BREAKING NEWS
Search

ரஜினி பற்றியே எழுதுகிறீர்களே… கமல் பற்றி? – கேள்வி – பதில் தொடர்ச்சி!

ரஜினி பற்றியே எழுதுகிறீர்களே… கமல் பற்றி எழுதுங்களேன்! – கேள்வி – பதில் தொடர்ச்சி!

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பதை நம்புகிறீர்களா… ஒரே வரியில் நெத்தியடியாக பதில் சொல்லுங்கள் போதும்!

சக்திகுமார், டெட்ராய்ட், shakthi41@hotmail.com

pr1
நம்பகமான இடங்கள் சொல்வதால் நம்புகிறேன்!

*********


ரஜினிக்கு கணிணி பற்றி தெரியுமா? மற்றும் வலை உலக பதிவர்களை பற்றி என்ன நினைக்கிறார், அவர் கூட பதிவெழுதினால் நன்றாக இருக்குமே? ஏன் என்றால் இதுவரை அவர் கணணியில் உபயோகபடுத்தும் புகைப்படம் வெளி வரவில்லையே?

இந்த கேள்வி வெளியிட விருப்பமில்லாவிடில் தனி மெயிலில் பதில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வடிவேலன் ஆர்., giblogs@gmail.comcopy-of-res_98-sivaji-105

இதில் மறைக்க என்ன இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் ரஜினி அவர்கள். தனக்கு இதெல்லாம் தெரியும் என பிரஸ்தாபிக்க வேண்டிய நிலையில் அவர் இல்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை.

கணிணி தொழில்நுட்பம், கணிணி வரைகலையில் ஹாலிவுட்டுக்கு நிகராக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சௌந்தர்யாவைப் பார்த்த பிறகுமா இந்தக் கேள்வி… ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் இரண்டுமே கணிணி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்தவையே.
சிவாஜியில் அவர் லேப்டாப்பை கையாளும் லாவகத்தைப் பார்த்தீர்களா…

ரஜினி குறித்து வரும் செய்திகள், வலைதளங்கள் அனைத்தையும் அவரது அலுவலக ஊழியர்கள் தனி கணிணியில் சேகரித்து வைத்துள்ளனர்.

அவர் எப்போதுமே தனது கருத்துக்களை வெளிப்படையாக, பளிச்சென்று தெரிவித்துவிடுபவர். அதனால் ப்ளாக் எழுதும் அவசியம் அவருக்கில்லை.

*********

எப்போதும் ரஜினியை பற்றி மட்டுமே எழுதறீங்களே, கமல் பற்றிய யாருக்கும் தெரியாத தெரிய வேண்டிய ஏதும் ஒரு நிகழ்ச்சியை சொல்ல முடியுமா?

தன்ராஜ் பி, dhans4all@gmail.com
kamalhassan_unnaipol_oruvan_10நிச்சயம்…

சொந்த அனுபவத்தையே சொல்லவா…

ஒருமுறை ஆங்கிலப் பத்திரிகையான அலைவ் (கேரவன்) இதழுக்காக கமல்ஹாசனை சந்திக்கச் சென்றிருந்தேன். கமல் அவர்களின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு திரு நிகில் முருகன் வரச்சொல்லியிருந்தார். அவரை பத்திரிகையாளனாக இரண்டாவது முறை சந்திக்கிறேன், 3 வருட இடைவெளிக்குப் பிறகு. சண்டியர் (விருமாண்டி என பெயர் மாற்றம் நிகழ்வதற்கு முன்) படத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தார் அப்போது. அந்தப் படத்துக்கு கிளம்பிய எதிர்ப்புகளில் மிகவும் டென்ஷனாக அவர் இருந்த நேரம்.

என்னைப் பார்த்ததும், ‘வாங்க… உங்க எடிட்டர் எப்படி இருக்கிறார்?’ என்றார் எடுத்த எடுப்பில். முன்பு அவரைச் சந்தித்த போது தினமணியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதன் ஆசிரியர் அமரர் ஆர்எம்டி சம்பந்தம் அவர்களைத்தான் விசாரிக்கிறாரோ என்ற நினைப்பில், ‘சார் நான் இப்போ வேற மேகஸின்ல இருக்கேன்…’ என்றேன்.

‘தெரியும்… தெரிஞ்சுதானே வரச் சொன்னேன்… நான் உங்க புது எடிட்டரைத்தான் கேட்கிறேன்’ என அவர் சொல்ல ஆடிப்போய் விட்டேன்.
காரணம் இந்த எடிட்டர் டெல்லியிலிருக்கிறார். எப்படி கமலுக்கு இவரைத் தெரியும் என யோசித்துக் கொண்டிருக்கும்போதே, எங்கள் எடிட்டரைப் பற்றிய 10 நிமிட மினி உரையே நிகழ்த்தி அசரடித்தார் மனிதர். அவர் சொன்னதில் பல விவரங்கள் எங்கள் அலுவலகத்தின் மூத்த ஊழியர்களுக்கே கூடத் தெரியாது!

‘எப்படி சார் உங்களுக்கு இவ்வளவு விஷயம்…’ என இழுத்தேன் தயக்கமாக.

‘இந்தியாவில் துணிச்சலாக நாத்திகம் பேசும் ஒரு பத்திரிகைக் குழுமம் பற்றி தெரியாமல் இருக்கக் கூடாதல்லவா… அதனால் தெரிந்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆசிரியரை நான் ஒருமுறை சந்திக்க வேண்டும்’, என்றார்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் எங்கள் எடிட்டர் அவரைத் தொடர்பு கொண்டபோது, என்னைப் பற்றியும் அவரிடம் நல்ல வார்த்தைகள் சொல்லி, எனது மதிப்பை அலுவலகத்தில் உயர வைத்தவர் கமல். அதை நாம் எப்போதும் மறக்க முடியாது.

குறிப்பு: விருமாண்டிக்கு நான் எழுதிய மூன்று பக்க விமர்சனத்தை, சிறந்த விமர்சனங்களில் ஒன்று என கமல் பாராட்டினார், அவரது பிறந்த நாளின் போது நடந்த பிரஸ்மீட்டில். பின்னர் எப்போதாவது பொருத்தமான தருணத்தில் அதைத் தருகிறேன்!

*********

ஒரு பத்திரிகையாளராக மறக்க முடியாத அனுபவம் ஒன்றைச் சொல்லுங்கள்!

ஆர் சரவணன், kmrvsaravanan@hotmail.com

karu-in-a-press-meet

சூப்பர் ஸ்டார் ரஜினியை முதன் முதலில் அவரது வீட்டில் சந்தித்த அனுபவம்தான். அவர் கையால் உபசரிக்கப்பட்ட, மிகவும் மறக்க முடியாத தருணம் அது. ரஜினி பற்றி எழுத உத்தேசித்துள்ள ஒரு தொடரில் அதைத் தருவதாக திட்டம்… இப்போது வேறு ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன்!

தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, பதவியில் இல்லாமலிருந்த காலம் அது. ஜெயலலிதாதான் அப்போது முதல்வர். அப்போது அறிவாலயத்தில் அவர் கூட்டிய பத்திரிகையாளர் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், உடன் சீனியர் நிருபர் ஒருவரும் வந்தார். அப்போது நான் பணியாற்றியது பிரபலமான ஒரு மாலைப் பத்திரிகையில்.

மிக முக்கியமான சூழலில் நடந்த பிரஸ்மீட் அது.

ரஜினியின் ஆதரவுக்காக திமுக தவமிருந்த காலம் (இப்போதும் ஒன்றும் பெரிய மாற்றமில்லை!). கேள்வி நேரத்தின் போது, இன்னொரு பிரபல மாலைப் பத்திரிகையின் நிருபர் ஒரு கேள்வி கேட்டார்… அப்போதெல்லாம் சீனியர் நிருபர்களான கல்யாணம், கோபாலன், ராமசாமி போன்றவர்கள்தான் கேள்வி கேட்பார்கள். மற்றவர்கள் அவர்கள் வாயைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள்.

இந்த நிருபர் முதல்முறையாக கலைஞர் பிரஸ்மீட்டுக்கு வந்திருக்கிறார் போலிருக்கிறது. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார்… அதுவும் விவகாரமாக.

“இந்தத் தேர்தலில் நீங்களும் மூப்பனாரும் ரஜினியை நம்பித்தான் இறங்குவதைப் போல ஒரு தோற்றம் உள்ளதே… அதுபற்றி சொல்லுங்கள்” என்றார்.

வந்ததே கோபம் கலைஞருக்கு.

‘நீ எந்தப் பத்திரிகைய்யா…’

‘அய்யா… வந்து…’

‘எந்தப் பத்திரிகைன்னு மரியாதையா சொல்லு…  விசாரிங்கய்யா’, என்றார்.

நடுநடுங்கிப் போனார் நிருபர்.

அடுத்த சில தினங்கள் கழித்து எங்கள் அலுவலகத்துக்கு வேலை கேட்டு கலங்கிய கண்களுடன் அந்த நிருபர் வந்த பிறகுதான் ‘பிரஸ்மீட் எஃபெக்ட்’ என்ன என்பது புரிந்தது!

என்னடா பொழைப்பு இது என்று நொந்து கொண்ட, பத்திரிகையுலகம் புரியத் தொடங்கிய அந்தத் தருணம்… எந்தக் காலத்திலும் மறக்க முடியாதது!

(இதையெல்லாம் விட உச்சகட்டம்… இப்போது அந்த நிருபர் சன் குழும இதழ் ஒன்றிலேயே வேலை பார்ப்பதை என்னவென்று சொல்வீர்கள்!)

-தொடரும்

-வினோ

மற்ற கேள்வி பதில் பகுதிகளைப் படிக்க…

கேள்வி பதில் பகுதி -1, 2, 3 மற்றும் 4
9 thoughts on “ரஜினி பற்றியே எழுதுகிறீர்களே… கமல் பற்றி? – கேள்வி – பதில் தொடர்ச்சி!

 1. Kamesh (Botswana)

  Vinoji,

  I hope you had some wonderful experience in your career so far and the way you narrate them is so beautiful infact I envy your experience with SS and the way you put across the meeting with kamal… the only thing which is upsetting is the time taken by you to continue the suspense infact a big que is there a few for me to remind (since I grab this opportunity)

  1. Rajini Therinthe vittukodutha kathaigal
  2. Your meeting with SS when you published the photograph of meeting SS before the cauvery meet…
  3. Breakup of SS with Ilayaraja
  4. The then the Chumma Thamasu part (the last time got the TR at the Hospital scene… Bayanthuttanla )

  Would like to chat with you personally when I come down to India can you please write to me….

  Kamesh (botswana)

 2. Sakthikumar, Detroit

  Thanks Vino…

  The last Q&A is fantastic and it shows the other face of our so called leaders…

 3. Suresh கிருஷ்ணா

  அருமையான அனுபவங்கள் வினோஜி…

  “*****பிறிதொரு சந்தர்ப்பத்தில் எங்கள் எடிட்டர் அவரைத் தொடர்பு கொண்டபோது, என்னைப் பற்றியும் அவரிடம் நல்ல வார்த்தைகள் சொல்லி, எனது மதிப்பை அலுவலகத்தில் உயர வைத்தவர் கமல். அதை நாம் எப்போதும் மறக்க முடியாது…***”

  இதையும் கூட குதர்க்கமாகத்தான் எடுத்துக் கொள்ளும் சில ஜென்மங்கள்… அதுங்க ‘பொய் பொய்’ கேசு…

  -Suresh கிருஷ்ணா

 4. Zephyin

  Dear Vino,

  Excellent.Very Very Eager to know about your first meeting with thailiavar.plz don’t take much time.
  Best Wishes

 5. சிவராம்

  நல்ல அழுத்தமான, அனுபவப்பூர்வமான பதில்கள்…

  ரஜினியை துதி பாடுவதை விட சுற்றி நடக்கும் பல விஷயங்கள் குறித்து தெளிவான பார்வையைத் தருகிறது உங்கள் பதில்கள்.

  கமல் பற்றிய உங்கள் பதிவு, அவரது அறிவுத் திறமையைப் பறை சாற்றுகிறது.
  கமல் பற்றிய உங்கள் முந்தைய பதிவுக்கு அவர்களது ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரது பதில்கள், அவர்களது அறிவீனத்தைக் காட்டுகிறது. அது கமல் செய்த துரதிருஷ்டம்!

 6. vasi.rajni

  விநோஜி சுப்பர் . அணைத்து கேள்விகளுக்கும் தாங்களின் அனுபவம் கலந்த பதில் சுப்பர் .இந்த பகுதி மிகவும் அருமை . தினமும் இந்த பகுதியிருந்தாள் இன்னும் சிறப்பாக இருக்கும் ..

  rajini will rule tamil nadu

 7. கிரி

  //அவர் எப்போதுமே தனது கருத்துக்களை வெளிப்படையாக, பளிச்சென்று தெரிவித்துவிடுபவர். அதனால் ப்ளாக் எழுதும் அவசியம் அவருக்கில்லை.//

  வேற வினையே வேண்டாம்… இதை வைத்தே பல பத்திரிக்கைகள் காலத்தை ஒட்டி விடும்..ரஜினி அதை சொன்னாரு இதை சொன்னாரு என்று .. 🙂 தலைவர் கம்முனு இருந்தாலே போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *