BREAKING NEWS
Search

ஈழம்: கோடு போட்ட ரஜினி… ரோடே போட்ட ரசிகர்கள்!

ரஜினி ரசிகர்கள் – நாம் தமிழர் கட்சி இணைந்து மும்பையில் பெரும் ஆர்ப்பாட்டம்!

ண்மைதான்… ‘தலைவர்’ கண்ணசைத்தால், அவரது ரசிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதனால்தான், முடிந்தவரை தனது உணர்வுகளை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கூட பெரிதாக காட்டிக் கொள்வதில்லை ரஜினி.

இன்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்வு, இந்திக்காரர்களையும் அசர வைத்துள்ளது என்றால் மிகையல்ல. அதுதான் ரஜினி ரசிகர்களும் சீமானின் நாம் தமிழர் அமைப்பும் இணைந்து நடத்திய பெரும் ஆர்ப்பாட்டம். கொழும்பில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவுக்கு எந்த இந்திய நடிகரும் போகக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது.

இலங்கை திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறி கடந்த மாதமே ரஜினிக்கு அழைப்பு மடல் கொடுக்க முயன்றனர். ‘நான் இந்த விழாவில் பங்கேற்க மாட்டேன்’ என்று அப்போதே சொல்லியிருக்கிறார்.

அழைப்பிதழையாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்று இலங்கைத் தூதர் கெஞ்சியபோது, ‘விழாவுக்கே நான் வராதபோது அழைப்பிதழை மட்டும் வாங்கிவைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன், வேண்டாம்’ என்று பளிச்சென்று நெத்தியடி தந்தவர் ரஜினி மட்டுமே.

ஈழத் தமிழர்களின் உணர்வுக்கு இந்த வகையில் மதிப்பளித்தார் ரஜினி என்றால் அவரது ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன… தலைவரின் மன ஓட்டம் இதுதான் என்பதைப் புரிந்து கொண்டவர்கள், மும்பையில் இன்று செவ்வாய்க் கிழமை ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தையே நடத்திக் காட்டிவிட்டார்கள்.

மும்பையின் ஆசாத் மைதானத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினருடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, பெரியார் தி.க., தேசியவாத காங்கிரஸ் என பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவிற்கு இந்தி திரையுலகினர் எவரும் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ரஜினி மன்றத்தின மாநில தலைவர் ஆதிமூலம்.

இதற்கு முன் அமிதாப்பச்சன், ஷாருக்கான் என்று தனித்தனி நடிகர்கள் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்தது நாம் தமிழர் இயக்கம்.

இன்று, ஒட்டுமொத்த இந்தி திரையுலகிற்கும் தமிழரின் கோரிக்கையை வலியுறுத்தி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு முன்பு, இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் நடந்த போது அல்லல்படும் தமிழருக்கு உதவ முந்வந்தனர் ரசிகர்கள். போர் நிறுத்தம் கோரி, தன்னெழுச்சியாக மாநிலம முழுவதும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நடத்தியது நினைவிருக்கலாம்.

-என்வழி
9 thoughts on “ஈழம்: கோடு போட்ட ரஜினி… ரோடே போட்ட ரசிகர்கள்!

 1. eelam tamilan

  See how preparation and parties going on :

  http://www.dailymirror.lk/index.php/news/images/4093-the-party-begin.html

  Popular Bollywood actors Vivek Oberoi, Boman Irani, Lara Dutta and Ritesh Deshmukh arrived in the country today to take part in the IIFA events which will be held in the country from Thursday, an official at the Sri Lanka Tourist Board said.

  Boman Irani, Lara Dutta and Ritesh Deshmukh will host the IIFA award ceremony which will be held at the Sugathadasa Indoor Stadium on Saturday.

  Several leading Bollywood actors, actresses and music artistes are expected to arrive in the country tomorrow and Thursday along with hundreds of Indian tourists.

  However noted stars such as Shahrukh Khan, Arjun Rampal, Aishwariya Rai and Abishek Bachchan will not attend the IIFA events in Colombo. (Daily Mirror online)

 2. eelam tamilan

  I think Bollywood actors went through that road or other road? However still happy as no tamil actors there.. at least happy with that as we can not trust others..

 3. Juu

  தலைவா உன் எண்ணங்களை நீ சொல்லாமலே செயலாக்கும் ரசிகர்களை நினைக்கும்போது, கர்வமாக உள்ளது அவர்களில் ஒருவனாக.
  உன்னை கேட்பதெல்லாம் ஒன்றுதான்,

  தலைவா, தலைமை தாங்க வா!!!!!

 4. குமரன்

  நெய்வேலியில் ஒரு கூட்டத்தைக் கூட்டி தலைவரைத் திட்டிய பாரதிராஜா, சத்தியராஜ் போன்ற போலித் தமிழர்கள் இப்போது வாய்க்குப் பிலாஸ்த்திரி போட்டு ஒட்டிகொண்டிருக்கிறார்கள். வெக்கம் கேட்டவர்கள், கருணாநிதிக்குக் கோபம் வந்துவிடுமோ என்று வாயைத் திறக்கவில்லை.

  தேசிய அளவில் இணையமுடியாத பா.ஜ.கவையும் பெரியார் தி.கவையும் இணைத்த ரஜினி ரசிகர்கள் சாதனையை இந்த போலித் தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும்.

 5. sivasankar

  it was indeed a great achievement to unite athiest and theist forces (like Periyar DK and BJP) … Hats off to Rajini fans… really great work.. at least when it comes to common issues like this people should forget about their political differences, idelogies which they fight for….JJ and MK should take lessons from this.. imagine if ADMK and DMK would have fought together this issue, we will be having full strength….

  I fully appreciate Rajini Fans, BJP and Periyar DK. Though I am a staunch BJP supporter, i like the way Periyar DK faught together with BJP because normally so called tamil leader Veeramani will feel very embrassed even if he sees BJP leaders on their way as if they are outside this graham…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *