BREAKING NEWS
Search

ரத்ததானம் செய்யும் ரஜினி ரசிகர்களுக்கு தனி இணையதளம்!

ரத்ததானம் செய்யும் ரஜினி  ரசிகர்களுக்கு தனி இணையதளம்!

த்த தானம் செய்வதற்காகவே புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள். presentation1v1

ரசிகர்கள் கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றில் ஈடுபடாமல், சமூக நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு பிறந் நாளின் போதும் அறிவுறுத்தி வருகிறார்.

அதன்படி பல ரசிகர்கள் தங்களால் முடிந்த சமூக நலப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

பல ரசிகர்கள் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து விளம்பரமின்றி செய்து வருகின்றனர்.

தற்போது தமிழக மெங்கும் ரத்ததானம் செய்ய விரும்பும் ரசிகர்களை ஒருங்கிணைத்து ஒரு தனி இணையதளம் ஒன்றை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் துவக்கியுள்ளனர்.

www.rajiniblood.com என்ற இந்த இணைய தளத்தை நெல்லையை சேர்ந்த ரஜினி ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் துவங்கி நடத்துகின்றனர்.

அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விவரத்தை அதில் தெரிவித்தால் உடனடியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் செய்ய பெயர்களை இதில் பதிவு செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மூலம் தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

முழுக்க முழுக்க இலவச சேவையாகவே இதைச் செய்து வருகிறார்கள்.

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இந்த இணைய தளம் செயல்படத் துவங்கியுள்ளது.

இந்த தளத்திலேயே யார் ரத்ததானம் செய்யலாம், அதனால் ஏதாவது பாதிப்பு உண்டா போன்ற முக்கிய குறிப்புகளையும் தந்துள்ளனர்.

இதுகுறித்து நெல்லை ரசிகர் தாயப்பன் நம்மிடம் கூறியதாவது:

‘இப்படி ஒரு அமைப்பை கடந்த டிசம்பர் 12-ம் தேதியே துவங்கிவிட்டோம். இது முழுக்க முழுக்க இலவச சேவையே. ரத்ததானம் செய்யும் ஆர்வமுள்ள சக ரசிகர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இது’, என்றார்.

-வினோ




6 thoughts on “ரத்ததானம் செய்யும் ரஜினி ரசிகர்களுக்கு தனி இணையதளம்!

  1. Suresh கிருஷ்ணா

    அருமையான முயற்சி நண்பர்களே… வாழ்த்துக்கள்!
    Suresh கிருஷ்ணா

  2. manithan

    This plan is very useful for all poor people….nellai fansku romba thanks…..God bless u…

  3. Murugan

    ரஜினி ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்

  4. Makkal kural

    நெல்லையை சேர்ந்த ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் …..

  5. நாகூர் பாரி

    அருமையான முயற்சி…என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்ய ஆவலாக உள்ளேன்.நன்றி

    நாகூர் பாரி
    மாவட்ட தலைவர்
    நாகை மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *