BREAKING NEWS
Search

‘ரஜினி 60…’ காஞ்சியில் சிறப்பு ஹோமம்!

ரஜினிக்காக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் 106 சண்டி ஹோமம்!

60 வது பிறந்த நாள் காணும் ரஜினிக்காக 106 சண்டி ஹோமங்களை அவரது நலம் விரும்பியான பிரபல தயாரிப்பாளர் ராமநாதன் செய்கிறார்.

rajinikanth_0182

ரஜினி பிறந்த நாள் விழாவை வருகிற 12-ந்தேதி சிறப்பாகக் கொண்டாட உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தனது பிறந்த நாளில் யாரையும் ரஜினி சந்திப்பது இல்லை. ஒரு வருடத்துக்கு முன் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்தபோது கூட, “பிறந்த நாளில் நான் யாரையும் சந்திப்பது இல்லை. என் குடும்பத்தினர் கூட எனக்கு இடையூறு செய்யமாட்டார்கள். அன்றைய தினத்தை தனிமையில் இருந்து நான் ஏன் பிறந்தேன் என்று யோசிக்க செலவிடுவேன்” என்றார்.

ஆனால்  ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு அவருக்கு 60 வது பிறந்தநாள்.

எனவே எப்போதும் இல்லாத அளவு சிறப்புடன் கொண்டாட வேண்டும் என தமிழகம் முழுவதும் மன்றத்தினரும் தனிப்பட்ட நலம் விரும்பிகளும் பல ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

பெரும்பகுதி ரசிகர்கள் தலைவரின் பிறந்த நாளை இலவச உதவிகள் மற்றும் நற்பணிகள் செய்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி நடித்த தர்மதுரை படத்தை தயாரித்த ராமநாதன், ரஜினி பிறந்த நாளன்று காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் 106 சண்டி ஹோமம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

வருகிற 23-ந்தேதி இந்த ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதனே முன்னின்று நடத்தி வருகிறார். ரஜினியும் அவர் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக வாழ வேண்டி இந்த ஹோமம் நடத்தப்படுவதாக காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியலில் ரஜினி வெற்றிகள் பெற வேண்டும் என்பதும் இந்த யாகத்தின் இன்னொரு நோக்கம் என்கிறார்கள்.

இது தவிர, பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர் ரசிகர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏராளமான இடங்களில் ரத்த தான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா நகர், பூந்தமல்லியில்…

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ரசிகர்கள் ரஜினிடில்லி, ஸ்ரீகாந்த், தாமஸ், முரளி ஆகியோர் ஏழைகளுக்கு உணவு, வேட்டி சேலை போன்ற உதவிகளை வழங்குகின்றனர்.

தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த தயாளன், வேலு, சீனு, ஜெகன் ஆகியோர்  ராகவேந்திரா கோவிலில் சிறப்பு அர்ச்சனைக்கு  ஏற்பாடு செய்துள்ளனர்.

12-ந்தேதி பூந்தமல்லியில் நடக்கும் பிறந்தநாள் கூட்டத்தில் நடிகர் லாரன்ஸ், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் பங்கேற்று ஏழைகளுக்கு இலவச தையல் மெஷின்கள் வழங்குகின்றனர். மன்ற நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சம்பத், மோகன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஜப்பானில்…

ரஜினிக்கு ஜப்பானில் அதிக ரசிகர்கள் இருப்பதுமம, ஆண்டுதோறும் அவர்கள் ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடி வருவதும் தெரிந்ததே. இந்த ஆண்டு எப்போதுமில்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட தனி அரங்குகளை முன்பதிவு செய்து வைத்துள்ளனராம் டோக்யோ உள்ளிட்ட நகரங்களில்.

-ரசிகன்
8 thoughts on “‘ரஜினி 60…’ காஞ்சியில் சிறப்பு ஹோமம்!

 1. eppoodi

  எப்பிடியாவது டோக்கியோ பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டு எங்களை சந்தோசப்படுத்தி தலைவரின் எதிரிகளை சங்கடப்படுத்துங்கள்.

 2. Adango

  //அரசியலில் ரஜினி வெற்றிகள் பெற வேண்டும் என்பதும் இந்த யாகத்தின் இன்னொரு நோக்கம் என்கிறார்கள்.//

  ஹூம்…. தலைவனுக்காக எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு???

  மொதல்ல அவர் அரசியலுக்கு உள்ள வர ஒரு யாகம் பண்ணுங்கப்பா. அப்புறம் அதுல வெற்றி பெற தனியா ஒரு யாகம் வச்சுக்கலாம். அதுக்கு அப்புறம் யாகம் மூலமாவே எல்லா மக்கள் நல திட்டங்களும் வெற்றி பெற வைக்கலாம். அதுக்கு அப்புறமும் மக்கள் யாராவது ஏதாவது குறை சொன்னால் அதுக்கு ஒரு யாகம் பண்ணிட்டா போச்சு.

  யாகம் specialist ஜெயலலிதா கிட்ட கேட்டா அட்வைஸ் ஐ அள்ளி தருவாங்க.

 3. JAWAHAR

  அண்ணா நகர், பூந்தமல்லியில்…
  ஜப்பானில்…
  தமிழகத்தில்…
  ஒட்டு மொத்த இந்தியாவில்…
  அகில உலகில்..

  என் தலைவன் விழா…

 4. Anbu

  நண்பர்களே,
  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நம் தலைவருக்கு வோடே போடுங்கள் நம் தலைவர் 8ஆவது இடத்தில இருக்கிறார்
  http://www.whopopular.com/Rajinikanth
  nandri

 5. Adango

  அன்பு

  (http://www.whopopular.com) அது ஏதோ தெலுங்கு நண்பர்கள் நடத்தும் பாலகிருஷ்ணா ஆதரவு website ன்னு நினைக்கிறேன். ரஜினிய விடுங்க, சிரஞ்சீவியே, பாலகிருஷ்ணாவுக்கு பின்னாடி தான் இருக்கார்ன்னு போட்டு இருக்கிறது பெரிய காமெடி. அதைவிட இந்தியாவில் இருக்கும் படா படா ஜாம்பவான் நடிகர்கள் பட்டியலை போட்டு அதுல பாலாகிருஷ்ணா தான் No.1 அப்பிடீன்னு போட்டு இருக்கறது பார்த்து எப்படி நீங்க சிரிக்காம, சீரியஸா எடுத்துக்கிட்டு இங்க வந்து ரஜினிக்கு vote வேற போட சொல்றீங்க?

  இதெல்லாம் காமெடி countdown ஆ எடுத்துக்கணும் பாஸ்.

  நண்பர்களே நல்ல காமெடி countdown வேணும்னா அந்த website போங்க. மத்தபடி அதை சீரியஸா எடுத்துகாதீங்க.

 6. r.v.saravanan

  தவிர, பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்

  vov…………super

 7. Adango

  //தவிர, பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர் //

  இறைவனிடம் கை ஏந்துங்கள் (ரஜினி கிட்டே சொல்லி … முடியலே)
  அவன் இல்லை என்று சொல்லுவதில்லை (வர வேண்டிய நேரத்துக்கு
  கரெக்டா வருவேன்னு எப்போவோ சொன்னார்)
  பொறுமையுடன் கேட்டு பாருங்கள் (பொறுமையே போச்சு தலைவா)
  அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை (கடமையை செய்…பலனை எதிர்பார்னு வேற சொன்னாரு தெரியுமா ….)

  எல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு… வருவாரு …ஆனா…..வர……….????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *