BREAKING NEWS
Search

ரஜினி… மனிதர்களில் ஒரு மாணிக்கம்! – ராம நாராயணன்

ரஜினி… மனிதர்களில் ஒரு மாணிக்கம்! – ராம நாராயணன் புகழாரம்

னிதருள் மாணிக்கம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று புகழாரம் சூட்டினார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.

rajini-009-copy-copy1

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஈரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை சத்யம் சினிமா வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ரஜினி, ஆடியோவை வெளியிட்டார்.

விழாவில் தமிழ் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள், இயக்குநர்கள் அனைவரும் வந்திருந்தனர். அவர்கள் பேசியதிலிருந்து:

கஷ்டத்தில் உதவும் என் நண்பர் ரஜினி! – இயக்குநர் ஷங்கர்

“இன்று காலையில் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. ‘A real friend is one who walks in when the rest of the world walks out…!’ என்ற அந்த எஸ்எம்எஸ்ஸூக்கு முழு அர்த்தம் நமது சூப்பர் ஸ்டார் அவர்கள்தான்.

நான் பெரிய பெரிய படங்களை இயக்குவதால் எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை என நினைக்க வேண்டாம். எனக்கும் கஷ்டங்கள், தாங்க முடியாத வேதனைகள் உண்டு. இந்த சமயங்களில் கேட்காமலேயே ஒரு உதவி வரும்… அது சூப்பர் ஸ்டாரிடமிருந்து.

சிவாஜி, எந்திரன் படங்களில் நான் அவருடன் பணியாற்றியதன் மூலம், ஒரு மிகச் சிறந்த நண்பரைப் பெற்றேன்.

எனக்கு பல முக்கிய தருணங்களில் பெரும் தூணாகவும், ஆறுதலாகவும் இருந்தவர், இருப்பவர் நமது சூப்பர் ஸ்டார். நான் அவரிடம் இந்த விழாவுக்கு தேதி கேட்டேன். அவர் உடனடியாக ஒப்புக் கொண்டு என்னை பெருமைப்படுத்தினார். அவருக்கு எப்படி நன்றி சொல்வேன்…!

மனிதருக்குள் மாணிக்கம் நம் ரஜினி! – ராம நாராயணன்

rajini-007-copy

“எங்கள் அன்பு சூப்பர் ஸ்டார் இந்த விழாவுக்கு வந்திருப்பதிலிருந்தே இந்தப் படம் பெறப்போகும் வெற்றியின் பிரமாண்டம் தெரிகிறது.

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கலைஞர்களிலே மிகச் சிறந்த நடிகர்…
நடிகர்களிலே மிகச் சிறந்த மனிதர்…
மனிதர்களிலே அவர் ஒரு மாணிக்கம்…

இது அவருடன் பழகிய எல்லோரும் புரிந்து கொண்ட உண்மை. அவரால் நமது மண்ணுக்கே பெருமை!”

யாரையும் நஷ்டமடைய விடாத ஈர மனசுக்காரர் ரஜினி! – கலைப்புலி ஜி சேகரன்

“தமிழ் மண்ணாம் கிருஷ்ணகிரியில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து, இன்று தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கும் என் அன்புக்குரிய அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஈர மனசுக்கு சொந்தக்காரர். அந்த மனிதரைத் தாங்கி நிற்கும் இந்த ரசிகர்களும் ஈரமனசுக்காரர்களே.. இந்த ஈரம் இருதரப்பிலும் இருப்பதால்தான் தமிழ் சினிமா தழைத்து நிற்கிறது.

நம் அன்பு அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்கள் எப்போதும் தயாரிப்பாளர்கள் -விநியோகஸ்தர்களின் பக்கம் நிற்பவர். அந்த நல்ல மனசு அவருக்கு இருப்பதாலேயே, கடந்த முறை நாங்கள் குசேலனை வாங்கியபோது, ஒரு முறைக்கு இரு முறை, ‘பார்த்து விலைகொடுங்க… அதிகமா கொடுத்துடாதீங்க’ என விநியோகஸ்தர்களையெல்லாம் அவர் எச்சரித்தார்.

அதையும் தாண்டி, சில பேராசைக்காரர்களின் சூழ்ச்சியால் நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல். ஆனால் நமது சூப்பர் ஸ்டார், தானே முன்நின்று இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தார். அவரது நல்ல மனசைப் புரிந்து கொண்டு நாமும் அவருக்கு ஒத்துழைத்தோம். இவரால் யாருக்குமே நஷ்டம் வராது… வர விட மாட்டார் என்பதற்கு இது ஒரு சான்று…”

ரஜினி என்ற நல்ல மனிதர்! -மிஷ்கின்

“வியட்நாமில் ஒரு முறை ஒரு நிலத்தை நான்காகப் பிரித்து, அதன் ஒரு பகுதியில் நல்ல மனிதர்கள் சிலர் மூலம் நெல் விதைத்தார்களாம். மற்ற பகுதிகளில் சாதாரணமாக விதைத்தார்களாம். நல்லவர்கள் விதைத்த பகுதியில் மட்டும் நெல் இரண்டு மூன்று அங்குலம் அதிக உயரம் வளர்ந்து அமோக விளைச்சல் தந்ததாம். உடனே மீண்டும் மீண்டும் இந்த சோதனையைச் செய்து பார்த்தார்களாம்.

ஒவ்வொரு முறையும் நல்லவர்கள் விதைத்த விதைகளே மிகச் சிறந்த விளைச்சலாக மாறியது.

இந்தப் படமும் அப்படித்தான். சூப்பர் ஸ்டார் என்ற நல்லவரால் வாழ்த்தப்பட்ட இந்தப் படத்துக்கு, அதை விட வேறு என்ன பெரிய ஆசீர்வாதம் கிடைத்துவிட முடியும்! ”

மாற்று சினிமாவின் ஆரம்பம் ரஜினி! – வசந்த பாலன்

rajini-011-copy

“தமிழ் சினிமாவில் மாற்று சினிமா என்ற கருத்தை அன்றே அழுத்தமாக விதைக்கப்பட துணை நின்றவர் நமது சூப்பர் ஸ்டார். அவர் தந்த முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், எங்கேயோ கேட்ட குரல் போன்றவைதான் பிரபலமான மாற்று சினிமாக்கள்.  ‘படம் என்றால் அதைப் போல எடுக்கணும்’ என எல்லோரையும் வியக்க வைத்தவை ரஜினி சாரின் இந்தப் படங்கள்.

இன்று அந்த வழியில் படங்களை தயாரிப்பவர் இயக்குநர் ஷங்கர்…”

இந்திய சினிமாவின் உச்சம் எந்திரன்! – ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா

“பொதுவாக இயக்குநர் ஷங்கர் பற்றி ஒரு குற்றச்சாட்டு உண்டு. தான் தயாரிக்கும் படத்துக்கு குறைவாக செலவு செய்யும் அவர், தான் இயக்கும் படங்களுக்கு மட்டும் பெரிய பட்ஜெட் போட்டு விடுகிறார் என்பார்கள். சில தினங்களுக்கு முன் என்னிடம் கூட இதைக் கூறினார்கள்.

இங்கே ஒன்றை நான் கூற வேண்டும்… சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரூ.150 கோடிக்கு மேல் செலவழித்து எந்திரனை எடுக்கக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் மீதுள்ள நம்பிக்கைதான். இந்தப் படத்துக்கு ரஜினி அவர்களும், ஷங்கரும் உழைத்துள்ள உழைப்பு அபாரமானது. அதைப் பார்த்து கலாநிதி மாறன் அவர்களே பெரிதும் வியந்து போனார்.

எந்திரனின் ஒவ்வொரு ப்ரேமையும் பார்த்துப் பார்த்து இழைத்துள்ளனர் ரஜினியும் ஷங்கரும். இந்தப் படம் வெளியானால் இந்திய சினிமாவின் உச்சகட்டமாக அமையும் என்பதை மட்டும் கூறிக் கொள்வேன்.

சூப்பர் ஸ்டார் நடித்து பெரும் வெற்றி கண்ட நினைத்தாலே இனிக்கும் படத்தின் இப்போதைய ரீமேக்கை சன் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்தப் பெயரில் அப்படி ஒரு ஈர்ப்பு உள்ளது…”

ரஜினி என் ஆதர்ஸ நாயகன்! – சசிகுமார்

“தமிழ் சினிமாவின் முதல்வர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கைகளால் வெளியிடப்பட்ட ஆடியோவை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்.

அவர் படங்களைப் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது சில மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டருக்கு செல்பவன் நான். மாலை 5.30 மணிக் காட்சிக்கு, மதியம் 2 மணிக்கே போய் உட்கார்ந்துவிடும் ஆசாமி நான். அவர் படங்கள் பார்த்தே வளர்ந்தேன். அவர் படங்களே என்னை ஒரு இயக்குநராக மாற உத்வேகம் தந்தன.

எனக்கு மட்டுமல்ல… பலருக்கும் அவர்தான் ஆதர்ஸ நாயகன். அப்படிப்பட்டவரின் நிகழ்ச்சிக்கு வர நான் நேற்றிலிருந்தே என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். இன்று காலை அவருக்கும் முன்பாகவே நிகழ்ச்சிக்கு வந்துவிட வேண்டும் என அடித்துப் பிடித்து ஓடி வந்து சேர்ந்தேன்…”

rajini-001-copy

கடவுள் ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது!- ஈரம் பட இயக்குநர் அறிவழகன்!

“நான் எந்த அளவு ரஜினி ரசிகன் என்பது என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், ஷங்கர் சாருக்கும் தெரியும். என் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை ஆக்கிரமித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.  நானும் என் அண்ணனும் அவரைப் பற்றிதான் நாள் முழுக்க பேசிக் கொண்டே இருப்போம். அவர் படங்களை எத்தனை முறை பார்த்திருப்போம் எனத் தெரியாது.

அவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கா விட்டால், அந்தப் படத்தை ரசிக்கிற மன நிலையே இல்லாமல் போய்விடும். அப்படி அவர் மீது அன்பு, ஆசை கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இன்று அவர் என் விழாவுக்கு வந்திருப்பதை என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை.

அவர் இந்த விழாவுக்கு வந்தால் கடவுள் ஆசீர்வாதம் கிடைத்தது போல் இருக்கும் என ஷங்கர் சாரிடம் சொன்னேன். அந்த ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்துவிட்டது இப்போது…”

-வினோ

(அடுத்து… சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சில அரிய நிமிடங்கள்… !)
11 thoughts on “ரஜினி… மனிதர்களில் ஒரு மாணிக்கம்! – ராம நாராயணன்

 1. MSlondon

  Aiyaaa Vino…. Suspense vechu kollareenga… Thayavu seithu seekrum podunga… Arumaiyana pathivu….. Mikka nandri…

  MS

 2. ARIVUKAN

  WHEN ONE PERSON IS RICH,WHO GETTING BENEFIT FROM HIM THEY HAVE TO TALK LIKE THIS IT IS VERY NECESSARY FOR THEM,RAJANI IS NOT A SUPPERSTAR ONLY CINEMA, IN LIFE TO HE IS SUPPERSTAR.

 3. karthik gavaskar

  What to tell about this superb collection of events! I am spell bound on reading this. Envazhi.com made us (Rajini Fans) feel proud by bringing this function in front of our eyes. Hats off to you guys!!. En thai mozhiyile chollanumna – “Indha padaippu oru kaaviyamaiyya- Rajini rasigargalucku, kangal kulamagi kidackinrana(Anandha kanneeral). Thalaivar Vazhga! Thalaivar pugazh parappum Envazhi.com vazhga!! Rasiga perumakkal Vazhga!!!

  Thanks,
  Karthik.T.

 4. ஈ ரா

  ////நம் அன்பு அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்கள் எப்போதும் தயாரிப்பாளர்கள் -விநியோகஸ்தர்களின் பக்கம் நிற்பவர். அந்த நல்ல மனசு அவருக்கு இருப்பதாலேயே, கடந்த முறை நாங்கள் குசேலனை வாங்கியபோது, ஒரு முறைக்கு இரு முறை, ‘பார்த்து விலைகொடுங்க… அதிகமா கொடுத்துடாதீங்க’ என விநியோகஸ்தர்களையெல்லாம் அவர் எச்சரித்தார்.///

  இப்போ சொல்லுங்க….

 5. GokulDass

  அடுத்து… சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சில அரிய நிமிடங்கள்… !)

  Eppo Boss

 6. பாசகி

  ஈ ரா says:
  //////நம் அன்பு அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்கள் எப்போதும் தயாரிப்பாளர்கள் -விநியோகஸ்தர்களின் பக்கம் நிற்பவர். அந்த நல்ல மனசு அவருக்கு இருப்பதாலேயே, கடந்த முறை நாங்கள் குசேலனை வாங்கியபோது, ஒரு முறைக்கு இரு முறை, ‘பார்த்து விலைகொடுங்க… அதிகமா கொடுத்துடாதீங்க’ என விநியோகஸ்தர்களையெல்லாம் அவர் எச்சரித்தார்.///

  இப்போ சொல்லுங்க….///

  🙂 🙁

 7. Manoharan

  ஈ ரா says:

  ////நம் அன்பு அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்கள் எப்போதும் தயாரிப்பாளர்கள் -விநியோகஸ்தர்களின் பக்கம் நிற்பவர். அந்த நல்ல மனசு அவருக்கு இருப்பதாலேயே, கடந்த முறை நாங்கள் குசேலனை வாங்கியபோது, ஒரு முறைக்கு இரு முறை, ‘பார்த்து விலைகொடுங்க… அதிகமா கொடுத்துடாதீங்க’ என விநியோகஸ்தர்களையெல்லாம் அவர் எச்சரித்தார்.///

  இப்போ சொல்லுங்க….

  All are barking dogs.

 8. Suresh கிருஷ்ணா

  //anvarsha says:
  August 10, 2009 at 7:02 am
  no one seems to have spoken about EERAM.. //

  -அதெல்லாம் பேசாம இருப்பாங்களா… நம்மாளு அதையெல்லாம் பில்டர் பண்ணிட்டு, தலைவர் பத்தி பேசியதை மட்டும் நமக்குத் தந்திருக்கார்… என்ன வினோ… சரியா?

  😉

  -Suresh கிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *