BREAKING NEWS
Search

ரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி! – சக்ஸேனா

ரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி! – சக்ஸேனா

காசி திரையரங்கில் அதிகாலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்கள் ஆரம்பித்த நேரம்… சன் பிக்சர்ஸின் முதன்மை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா வந்திறங்கினார். அவ்வளவுதான்… ரசிகர்கள் அவரை அப்படியே தூக்கிக் கொண்டு காசிக்குள் சென்றனர்.

“ஏ விடுங்கப்பா… நானும் உங்களை மாதிரி அவரோட ரசிகன்தான். என்னை எதுக்கு தூக்கறீங்க… விடுங்க…” என்று கூறியடி இறங்கியவரை, மீடியா சூழந்து கொள்ள, ஒரு மினி பேட்டி:

ரஜினியின் எந்திரன் கொண்டாட்டங்கள் பற்றி…

சொல்ல வார்த்தைகள் இல்லை. உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளோம். நானும் ரஜினி சாரின் தீவிர ரசிகன்தான். எங்களுக்கெல்லாம் இன்றுதான் தீபாவளி. இந்திய சினிமாவின் உச்சம் எந்திரன்… இந்திய நட்சத்திரங்களில் உச்சம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இன்று உலகமெங்கும் அவர் கொடி பறக்கிறது!

அடுத்து ரஜினி – ஜாக்கிசானை வைத்து நேரடியாக ஆங்கிலப் படம் எடுப்பதாகக் கூறியுள்ளீர்களே, உண்மையா.?

(சற்று அமைதி காத்த பின்) நிச்சயம் எடுக்கலாம். ரஜினி சார் சரின்னு சொன்னா இன்னைக்கே கூட நாங்க ரெடி.. (கவனிக்க: ரஜினி சார் சம்மதம்தான் முக்கியம்!).

இதே போன்றதொரு பேட்டியை, செப் 30-ம் தேதி டெக்கன் கிரானிக்கிள் நாளிதழுக்கும் சக்ஸேனா தந்திருந்தது குறிப்பிடத்தக்கது!

ரஜினி என் புள்ளை மாதிரி…! – எந்திரன் பார்த்த 70 வயது மூதாட்டி

ரஜினியை ‘Ageless demi God’ என்று வர்ணிக்கிறது மீடியா உலகம். அவர் படத்துக்கு 6 லிருந்து 60 வரை ரசிகர்கள் உள்ளனர் என்ற வழக்கமான மொழியைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. ஆம்… இன்றைக்கு 70ஐத் தாண்டிய முதியவர்களும் எந்திரன் பார்த்துவிட்டு ‘வாழ்க சூப்பர் ஸ்டார்’ என வாழ்த்திவிட்டுப் போவதைப் பார்க்க முடிகிறது.

அதிகாலை, நள்ளிரவு என எந்த நேரமும் பார்க்காமல் வயதானவர்களும் மூதாட்டிகளும் கூட எந்திரனின் முதல் நாள் காட்சிக்கு வந்ததை என்னவென்று சொல்ல…

அந்தப் பாட்டி...

மும்பையில் முதல் நாள் காட்சிக்கு வந்த மூதாட்டி ஒருவரிடம், இப்படி கூட்ட நெரிசலில் படம் பார்க்க பயமாக இல்லையா என நிருபர் ஒருவர் கேட்க, அதற்கு அவர் இப்படிச் சொல்கிறார்: “சூப்பர் ஸ்டார் ரஜினி என் புள்ள மாதிரி… நான் எதுக்கு பயப்படணும்!”

சீனர்களைக் கவர்ந்த தமிழ்ப் படம் எந்திரன்!!

“சீனத்தைச் சேர்ந்த ஜாக்கி சான் அமெரிக்கர்களின் ஹீரோவானார்… அமெரிக்க நடிகர்களோ ஐரோப்பியர்களின் விருப்ப நாயகர்களானார்கள்.

ஆனால் இந்தியாவில் பிறந்த ரஜினியோ கீழை நாடுகள் எனப்படும் சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் மக்கள் கவர்ந்துள்ளார்!”

-இப்படிப் போகிறது சைனா டெய்லி எனும் சீனத்து நாளிதழின் சிறப்புக் கட்டுரை ஒன்று.

முதல் முதலில் சீனர்களுக்கு ரஜினி அறிமுகமானது முத்து பட டிவிடிக்கள் வடிவில்தான். அதன்பிறகு அவரது படங்களை விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் சீனர்கள். சிவாஜி திரைப்படம் சீன சப் டைட்டிலுடன் வெளியானது.

இப்போது எந்திரன் பெரிய அளவில் சீனாவில் வெளியாகியுள்ளதாகவும் இந்தியர்கள் மட்டுமின்றி, சீனர்களும் ஆர்வத்துடன் எந்திரனைக் காண வருவதாகவும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

-என்வழி
8 thoughts on “ரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி! – சக்ஸேனா

 1. kicha

  Adhudhan thalaivar.

  Andha paatti sonnadhum saridhan. FDFS laye ladies niraya per irundhanga. Ellarukum thalaivarai parpadhe nokkama irundhadhu. Vera eadhaum pathi kavalai padalai

 2. santhosh

  உலகமே எந்திரனை பார்க்க காரணம் தலைவர் தலைவர் …………………. இதை கலாநிதி ஒப்பு கொண்டுள்ளார்…………..

  எல்லாம் தலைவரின் செயல்……………

 3. Ahamed - dubai

  DEAR வினோ . நடிகர் கமல் பார்த்தாரா தலைவர் படத்தை .

 4. நைனா

  வினோ, நீங்க ஜனநாயகத்திலும், கருத்து சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ளவர் என்ற நம்பிக்கையில், இந்த பதிவை போடுவீங்கன்னு எதிர்பார்கிறேன். இது கண்டிப்பாக ரஜினிக்கு எதிரானது அல்ல.
  —————————–
  ஐயா ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இப்பவே உங்க அழும்பு தாங்கலே. இன்னும் நீங்க ரஜினிய வச்சு ஆங்கில படம் எடுத்தா …..மக்கள் பாவம் விட்டுருங்க. நீங்க பண்ற அட்டகாசத்தை பார்த்தா, ஒரு படத்துல பஸ்சுக்குள்ள உட்கார்ந்துகிட்டு இருக்கிற வடிவேலு கிட்ட ஒருத்தர் வந்து “மதுர மல்லி, மதுர மல்லி” அப்படீன்னு வலுக்கட்டயமா (மிரட்டி) வித்துட்டு போவாரு. அவர் செய்யறதுக்கும் நீங்க (SUN) செய்யறதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லே.

  த மு எ க ச விடுத்த அறிக்கையை படிசீங்களா?

  —————————————————
  த*********************
  _____________________________

  திரு நைனா…

  நீங்க சொல்ற அந்த So called அமைப்பின் அறிக்கைக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் தரத் தேவையில்லை. வர்த்தகத்தின் அடிப்படை தெரியாத அல்லது தெரியாதது போல நடிக்கும் ஒரு கூட்டத்தின் கருத்து அது. சன் டிவியின் அனைத்து நடவடிக்கைகளையும் நான் நியாயப்படுத்தவில்லை. சன் டிவி மீது நானும் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறேன். ஆனாலும், எந்திரன் வந்த நேரத்தில்தான் இந்த வெண்ணை வெட்டிகளுக்கு சமூக அக்கறை பொத்து பொங்கி பீறிட்டுக் கிளம்புகிறது, பாவம். கட்டுக்கட்டாக ஜெலுசிலும், கூடவே ஒரு நல்ல மனோதத்துவ டாக்டரையும் பார்க்க வேண்டிய இந்த ஆசாமிகள், ‘எந்திரன், ஏகாதிபத்தியம்’ என பினாத்திக் கொண்டு திரிகின்றனர்.

  ‘தாங்கள் சொல்வதுதான் சரியானது, தங்களால்தான் இந்த சமூகத்தின் ஆணியை மொத்தமாகப் பிடுங்க முடியும்’ என்ற மனோ (வியாதியில்) பாவத்தில் செயல்படும், இவர்கள் ஏகாதிபத்தியத்தை எங்கே போய் முறையிடுவது. முடிந்தால் தங்கள் சொந்த அமைப்பின் லட்சணத்தை அவர்கள் சுயவிமர்சனம் செய்து பார்த்துக் கொள்ளட்டும் ஒருமுறை. அதுவரை இவர்களுக்கு யாரைப் பற்றியும் விமர்சிக்கும் தகுதி கிடையாது!

  இவனுங்களை விடுங்க… உங்க சொந்த கருத்தைச் சொல்லுங்க. நிச்சயம் பிரசுரிப்பேன்!

  -வினோ

 5. நைனா

  உங்கள் பதிலுக்கு நன்றி வினோ. முதலில் ஒன்று. படம் நன்றாக இருக்கிறது / இல்லை, ரஜினியின் performance எப்படி என்ற விவாதத்திற்குள் நான் போகவில்லை என்பதை நீங்களும், இதை வாசிக்கும் / பின்னூட்டம் இடும் மற்ற நண்பர்களும் தயவு செய்து புரிந்துக்கொள்ள வேண்டும்.

  எந்திரன் வந்த நேரத்தில் தான் இப்படிப்பட்ட Octopus முறை வியாபாரம் அறிமுகப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த சர்ச்சைகள். இது long-term ல் திரை உலகிற்கு ஆரோக்கியமானது தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்றைய நிலை என்ன என்பதை அலசுவோம். எங்கள் ஊரில் 5 தியேட்டர்கள் உள்ளது. அதில் நான்கில் எந்திரன் வெளியானது. பண பலம் அதிகார பலம் இருப்பதால் மட்டுமே இதை சன் செய்ய முடிகிறது.

  என் கேள்விகள்.

  1. எந்திரனை தவிர மக்களுக்கு வேறு படங்களை பார்க்க முடியாமல் செய்வது நியாயமா? (மக்களில் சிலருக்கு எந்திரனை உடனே பார்க்க விருப்பம் / நேரம் இல்லாமல் இருக்கலாம் என்ற நிதர்சனத்தை கருத்தில் கொள்ளுங்கள்). ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் படம் நீண்ட நாட்கள் ஓடினால் மக்கள் நிதானமாய் பார்க்க மாட்டார்களா?

  2 . அப்படி வெளியிடப்பட்ட எந்திரன் படத்தின் டிக்கட் விலை (எல்லா தியேட்டரிலும்) நிச்சயம் ஒரு சாமானியரின் குடும்பத்திற்கு சுமை என்பதை மறுக்க முடியுமா?

  3 . இப்படி எல்லா தியேட்டர்களையும் கபளீகரம் செய்த எந்திரன் சுனாமியால் ஏற்கனவே அங்கு ஓடிக் கொண்டிருந்த சிறு முதலீட்டு படங்கள் எத்தனை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும்? அதை சாத்தியப்பட்டபோது பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களின் விருப்பிற்கு என்ன மரியாதை?

  4. பரவலான எந்திரன் வெளியீட்டால் தியேட்டர்கள் கிடைக்காமல், வெளியிட முடியாமல் முதலீடு முடங்கி போய் வட்டியும் கட்டிக்கொண்டு திணறும் மற்ற பட தயாரிப்பாளர்களின் நிலை என்ன? திரு.அபிராமி ராமநாதன் அவர்கள் 50 நாட்களாவது மற்ற தயாரிப்பாளர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணி அது தானே? தாங்கள் லாபம் சம்பாதிக்க மற்றவர்களை பாதிப்பிற்கு உள்ளாக்குவது என்ன நியாயம். இந்த வியாபாரம் ரஜினி என்னும் பிம்பத்தால் மட்டுமே சாத்தியப்படுகின்ற ஒரு விஷயம். அதனாலேயே அது மற்றவர்களை பாதிக்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *