BREAKING NEWS
Search

ரஜினி பிறந்த நாளில் வெளி வருமா கோவா?

ரஜினி பிறந்த நாளில் வெளி வருமா கோவா?

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல்படம் சுல்தான் – தி வாரியர் என்று கூறப்பட்டாலும், உண்மையில் முதலில் வெளியாகவிருந்த படம் Sultan_003 copyகோவா. ‘ரஜினியின் மகள்தானே… அப்பா காசில்தான் படமெடுப்பார்’ என்று பலரும் கூறி வந்த நிலையில், வெளியில் கடன் வாங்கித்தான் படம் எடுப்பதாக சௌந்தர்யா கூறியிருந்தார்.

படப்பிடிப்பு முடிந்து ஆடியோ ரிலீஸூக்கு சௌந்தர்யா தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில், சௌந்தர்யாவுக்கு பைனான்ஸ் செய்தவர் கோர்ட்டுக்குப் போய்விட, இப்போது படத்துக்கு டிசம்பர் 11 வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ரூ.1.6 கோடிக்காக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார் அந்த பைனான்ஸியர்.

டிசம்பர் 12 ரஜினி பிறந்த நாள். அதற்கு முன் ஆடியோ வெளியாகி, பின்னர் படம் வெளியாக வேண்டும். சாத்தியமா என்பது ரசிகர்களின் கேள்வி.

என்ன சொல்கிறார் சௌந்தர்யா?

அவர் தரப்பில் ஆக்கர் ஸ்டுடியோவிலிருந்து இன்று சொல்லப்பட்ட பதில்:

“இது ஒரு சீரியஸ் மேட்டர் இல்லை. ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். நிச்சயம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். சினிமா உலகில் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம் இது.

ரஜினி மகள் என்பதால் இதற்கு தேவையற்ற அழுத்தம், பப்ளிசிட்டி தருகிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீடு குறித்தும், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். படம் சிறப்பாக வந்துள்ளது… அதுதான் முக்கியம்!”

-என்வழி




7 thoughts on “ரஜினி பிறந்த நாளில் வெளி வருமா கோவா?

  1. r.v.saravanan

    படம் சிறப்பாக வந்துள்ளது… அதுதான் முக்கியம்

    yes…………

  2. saranya

    ஆனா அவமானம் அவமானம் தானே…….. இந்த மாதிரி issue எல்லாருக்கும் வரது தான்…. ஆனா தலைவர் விஷயம்னா அது சின்னதா இருந்தாலும் ஊதி பெருசா ஆக்குவாங்க…. இந்த மாதிரி விஷயம்னா…. இத கேள்விபட்டதும் மனசு எவ்ளோ கஷ்டம் இருக்கு தெரியுமா……..

  3. kartigayan

    Rajini daughter should not give chances to anyone to speak like. This is not only affecting her but aslo rajini.

    Also one morething there will be no smoke without fire. So i think she might have neglected the financier. That’s why he has gone to court.

    All the fingers are not same though they are from the same hand!!!!!!!!!!!!

    Thanks,
    Kartigayan

  4. kartigayan

    Rajini’s daughter should not give chances to anyone to speak like this. This is not only affecting her but aslo rajini.

    Also one morething there will be no smoke without fire. So i think she might have neglected the financier. That’s why he has gone to court.

    All the fingers are not same though they are from the same hand!!!!!!!!!!!!

    Thanks,
    Kartigayan

  5. r.v.saravanan

    “இது ஒரு சீரியஸ் மேட்டர் இல்லை. ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்

    ரசிகர்கள் கவலைப்paduvadhu rajini kku endha kalangamum varak kudadhu
    endru than

  6. kartigayan

    Also the same girl has spent more then 60 crores for a cartoon film called Sultan.
    I don’t think this is sensible. The film is yet to be complete. I don’t know how much she is going to spend for this still.

    Even to say Rajini is also taking too much worthless risks for Endhiran believing that useless Shankar. He will soon realize it.

    Growth is not by acting in big banners and in big films. It is in acting in good films with good story and a nice message to the public.

    So if that is the case he should always select and act in low budget films and should give more profit. Also to his age and face he should do justice by getting less pay.

    This applies to all actors and not only to Rajini.

    Guys like Kamal, Vijay, Ajith and all language actors should concentrate in acting good movie rather then useless movies.

    Also we should be watch only good movies and not all the useless ones. Only then this actors will change or will be replaced by new faces and talents.

  7. saranya

    low budget padamaana kuselan vanthuche. rasigargal paakalanaalum paravailla. aanaa namma makkal enna senjaanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *