BREAKING NEWS
Search

‘ரஜினி சாரோட போட்டோ எடுத்துக்கறதே பெருமையான விஷயம்… எனக்கு நடிக்கவே வாய்ப்பு கிடைச்சிடுச்சி!’

ரஜினி சாரோட போட்டோ எடுத்துக்கறதே பெருமையான விஷயம்… எனக்கு நடிக்கவே வாய்ப்பு கிடைச்சிடுச்சி! – சிலிர்க்கும் சந்தானம்

பாஸ் என்கிற பாஸ்கரனின் இரண்டாவது ஹீரோ எனும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தவர் சந்தானம். கவுண்டரின் ஸ்டைலில் அவர் அடித்த கமெண்டுகளுக்கு தியேட்டர் கூரையே அதிருமளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறக்கிறது. இந்த எந்திரன் சுனாமியிலும் சற்று தாக்குப் பிடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’தான். இதற்கு சந்தானம் – ஆர்யா கூட்டணியின் காமெடி சரவெடியே காரணம்.

இந்தப் படத்தில் வரும் நண்பேன்டா வசனம் படு பாப்புலர். ஆனால் இந்த ஒற்றைச் சொல்லை, தளபதி படத்தில் மம்முட்டியிடம் ரஜினி சொல்வாரே..’நீ என் நண்பேன்டா’ என்று.. அந்தக் காட்சி பாதிப்பில்தான் வைத்ததாகச் சொல்கிறார் சந்தானம்.

இதுகுறித்து சந்தானத்திடம் பேசினோம்:

“சின்ன வயசிலேருந்தே நான் தலைவர் ரஜினி ஃபேன். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதுகூட ரஜினி சார் ஸ்டைலில்தான் ஹேர் கட் பண்ணிக்குவேன். இதுக்காக எங்க பிடி மாஸ்டர்கிட்ட வாங்கி அடி கொஞ்சமல்ல. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்.

நான் நடிக்க வந்த பிறகு, எப்படியாவது அவர்கூட நடிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அது குசேலன்ல நிறைவேறினாலும், அவரோட வர்ற மாதிரி சீன் எதுவும் அமையல. இப்போ எந்திரன்ல அந்த வாய்ப்பு கிடைச்சது.

சிலர் சொல்றாங்க, எனக்கும் கருணாசுக்கும் படத்தில ஸ்கோப் இல்லையேன்னு. அவர் கூட நின்னு போட்டோ எடுத்துக்கறதே பெருமையான விஷயம் சார். இதுல அவர் கூடவே நடிக்கிற வாய்ப்பு கிடைச்சதே, அது எவ்வளவு பெரிய விஷயம்!

இந்தக் கதையில எங்களுக்கு இந்த அளவுதான் வேலைன்னு தெரியும். இன்னொன்னு இது ரஜினி சார் படம். அவர் கூட நடிக்கணும்ங்கிறதுதான் எங்க ரெண்டு பேருக்குமே பிரதான நோக்கமா இருந்தது. ஒரு ரசிகனாத்தான் நான் ரஜினி சார்கூட இருந்தேன். தூரத்திலேருந்து பாத்துக்கிட்டிருக்கிற ரசிகன் ஒருத்தனுக்கு, திடீர்னு 30 நாள் ரஜினி சார் கூடவே இருக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சா…? அதை விவரிக்க வார்த்தை இல்லைங்க. அதுவும் நல்ல சம்பளத்தோட அந்த அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிடைச்சது!

செட்ல எங்க கூடத்தான் சாப்பிட்டார் ரஜினி சார். அவர் நினைச்சிருந்தா உலகத்திலேயே காஸ்ட்லியான கேரவன்ல சொகுசா இருந்திருக்க முடியும். ஆனால் அவரோட சீன் முடிஞ்சதும், என்கிட்டயும் கருணாஸ் கிட்டேயும் ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டு, எங்களோட எதிர்காலத்துக்கான யோசனைகளை சொல்லி…. சான்ஸே இல்ல சார். இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. அவர் சினிமா சூப்பர் ஸ்டார் இல்ல. நிஜ சூப்பர் ஸ்டார்…

இன்னிக்கு எந்திரன் வசூலைப் பார்த்து அவனவன் மிரண்டு போய் நிக்கிறான் பாஸ். எங்களுக்கு பெருமை பிடிபடல. ‘யாரோட படம் இது… எங்க தலைவரோட படம்’னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கிறோம். இந்த சாதனையை ரஜினி சார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு பேரும் புகழும் நினைச்சுப் பார்க்க முடியாத வசூலும் வாங்கிக் கொடுத்துட்டார் ரஜினி சார்.

அடுத்தும் அவர் படம் பண்ணனும். பண்ணுவார்னு நினைக்கிறேன். அந்தப் படத்துல எனக்கு வாய்ப்பு இருக்கோ இல்லையோ… ஆனா அது எந்திரனோட ரெக்கார்டை முறியடிக்கும்னு உறுதியா சொல்வேன். அவருக்கு எதுவுமே லிமிட் கிடையாது… சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி தி அல்டிமேட் என்ற வார்த்தைக்கு ரஜினி சார்தான் உதாராணம்..” என்றார் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு!
8 thoughts on “‘ரஜினி சாரோட போட்டோ எடுத்துக்கறதே பெருமையான விஷயம்… எனக்கு நடிக்கவே வாய்ப்பு கிடைச்சிடுச்சி!’

  1. eppoodi

    எனக்கு ஆரம்பத்தில் சந்தானம் மற்றும் கருணாஸ் எந்திரனில் நடிப்பது பெரிதாக விருப்பமில்லை; குசேலன் மற்றும் பாபாவில் இவர்கள் இருவரும் தனித்தனியாக நடித்தனர், இதில் ஒன்றாகவேறு நடிக்கிறார்கள் என்கிற செண்டிமென்டான பயம்தான். ஆனால் எந்திரனின் அசுர வெற்றியால் தலைவர் செண்டிமண்டுக்கு அப்பாற்ப்பட்டவர் என்பதை மீண்டும் நிரூபித்தி விட்டார்.

  2. Jack

    ஸீ.. Film நல்லா இருந்தா யார் நடிச்சாலும் ஓடும்.

    ரஜினி சார்க்கு எப்பொதும் திறமை + உழைப்பு + லக் உண்டு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *