BREAKING NEWS
Search

ரஜினி… ரஜினி மட்டுமே!

ரஜினியும் க்ளின்ட் ஈஸ்ட்வுட்டும்!

ஜினி குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும். எந்த வித எதிர்பார்ப்புமில்லாத ஒரு ரசிகனால் மட்டுமே அப்படியெல்லாம் எழுத முடியும்.

rajinikanth2

ஆர் இளவரசன் எனும் மிக இளம் வயது வரைகலை நிபுணர், அதுவும் திரைத் துறையைச் சார்ந்தவர் தனது வலைதளத்தில் ரஜினி குறித்து எழுதியுள்ள ஒரு கட்டுரையில் அந்த நேர்மையை உணர முடிந்தது.

அந்தக் கட்டுரையை சற்றே சுருக்கித் தருமாறு அவரிடமே கோரினோம்.  அதற்கிணங்க, அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரை, ரசிக நண்பர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்காட்டும். ரசிகர் மன்றங்களுக்கு வெளியே உள்ள ரசிகர்களுக்கு ரஜினி மீதான பார்வை எப்படியுள்ளது, ரஜினியை எப்படி அவர்கள் ரசிக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு நல்ல உதாரணம்.

க்ளின்ட் ஈஸ்ட்வுட் போன்ற மிகச்சிறந்த ஹாலிவுட் கலைஞர்களுடன் ஒப்பிட்டு, ‘தலைவரின்’ சிறப்புகளை இளவரசன் எழுதியிருக்கும் விதம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாகவே அமையும். அவரது கட்டுரை:

ரஜினி… ரஜினி மட்டுமே!

ஜினி!

ரஜினியைப் பார்த்து, சுருட்டைமுடி இருந்தாலும் கூட, ரஜினி போல முடிவெட்ட வேண்டும் என்ற ஆசையோடு, முடி வெட்டுபவரிடமும், அப்பாவிடமும் சண்டை போட்ட பலரில் நானும் ஒருவன். இது ஒருபுறமிருக்க, ரஜினியை உள்ளுக்குள் பிடித்தாலும், படித்தவர்களாலும், உலக சினிமாக்களை அலசி ஆராய்ந்த மேதைகள் போல் நடிக்கும் மேதாவிகளின் கூட்டத்தாலும் கிண்டலடிக்கப்படுவோமோ எனப் பயந்து ரஜினியை பிடிக்காததுபோல வெளியில் காட்டிக்கொள்ளும் கூட்டம் ஒன்று உள்ளது.2802213529_aa61c3235e1

மிகச் சமீபம் வரையில் அக்கூட்டத்தில் இருந்தேன் (இப்போது இந்தக் கூட்டம் ரொம்ப ரொம்ப சுருங்கிவிட்டது… அக்கூட்டம் இக்கட்டுரையின் முடிவில் அழியுமென இல்லாமல் போகுமென  நம்புவோம!)

பின் உலகத்தின் மூலை முடுக்கில் உள்ள பல கோடி சினிமா ரசிகர்களால் போற்றப்படும் க்ளின்ட் ஈஸ்ட்வுட்டின் திரைப்படங்களை சளைக்காமல் பார்த்து ரசித்தபோது என் மனதில் அடிக்கடி ஒரு உருவம் வந்துபோனது.

அது… ரஜினிகாந்த்!

க்ளின்ட் ஈஸ்ட்வுட்டை ரஜினி பின்பற்றவில்லை. இருந்தாலும் இருவரிடமும் ஒரே மாதிரியான தனித்தன்மை உண்டு. அதை வெளிக் கொணரும் நோக்கிலேயே இந்தக் கட்டுரை.

ரஜினியின் அரசியல் வாழ்க்கையையோ, அவரது ஆன்மீக வாழ்க்கையையோ நியாயப்படுத்த, ஏன் நான் தொடவே போவதில்லை. அவர் உயிராய் நேசிக்கும் அவரது திரையுலக வாழ்க்கையை அலசவே இதை எழுதுகிறேன். இந்தக் கட்டுரை ரஜினியின் தீவிர ரசிகர்களுக்காக மட்டுமல்ல.

ரஜினியை ஒரு கோமாளி என்றும், “பல நடிகர்கள் மிகவும் உழைத்து சம்பாரிக்கும் காசை, ஒன்றுமே செய்யாமல், உடல் அசையாமல் சம்பாரித்துவிட்டுப் போகிறார் ரஜினி”, போன்ற வசனங்களைச் சொல்லித் திரியும் ரஜினி வெறுப்பாளர்களுக்கும், சினிமாவின் சராசரி ரசிகர்களுக்கும்தான். மிகவும் முக்கியமாக, ரஜினியின் அரசியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை, போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இதைப் படியுங்கள்.clint_eastwood

இது ரஜினிக்கே மிகவும் பிடித்த ரஜினி என்ற நடிகரைப் பற்றியது மட்டுமே!!!

ஆசியாவில், அகில உலக நட்சத்திரம் ‘ஜாக்கி சானு’க்கு (Jackie Chan) அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குகிறார் ரஜினி, தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் சூப்பர் ஸ்டார். ஃபிரஞ்சு மொழிப் படத்தில் ஒரு காட்சியில் பின்ணணியில் ரஜினி படம் தொலைக்காட்சியில் ஓடுகிறது. ஜப்பானில் ரஜினிக்காக உயிரையும் கொடுக்கும் கூட்டம் ஒன்று உள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ அவரை சர்வதேச சூப்பர் ஸ்டார் என்கிறது.

குறிப்பிட்ட ஒரு மாநில மொழியில் மட்டுமே நடிக்கும் ரஜினி எப்படி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? தமிழ்நாட்டின் சொத்தான ரஜினி மேல் பிரஞ்சுக்காரனுக்கும், ஜப்பான்காரனுக்கும் என்ன இவ்வளவு பாசம்?

ரஜினி ஆதரவாளர்கள் வழக்கமாக சொல்லும், “அவரு ரொம்ப சிம்பிள்…. தொழிலை தெய்வமாக மதிப்பவர்…” போன்றவை அல்ல, இதற்குக் காரணங்கள்.rajini207

அவரை மக்களுக்கு பிடித்திருப்பதற்கு காரணம் அவருக்கு இயற்கையிலேயே, பிறப்பிலேயே அமைந்துவிட்ட தனித்தன்மையும், ஆங்கிலத்தில் Charm, Charisma எனப்படும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வசீகரமும் தான்.

என்னதான் உயிரைக் கொடுத்து வெறியாய் நடித்தாலும் இதெல்லாம் வராது… ஏனெனில் இது இயற்கையாய் அமையப் பெறுவது. சிலபேருக்குதான் இது உண்டு. என்னதான் சில பூனைகள் வரிவரியாய் சூடு போட்டுக் கொண்டாலும், அவை புலி ஆகா!

ரஜினியைப் போன்ற நடிகர்கள் மொத்த அண்டத்திலேயே வெகுசிலர்தான். Clint Eastwood, Charlie Chaplin, Al Pacino மற்றும் இளைய தலைமுறையில் Johnny Depp.

இந்தியாவில், ஏன் ஆசியாவில் ரஜினிக்கு மட்டுமே அந்த சிறப்பு உண்டு.

Clint Eastwood தனது சமீபத்திய மிகப்பெரிய வெற்றிப் படமான ‘Gran Torino’ வரை தனது தோற்றத்தை மாற்றியோ, குரலை மாற்றியோ நடித்ததில்லை. தனது எழுபத்தெட்டாவது வயதில் கூட மிகப்பெரிய துப்பாக்கியைத் தூக்கி, வில்லன்களிடம், “I blow a hole in your face and then I go in the house… and I sleep like a baby. You can count on that.(உன் முகத்தில் சுட்டு உன்னைக் கொன்றுவிட்டு, ஒரு குழந்தையைப் போல என்னால் நிம்மதியாக தூங்க முடியும்!)” என பஞ்ச் டயலாக் பேசினாலும் திரையரங்கில் விசில் பறக்கிறது.

இந்த ஸ்டைல் உள்ள நடிகர்களை ஹாலிவுட்டிலும் மாஸ் ஹீரோக்களாகவே பயன்படுத்துகிறார்கள். இந்த நடிகர்களையெல்லாம் அழுகவிட்டும், வில்லனிடம் கெஞ்ச விட்டும் படமெடுத்தால் அங்கே யாரும் பார்க்க மாட்டார்கள். க்ளின்ட் ஈஸ்ட்வுட் காவல்துறை அதிகாரியாக, ரஜினியின் கொடி பறக்குது ‘சிவகிரி’ பாணியில் அதிரடியாக நடித்த திரைப்படம்தான் ‘Dirty Harry’. இதில் அவர் சொல்லும் “Go on… Make my day” போன்ற வசனங்களை, மிகப்பெரும் நடிகர் De Niro சொல்வதுபோல் கற்பனை செய்தால் கூட மகாகேவலமாக இருக்கும்.

அதேபோல் ரஜினியின், “ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” போன்ற வசனங்களை இந்தியாவில் வேறு யார் சொன்னாலும் பொருத்தமில்லாமல் தான் இருக்கும். ஆனால் ரஜினி அதை சொல்லும்போது அவரைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடிக்கும்.

ரஜினி, க்ளின்ட் ஈஸ்ட்வுட் போன்றோர் மிகப்பெரும் நடிகர்கள், நடிகர்கள் ஆகாமல் இருந்திருந்தால் கூட, அவர்களின் தனிப்பட்ட வட்டாரத்தில் அவர்கள் ஒரு ஹீரோக்களாகவே போற்றப்பட்டிருப்பர். அவர்களின் தோற்றம், பேச்சு, செயல் அப்படி. அதை யாராலும் மறுக்க முடியாது.

ரஜினியின் குறிப்பிட்ட சில படங்களே அவரின் திறமையின் ஒரு பகுதியை வெளிக்கொண்டு வந்த படங்கள். எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், தளபதி, மூன்று முடிச்சு, தில்லு முல்லு… இப்படி…

தளபதியில் மம்முட்டி சாகும் தருவாயில் எதிரிகளால் அடித்துப் போடப்படும் போது மருத்துவமனையில் அவரிடம் ரஜினி அரற்றும் காட்சி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. சமீபத்தில் வந்த சிவாஜி, ரஜினியை மட்டுமே முதலாய் வைத்து எடுக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். பலமான கதையே இல்லாமல், வெறும் ரஜினியால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்த முடிகிறதெனில், நல்ல கதையோடு, ரஜினி என்ற திறமையும், கம்பீரமும் வாய்ந்த ஒரு மாபெரும் நடிகரை சரியாய் பயன்படுத்தி எடுக்கப்படும் படம் எப்படிப்பட்ட வெற்றி பெறும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

சமீபத்தில் ஒரு தனியா டிவியின் விருது நிகழ்ச்சியில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டபோது, ரஜினியே, தான் ஷாரூக்கான் நடித்த ‘Chak de India’ திரைப்படம் போன்ற கதையுள்ள படங்களில் நடிக்க விரும்புவதாகத் பேசியது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.

ரஜினி என்ற, திரைப்படக் கல்லூரியில் இணைந்து படிக்கும் அளவுக்கு சினிமாவைக் காதலித்த அந்த நடிகனுக்குள் இருக்கும் சினிமா தாகத்தையும் ஏக்கத்தையும் உணர்த்தியது ரஜினியின் அந்தப் பேச்சு.kuselan-audio-launch-12

‘Chak De India’ திரைப் படத்தில் படத்தின் கதாநாயகனான, அந்த ஹாக்கி பயிற்சியாளர் வேடத்தில் ரஜினியை கற்பனை செய்து பாருங்கள். நினைக்கவே புல்லரிக்கிறது. பிய்த்து உதறியிருப்பார். ஆனால் இங்கு ரஜினியை வைத்து சிவாஜி எடுக்கத்தான் விரும்புகிறார்கள்… ‘Chak de india’ சீண்டப்படுவதேயில்லை!

இங்கும் ‘Chak De India’ எடுக்க இயக்குனர்கள் உள்ளார்கள். பல இயக்குநர்கள் அப்படி சொல்ல முடியும். ஆனால் ரஜினி என்ற இமயத்தை நெருங்கி கதை சொல்ல இவர்கள் தயங்குவதாகவே நான் கருதுகிறேன். ஆனால் ரஜினி எப்போதுமே தனக்குள் இருக்கும் நடிகருக்கான சரியான தீனி வரும்போது பட்டினி போட்டதில்லை என்பதை அந்த இயக்குனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ரசிகர்கள் உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான அந்த மாபெரும் நடிகரிடம் நான் இன்னொரு பாட்ஷாவையும், இன்னொரு படையப்பாவையும் எவ்வளவு எதிர்பார்க்கிறேனோ, அதேபோல் இன்னொரு தில்லுமுல்லுவையோ, இன்னொரு முள்ளும் மலருமையோ எதிர்பார்க்கிறேன்.

இதுபோல் மாறுபட்ட இரண்டு வகைப் படங்களிலும் நடிக்க உலகத் திரைப்பட வரலாற்றில் ஒருவரால் மட்டுமே முடிந்தது… முடியும்!

அவர் ரஜினி… ரஜினி மட்டுமே!

-ஆர். இளவரசன்
www.ilavarasanr.blogspot.com/

தொகுப்பு: சங்கநாதன்
11 thoughts on “ரஜினி… ரஜினி மட்டுமே!

 1. BaijuBalakrishnan

  “உலக சினிமாக்களை அலசி ஆராய்ந்த மேதைகள் போல் நடிக்கும் மேதாவிகளின்
  கூட்டத்தாலும் கிண்டலடிக்கப்படுவோமோ”

  மிக‌ மிக மிகச் சரியான கருத்து……

  ஆர்.இளவரசன் குறிப்பிடுவ‌து ந‌ம‌து த‌ளத்திலும் க‌ருத்து கூறுவதாக நினைத்து ரசிகர் பெருமக்களை வம்பு செய்யும் பிர‌ச‌ன்த‌ன் (prashanthan) போன்றவ‌ர்க‌ளைத்தான் என்பதுதான் என‌க்கு சட்டென புரிகின்றது…..

  மிக்க நன்றி இளவரசன்….அருமையான‌ பதிவு

 2. சூர்யா

  இளவரசனாரே, கட்டுரை ரொம்ப அருமை.

  //…உலக சினிமாக்களை அலசி ஆராய்ந்த மேதைகள் போல் நடிக்கும் மேதாவிகளின் கூட்டத்தாலும்…//

  இது மேதாவிகள் கூட்டம்போல தோன்றும் மனநோயாளிகள் கூட்டம். இதை ஒன்றும் செய்யமுடியாது. குரைப்பவை குரைக்கட்டும் என்று விடவேண்டியதுதான்.

  //…மிகச் சமீபம் வரையில் அக்கூட்டத்தில் இருந்தேன்…//

  இந்தக்கட்டுரை இன்னும் உங்கள் வலைப்பூவில் இடம்பெறவில்லையே… இன்னும் வெளியே வரலையோ… (மத்தபடி உங்க கவிதையெல்லாம் அருமை….)

 3. சூர்யா

  ”…//…மிகச் சமீபம் வரையில் அக்கூட்டத்தில் இருந்தேன்…//

  இந்தக்கட்டுரை இன்னும் உங்கள் வலைப்பூவில் இடம்பெறவில்லையே… இன்னும் வெளியே வரலையோ… (மத்தபடி உங்க கவிதையெல்லாம் அருமை….)….”

  மன்னிக்கவும்… இப்போதான் ஜூன் மாதப்பதிவுல பாத்தேன். சரண்டர்.

 4. ilaya thalapathi

  இன்றைய கல கட்டத்தில் உலக மஹா நாயகன் ஒருவர் தான். அந்த சிங்கம் இளைய தளபதி விஜய் அண்ணா மட்டுமே என்பதை உறுதியை கூறுகிறேன்.

 5. rajak

  this is the kind of article we expect in envazhi. Not all the political heavy dose. great article..

 6. J Arun

  இன்னொரு தில்லுமுல்லுவையோ, இன்னொரு முள்ளும் மலருமையோ எதிர்பார்க்கிறேன்.

 7. கிரி

  இந்த பதிவிற்கு அந்த தளத்திலேயே பின்னூட்டம் இட்டதாக நினைவு ..

  நல்லா எழுதி இருக்கீங்க இளவரசன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *