BREAKING NEWS
Search

ரஜினி படம்… பேரரசுவின் ஆசை!

ஓடற எல்லா படமும் சிவாஜியாகிடாது! – கலைப்புலி சேகரன்

popcorn - Copy - Copy மீப காலமா நிறைய படங்கள் வசூல்ல சாதனை படைச்சிட்டதா போஸ்டர் அடிக்கிற கலாச்சாரம் பெருகிட்டு வருது. ஓடினா உண்மையிலேயே அதுக்காக சந்தோஷப்படற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன். ஆனா, சும்மா போஸ்டர் போடறதுல அர்த்தமில்ல.

இதை வெளிப்படையாகச் சொன்னால் சிலருக்கு மனசு வருத்தமா கூட இருக்கும். அவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கிறேன்… போஸ்டர் போடற எல்லா படமும் வெற்றிப்படமில்ல… வெற்றிப்படமெல்லாம் சிவாஜி மாதிரி சாதனை படைச்சிட்டதாவும் அர்த்தமில்ல. ஒரு படத்தின் சாதனையை மிஞ்ச, நிஜமாகவே அதைவிட தரமான படமா கொடுக்க முயற்சி பண்ணுங்க!”

-ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன்

ரஜினி படம்… பேரரசுவின் ஆசை!

popcorn - Copy - Copyநான் தீவிர ரஜினி ரசிகன். நான் சிறு வயதில் ரஜினி படமான முரட்டுக் காளையின் சூட்டிங் பார்த்துதான், எனக்குள் சினிமா ஆசை அதிகமாகியது. தற்போது அவரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் சினிமாவுக்கு வந்ததன் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்…”

-இது இயக்குநர் பேரரசுவின் ஆசையாம். சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் அவரே சொன்னது இது.


‘இமயமலை… ரஜினியைக் காப்பியடிக்கவில்லை!’

popcorn - Copy - Copyநான் ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் இமயமலைக்குப் போவது உண்மைதான். ஆனால் ரஜினி சாரைப் பார்த்து காப்பியடித்து நானும் அப்படி போவதாக சிலர் சொல்வது அபத்தம். அவரை நான் காப்பியடிக்கவில்லை. அவர் மீது நான் பெரிய மதிப்பு வைத்துள்ளேன்.

ஆனால் இயமலைக்குப் போவது ஒரு தனிப்பட்ட விஷயம். போய்வந்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த இடத்தின் பெருமை… அங்கு போனால் கிடைக்கும் சந்தோஷம் என்னவென்பது!”

-தீராத விளையாட்டுப் பிள்ளை பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் சொன்னது.




12 thoughts on “ரஜினி படம்… பேரரசுவின் ஆசை!

  1. mukesh

    கலைப்புலி சேகரன் பேச்சு சும்மா நெத்தி அடி

  2. r.v.saravanan

    வெற்றிப்படமெல்லாம் சிவாஜி மாதிரி சாதனை படைச்சிட்டதாவும்
    அர்த்தமில்ல. ஒரு படத்தின் சாதனையை மிஞ்ச, நிஜமாகவே அதைவிட தரமான படமா கொடுக்க முயற்சி பண்ணுங்க!”

    super ……….

  3. கிரி

    பேரரசு சார் எந்த பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்துக்கலாம்!

  4. jawahar

    பேரரசு சார் எந்த பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்துக்கலாம்!

    சிங்கத்த கொஞ்ச முடியாது,
    சிவாஜிய மிஞ்ச முடியாது.”
    வெற்றிப்படமெல்லாம் சிவாஜி மாதிரி சாதனை படைச்சிட்டதாவும்
    அர்த்தமில்ல. ஒரு படத்தின் சாதனையை மிஞ்ச, நிஜமாகவே அதைவிட தரமான படமா கொடுக்க முயற்சி பண்ணுங்க

  5. vasuki

    //கிரி says:
    பேரரசு சார் எந்த பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்துக்கலாம்!//

    super

  6. Shankar

    பேரரசுவின் பேராசை என்று போடவும். இவனெல்லாம் ஒரு இயக்குனர்…இவனுக்கு சூப்பர் ஸ்டாரை வைச்சு படமெடுக்கணுமா…அதுக்குதான் டாக்டர் தொளபதி இருக்காரே

  7. Gokul

    ரஜினி படம்… பேரரசுவின் ஆசை!

    ——————————
    ஏன் இந்த கொலைவெறி

  8. mukesh

    //பேரரசு சார் எந்த பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்துக்கலாம்!//

    தலைவர் படம் இயக்க வேண்டும் என்று எல்லா இயக்குனர்களும் விரும்பவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றேன். பேரரசு தலைவர் நலம் விரும்பியாக கூட இருக்க வாய்ப்பு உண்டு. அவருடைய நினைப்பை நாம் கிண்டல் செய்ய தேவை இல்லை என்பது என் கருத்து.

  9. கண்ணையா

    thatstamil site ல் இந்த செய்திக்கு இடப்பட்ட பின்னூட்டத்தில் நான் மிகவும் ரசித்த ஒன்று…

    பதிவு செய்தவர்: நாய் சேகர்

    “ஏய் மிஸ்டர் (பேரரசு), ரஜினிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே?

    எப்படி எல்லாம் வாழ்ந்தவரு ரஜினி… ஹூம் ….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *