Breaking News

ரஜினி வீடு தேடி வந்த விஜய்டிவி விருது!

Tuesday, June 1, 2010 at 2:39 am | 1,739 views

ரஜினி வீடு தேடி வந்த விஜய்டிவி விருது!


பொ
துவாகவே தனியார் விருது விழாக்களுக்குச் செல்வதை பெரும்பாலும் தவிர்ப்பவர் ரஜினி. ஆசியாவின் ஆஸ்கர் எனப்படும் ஐஃபா விழாக்களுக்குச் சென்றதில்லை. அவர்கள் இருமுறை வழங்கிய விருதுகளைக் கூட மறுத்துவிட்டவர் அவர்.

இங்கு விஜய் டிவி தரும் விருது விழாக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சென்றதில்லை ரஜினி.

விஜய்டிவியின் முதலாண்டு விருதே ரஜினிக்குதான் வழங்கப்பட்டது. சிவாஜி படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருது அது. விழாவுக்கு வர இயலாது என்பதை முன்கூட்டியே அவர் சொல்லிவிட்டார். இருந்தாலும் விஜய்டிவி தலைமை நிர்வாகி, ரஜினி இருக்கும் இடம் தேடிச் சென்று அந்த விருதினைக் கொடுத்தார். அன்று குசேலன் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியிலிருந்தார் ரஜினி!

அதன்பிறகு இரண்டு விருது விழாக்கள் நடந்தன. அவற்றிலும் ரஜினி பங்கேற்கவில்லை. இடையில் ஒருமுறை மட்டும் விஜய்டிவி விழாவில் பங்கேற்றார். அது கமல் – 50 விழா.

இந்த நிலையில் விஜய்டிவி 4-வது விருது விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு எப்படியாவது ரஜினியை வரவழைக்க பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.

விழாவில் அவருக்கு செவாலியே சிவாஜி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பிரபுவும் ராம்குமாரும் ரஜினியின் வீட்டுக்கே போய் கொடுக்க முடிவு செய்தனர், ஞாயிற்றுக் கிழமை!

ஆனால் நடிகர் திலகத்தின் பெயரால் அமைந்த அந்த விருதினை, அன்னை இலத்துக்குச் சென்று பெற்றுக் கொண்டார் ரஜினி!

-என்வழி ஸ்பெஷல்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

16 Responses to “ரஜினி வீடு தேடி வந்த விஜய்டிவி விருது!”
 1. ganesh says:

  if he is not willing to go to these functions, why he accept this award.

 2. Ajay says:

  சூப்பர் படங்கள். சூப்பர் தலைவா

 3. udhay says:

  தமிழக தொலைக்காட்சி , நடிப்புலகின் பிதாமகர் சிவாஜியின் பெயரால் ஒரு விருது கொடுக்கும் பொது, அதை நேரில் சென்று வாங்குவது தானே முறையாக இருக்கும்.
  பண்பான மனிதர் ரஜினி ஏன் இதை செய்யவில்லை என்பது புரியவில்லை . விருதை நேரில் பெற்றிருந்தால் , ரஜினிக்கு இந்த விருது பொருத்தமானதாகவே இருந்திருக்கும். .

 4. To Udhay:
  கடந்த வருடம் தலைவர் நடித்து எந்தப் படமும் ரிலீஸ் ஆகாதநிலையில், இந்த விருது அவருக்கு கொடுக்கப்பட்டது முழுக்க, முழுக்க அவர்களின் வியாபாரத் தந்திரமே. கமல்-50 விழாவே இதற்கு முழு சாட்சி. தலைவர் பேசுவது எப்படியும் இறுதியில் தான் என்ற பின்பும் ஒவ்வொரு விளம்பர இடைவேளையின் போதும் தலைவர் பேசும் கிளிப்பிங்கஸ்-சை ஏன் காட்ட வேண்டும்? வியாபாரம் தானே? இதற்கு தலைவர் ஏன் உடன்பட வேண்டும்? தலைவர் அந்த விழாவில் கலந்து கொண்டது கூட தனது நண்பர் கமல் அவர்களுக்காகத் தானே ஒழிய, வேறு எதற்காகவும் இல்லை. முதல் முறை விஜய் அவார்ட்ஸ் கொடுத்த பொழுதே அவர் வர மறுத்ததும், அவர் ஷூட்டிங் நடந்த இடத்திற்கு போய் விடாப்பிடியாக இருந்து கொடுத்து விட்டல்லவா வந்தனர். ஏன் இப்படி செய்ய வேண்டும்? இவர்களது நோக்கம் வியாபாரம் என்பதால் தானே. தவிர, நடிகர் திலகம் அவர்களின் மேல் தலைவர் வைத்திருக்கும் மரியாதையினை உலகமே அறியும்.

 5. bahrainbaba says:

  “” தமிழக தொலைக்காட்சி , நடிப்புலகின் பிதாமகர் சிவாஜியின் பெயரால் ஒரு விருது கொடுக்கும் பொது, அதை நேரில் சென்று வாங்குவது தானே முறையாக இருக்கும்.
  பண்பான மனிதர் ரஜினி ஏன் இதை செய்யவில்லை என்பது புரியவில்லை . விருதை நேரில் பெற்றிருந்தால் , ரஜினிக்கு இந்த விருது பொருத்தமானதாகவே இருந்திருக்கும்.””

  கண்ணா.. ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா..
  தலைவருக்கு பண்பையும் நாகரீகத்தையும் பத்தி நீங்க சொல்ல வேண்டாம்..

  விடுங்கப்பா.. கமல்தான் எல்லா ( கண்ட.. கண்ட ) விருது விழாவுளையும்..நாள் பூரா காத்திருந்து விருது வாங்குறார்.. அவருக்கு குடுங்கப்பா..

 6. Raja says:

  பாண்டிசேரி பல்கலைகழகம் கொடுத்த டாக்டர் விருதையே வாங்கதவர். விஜய் டிவி விருது கமர்சியலான ஒன்று. இருட்ன்ஹாளும் சிவாஜி விருது என்பதால் சிவாஜி வீட்டிற்கே சென்று வாங்கியது தான் தலைவர் ஸ்டைல்.

 7. Manoharan says:

  விருது கொடுக்கும் நோக்கமும் விருது கொடுப்பவர்களின் நோக்கமும் விளம்பர நோக்கில் இல்லாமல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர் நேரில் பெற்றுக் கொள்வார். சில நேரங்களில் இத்ற்க்கு விதிவிலக்கு உண்டு. தமிழக அரசின் விருது நோக்கமும் கலைஞர் டி.வி யின் விளம்பரத்துக்குத்தான். ஆனால் அது அரசு விழா என்பதால் அதை ரஜினி புறக்கணிக்கவில்லை.‌

 8. Robo Venkatesh says:

  Kamalhassan Vijay and Surya all are begging for awards. But Award Came to Rajini House ie power of Thalaivar Mass Da.Komalhassan and Dubuku Vijay better retire

 9. devraj says:

  hi, Thaliver was right, the TV wanted to increase its viewvership that is the reason they gave award to vijay, suriya etc,.The only chaps eligible were the Nadodigal team. Thaliver respects Sivaji hence he went to Annai illam to recieve it.

 10. Udhay says:

  ரோபோ வெங்கடேஷ் பாஸ்…கமலஹாசனின் கலை திறமை பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ரஜினியிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம் . கமல் விருதுக்கு அலைபவரா.? இதை உங்கள் ரஜினியே ஒத்துக்கொள்ளமாட்டார் . கமல எழுதிய திரைக்கதைகள் வெற்றி பெற்றிருக்கிறது , அவர் பாடிய பாடல்கள் வெற்றிபெற்றிருக்கிறது , அவர் நடிப்பை பல படங்களில் நிருபித்துவிட்டார் . தோழரே , ஷாருக் கான் ஒரு முறை தொட்டாவது பார்க்க வேண்டும் என்று ஆசை பட்ட நாயகன் கமல் . ********************

 11. Udhay says:

  அதே சமயம், நான் செந்தில் மோகன் k அப்பாஜி யின் கருத்தை முழுவதுமாக ஒத்துக்கொள்கிறேன் .

 12. mukesh says:

  கமல் சிறந்த நடிகர்தான். ஆனால் ஜேப்பியார் கல்லூரி தரும் டாக்டர் பட்டத்தை எல்லாம் என்னவென்று சொல்வது. கமல் எழுதிய திரைக்கதைகள் வெற்றி எத்தனை சொதப்பல் என்று கணக்கு போட்டால் தெரியும். ரஜினி அவர்கள் கூட திரைகதை விஷயத்தில் வெற்றி பெறவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஷாருக்கானே ஆசைபட்டார் என்று சொல்லி ஏன் கமலை தாழ்த்துகிறீர்கள். ஷாருக்கான் எல்லாம் ரஜினி, கமலுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு பெரிய நடிகர் கிடையாது. ஒரு காலத்தில் கமல் ரஜினி என்றிருந்த வரிசை பிறகு ரஜினி கமல் என்று மாறிப் போனதாக உங்கள் கமலே தெரிவித்தார் என்பதை வசதியாக மறக்கக்கூடாது.

 13. RAMAN/ says:

  புலவர்களே சாந்தமாக விளையாடுங்கள், புலமைக்கு சக்தி தேவைதான்,
  அது சண்டையாக மாறிவிடக்கூடாது.

 14. r.v.saravanan says:

  நடிகர் திலகத்தின் பெயரால் அமைந்த அந்த விருதினை, அன்னை இலத்துக்குச் சென்று பெற்றுக் கொண்டார் ரஜினி!

  இது தலைவர் ஸ்டைல்

 15. ஒருமுறை மட்டும் விஜய்டிவி விழாவில் பங்கேற்றார்…

  அது கமல் – 50 விழா.

  அது நட்புத் திருவிழா…

  உணர்ச்சி பொங்க இரண்டு நண்பர்களும் முத்தமிட்டுக் கொண்ட காட்சி, என் மனத்திரையில் அப்படியே நிற்கிறது.

  தலைவர் எது செய்தாலும் அதில் ஒரு எளிமை, இனிமை.

  ஜெகதீஸ்வரன்.

  http://sagotharan.wordpress.com

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)