BREAKING NEWS
Search

இனி ரஷ்யாவிலும் லகலகலகலக….!

ரஷ்ய மொழியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் சந்திரமுகி!

ந்திய சினிமா சரித்திரத்திலேயே முதல் முறையாக ரஷ்ய மொழியில் ரிலீஸாகிறது ஒரு தமிழ்ப் படம். அது… சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா வெற்றிப்படமான சந்திரமுகி.

chandramukhi

இந்திய சினிமா மீது வெளிநாட்டுச் சந்தையின் வெளிச்சம் அதிகம் விழக் காரணம் ரஜினிதான். குறிப்பாக, குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமா வர்த்தகத்துக்கு முதல்முதலில் வெளிநாட்டுச் சந்தையின் கதவுகளை திறந்து வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அவருடைய முத்து படம்தான் வெளிநாட்டில் பெரும் வெற்றி கண்ட முதல் இந்திய / தமிழ் திரைப்படம். அதற்கு முன்பு ஹம்ஆப்கே ஹெய்ன் கோன், தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே போன்ற படங்கள் வெளிநாடுகளில் வெளியாகி சில நாட்களில் தூக்கப்பட்டுள்ளன.

ஆனால் ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பானில், அந்நாட்டு மொழியிலேயே டப் செய்யப்பட்டு வெளியாகி வெள்ளி விழாவையும் கடந்து ஓடியது. ஜப்பானிய பாராளுமன்றம் ‘டயட்’டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கே குறிப்பிட்டுப் பேசும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் முத்து. பல கோடி வெளிநாட்டுச் செலாவணியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தது. அதன் பிறகு ரஜினியின் படங்கள் கட்டாயம் வெளிநாடுகளிலும் ஒரேநேரத்தில் வெளியாகி சக்கை போடு போட்டன.

chandramukhi-1

பாபா திரைப்படத்தை  – கனடாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் ஒப்பந்த அடிப்படையில் திரையிட்டு, அதிக லாபம் பார்த்தனர். தமிழ்ப்படம் ஒன்று தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் ஒரு சேர ரிலீஸானது அப்போதுதான்.

அதன் பிறகு வெளியான சந்திரமுகி படைத்த சாதனை அனைவரும் அறிந்ததே.

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே வெளிநாடுகளில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் வெளியான சந்திரமுகி 250 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனைப் படைத்தது. அதுவரை தமிழ் சினிமாவுக்குப் பரிச்சயமே இல்லாத கொரியா, நார்வே, அயர்லாந்து போன்ற நாடுகளிலும் சந்திரமுகியைத் திரையிட்டனர்.

இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி மீண்டும் ஒரு வெளிநாட்டில் திரையிடப்படுகிறது, மொழிமாற்றுப் படமாக. அது ரஷ்யா!

இதுவரை ரஷ்யாவில் எந்த தமிழ்ப் படமும் வெளியானதில்லை. அதுவும் தமிழில் தயாரான ஒரு படம் ரஷ்ய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை.

தமிழ்ப் படங்களை ரஷ்யாவில் திரையிட வேம்டும் என்ற திட்டம் பிறந்ததும் தேர்வு செய்யப்பட்ட முதல் படம் ரஜினியின் சந்திரமுகிதான்.

பின்னர் நடிகர் திலகம் சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள், பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களும் தேர்வுக் குழுவினரால் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த மூன்று திரைப்படங்களும் முதல் கட்டமாக ரஷ்யாவில் வெளியாகின்றன.

இதற்காக இந்திய- ரஷ்ய திரையுலகினரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடக்கும் இந்த கூட்டத்தில் இதில் ரஷ்ய பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அப்போது தமிழ் படங்களை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்வது பற்றிய உடன்பாடு கையெழுத்தாகும்.

புதிய திரைப்படங்களில் அஜீத் நடித்து விரைவில் வெளிவரவுள்ள அசல் திரைப்படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

சந்திரமுகி, அசல் இரண்டுமே சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினோ
7 thoughts on “இனி ரஷ்யாவிலும் லகலகலகலக….!

 1. sam

  Nama natulathan karupu panam,lanjam,arasiyalvathikal,adithadi ethaiye velinatilum irkuma enna???athanala than sivaji yai dub pannala…………

 2. r.v.saravanan

  RUSSIA VILUM சந்திரமுகி 250 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை PADAIKKA VALTHUKKAL

 3. Kamesh

  Vinoji.

  Heart warming to hear about Chandramukhi. All the wishes to Sivaji Films who are reaping good yeilds with CM.
  By the way is it not that Rajkapoor’s “Mera Naam Joker” was also dubbed into Russian and was a Hit … it was considered to be a flop in India (I may be wrong also)

  Kamesh

 4. karthi

  ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு, இழந்த இளமையைத் திரும்ப வைக்கும் இந்தப் பாடல். இன்றைய இளைஞர்களுக்கோ புது அனுபவத்தைத் தரும் உற்சாகப் பாடல்.

  கிஷோரின் குரலும் சச்சின் தேவ் பர்மனின் இசையும் (அந்த மவுத் ஆர்கன் வாசித்தது ஆர் டி பர்மன்), ராஜேஷ் கண்ணாவின் துள்ளலான நடிப்பும் எவர் கிரீன் பாடலாக இதை மாற்றிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *