதல் ராவணனுக்கு 45 தியேட்டர்கள் எனக் குறிப்பிட்டிருந்தோம். அது படத்தின் பிஆர்ஓ நிகில் கொடுத்த தகவல். ஆனால் விசாரித்ததில், 24 தியேட்டர்கள்தான் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மணிரத்னம் தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
5 thoughts on “ராவணனுக்கு பெரும் சிக்கல்!

 1. Srinivas

  எந்திரன் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அணைத்து தியேட்டர் ளையும் ரிலீஸ் ஆகும்.

  தலைவா சீக்கிரம் வா !!!!

  ராவண அவதாரம் வந்துவிட்டது… ராமாவதாரம் எடு தலைவா

 2. Manoharan

  இதிலென்ன பெரும் சிக்கல் இருக்கிறதென்று தெரியவில்லை. அதுவும் பெங்களூரில் 45 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்ட பிறகு இது ஒரு சிக்கலே இல்லை. கேரளாவில் மற்ற மொழிப் படங்கள் சந்திக்கும் பிரச்சனைதான் ராவணனுக்கும் வந்திருக்கிறது. அதை பிக் பிக்சர்ஸ் பார்த்துக் கொள்ளும் . மணிரத்னம் எந்த கவலையும் இல்லாமல் படத்தை ரிலிஸ் பண்ண வேண்டியதுதான் பாக்கி.

 3. Sudharsan

  It is the same problem faced by every film in future in Kerala including Endhiran (if luck prevails, they may take back the same). Karnataka bit different problem.

  so they should be happy somehow.

 4. Deepak

  அந்தப் படம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம். உங்கள் படத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று அவர்கள் கண்டிப்பு காட்ட, வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
  —————————————————————————————————————
  எதுக்கு எடுத்தாலும் சூப்பர் ஸ்டார் தான் கேடைச்சற உங்களுக்கு எல்லாம் ??
  எதுக்கு யா சும்மா பத்த வெச்சிட்டு போறீங்க ?
  எந்திரன் இன்னும் ரிலீஸ் ஆகல அதுக்குள்ள இவளோ பொறமைய???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *