BREAKING NEWS
Search

ரஜினி பற்றிய கட்டுரை… அமெரிக்கப் பத்திரிகையிடம் மன்னிப்பு கேட்ட இந்தியா டுடே!

ரஜினி பற்றிய கட்டுரை… அமெரிக்கப் பத்திரிகையிடம் மன்னிப்பு கேட்ட இந்தியா டுடே!

2001 தமிழக சட்டமன்ற தேர்தல் நேரம்….

அன்றைக்கு தமிழக தேர்தல்இறுதிக் கட்ட நிலவரம் குறித்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார், இந்தியா டுடே (தமிழ்) பொறுப்பாசிரியர்.

வேறு ஒரு பத்திரிகையின் தலைமைப் பொறுப்பாசிரியராக இருந்த நான், 20 தொகுதிகளில் பயணம் செய்து, ‘அலையில்லாத இந்தத் தேர்தலில் திமுக மூழ்கிப் போவது உறுதி’ என்ற கட்டுரையைத் தந்திருந்தேன்.

அதாவது எல்லோரும் திமுக ஜெயிக்கும் என்று கூறிவந்த சூழலில், அதிமுக ஜெயிக்கும் என்று சொன்னது என்னைப் போல ஓரிருவர்தான். கட்டுரைக்கு சம்பளம் எதையும் பெறவில்லை. நட்பு அடிப்படையில் தரப்பட்டது. ஆனால் அந்தக் கட்டுரை வெளியாகவில்லை!

அதே நேரம், வேறு தலைப்பில் அந்த இதழ் பொறுப்பாசிரியர் வெளியிட்ட கட்டுரையில், நான் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் இடம்பெற்றிருந்தன. அதன் பிறகு அவருடன் பேசுவதைக் கூட நிறுத்திவிட்டேன் என்பது வேறுவிஷயம்.

ஆனால் எல்லோரும் இதே போல இருந்துவிடுவார்களா என்ன… ஒரு அமெரிக்க ஆன்லைன் பத்திரிகையில் ரஜினி பற்றிய ஒரு கட்டுரையை, இந்தியா டுடே அப்படியே எடுத்தாள, வெளுத்துவிட்டார்கள். முதன்மை ஆசிரியரான அருண் பூரி மன்னிப்பு கேட்டும்கூட விடவில்லை.

ஏற்கெனவே பல முறை இந்தியா டுடே கட்டுரைகளின் அசல் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் கூட வட இந்திய பத்திரிகையாளர் நிரஞ்சனா, தனது கட்டுரையை இந்தியா டுடேயின் டெபுடி எடிட்டர் தமயந்தி தத்தா  காப்பியடித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

ரஜினி விஷயத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குத்துவது இந்தியா டுடே ஸ்டைல்.

நடுநிலை என்ற பெயரில், திட்டுகிறார்களா, பாராட்டுகிறார்களா என்றே தெரியாத அளவுக்கு மையமாக கட்டுரை எழுதுவது அவர்கள் பாணி. பாபா சமயத்தில் கடுமையான விமர்சனம், சந்திரமுகி நேரத்தில் பாராட்டு, மீண்டும் குசேலன் சமயத்தில் காலை வாரிவிடுதல், எந்திரன் சமயத்தில் சிறப்புக் கட்டுரை, அவ்வப்போது சக்திமிக்க 50 இந்தியரில் ஒருவர் ரஜினி என்ற பட்டியல்… இதுதான் ரஜினி விஷயத்தில் இந்தியா டுடே பார்முலா. ஆனால் அவர் கண்டு கொள்வதில்லை.

அமெரிக்கக் கட்டுரையை இந்தியா டுடே எடிட்டர் இன் சீப் காப்பியடித்தது மற்றும் அதைத் தொடர்ந்து அருண் பூரி மன்னிப்பு கேட்டது ஆகியவை  தொடர்பாக எழுந்த பிரச்சினை குறித்து  பெருமளவில் இப்போது வட இந்தியா மீடியாவில் விவாதம் கிளம்பியுள்ளது.

இதுபற்றி தட்ஸ்தமிழில் வெளியாகியுள்ள கட்டுரையை அப்படியே தருகிறோம்:

எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது.

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்” என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார்.

கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது:

“ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜாக்கி சான் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 1980லிருந்தே சொந்தமாகப் படங்கள் தயாரித்து, இயக்கி, நடித்து வரும் அவர், ரஷ் ஹவர், கராத்தே கிட் என பல ஹாலிவுட் படங்களின் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்.

ஆனால் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இரண்டாவது இடம் யாருக்கு என்று உங்களால் கண்டிப்பாக யூகிக்க முடியாது. வழுக்கை விழுந்த தலை, நடுத்தர வயது கொண்ட அவர் இந்தியாவின் தமிழ்நாடு என்ற மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த ரஜினிகாந்த் வெறும் நடிகரில்லை. எந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாத ஒரு இயற்கைச் சக்தி மாதிரி. புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம் (If a tiger had sex with a tornado and then their tiger-nado baby got married to an earthquake, their offspring would be Rajinikanth!). அதாவது அவரது படங்களில் குறிப்பிடப்படுவது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

இதுவரை உங்களுக்கு இவரைத் தெரியவில்லை என்றால், வரும் அக்டோபர் 1-ம் தேதி தெரிந்து கொள்வீர்கள். அன்றுதான் அவரது எந்திரன் படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் இதுவரை தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் உருவானது எந்திரன்தான். இரண்டாயிரம் பிரிண்டுகளுக்கும் மேல் ஒரே நேரத்தில் வெளியீகிறது. இந்த செலவுக்குக் காரணம்

சண்டைக்கு யூவான் வோ-பிங் (The Matrix), அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ (Jurrassic Park), ஸ்பெஷல் எபக்ட்ஸுக்கு ஜார்ஜ் லூகாஸ், இசைக்கு ஏ.ஆர். ரஹ்மான் (Slumdlog Millionaire) என பல ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால், இந்த கலைஞர்கள், இவ்வளவு பட்ஜெட் எல்லாவற்றையும் மீறி இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என அதன் தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பக் காரணம், இது ரஜினிகாந்த் படம் என்பதால் மட்டுமே!”

-இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை, ரஜினியின் சிறப்புகள், அவர் செய்யும் நல்ல காரியங்கள், அவருக்கும் பாலிவுட் பிரபலங்களுக்கும் உள்ள வேற்றுமைகள், அவரது இயல்பான யதார்த்த வாழ்க்கை என பல அம்சங்களையும் அலசுகிறது. இரண்டு பக்கத்துக்குப் போகிறது.

இந்தக் கட்டுரையில் மேலே நீங்கள் பார்த்த ஆரம்ப வரிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார் இந்தியா டுடே இதழின் எடிட்டர் – இன்- சீஃப் அருண் பூரி.

ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் இந்தக் கட்டுரை வெளியாகிவிட்டது. அடுத்த நாளே, இந்தக் கட்டுரையின் முதல் பகுதி ஸ்லேட் வெளியிட்ட கட்டுரையின் அப்பட்டமான காப்பி என்பது தெரிந்துவிட, உடனடியாக ஸ்லேட் பத்திரிகைக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியிருந்தார் அருண் பூரி. இந்தியா டுடேயின் அடுத்த இதழில் ஒரு விளக்கமும் வெளியிட்டார்.

“தென்னக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் டெல்லியில் உள்ள பணியாளர்களிடம் சில கருத்துக்கள் கேட்டேன். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களில் துரதிருஷ்டவசமாக வேறு ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகள் என்னுடைய கட்டுரையில் இடம்பெற்றுவிட்டன. எப்படி இருந்தாலும் மன்னிப்பு சரியான விளக்கமாகாது. என் தவறுதான். வருத்தங்கள்”, என குறிப்பிட்டிருந்தார்.

ஒரிஜினல் கட்டுரையை எழுதிய ஹென்ட்ரிக்ஸுக்கும் மன்னிப்புக் கடிதம் அனுப்பினார்.

அதில், “உங்கள் கட்டுரையின் ஒரு பகுதி எனது தலையங்க கட்டுரையில் கவனக்குறைவாக இடம்பெற்றுவிட்டதற்கு, எங்கள் வாசகர்களிடம் நாங்கள் வருத்தம் தெரிவத்தை கட்டாயம் அறிந்திருப்பீர்கள். உங்களிடமும் என் வருத்ததை தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் ஆசிரியருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த மன்னிப்பை ஏற்காத ஹென்ட்ரிக்ஸ், “நடந்த தவறுக்கு வருந்தும் எண்ணம் ஏதும் அருண் பூரிக்கு இல்லை என்றும் தனது தவறை மறைக்க சப்பைக் காரணம் கண்டுபிடித்துச் சொல்கிறார்” என்றும் கூறியுள்ளார்.

“இந்தியா டுடே பத்திரிகை ரஜினியைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளது. இந்தியாவின் முதல் 50 சக்தி மிக்க மனிதர்களின் பட்டியலில் ரஜினிக்கும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இடமளித்து வருகிறது. இப்படிப்பட்டவரைப் பற்றி தெரியாது என இந்தியா டுடேயின் நிறுவனர், முதன்மை ஆசிரியரான அருண் பூரி கூறுவது வியப்பை அளிக்கிறது. தனக்கு சரியாகத் தெரியாத ஒருவரையா இந்தியாவின் சக்தி மிக்க மனிதராக அந்தப் பத்திரிகை பட்டியலிட்டது.. தனக்குத் தெரியாத மனிதரைப் பற்றியா சிறப்புக் கட்டுரைகள் வெளியிடுகிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்!

நன்றி: தட்ஸ்தமிழ்
6 thoughts on “ரஜினி பற்றிய கட்டுரை… அமெரிக்கப் பத்திரிகையிடம் மன்னிப்பு கேட்ட இந்தியா டுடே!

 1. unmai

  சிலருக்கு பொறமை எங்கே இருக்னும் தெரியாது அது மாதிரித்தான் இது. தன்னுடைய சுய விளம்பரத்துக்கு எப்டி எல்லாம் செய்யணுமோ அப்டி செய்றான் இந்த இந்திய டுடே பெபர்கரன். இது மாதிரி தமில்னட்லையும் உண்டு உதாரணம் இந்த தினமலர் பெபர்கரனும்

 2. kalidass

  இந்தியா டுடே இன் நடுநிலை நமக்கு எல்லாம் நன்கு தெரிந்த ஒன்று. தலைவரை விமர்சித்து வெளியாகும் கட்டுரைகளை படித்து பார்த்தால் இது புரியும். எந்திரன் படம் வெளியான போது, வந்த கட்டுரையில் ரஜினி ரசிகர்களுக்கு தெரிந்த ஆங்கில படங்கள் என்றால் அது ஜாக்கிசான் படங்கள் மட்டுமே, அவர்களுக்கு மாட்ரிக்ஸ் படம் பற்றி தெரியாது என்று எழுதிருந்தார்கள். இதுதான் இவர்களின் பொதுஅறிவு. மாட்ரிக்ஸ் படம் பற்றி இங்கு சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் என்பது இந்த பொது அறிவு புலிகளுக்கு தெரியவில்லை. அது தேசிய இதழ், அதற்கு ஒரு ஆசிரியர்!. இந்த வெண்ணைகள் செய்த திருட்டு வெளிவந்துவிட்டது.

 3. KICHA

  புலிக்கும் பெரும் புயலுக்கும்
  பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம்
  செய்துகொண்டால் அவருக்குப்
  பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்
  ******************
  idhu super

 4. Umm Omar

  This is not the first time India today does it, so as to say any BIG name in the print industry. The plagiarism has widespread among all giants especially. For example, Yahoo when it used webdunia, an agency for Indian posts on a variety of departments, a number of bloggers were shocked to see their content coming in different names in yahoo pages without any credits or linkbacks. Only when it united all the bloggers and they all decided to host one day specially to alarm yahoo, did yahoo asked an apology, same arun purie style “oh we got t info from webdunia and we dont know where did they get it from”….முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற திறமை. ஹ்ம்ம் இதுக்கு இந்தியா டுடே பத்திரிக்கையை இழுத்து மூடிடலாம்,

 5. Rajan

  /// If a tiger had sex with a tornado and then their tiger-nado baby got married to an earthquake, their offspring would be Rajinikanth! ///

  So this cannot be a human being??????
  _______

  என் சிங்கக் குட்டி என்று உங்கள் தாயார் கொஞ்சினார் என்பதற்காக, நீங்கள் மிருகம் என்று அர்த்தமாகிவிடுமா!
  -வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *