BREAKING NEWS
Search

ராஜபக்சே வருகைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்… கோவையில் வைகோ கைது!

ராஜபக்சே வருகைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்… கோவையில் வைகோ கைது!

சென்னை: டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வரும் ராஜபக்சேவைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ இன்று கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார்.

லட்சக்கணக்கான தமிழர்கலை படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததுள்ள காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ பங்கேற்றுப் பேசுகையில்,

“இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சே. உலக நாடுகள் அவரை போர் குற்றவாளி என அறிவித்து விசாரணைக்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் ராஜபக்சேவை நல்லவர் என்று உலகுக்கு நிரூபிக்கும் முயற்சிகளில் சோனியா காந்தி தீவிரமாக உள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் மன்மோகன்சிங் அரசு 77 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு ராஜபக்சேயை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

இதன் மூலம் அவர் போர் குற்றவாளி இல்லை என்று உலக நாடுகளுக்கு உணர்த்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேரின் தியாகம் வீண் போகாது. தமிழீழம் என்பது உயிர் மூச்சு. பிரபாகரன் உயிரோடு உள்ளார். தமிழீழம் மலர்ந்தே தீரும்.

விடுதலைப்புலிகளை, ஈழ தமிழர்களை என்றும் ஆதரிக்கிறோம். லட்சக் கணக்கான தமிழர்களின் உயிரை காவு வாங்கிய ராஜபக்சேவை காமன்வெல்த் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த இந்திய அரசு, வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தீங்கிழைத்த நபரை சிறப்பு விருந்தினராக அழைத்தால் ஒப்புக் கொள்வார்களா?

நாங்கள் அமைதியாக போராடு கிறோம். ஆனால் எங்களது இளைஞர்களிடம் இதே அமைதியை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் உள்ளம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

தமிழீழம் மலரும். இந்த செயலுக்கு காரணமான மன்மோகன்சிங் அரசையும் கருணாநிதி அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன்…” என்றார்.

கைது…

முன்னதாக கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ம.தி.மு.க.வினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அதையும் மீறி ம.தி.மு.க., இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கருப்பு கொடியுடன் அங்கு திரண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தனர்.

மேலும் 4 உருவ பொம்மைகளை எரிக்க முயன்ற போது போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் தொண்டர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, அர்ஜூன் சம்பத் உள்பட 143 தொண்டர்களை கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் கைது!

அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்த்து தெரிவித்தனர். இதற்காக புதுச்சேரி கடலூர் சாலையில், புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபக்சேவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அப்போது திடீரென்று ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராஜபக்சேவின் உருவபொம்மையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதைத் தொடந்து 104 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

-என்வழி
2 thoughts on “ராஜபக்சே வருகைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்… கோவையில் வைகோ கைது!

 1. Ezhathu Raja

  “மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி’ என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

  நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக “இன்றைய தமிழகம்’ என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. “ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?’ “நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?’ அவர் சிரித்தபடி சொன்னார், “என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!’

  “என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். “பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!’

  “இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!’ இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=107268

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *