BREAKING NEWS
Search

ரஜினி – சத்யா மூவீஸ் படம்… இயக்குகிறார் ஹரி?

ரஜினி – சத்யா மூவீஸ் படம்… இயக்குகிறார் ஹரி?

ஜினிக்காகவே ஹரி தயார் செய்த கதைதான் ‘ஐயா’. நாந்கைந்து முறை ரஜினியை சந்தித்து அவரது இமேஜுக்கேற்ப திரைக்கதையை உருவாக்கினார். ஆனால் ஏனோ கடைசி நேரத்தில் அந்தக் கதையை ரஜினி நிராகரிக்க, அதே பெயரில் சரத்தை வைத்து எடுத்தார்.

இப்போது மீண்டும் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வந்திருப்பதாக கோடம்பாக்கம் பரபரக்கிறது.

தயாரிப்பாளர் சத்யா மூவீஸ்!

பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்க நான் தயார் என்று பொதுமேடையில் வைத்து ஆர் எம் வீரப்பனுக்கு ரஜினி வாக்குத் தந்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து சத்யா மூவீஸ் – சத்யஜோதி பிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக முன்பே கூறியிருந்தோம். இந்தப் படத்தைத்தான் ‘பாட்ஷா 2’ எனக் கூறி வந்தனர்.

பாட்ஷா மாதிரியான அதிரடிக் கதை ஒன்றை ஹரியும் கைவசம் வைத்துள்ளாராம். அதன் ஒன்லைனை ரஜினி ஓகே செய்துள்ளார் என்பது புதிதாக வந்துள்ள செய்தி.

இப்போது ஹரி கைவசம் இருப்பது தனுஷ் – தமன்னா படம். ரஜினி படத்தை அவர் இயக்குவது உறுதியானால், தனுஷ் படம் காலவரையின்றி தள்ளிப் போகலாம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!

-என்வழி




6 thoughts on “ரஜினி – சத்யா மூவீஸ் படம்… இயக்குகிறார் ஹரி?

  1. endhiraa

    சூப்பர் ! ஹரி நல்ல டைரக்டர் ! கே எஸ் ரவிக்குமார் மாதிரி நல்ல கமெர்சியல் படம் பண்றதுல இவரும் ஒரு வல்லவர் ! சாமி படம் பாத்துட்டு தலைவர் இதை மிஸ் பண்ணிட்டாரேன்னு வருத்தப்பட்ட ரசிகர்களில் நானும் ஒருவன் ! அதை ஈடு செய்வார் ஹரி இப்போது என்று நம்புகிறேன் !!

  2. prakash

    Hari oru waste director.eppo parthalam arivalu vaethu kuthu nu padam yedupaar..padam odinal matum pothathu..konjam nalla irakanum..I hope thalae wont accept this offer.. let us work with good directors here after..

  3. Suryakumar

    ஹரியின் வேகமான திரைக்கதை அமைப்புக்கு ஈடு கொடுக்கக்கூடிய மசாலா டைரக்டர்கள் யாருமில்லை. ஹரி மீது எப்படிப்பட்ட விமர்சனம் இருந்தாலும் தலைவர் படமென்றால் கண்டிப்பாக சிரத்தை எடுத்து செய்வார் என நம்பலாம். பார்ப்போம்.

  4. r.v.saravanan

    பாட்ஷா மாதிரியான அதிரடிக் கதை ஒன்றை ஹரியும் கைவசம் வைத்துள்ளாராம். அதன் ஒன்லைனை ரஜினி ஓகே செய்துள்ளார் என்பது புதிதாக வந்துள்ள செய்தி.

    குட் நியூஸ் ஹரி நல்ல சாய்ஸ் சாமி போல் எதிர்பார்க்கிறோம்

  5. Ravi

    தலைவா…. நடித்தது போதும் தமிழகத்தை ஆள வா… நல்லாட்சி என்றால் என்ன என்றே மறந்து போன எங்கள் தலைமுறைக்கு சொல்லித்தா….

  6. Die hard rajni fan MOHAN

    எந்த directoraaa இருந்தாலும் நீ கெத்து தலைவா.. படம் nichayama வெள்ளி விழா தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *