BREAKING NEWS
Search

ரஜினி – சச்சின்… சில ஒற்றுமைகள்! – ஒரு ரசிகரின் ‘டச்சிங்’ அலசல்

‘ரஜினி நடிப்பதை நிறுத்தும்போது சினிமா மீதான ஆர்வமே போய்விடும்!’

திர்ப்பார்ப்புகள், சுயநலங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு மனிதரை, கலைஞரை மக்கள் உயிருக்கு நிகராக நேசிப்பார்களா…?

இந்த கேள்விக்கான விடையை என் அனுபவத்தில் இரண்டு மாபெரும் மனிதர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்.

அதில் ஒன்று எனது பள்ளிப் பருவத்தில்… அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருந்தபோது.

இப்போது ரஜினியின் மூலமாக. சொல்லப் போனால், அரசியல்-பதவி என எதுவும் இல்லாமலேயே, ஒரு பெரிய விஷமிக் கூட்டத்தின் நச்சுப் பிரச்சாரங்களையும் தாண்டி மக்களின் மனதில் ரஜினி ஆட்சி செய்வது எத்தனை பெரிய சாதனை!

ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்று கூறும் பலருடனும் பேசியதில், தெரிந்த ஒரு விஷயம், அவர்களில் பலர் நல்ல விஷயஞானமுள்ளவர்கள் என்பது. குறிப்பாக எழுதுவதில். தேர்ந்த எழுத்தாளனின் சரளத்தோடு, சுவையாக எழுதும் திறமை இவர்களில் பலருக்கும் இருக்கிறது.

கீழே நீங்கள் படிக்கவிருப்பது, நமக்கெல்லாம் பரிச்சயமான ஒரு ரஜினி ரசிகரின் கடிதம்தான். அதாவது கடிதமென்று தனியாக எழுதப்பட்டதல்ல. இரு கட்டுரைகளுக்கு அவர் எழுதிய கமெண்டுகள்தான். அவற்றை தொகுத்துத் தந்திருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்லுங்கள்!

-வினோ

1980 ல் வெளிவந்த முரட்டுக்காளை படத்திலிருந்து 30 வருடங்கள் என் வாழ்க்கையில் கூடவே பயணிக்கிறார் ரஜினி.

என் வாழ்வில் சிறு வயதில் நடந்த சம்பவங்களில் அதிகமாக நினைவில் இருப்பவை ரஜினி சம்பந்தப்பட்டவையே. முரட்டுக்காளையிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. யாருடன் எந்தக்காட்சி என்பது உட்பட.

இன்றும் ரஜினி படத்தை 2 வினாடிகள் பார்த்தால் போதும், அது எந்தப்படம் என்பதை என்னால் 99 சதவீதம் சொல்லிவிட முடியும். முரட்டுக்காளையிலிருந்து எந்திரன் வரையிலான ரஜினி படங்களின் பெயர்களை மூச்சுவிடாமல் தடுமாறாமல் என்னால் சொல்லமுடிகிறது.

இது எல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரஜினி எந்த அளவுக்கு என்னில் ஊடுறவியுள்ளார் என்பதை நினைக்கும்போது அதுவும் சொல்லத் தோன்றவில்லை. லதா ரஜினி அவர்களுக்கு முன்பிருந்தே ரஜினியை நேசித்தவன் நான். அந்த வகையில் அவருக்கு நான் சீனியர்!!

என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் இரண்டே சூப்பர் ஸ்டார்கள்தான் ஒன்று  ரஜினி… இன்னொருவர் சச்சின்.

சத்தியமாக இதை நான் ரஜினி ரசிகன் என்பதற்காக சொல்லவில்லை. இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய.

முதல் ஒற்றுமை, துவக்க காலத்தில் இருந்தே இருவருமே தங்கள் துறையில் முடி சூடா மன்னர்களாக இருக்கிறார்கள்.

இருவருமே தங்களுக்கு முன் தங்கள் துறையில் உச்சத்தில் இருந்தவர்களை காப்பி அடிக்காமல் தங்களுக்கென்று ஒரு பிரத்தியேக ஸ்டைலை உருவாக்கினர். இன்று இவர்களை பார்த்துத்தான் மற்றவர்கள் காப்பியடிக்கிறார்கள்.

வயது ஆக ஆக இருவரின் திறமையும்,புகழும் கூடிக்கொண்டே போகிறது. இருவருமே மற்றவர்களை விட அதிக பட்சமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தவர்கள். அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பேச்சில் பதில் சொல்லாமல் செயலில் பதில் சொன்னவர்கள்.

ஒவ்வொரு முறையும் தங்கள் சாதனைகளை தாங்களே முறியடிப்பவர்கள். புகழின் உச்சத்தை பார்த்த பின்னரும் தன்னிலை மாறாமல் அடக்கமாக இருக்கிறார்கள்.

இருவருமே தங்கள் துறைகளில் தங்களுக்கும் தங்களுக்கு அடுத்து இருப்பவர்களுக்குமான இடைவெளியை மிகவும் அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இரண்டாமிடத்தில் இருப்பவர்களால் நெருங்கவே முடியாத உயரம் அது.

இருவருமே தங்கள் குடும்ப வாழ்வில் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்கள். இருவருமே இன்னும் கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை. இருவரின் ஓய்வைப் பற்றியும் மற்றவர்கள் விவாதிக்கிறார்கள், ஆனால் இவர்களோ இன்னும் ஒரு தலைமுறையை பார்ப்பார்கள் போலிருக்கிறது!

அடுத்த சச்சின் அடுத்த ரஜினி என்று வர்ணிக்கப்பட்டவர்கள் எல்லோருமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.

பெரும்பாலான மக்களுக்கு, கிரிக்கெட்டும், சினிமாவும் விருப்பமானவை அல்ல. ஆனால் சச்சினும், ரஜினியும் விருப்பமானவர்கள். இவர்கள் எது செய்தாலும் மீடியாவுக்கு அதுதான் தலைப்புச் செய்தி.

சச்சின் விளையாடுவதை நிறுத்தும்போது என்னைப் போன்ற நிறையப் பேருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் போய்விடும். ரஜினி நடிப்பதை நிறுத்தும்போது என்னைப்போன்ற நிறையப் பேருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் போய்விடும்.

அதுவரை சச்சினின் ஆட்டத்தையும், ரஜினியின் படத்தையும் அணு அணுவாக ரசிப்போம். இது இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை!

-மனோகரன்
31 thoughts on “ரஜினி – சச்சின்… சில ஒற்றுமைகள்! – ஒரு ரசிகரின் ‘டச்சிங்’ அலசல்

 1. sam

  உண்மையாக டச்சிங் அலசல் இன்னும் ஒரு தலைமுறையை இருவரும் பார்க்க வேண்டும்……

 2. santhosh

  இந்த பதிவை படித்தவுடன் என் மனதில் தோன்றியவை:

  இந்தியாவின் பெருமையை உலகிற்கு சொன்ன இரண்டு கலைஞர்கள் (ரஜினி, சச்சின்)…..

  இருவரும் தங்களுக்கு கிடைத்த சிறிய வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்தி தங்கள் துறைகளில் வெற்றி பெற்றனர்.

  நச்சுப் பிரச்சாரங்களையும் தாண்டி மக்களின் மனதில் ரஜினி ஆட்சி செய்வது எத்தனை பெரிய சாதனை!- தலைவரால் மட்டுமே சாத்தியம்..

 3. Dubai Fan

  A Very good analysis..just a week back I was saying to some one that in India there are two who are ageless, one is Thalaivar & the other Sachin… one more important observation they both came from un related humble backgorund with no GodFather. He is correct.. it will be a couple of years before both of them hang their boots… my throat is already having the lump for that day when these champions call it a day finally… one thing for sure, both India Cricket & Cinema will never see the likes of them and will never be the same again..

 4. kicha

  //சச்சின்
  விளையாடுவதை நிறுத்தும்போது
  என்னைப் போன்ற நிறையப்
  பேருக்கு கிரிக்கெட் மீதான
  ஆர்வம் போய்விடும் .
  ரஜினி நடிப்பதை நிறுத்தும்போது
  என்னைப்போன்ற நிறையப்
  பேருக்கு சினிமாவின் மீதான
  ஆர்வம் போய்விடும் .//

  Indha varigalai padikumbodhe ennala thaanga mudiyalai. Manase ganamayiduchu. Wonderful writeup.

 5. S.Sebastian, Pune

  He has exactly spoken my mind. Apart from my family & god, I like two persons in this world to a great extent, the first one is Superstar Rajinikant and the next one is Cricket Superstar Sachin then the third place goes to Jakie Chan who is also comparable to both these giants of India.

 6. S Gokul

  Both these champions are role models for all the indians.These two are example how u should behave once u reach top.

 7. Manoharan

  Cricket Bat பிடித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் ஸ்டில் உண்மையிலேயே சூப்பர்.

 8. Manoharan

  இன்னொரு ஆச்சரியமான உண்மை இங்கு நீங்கள் பிரசுரத்திருக்கும் படங்களை பார்த்தபோது தோன்றியது. இருவருமே மராட்டியர்கள். ஆனால் இந்தியன் என்ற உணர்வு மேலோங்கி இருப்பவர்கள்.

 9. Rajan

  Hello,

  This is too much.

  Sachin is palying for country, but Rajini (Devotee of Bal thackeray) is acting for money. Don’t compare both and insult country’s great icon.

 10. jawahar

  சச்சின் விளையாடுவதை நிறுத்தும்போது என்னைப் போன்ற நிறையப் பேருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் போய்விடும். ரஜினி நடிப்பதை நிறுத்தும்போது என்னைப்போன்ற நிறையப் பேருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் போய்விடும்.

  அதுவரை சச்சினின் ஆட்டத்தையும், ரஜினியின் படத்தையும் அணு அணுவாக ரசிப்போம். இது இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை

  சத்தியமான உண்மை……….

 11. jocha

  But one different,
  Rajini is a reel hero but Sachin is a real hero……
  so please do not compare sachin with no one
  bye

 12. Paul

  //Hello,
  This is too much.Sachin is palying for country, but Rajini (Devotee of Bal thackeray) is acting for money. Don’t compare both and insult country’s great icon.//

  Mr, how old are you? Grow up my friend. Is Sachin playing for the country alone and NOT for money. Are you living under a rock for many year? He gets paid in million US $ contract with BCCI. Using his fame, he sells toilet paper, soap, car and you name any FMCG shit on TV and make shit load of money. Rajini act in the movies for money ( why the hell he needs to entertain me for free) but he never mis-used his fans to sell the above said FMCG things where sachin sells.

  Wake up buddy!

 13. Kurangan

  என் பெயர் சட்டி. மனிதன் உருவம் கொண்ட பன்றி.
  Weight 200 KG, Hip Size 54 inches
  எனக்கு உலகில் உள்ள எல்லா கலைகளும் தெரியும்.
  மனிதப் பிறவிகளிலேயே உருப்படாத ரெண்டே விஷயம், ஒன்னு நான், இன்னொன்னு என் மகன் சொம்பு

 14. r.v.saravanan

  உண்மையாக டச்சிங்

  நல்ல பதிவு வினோ நன்றி

 15. PRABAVATHY

  ரஜினி சச்சின் இருவரும் எனக்கு பிடிக்கும்

 16. Hari hara krishnan

  அட இன்னும் ஒரு ஒற்றுமை இருவரும் மராட்யத்தில் பூர்விகமாக கொண்டவர்கள்

 17. M.MARIAPPAN

  ரொம்ப அருமையாக விளக்கி உள்ளீர்கள் உண்மையில் என் மனதில் நான் ரொம்ப நாள் நினைத்து கொண்டு இருந்ததை இங்கே கூறியுள்ளார் தலைவரும் சச்சினும் எனக்கு இரு கண்கள் மாதிரி இந்த இருவரையும் ஒப்பிட்டு உலகில் வேறு யாரையும் கூற முடியாது இன்னும் மேலும் பேறும் புகழும் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

 18. Manoharan

  @ Jocha. I dont know what you really mean the word Reel Hero. A Man who acts as a hero in just one film is also a Reel Hero. Will you compare him with Rajini ? Did you know the meaning of Real Hero ? A Real Hero is the one who achieves what others can just dreamt off. He remains at the Top where nobody can come close. Rajini has done all this. Infact he is not the real Hero. He is a Super Hero. There is nobody in this world who can succeed this much at the age of 61.

 19. Venky

  இன்றும் ரஜினி படத்தை 2 வினாடிகள் பார்த்தால் போதும், அது எந்தப்படம் என்பதை என்னால் 99 சதவீதம் சொல்லிவிட முடியும்.

  Same feeling…..Super stars always rocks..

 20. sowri

  தேங்க்ஸ். நான் நினைத்துகொண்டு இருந்த வார்த்தைகள் இவை. எந்த கஷ்ட நேரத்திலையும் இவர்கள் இருவரையும் நினைத்துகொள்வேன். தனி மனித வழிகாட்டிகள். சொந்த வாழ்கைளும் பொது வாழ்கைளும்

 21. jey

  என்னை பொருத்த வரை தலைவரை ட்ராவிட்டுடன் தான் ஒப்பிடுவேன்.இருவருமே
  அரசால் சரியாக அங்கீகரிக்கப்படதவர்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *