BREAKING NEWS
Search

‘ரஜினி ஒரு குளோபல் சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!’

ரஜினி ஒரு குளோபல் சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை! – ஸ்ரீதர் பிள்ளை

ஜினி ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பத்திரிகையாளர் என்ற இடத்திலிருப்பவர் ஸ்ரீதர் பிள்ளை. டைம்ஸ் ஆப் இந்தியாவின் சினிமா எடிட்டர் இவர்தான். அடிப்படையில் ரஜினி என்ற கலைஞன் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.

எந்திரன் வெளியான பிறகு அதன் வெற்றி குறித்த கலந்துரையாடல்கள், ரஜினி பற்றிய விமர்சன அரங்குகள் என அனைத்திலுமே ஸ்ரீதர் பிள்ளையைப் பார்க்கலாம்.

எந்திரன் படம் வெளியான உடன் அடுத்தடுத்து மூன்று நாள்கள் அந்தப் படத்தை வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்து, விஐபி ரசிகர்கள் தொடங்கி, சாமானிய ரசிகர்கள் வரை உணர்வுகளையும் படம் பிடித்தவர்.

ரஜினி மீது சிலர் பொறாமையுடன் அர்த்தமில்லாமல் கூறும் கருத்துக்களுக்கும் சரியான பதிலடி கொடுத்து வருகிறார் ஸ்ரீதர் பிள்ளை. என்டிடிவி இந்து விவாதத்தில் பாடகி சின்மயியுடன் இணைந்து ரசிகர்களின் சார்பாக அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ரசிகர்களுக்கு பெரும் உற்சாக டானிக்!

கிட்டத்தட்ட நாம் தினமும் சந்திக்கிற நபர்தான் ஸ்ரீதர் பிள்ளை. இந்த நிகழ்ச்சி குறித்து நம்முடன் சில கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

அவற்றில் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்…

ரஜினியைப் பற்றி தெரியாத விஷயம் என்று எதுவுமில்லை. அவரை விமர்சிப்பவர்களுக்கும் கூட அவர் எத்தகைய நல்ல மனிதர் / கலைஞர் என்பது தெரியும். ஆனால் தொடர்ந்து அவர் விமர்சிக்கப்படுகிறார்… ஏன்?

முதலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு வகை உளவியல் பிரச்சினை. மிகப் பிரபலமான, வெற்றி பெற்ற ஒருவரை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பதன் மூலம் பிரபலமடையும் உத்தி. ரஜினியை விமர்சிப்பவர்களின் அடிப்படை பெரும்பாலும் இதுதான்.

ரஜினி எதிர்ப்பாளர்களுக்கே தெரியும், தாங்கள் பேசுவதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பது. ஆனாலும் பேசுகிறார்கள், மல்லுக்கட்டிக் கொண்டு.

ரஜினியை நான் ஆரம்ப காலம் முதலே அறிவேன். அவர் மிகச் சிறந்த கலைஞர், சிறந்த மனிதர், அனைத்துக்கும் மேல் மக்களை எப்போதும் தன் வசம் வைத்திருக்கும் வசீகரம் மிக்கவர். ஷங்கர் சரியாகத்தான் அவரது பாத்திரத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்!

ஏதோ எந்திரனில்தான் அவர் அறிமுகமாவது போல சிலர் பேசுகிறார்கள், எம்ஜிஆர், பாகவதர் என்றெல்லாம் உளறுகிறார்களே..

இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். ரஜினி என்பவர் எம்ஜிஆர் – சிவாஜி காலத்திலேயே சூப்பர் ஸ்டாராகிவிட்டவர். மார்க்கெட்டிங் செய்து மக்களைக் கவர வேண்டிய கட்டாயத்தில் அவரில்லை. அதே நேரம் ஒரு படம் என்று வருகிற போது, அதை சரியான முறையில் சந்தைப்படுத்துவதில் அவசியம்தானே…. அதில் ரஜினியின் தவறு எதுவுமில்லை. ரஜினி படங்களுக்கு மீடியா தரும் பப்ளிசிட்டியை விட, மக்கள் வாய்மொழியாகவே பரவும் விளம்பரம் பெரியது.

ஸ்ரீதர் பிள்ளை

ரஜினி என்பவர் பல சாதனைகளை உடைத்தவர். தமிழ் சினிமா பல புதிய உயரங்களுக்குச் செல்ல காரணமாக இருந்தவர். ரஜினிதான் இந்திய சினிமாவுக்கு சர்வதேச மார்க்கெட்டைத் திறந்துவிட்டார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

யார் என்ன சொன்னார்கள் என்பதெல்லாம் நமக்கு வேண்டாம். உலகுக்கே தெரிந்த ஒரு உண்மையைச் சொல்கிறேன்…  ரஜினி இன்று ஒரு உலக சூப்பர் ஸ்டார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் எல்லாருமே, அவர்கள் ஊரில் பெரிய மார்க்கெட் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் அவர்களுக்கு சின்ன லெவலில்தான் பிஸினஸ் இருக்கும்.

சர்வதேசப் படமான அவதார் இந்தியாவில் பெற்ற வசூலை விட, ரஜினியின் எந்திரன் அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரிட்டன் போன்ற நாடுகளில் வசூலில் புதிய சாதனை படைத்திருக்கிறது எந்திரன். வளைகுடா நாடுகளில் எந்திரன் / ரோபோவுக்கு மக்கள் தந்த வரவேற்பு, ரஜினி ஒரு க்ளோபல் சூப்பர் ஸ்டார்தான் என்பதற்கு அழுத்தமான சான்று.

உலக சூப்பர் ஸ்டார் என்பதற்கு பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர்கள் என்னென்ன வரையறைகள் வைத்திருக்கிறார்களோ, அவை அனைத்துக்கும் மேலான தகுதிகள் ரஜினிக்கு உள்ளன.

வட இந்தியாவில் ரோபோ வசூல் சுமார்தான் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதுபற்றிய ஒரு இணையதளக் கட்டுரைக்கு நீங்கள் கமெண்டாக எழுதியிருந்ததையும் படித்தேன். அருமையான விளக்கம் தந்திருந்தீர்கள்…

ரஜினியின் ரோபோ ஒரு டப்பிங் படம். அவதாரை தமிழில் டப் பண்ண மாதிரி, எந்திரனை ரோபோவாக்கியிருந்தார்கள். அந்தப் படம் அமீர்கான் சாதனையை முறியடித்தால்தான் வெற்றிப்படமாக ஒப்புக் கொள்வேன் என்றால்… இந்தியாவில் வெளியான 2012, அவதார் படங்களும் தோல்விப் படங்களே!

ரோபோ / ரோபாட் என எந்தப் பெயரில் வந்திருந்தாலும், எந்திரன்தான் மெயின். சர்வதேச பாக்ஸ் ஆபீஸில் அவதார் தமிழ் வசூல் இவ்வளவு என்று போடுவதில்லை. ஐந்து மொழிகளில் வெளியானாலும் கணக்கில் கொள்ளப்படுவது அவதார் ஒரிஜினல்தான். அந்த மாதிரி ஒரு அந்தஸ்தை ஒரு தமிழ்ப் படத்துக்கு உருவாக்கித் தந்திருக்கிறார் ரஜினி என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள். இந்தியாவில் எந்தப் படமாவது இப்படி வெளியாகியிருக்கிறதா…

இன்னொரு முக்கியமான விஷயம், ரோபோ இந்திப் படமும் நல்ல வசூலைத்தானே பெற்றது. இந்தப் படம் இரண்டாவது வாரத்தில் கூட கிட்டத்தட்ட ரூ 6 கோடியை வட இந்தியாவில் வசூலித்துள்ளது. இதே படத்தோடு வந்த அஞ்ஜானா அஞ்ஜானியும் இதே அளவுதான் வசூலித்துள்ளது. ரோபோ டப்பிங்… அஞ்ஜானா ஒரிஜினல். ரோபோ எந்த அளவு ஆளுமை செலுத்துகிறது வட இந்தியாவில் என்பதற்கு இதுவே போதும். மேலும் வட இந்தியாவில் தமிழ் எந்திரனையே அதிகம் பேர் விரும்பிப் பார்க்கிறார்கள். அகமதாபாதில் ரோபோவை விட எந்திரனுக்கு வசூல் அதிகம். தெலுங்கில் ரோபோ புதிய சாதனையையே படைத்திருக்கிறது. ஆனால் எல்லாம் ஒன்றுதானே… ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தியாவில் எந்தப் படமும் நெருங்க முடியாத அளவுக்கு வசூல் சாதனைப் படைத்துள்ளது எந்திரன்.

வேறு நடிகர்களின் படங்களை மார்க்கெட்டிங் மூலம் இந்த அளவு உயரத்துக்குக் கொண்டு போக முடியுமா…

சான்ஸே இல்லை. ரஜினியைத் தவிர யார் நடித்தாலும் இந்த hype, expectation, excitement ரசிகர்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி இருக்காது. என்னோடு படம் பார்த்த நண்பர் ஒருவர் கடைசியாக தியேட்டருக்குப் போய் பார்த்தது குசேலன். அதற்கு முன் சிவாஜி. மீண்டும் எந்திரன் பார்க்கத்தான் தியேட்டருக்கு வந்தார். இடையில் எத்தனை படங்கள் ரிலீஸாகின… இத்தனைக்கும் அவர் ரஜினி ரசிகர் கிடையாது. இவரைப் போல பல லட்சம் பேர் உள்ளனர். இதைத்தான் Rajini phenomena என்கிறார்கள்.

இந்தியாவில் எந்த நடிகருக்குமே இந்த சிறப்பு கிடையாது. இதை விட அதிகமாக மார்க்கெட்டிங் செய்தால் கூட வேறு எந்த நடிகரின் படமும் இதுபோல வசூலைக் குவிக்காது. ரசிகர்களையும் ஈர்க்காது. இதை நான் உறுதியாக எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்.

வட இந்தியாவில் எனக்குத் தெரிந்து 45 வயதைத் தாண்டினாலே பலருக்கும் மார்க்கெட் அவுட்டாகிவிடும். அமிதாப்பச்சனே கூட, அப்படியொரு சூழலில்தான் குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார். ஆனால் ரஜினி இப்போதும் 30 வயது வாலிபனாக திரையில் கலக்க முடிகிறது. ஒரு கல்லூரி மாணவனிடம், ரஜினி வயதைப் பற்றிச் சொன்னேன். அதற்கு அவர், “அதனால் என்ன… எனக்கு அவர் 30 வயது ஹீரோதான். திரையில் அவரைப் பார்த்தாலே புதிய எனர்ஜி கிடைத்தமாதிரி இருக்கிறது” என்கிறார். இதுதான் ரஜினி மேஜிக்!

மற்ற படங்கள் வெளியாவது ஒரு நிகழ்ச்சி, சடங்கு மாதிரிதான். ஆனால் ரஜினி படம் வெளியாவது திருவிழா மாதிரி.

ஒரு ரஜினி படம் வெளியானால் இன்டஸ்ட்ரியே நிமிர்கிறது. தியேட்டரில் முறுக்கு விற்கிறவன், சைக்கிளுக்கு டோக்கன் போடுகிறவன் என அனைத்துத் தரப்பினருமே படுபிஸியாகிவிடுகிறார்கள். நல்ல வருமானம் பார்க்கிறார்கள்.

ரஜினியின் எந்திரனால் சிறு படங்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து…

அதெல்லாம் சுத்தப் பேத்தல். இப்போது ஊரெல்லாம் எந்திரன்தான் ஓடுகிறது. இந்த நேரத்தில் ஒரு மாறுதலாக, ஒரு சின்ன பட்ஜெட் படம் வித்தியாசமாக வந்தால் நிச்சயம் ரசிகர்கள் பார்க்கவே செய்வார்கள். ஆனால் நிலைமை என்ன… குப்பையாக வருகின்றன படங்கள். எந்திரன் என்ற விருந்தே இருக்கும்போது, மோசமான சாப்பாட்டை யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பது இயல்புதானே!

தியேட்டர் ரிப்போர்ட் இன்னும் ஸ்ட்ராங்காகத்தானே உள்ளது…

ஆமாம்… இன்னும் கூட வெள்ளி, சனி, ஞாயிறுகளில் எந்திரன் 5 காட்சிகளாக ஓடுகிறது. சென்னையைப் பொறுத்தவரை, தீபாவளிக்கு புதிய படங்களை ரிலீஸ் செய்வதையே விரும்பவில்லை, எந்திரனை திரையிட்டிருக்கும் அரங்குகள். அப்படியே திரையிட்டாலும் எந்திரன் காட்சிகளுக்குப் போக புதுப்படங்களுக்கு ஓரிரு காட்சிகளைத் தரவே அவர்களுக்கு விருப்பம். தீபாவளி விடுமுறை நாட்களில் நிச்சயம் எந்திரன் பல கோடிகளைக் குவிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு!

ரஜினி பட வெற்றியை ஏற்க முடியாமல், இது ஷங்கரால் கிடைத்த வெற்றி, கலாநிதி மாறனால் கிடைத்த வெற்றி என்றெல்லாம் சொல்லப்படுவது குறித்து…

Of course, இது ஒரு டீம் ஒர்க்தான். ஆனால் டீமுக்கான மொத்த எனர்ஜியும் ரஜினிதான். அவர்தான் பில்லர். அவரைச் சுற்றித்தான் எல்லாமே எழுப்பப்படுகிறது. எந்திரனைப் பொறுத்தவரை, ஓபனிங் காட்சி, பாட்டு, பஞ்ச் டயலாக் இல்லையென்றாலும், இது முழுக்க முழுக்க ரஜினி படம். 100 சதவீத பொழுதுபோக்குக்கு உத்தரவாதம். ஒரு சினிமா விமர்சகர், தன் குடும்பத்தோடு எந்திரன் பார்த்துவிட்டு, நெகடிவாக எழுதட்டும்… அவர் குடும்பமே அவரைத் தோற்கடித்துவிடும். அந்த அளவு மக்களைக் கவர்ந்துள்ளது படம்.

ரஜினி ரசிகர்கள் இந்த வெற்றிக்கு எந்த அளவு உதவினார்கள்…

ரஜினி ரசிகர்கள் வழக்கம்போலத்தான் இந்தப் படத்துக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்… ஆனால் அவர்கள் கொடுத்தது ஒரு டேக் ஆஃப் என்ற அளவில்தான் பார்க்க வேண்டும். அதன் பின்னர் படத்தை மக்களே ஓட வைத்துவிட்டார்கள்.

இப்போதே ரஜினியின் அடுத்தபடம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்…

ஆமாம்… நிச்சயம் அவர் நடிப்பார் என்றே தெரிகிறது. ஆனால் ஒன்று உறுதி… சிவாஜியை எந்திரன் முறியடித்ததுபோல, எந்திரன் சாதனைகளை ரஜினியின் புதிய படம் முறியடிக்கும்… அன்றைக்கும் இதைவிட பெரிய விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கும், ரஜினி செல்வாக்கு வளர்ந்துகொண்டே இருப்பதுபோல!

-வினோ
25 thoughts on “‘ரஜினி ஒரு குளோபல் சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!’

 1. R O S H A N

  சூப்பர் வினோ….அருமையான பதிவு….இப்போ இருக்கும் சூழ்நிலையில் மிக அவசியமான interview…..ஸ்ரீதர் பிள்ளை அவர்களுக்கும்….உங்களுக்கும் நன்றி வினோ…..

 2. eppoodi

  ஒவ்வொரு வார்த்தையும் அசத்தல், ஞானி போன்ற வயித்தெரிச்சல் பாட்டிகளுக்கு இவரைப் போன்றவர்கள்தான் சரியான பதிலடியை கொடுக்கமுடியும்.

 3. giri

  //அவற்றில் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்//

  ஒரு பகுதியே அதிருதே! 🙂

  //அதே நேரம் ஒரு படம் என்று வருகிற போது, அதை சரியான முறையில் சந்தைப்படுத்துவதில் அவசியம்தானே….//

  அது தான் எனக்கு புரியல! ஏன் இதை எல்லோரும் தவறாக புரிந்து கொண்டு விதண்டாவாதமாக பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. சன் டிவி செய்வது சில நேரங்களில் ஓவராக இருந்தாலும்.. அது தவிர்த்து இவ்வளோ பெரிய பட்ஜெட் படத்திற்கு விளம்பரம் அவசியமே!

  இது எப்படி இருக்கு என்றால் இந்திய கிரிக்கெட் அணி நாம் தான் சீரீஸ் ல் வெற்றி பெற்று விட்டோமே! கடைசிப்போட்டியில் தோற்றால் என்ன ஆகப்போகிறது? எதற்க்காக கஷ்டப்பட வேண்டும் ஜாலியாக விளையாடலாம் என்கிற எண்ணம் தான்.

  வெற்றி கிடைக்கும் என்றாலும் பெரிய வெற்றியை பெற நினைப்பவனே எப்போதும் முன்னணியில் இருப்பான். எந்திரன் படத்தால் வெற்றி கிடைக்கும் என்றாலும் விளம்பரம் மூலம் இன்னும் பலரை சென்றடையும் என்பது உண்மையே! இதன் மூலம் இன்னும் பெரிய வெற்றி அடையலாம். இதில் என்ன தவறு! இதில் ரஜினி மீது என்ன தவறு! பணம் போட்டவன் போதும் என்று விடுவானா இல்லை எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்று நினைப்பானா!

  இதைப்போல பேசுகிறவர்கள் எல்லாம் ஒரு படம் எடுத்தால் தெரியும்… கதை. சினிமா கதை அல்ல அவங்க கதை 🙂

  // ஒரு சினிமா விமர்சகர், தன் குடும்பத்தோடு எந்திரன் பார்த்துவிட்டு, நெகடிவாக எழுதட்டும்… அவர் குடும்பமே அவரைத் தோற்கடித்துவிடும். அந்த அளவு மக்களைக் கவர்ந்துள்ளது படம்//

  சரவெடி! 🙂

  வினோ உங்கள் கேள்விகள் அனைத்தும் அருமை! அதற்கு ஸ்ரீதர் அவர்கள் கொடுத்த பதிலும் அருமை!

 4. mathan

  ரஜினி சார்உடைய அடுத்த படத்தின் பெயர்
  ஹரா(hara).
  get ready folks

 5. Juu

  /*** எந்திரன் சாதனைகளை ரஜினியின் புதிய படம் முறியடிக்கும்… அன்றைக்கும் இதைவிட பெரிய விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கும், ரஜினி செல்வாக்கு வளர்ந்துகொண்டே இருப்பதுபோல! ***/

  DOT ..

 6. Rajan

  Yes, where these rasigargal, Sridhar pillai gone when Baba, Kuselan flopped?

  Thats the real show case to show “Rajini films also will be flopped if story and marketing is bad”. Endhiran is a good entertainer and it is because of Shankar’s creativity and hard work. Rajini is also worked well in that, thats all. Sun pictures did excellent marketing to promote it. So there is no point in giving too much of hype to Rajini only.

 7. Manoharan

  எனக்கென்னவோ இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே எந்திரனின் வசூல் கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றுகிறது. C சென்டர்களை விட B சென்டர்களில் வசூல் அதிகமிருக்கிறது B சென்டர்களை விட A சென்டர்களில் இன்னும் அதிகமிருக்கிறது. இது என் புத்திக்கு எட்டியவரை ஒரு அனுமானம், இது நடக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

 8. balaji

  \\யாரைப்பற்றி யாருக்கு வேண்டுமானால் விமர்சனங்கள், கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். “முரன்பாடுகள் இந்த உலகதை நகர்த்திக்கொண்டு இருக்கிறது”
  ஞானி குறித்த தங்களுடைய இந்த பதிவு கடைந்து எடுத்த முட்டாள் தனத்தின் வெளிப்பாடு .//

  நீங்களே சொல்லிடிங்க யாரை பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் பண்ணலாம் என்று. இந்த பதிவு ஞானி பற்றி எங்கள் கருத்து, இதுக்கு நீங்க ஏன் டென்ஷன் ஆகுரிங்க?

  //சாதாரண ரசிகனின் ரசிக உணர்வை கிளரி அதன் மூலம் அனது ரத்ததை உறுஞ்சி குடிக்கும் இந்த சினிமா வியாபாரிகளுக்கு, தங்களை போன்றவர்கள் முட்டு கொடுப்பதும் , ஜால்ரா தட்டுவதும் அதிர்ச்சி அளிக்கிறது.//

  என்னோட விருப்பதுக்க்காகதன் நான் சினிமா பர்க்கேரன். யாரும் என்னை கம்பெல் பண்ணலே, பண்ணவும் முடியாது.

  //இந்த உலகத்தை உறுவாக்கிற கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டுகிற சமூக கட்டமைப்பை கேள்வி உள்ளாக்க உங்களுக்கு நேரம் இல்லை .//

  அதுக்குத்தான் நீங்க இருக்கீங்கலே….

  //தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் ரஜினிடம் இப்போது தென்படவில்லை.//

  அவர் என்னை விரும்புங்கன்னு சொல்லலே சார். நான்தான் அவர விரும்ப ஆரம்பிச்சேன்..

  \\எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.\\

  என்ன பண்ணினாலும் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது சார். ஏன்னா ஒன்ன விட ஒன்னு எப்போவும் பெருசாதான் தெரியும்.
  மக்களுக்கு எந்திரன் ஒரு பொழுதுபோக்கு, எல்லாம் பிரச்சனைகளும் மறந்து சந்தோசமா இருக்க!

  //“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது,நிங்களும்தான்.//

  இதுல என்ன்ன சார் தப்பு? நாம பண்ற காரியத்துல நம்ளுக்கே நம்பிகை இல்லன்னா எப்படி சார்? மற்றவர்களை ரஜினி வாழ்த்துவத குட இப்ப தப்பு சொல்ல அரம்பிசிட்டங்க்லா?

  \\எல்லாவற்றையும் விட கொலைகாரன் தெருபொருக்கி பால்தாக்ரேவை தனது கடவுள் என்று சொன்னது மூலம் எல்லா தமிழரர்களையும் கேவலப்படுத்திய ஒரு நடிகருக்கு உங்களின் வெறி இப்படிதான் மனிதன்மை அற்ற வார்தைகளின் மூலம் வெளிப்படும் வாழ்க வளர்க….\\

  அவருக்கு தான் சொன்னாரே தவிர, எல்லாருக்கும் சொல்லலிய.

  தயவு செய்து ஒன்னே புரிஞ்சிகோங்க, ரஜினி ஒரு பாசிடிவ் எனெர்ஜி! நான் அவரை பின்பற்றுவதால் ஒன்னும் கேட்டு போகவில்லை, நல்லாத்தான் இருக்கேன். சொல்லபோன, எனுக்கு இன்னும் மேல மேல முன்னேறதான் தோணுது!

 9. gnanam

  ஏய் ரஜினி நீ தான் தமிழ் நாட்டின் சிங்கம் ……..

 10. GNANAM. DUBAI

  ரஜினி நீ தான் தமிழ் நாட்டின் சிங்கம் …….. நான் உயிர் நண்பன் …
  உன் அடுத்த படம் சி.எம் வைத்து எடுக்கவும்………..

 11. ஆனந்த்

  விடுங்க பாஸ்!.

  நம்ம தலைவர் வெயிட் நமக்கு தெரியும்.

  ஓர் உதாரணம் சொல்றேன். ஜக்ஹுபாய், ஜக்ஹுபாய்-னு ஒரு படம் வந்திச்சு. அது தலைவர் நடிக்க இருந்த படம் ஆனா நடிக்கல. டைரக்டர் ரவிக்குமார்தான். ஹீரோயின் ஸ்ரேயா தான் ஆனாலும் படம் ஓடல. அப்படி ஒரு படம் வந்ததா கூட யாருக்கும் தெரியாது. அத ப்ரமோட் பண்ணவும் நம்ம தலைவர் தான் வர வேண்டியதா இருந்துச்சு.

  இதுவே தலைவர் நடிச்சு இருந்தா? படம் சூப்பர் ஹிட் ஆயிருக்கும்!. இதை போல ஞான சூனியம் ஸ்ரேயா நடிச்சதால் தான் ஓடிச்சுன்னு சொல்லுவான். அப்பதான அவன் பேமஸ் ஆவான்? அவன் ஒரு லூசு.

  விடுங்க பாஸ்!!!.

 12. eppoodi

  GNANAM.

  //ரஜினி நீ தான் தமிழ் நாட்டின் சிங்கம் //

  அதிலென்ன சந்தேகம்?

  //…….. நான் உயிர் நண்பன் …//

  உயிரா இல்லை ம….ரா?

  //உன் அடுத்த படம் சி.எம் வைத்து எடுக்கவும்………..//

  அதெல்லாம் அவருக்கு தெரியும்; வாறவாரம் மூணாம் கிளாஸ் எக்ஸ்ஸாம் வருதெல்ல!! போயி புததகத்தை எடுத்து படி.

 13. balaji

  எப்புடி அவர்களே, உங்கள் சைட்லே போட வேண்டிய கம்மெண்ட இங்க போட்டுட்டேன்! ப்ளீஸ் நீங்க அதே உங்க சைட்லே சேத்துடுங்க!

  \\யாரைப்பற்றி யாருக்கு வேண்டுமானால் விமர்சனங்கள், கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். “முரன்பாடுகள் இந்த உலகதை நகர்த்திக்கொண்டு இருக்கிறது”
  ஞானி குறித்த தங்களுடைய இந்த பதிவு கடைந்து எடுத்த முட்டாள் தனத்தின் வெளிப்பாடு .//

  நீங்களே சொல்லிடிங்க யாரை பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் பண்ணலாம் என்று. இந்த பதிவு ஞானி பற்றி எங்கள் விமர்சனம், இதுக்கு நீங்க ஏன் டென்ஷன் ஆகுரிங்க?

  //சாதாரண ரசிகனின் ரசிக உணர்வை கிளரி அதன் மூலம் அனது ரத்ததை உறுஞ்சி குடிக்கும் இந்த சினிமா வியாபாரிகளுக்கு, தங்களை போன்றவர்கள் முட்டு கொடுப்பதும் , ஜால்ரா தட்டுவதும் அதிர்ச்சி அளிக்கிறது.//

  என்னோட விருப்பதுக்க்காகதன் நான் சினிமா பர்க்கேரன். யாரும் என்னை கம்பெல் பண்ணலே, பண்ணவும் முடியாது.

  //இந்த உலகத்தை உறுவாக்கிற கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டுகிற சமூக கட்டமைப்பை கேள்வி உள்ளாக்க உங்களுக்கு நேரம் இல்லை .//

  அதுக்குத்தான் நீங்க இருக்கீங்கலே….

  //தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் ரஜினிடம் இப்போது தென்படவில்லை.//

  அவர் என்னை விரும்புங்கன்னு சொல்லலே சார். நான்தான் அவர விரும்ப ஆரம்பிச்சேன்..

  \\எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.\\

  என்ன பண்ணினாலும் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது சார். ஏன்னா ஒன்ன விட ஒன்னு எப்போவும் பெருசாதான் தெரியும்.
  மக்களுக்கு எந்திரன் ஒரு பொழுதுபோக்கு, எல்லாம் பிரச்சனைகளும் மறந்து சந்தோசமா இருக்க!

  //“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது,நிங்களும்தான்.//

  இதுல என்ன்ன சார் தப்பு? நாம பண்ற காரியத்துல நம்ளுக்கே நம்பிகை இல்லன்னா எப்படி சார்? மற்றவர்களை ரஜினி வாழ்த்துவத குட இப்ப தப்பு சொல்ல அரம்பிசிட்டங்க்லா?

  \\எல்லாவற்றையும் விட கொலைகாரன் தெருபொருக்கி பால்தாக்ரேவை தனது கடவுள் என்று சொன்னது மூலம் எல்லா தமிழரர்களையும் கேவலப்படுத்திய ஒரு நடிகருக்கு உங்களின் வெறி இப்படிதான் மனிதன்மை அற்ற வார்தைகளின் மூலம் வெளிப்படும் வாழ்க வளர்க….\\

  அவருக்கு தான் சொன்னாரே தவிர, எல்லாருக்கும் சொல்லலிய.

  தயவு செய்து ஒன்னே புரிஞ்சிகோங்க, ரஜினி ஒரு பாசிடிவ் எனெர்ஜி! நான் அவரை பின்பற்றுவதால் ஒன்னும் கேட்டு போகவில்லை, நல்லாத்தான் இருக்கேன். சொல்லபோன, எனுக்கு இன்னும் மேல மேல முன்னேறதான் தோணுது!

 14. raj

  i have sent email to feedback@ndtv-hindu.com as follows:
  ‘quote’

  I condemn the way in which your news channel conducted the debate.

  Gnani and Sudhankan uttered all false news.

  Gnani said MGR acted ‘Ulagam Sutrum Valiban’ when he was 62.

  Please ask him to clarify the following:

  MGR was born in 1917
  The film was released in the year 1972
  1972 minus 1917 = 55

  And Sudhangan said MGR released two films at the same day. MGR never released two films at the same day.
  Only Great Actor Sivaji Ganesan has done it several times.

  Thanks to Chinmayi who had guts enough to thwart their arguments.

 15. eppoodi

  balaji

  //எப்புடி அவர்களே, உங்கள் சைட்லே போட வேண்டிய கம்மெண்ட இங்க போட்டுட்டேன்! ப்ளீஸ் நீங்க அதே உங்க சைட்லே சேத்துடுங்க!//

  சேர்த்தாச்சு, நன்றி

 16. KEERTHIVASAN

  I still think that nadigar thilgam, and super star are having guts to release several films, unlike MGR, and Kamal Hasan, who did not have the guts to release 3-4 films at a time simply because of poor story line up (complexed stories) and these MGR and kamal always used heavy getups which is irritating. Sivaji Ganesan and Rajini observed from the heart and produced on screen efficiently and easily that is why they have the guts to release even 10 films at a time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *