BREAKING NEWS
Search

‘ராஜபக்சே தூது… தூக்கியெறிந்த ரஜினி!’ – கவிஞர் தாமரை

‘கொழும்பு விழாவுக்கு ராஜபக்சே தூது… தூக்கியெறிந்த ரஜினி!’ – கவிஞர் தாமரை

ற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசிக்காமல், தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசும் / செய்யும் மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவரைப் புரிந்துகொள்ளாமல் விமர்சித்து, உண்மை தெரிந்து தெளிந்து தன்னைத் தானே நொந்து கொண்டவர்கள் பட்டியல் பெரிது.

இலங்கையில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்குமாறு தமிழக நட்சத்திரங்களில் முதல் அழைப்பிதழ்  வைக்கப்பட்டது ‘திரையுலக முதல்வரான’ ரஜினிக்குதான். சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தின் சார்பில், அந்தத் தூதரே போயஸ் தோட்டத்துக்கு நேரில் சென்று கொடுத்தபோது, அழைப்பிதழையே வாங்க மறுத்தவர் ரஜினி. பொதுவாக எதிரியே வந்தாலும் மரியாதைக்காகவாவது, கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் குணமுடைய ரஜினி, ஒரு கோர இனப் படுகொலையை, பஞ்சமா பாதகத்தைச் செய்துவிட்டு, இப்போது அதைக் கொண்டாட கூசாமல் அழைப்பிதழோடு வந்தவர்களை அப்படியே திருப்பி அனுப்பினார். இதற்காக அவர் எந்த தமிழ் அமைப்பின் சான்றிதழையோ பாராட்டையோ எதிர்ப்பார்க்கவில்லை. இந்த விழா இலங்கையில் நடந்தாலும், விழாவை நடத்துவது ‘யார்’ என்று அவருக்குத் தெளிவாகத் தெரியும்!

‘பெண்கள், குழந்தைகளின் உதிரம் கொட்டிய அந்த பூமி (இலங்கை) உருப்படாது’ என்று கோபம் பொங்கப் பேசி்யவர். ‘அங்கே தமிழர்கள் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஈழம்  அவர்களின் சொந்த பூமி. அதை அடைஞ்சே தீரணும்” என்று கோபக் குரல் கொடுத்தவரல்லவா… அந்தக் கோபம் இன்னும் தன் மனதிலிருப்பதை சந்தர்ப்பம் வாய்த்த போது மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி. அவர் அந்த அழைப்பிதழை வாங்க மறுத்துவிட்டார் என்ற செய்தி அடுத்த சில மணி நேரங்களில் ஊடகங்கள் மூலம் பரவி, கோலிவுட்டையே புதிய வேகம் கொள்ள வைத்தது.

வைகோ, நெடுமாறன், சீமான் என தமிழுணர்வாளர்கள் ரஜினியின் மனிதாபிமான உணர்வைப் பாராட்டினர். அவரைத் தொடருமாறு மற்றவர்களுக்கும் அறிவுறுத்தினர். மற்ற கலைஞர்களும் அழைப்பிதழ்களை வாங்கிக் கொள்ள மறுத்தது தொடர்ந்தது. மொத்த திரையுலகமும் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறது.

இப்போது கவிஞர் தாமரை கூறியுள்ள ஒரு விஷயம், தமிழர் பட்டபாடு ரஜினி என்ற மனிதரை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இது தொடர்பாக இன்று வெளியாகியுள்ள ஒரு செய்தியை அப்படியே தருகிறோம்:

ஃபா விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

லங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல்நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை.

சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி ஐஃபாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழாவுக்குப் போகமாட்டேன் என்றும் கூறிவிட்டார். புதிய தூதராக சல்மான்கான் பொறுப்பேற்றுள்ளார்.

அமிதாப் குடும்பத்திலிருந்து அபிஷேக், ஐஸ்வர்யா ராய் என யாருமே இந்த விழாவில் பங்கேற்க மாட்டோம் என் அறிவித்துள்ளனர்.

இதனை இலங்கை அரசு முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே, பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, முன்னணி இந்தியக் கலைஞர்கள் அனைவரும் கொழும்பு வருவார்கள் எனக் கூறி வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த விழாவுக்கு வருமாறு இலங்கை அரசு சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பிதழ் கொடுத்தது.

பொதுவாக, ஒரு மரியாதைக்காகவாது இதுபோன்ற அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் ரஜினி, இந்த அழைப்பிதழைப் பெறவும் மறுத்துவிட்டார். அவரது அலுவலகமும் இந்த அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தச் செய்தி வெளியில் தெரிந்த பிறகுதான், தமிழ் திரையுலகம் வேகத்துடன் செயல்பட்டு ஐஃபா விழாவைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில் அதிபர் ராஜபக்சேவே ரகசியமாக தூது அனுப்பியுள்ளார் ரஜினிக்கு. எப்படியாவது இந்த விழாவில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு முறை இதுபற்றிப் பேசவோ யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்று வேகமாகக் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை தனது பத்திரிகைப் பேட்டியில் கூறியுள்ளவர், கவிஞர் தாமரை.

அவர் கூறுகையில், “தமிழ் மக்களைக் கொன்றொழித்துவிட்டு ஒன்றும் நடவாததுபோல இருக்க இலங்கை அரசு முயல்கிறது. இதை இப்படியே விட்டுவிட முடியாது. இவ்வளவுக்கும் பிறகும், இலங்கை அரசுத் தரப்பில் திரை உலகினரைத் தனிப்பட்டரீதியில் தொடர்புகொண்டு வசப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இந்த ‘ஐஃபா’ விழாவில் கலந்துகொள்ளுமாறு ரஜினிகாந்த்துக்கு ராஜபக்ஷே தூதுவிட்டார். ஆனால், ரஜினி அதை வந்த வேகத்தில் நிராகரித்துவிட்டார்…” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து ரஜினியின் அலுவலகத்தில் நாம் தொடர்பு கொண்டபோது, “இலங்கைத் தரப்பில் யார் தொடர்பு கொண்டாலும் அதற்கு பதிலளிக்கவோ, பெரிதாக ரியாக்ட் பண்ணவோ வேண்டாம் என்று தலைவர் (ரஜினி) கூறிவிட்டார்” என்று தெரிவித்தனர்.

குறிப்பு: அழைப்பிதழை மறுத்தது, ராஜபக்சே தூதை தூக்கியெறிந்தது போன்ற தகவல்களைக் கூட ரஜினி எங்கும், எந்த சூழலிலும் சொல்லவில்லை. அவரை நேசிப்பவர்களும்.. ஏன்… விமர்சிப்பவர்களும் கூட சிரத்தையுடன் இதையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார்கள்!

-என்வழி
22 thoughts on “‘ராஜபக்சே தூது… தூக்கியெறிந்த ரஜினி!’ – கவிஞர் தாமரை

 1. முனீஸ்

  நெறைய பேர் பேசுவானுங்க.. ஒரு ம..உம் புடுங்க மாட்டானுக.. நம்ம தலைவர் மாதிரி ஒரு சிலர்தான் நச்சுனு செயல்ல காட்டுவாங்க.. நெத்தியடி அடிச்சீங்க தலைவா..

 2. SELVA PUDUPALLI

  “எந்திரன்” மண்ணைக்கவ்வாமல் இருக்கவேண்டுமென்பதால் ரஜினி அழைப்பிதழை வாங்காமல் இருந்ததோடு இந்த விழயத்தை பிரபலப்படுத்தி(எந்திரனில் ஒரு பாடல் எழுதிய தாமரை மூலமாக) ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு அவ்வப்போது ஆறுதல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

 3. santhosh

  தலைவர் போல் இந்த விழாவை நாம் புறகணிப்போம்.

  என்றும் தலைவர் வழயில்
  சந்தோஷ்குமார்

 4. muralidharan

  That இஸ் superstar
  தட் இஸ் rajini
  இது அப்படி iruku

 5. Ravanan

  SELVA PUDUPALLI டுபுக்கு,

  நீயல்லாம் தலைவனை பற்றி பேசி பெரிய ஆள் ஆகா பார்க்கிறாய்….

 6. Chozhan

  SELVA PUDUPALLI டுபுக்கு….**** ….உனக்கு என்ன* தெரியும் இவரை பற்றி. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
  ஆனால் சிலருக்கு, கழுதையே தேய்ந்து கட்டெறும்பாக ஆனாலும் கற்பூர வாசனை தெரியாது.

  எனக்கு ரஜினியை அந்த அளவுக்கு புடிக்காது. ஆனால் இன்று ….

  எதற்கெடுத்தாலும் ரஜினி ஒரு கன்னடன் , கர்நாடகா காரன் என்று சொல்லுவார்கள். அதை பார்த்து நானும் ரஜினியை தப்பாக நினைத்துவிட்டேன். ஆனால் இன்று என்ன நடக்கிறது. தமிழனுகாக ஒரு இலங்கை (இந்திய)அரசாங்கத்தின் தூதையே தூக்கியெறிந்துள்ளார்.
  அமிதாப் அவர்கள், தமிழனின் உணர்வை புரிந்து தமிழனுக்காக முடிவை மாத்தி அறிவித்துள்ளார். ஆனால் இந்த தமிழகத்தில் பச்சை தமிழன் என்று சொல்லிக்கொண்டு , தமிழனை , தமிழ் இனத்தை அழிக்க பேருதவி புரிந்து, தமிழர்களை கொன்ற பயன்கரவதிங்களின் , அடிவருடிகளாக உழைத்து உழைத்து (சொரிந்து சொரிந்து) தம் குடும்பத்திற்காக பல கோடிகளை சேமித்து வைகின்றர்கள்.

 7. Chozhan

  கவிஞர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் உயிர்க்கு ஆபத்து என்றாலும் இடித்துரைக்க தயங்காதவர்கள் என்பதற்கு தாமரை ஒரு உதாரணம்.

  கவிகள்? கருணா பக்கமே என்பதை கிட்ட தட்ட அனைவரும் நிருபித்து இருக்கிறார்கள் அது மட்டுமல்ல அடுத்த வாரம் நடைபெற இருக்கின்ற செம்மொழி மாநாட்டில் எப்படி எல்லாம் கவிதை எழுதினால் கருணாவை கை தட்ட வைக்கலாம். அவரின் கவனத்தை இழுக்கலாம் என்பதற்கு ரூம் போட்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

  இந்த இருண்ட காலத்தில் தாமரை போன்றவர்கள் இருப்பது தமிழர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம்.

  வினோக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இந்த உணர்வு இல்லாத செத்த மொழி (திமுக) மாநாட்டை பெருசு பண்ணி எழுத வேண்டாம். உண்மையான தமிழர்கள் மட்டுமல்ல உங்களை போன்ற பத்திரிக்கை துறையும் இதை புறக்கணிக்க வேண்டும்.

  இலங்கை தமிழர்களை பற்றி கடைசியாக ஒரு தீர்மானம் கொண்டுவந்து என்னால்தான் இது நடந்தது என்று கருணா மார்தட்டி கொள்வார்.

  ஆட்சி மட்டுமல்ல காலமும் (நமக்கு இருண்ட காலம்) அவர்கள் கையில்தான் நாம் வெறும் பக்கத்துக்கு நாட்டு பார்வையாளனாக மட்டும் இருப்போம் வேறு வழி? என்வழிதான்.

 8. srini

  SELVA PUDUPALLI says:

  ppl like u cannot be satisfied……coz u decided to blame whatever thalaivar does……u dont deserve to talk abt thamarai also…..she is d one who spoke against DMK ruler…….not any vairamuthu or vali jalra case.

  1st u know abt the ppl n comment here….u lunatic…..u shud be treated in mental hospital.

 9. srini

  கவிஞர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் உயிர்க்கு ஆபத்து என்றாலும் இடித்துரைக்க தயங்காதவர்கள் என்பதற்கு தாமரை ஒரு உதாரணம்.

  கவிகள்? கருணா பக்கமே என்பதை கிட்ட தட்ட அனைவரும் நிருபித்து இருக்கிறார்கள் அது மட்டுமல்ல அடுத்த வாரம் நடைபெற இருக்கின்ற செம்மொழி மாநாட்டில் எப்படி எல்லாம் கவிதை எழுதினால் கருணாவை கை தட்ட வைக்கலாம். அவரின் கவனத்தை இழுக்கலாம் என்பதற்கு ரூம் போட்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

  இந்த இருண்ட காலத்தில் தாமரை போன்றவர்கள் இருப்பது தமிழர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம்.///////superb comment chozan.

 10. r.v.saravanan

  சூப்பர் ஸ்டார் ரஜினி. அவரைப் புரிந்துகொள்ளாமல் விமர்சித்து, உண்மை தெரிந்து தெளிந்து தன்னைத் தானே நொந்து கொண்டவர்கள் பட்டியல் பெரிது.

  குட் வினோ

  ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு முறை இதுபற்றிப் பேசவோ யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்று வேகமாகக் கூறியுள்ளார்.

  நெத்தி அடி

 11. sathish

  தலைவர் எது பண்ணினாலும் விமர்சனம் செய்வதுதான் சிலரது வேலை.

 12. M.Mariappan

  தலைவர் செய்தது மிகவும் சரியானது, அவர் எப்பொழுது மனதில் பட்டதை இன்று வரைக்கும் யாருக்கும் பயப்படாமல் செய்யக்கூடிய ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, இதை மத்தவர்கள் என்றால் பெரிய விசயமாக PUBLICITY செய்து ஒரு விழாவே எடுத்து இருப்பார்கள் . தலைவர் இஸ் கிரேட் நன்றி வினோ எந்திரன் புதிய STILLS விரைவில் எதிர்பார்க்கிறோம் .

 13. குமரன்

  ரஜினியைத் தமிழன் அல்ல என்றும் தரக்குறைவாகவும் விமரிசித்தவர்கள் …..

  பாபா பட வெளியீட்டின்போது …. பா.ம.க. ராமதாஸ் கும்பலும்,

  நெய்வேலி கர்நாடக காவேரி போராட்டத்தின் போது ….. பாரதி ராஜா, சத்யராஜ் போன்ற தரங்கெட்டவர்களும்,

  கருணாநிதி பாராட்டுவிழாவில் அஜீத் உண்மையை உரைத்தபோது ….
  ஜாகுவார் தங்கம் போன்ற தரங்கெட்டவர்களும் …..

  இவர்களையெல்லாம் அவ்வப்போது தூண்டிவிட்ட கருணாநிதியும் ….

  அழைப்பிதழைகே கொடுத்தவுடனே வாங்கி விட்டார்கள் என்பது தெரிகிறது.

  அதிலும் கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கண்டிப்பாக அழைப்பிதழ் ரஜினிக்கும் முன்னரே வந்திருக்கும். அவர்கள் முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் – ஸ்பெஷல் குழுவில் வந்த உறுப்பினர் என்ற முறையில் இவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் தந்த பின்னரே ரஜினிக்குத் தந்திருப்பார்கள். இவர்கள் வழக்கம் போல வாங்கியிருப்பார்கள். துரோகிகள்.

 14. devraj

  well done RAJINI, you are really great.I really support your courage. Over whelmed by your straightness, I agree some actors or politicians will make a big publicity stunt with this news.GOD ALMIGHTY BLESS YOU AND ALL.

 15. Muru

  செல்வா , இன்னொரு தடவை நான் இங்கே உன்னை பார்த்தேன் ,

 16. Steve

  SELVA PUDUPALLI says:

  ppl like u cannot be satisfied……coz u decided to blame whatever thalaivar does……u dont deserve to talk abt thamarai also…..she is d one who spoke against DMK ruler…….not any vairamuthu or vali jalra case.

  1st u know abt the ppl n comment here….u lunatic…..u shud be treated in mental hospital.

 17. mukesh

  கமல் பதில் வருத்தமளிக்கிறது! – மே 17 இயக்கம் என்ற தலைப்பில் வந்த பதிவுக்கு இந்த SELVA PUDUPALLI யின் comment

  //“மே 17 ” என்று ஒரு இயக்கம் இருப்பதை திரு கமலின் வீட்டு முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம்தான் பெரும்பான்மையான மக்கள் தெரிந்துகொண்டுள்ளனர்.அந்தவகையில் சிறுகுழுவினர் என்று கமல் சொல்லியிருந்ததில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை.இனிவரும்காலங்களில் யாரும் “மே 17 “இயக்கத்தை சிறுகுழுவினர் என்று சொல்ல வாய்ப்பில்லை.மற்றபடி கமல் அவர்கள் யாரையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளும் அளவிற்கு இந்தவிஷயத்தில்(பத்மஸ்ரீ) “மே 17 ” கமலுக்கு அறிவுறித்தியிருக்கதேவையில்லை…! கமல் அவர்களின் அறிவிப்பு பிரமிப்பு…!//

  இந்த கருப்பு ஆடு யார் என்று எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

 18. Manoharan

  ரஜினியை பற்றி தெரியாதவர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தலாம். ஆனால் தலைவர் குணம் இதுதான் என்பது ரஜினி ரசிகர்களாகிய நம்மை பொறுத்தவரை இது ஒரு ஊரறிந்த உண்மை.

 19. சூர்யகுமார்

  சபாஷ் முகேஷ்… சரியா கண்டுபுடிச்சிட்டீங்க…!!! இந்த கருப்பு ஆடுகள் முகமூடியை இப்படித்தான் கிழிக்கணும்…

 20. Dinesh

  “”//குறிப்பு: அழைப்பிதழை மறுத்தது, ராஜபக்சே தூதை தூக்கியெறிந்தது போன்ற தகவல்களைக் கூட ரஜினி எங்கும், எந்த சூழலிலும் சொல்லவில்லை. அவரை நேசிப்பவர்களும்.. ஏன்… விமர்சிப்பவர்களும் கூட சிரத்தையுடன் இதையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார்கள்//””

  தலைவர் தலைவர் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *