BREAKING NEWS
Search

ரஜினி… ஒப்பீடுகள் சரிதானா?


ரஜினி… ஒப்பீடுகள் சரிதானா?

ன் மதிப்பும் தரமும் என்னவென்பது, நீ யாருடன் ஒப்பிடப்படுகிறாய் என்பதைப் பொறுத்து அமைகிறது”, என்கிறார் அரசியல் விஞ்ஞானியான மாக்கியவல்லி._40070617_tn4

அரசியலில் ஒப்பீடுகள் மிகமிக முக்கியம்.

ஆனால் அந்த ஒப்பீடுகளில் முன் வைக்கப்படுகிற மனிதர்களை, தலைவர்களைப் பொறுத்தே உங்களின் ஆதர்ஸ தலைவரின் தகுதியும் தரமும் வெளி உலகில் தீர்மானமாகிறது. அதுமட்டுமல்ல, தொண்டர்களின் தரமும் அதிலேயே வெட்ட வெளிச்சமாகிறது.

‘பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான் ஏழைகளின்பால் உண்மையான அக்கறை கொண்ட மனிதர்’

– இந்த ஒப்பீட்டுக்கும்,

‘ரஜினிக்கு அடுத்து அதிக மக்கள் செல்வாக்கு விஜய்காந்த் அல்லது விஜய் அல்லது யாரோ ஒரு எக்ஸுக்கு இருக்கிறது’

-என்ற இந்த ஒப்பீட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பார்த்தீர்களா…

நண்பர்களே…

நாம் இப்போது இந்த இரண்டாவது ஒப்பீட்டையே திரும்பத் திரும்ப செய்து வருகிறோம், அது எத்தனை பெரிய அறிவீனம் என்பதை உணராமலேயே.

ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட கிளையில் பொறுப்பாளராக இருந்து பின்னர் நடிக்க வந்து தனக்கான ஒரு இடம் பிடித்தவர்தான் விஜய்காந்த். அதை ரஜினியே பாராட்டியிருக்கிறார். ரஜினியைப் பார்த்து வளர்ந்த ஒருவருடன் ரஜினியையே ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த வகையில் சரியான கண்ணோட்டத்தைத் தரும்!

விஜய் விரல் சூப்பிக் கொண்டிருந்தபோது, ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். இந்த உச்ச நட்சத்திரத்தைப் பார்த்து, பிரமித்து, பின்னர் அவரிடம் அறிவுரை கேட்டு, ஆசி பெற்று இப்போதும் தன்னை ரஜினி ரசிகன் என்று (அவ்வப்போது எம்ஜிஆர்) சொல்லிக் கொள்பவர்தான் விஜய்.

அவரோடு ரஜினியை ஒப்பிடுவது சரியாக வருமா…

சிரஞ்சீவியைப் பொறுத்தவரை, ரஜினி அவருக்கு குரு மாதிரி. ஆந்திரத்து அரசியல் வேறு. மக்கள் வேறு…

இப்படி வேறுபட்ட தகுதிகள், தளங்களில் இருப்போருடன் முற்றிலும் வேறுபட்ட, பண்பட்ட, சுயநலத்துக்காக அத்தனை சீக்கிரம் மற்றவர்களை தூண்டிவிடத் தெரியாத ரஜினியை ஒப்பிடுவது சரியா என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கேள்வி.

உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? என்ற இந்தக் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் ரஜினி சொன்ன பதில்: ‘சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ. ஒரு சர்வாதிகாரத்துடன் கூடிய தலைமை நாட்டுக்கு இருக்கணும். ஒரு தகப்பனின் அக்கறை – கண்டிப்புடன் ஆட்சி நடத்தணும். அப்பதான் நாம நினைக்கிற மாறுதல்கள் வரும்’.

இதுதான் ரஜினி விரும்பும் அரசியல்… நேர்மை.. அமைப்பு முறை. அப்படி ஒரு உயர்ந்த சிந்தனை கொண்டவரை, அவரது ரசிகர்களே மலிவான சராசரி அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

நமக்கும் கீழே உள்ள ஒருவரோடு நம்மை அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்து திருப்தி கொள்வது, நமது ஈகோவை வேண்டுமானால் திருப்திப்படுத்தலாம். ஆனால்- நம் தரத்தையோ தகுதியையோ ஒரு போதும் அது உயர்த்திவிடாது. அதற்கு ஒருபோதும் உதவாது.

“விஜய்காந்த் கட்சி ஆரம்பித்துவிட்டார்… அவருக்கு இத்தனை சதவிகித வாக்குகள் கிடைத்துவிட்டன. நமக்கும் அந்தளவு கிடைக்குமா…?” என சிலர் கேட்பதும், “ஆந்திராவில் சிரஞ்சீவி முதல் தேர்தலில் இத்தனை சீட்டுகளும், இவ்வளவு ஓட்டுகளும் வாங்கிவிட்டார். நம்ம தலைவர் வந்தா எப்படி இருக்கும்?” என்று வெளிப்படையாகப் பேசுவதும், விவாதிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதே.

காரணம் இந்த இருவருமே ரஜினியோடு ஒப்பிடத்தக்கவர்கள் அல்ல. அவரைப் போல மக்கள் செல்வாக்கு மிக்கவர்களும் அல்ல.

ரஜினிக்கு மக்கள் மனதில் உள்ள இடம் அத்தனை உயர்வானது. சில மூன்றாம் தர பத்திரிகை விமர்சனங்களுக்காக ஒட்டுமொத்த மக்களையும் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

அமைதியாக வாக்குச் சாவடியில் பொறுமையாய் காத்திருந்து வாக்களித்த பல இளைஞர்கள் இம்முறை வெளிப்படையாகப் பேசியது இதுதான்:

‘இந்த முறை நம்மாளு (ரஜினி) வந்திருக்கலாம்… ஆ ஊன்னா மேல கையக் காட்றாரு. நமக்காக அவர் இறங்கி வரக்கூடாதா!’

இந்த நியாயமான ஆதங்கம் எத்தனை ஓட்டுக்களை ரஜினிக்காக வெல்லும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

சரி… இவ்வளவு பேசுகிறார்களே…அரசியலுக்கு எதை நம்பி வருவார் ரஜினி?

அப்படி அவர் வந்தாலும் கூடுகிற கூட்டம் ஓட்டாகுமா… எம்ஜிஆரின் காலம் திரும்புமா? இது ரசிகர்கள் என்ற நிலையைத் தாண்டி, பொதுவான மனநிலையில் சிலர் எழுப்பும் கேள்வி.

நியாயமான கேள்வியும் கூட.

அரசியலை பக்கா தொழிலாக மாற்றி, அடிக்க வேண்டிய இடத்தில் நோட்டுக் கட்டுகளை அடித்து, அடைக்க வேண்டியவர்கள் வாயை அடைத்து,  தேவையென்றால் மூச்சையும் அடைத்து, வெற்றியைப் பிடுங்கிக் கொண்டிருக்கும் அரசியல் காண்ட்ராக்டர்கள் மலிந்துவிட்ட காலம் இது.

இங்கே 500 ரூபாய் நோட்டும், குவார்ட்டரும் இல்லாமல் இனி ரஜினி போன்றவர்களால் ஓட்டு வாங்க முடியுமா?

ரஜினி ஆதரவாளர்களுக்கு மட்டும் அல்ல, ரஜினிக்கே கூட இந்த சந்தேகம் உள்ளது.

இந்த சந்தேகத்தைத் தெளிய வைக்க வேண்டியது ரசிகர்களே. ரசிகர்கள் என்போர் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள்தான் மக்கள். முதலில் அவர்களிடமிருந்தே மாற்றம் ஆரம்பமாக வேண்டும்.

கேட்க நாடகத்தனமாய் இருந்தாலும், 500 ரூபாய் நோட்டுக்கும் குவார்ட்டருக்கும் அப்பாற்பட்ட அரசியலைத்தான் ரஜினி செய்வார் என மக்கள் நம்பும் அளவுக்கு ரசிகர்கள் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இந்த நம்பிக்கையை முடிந்தவரை பரப்புவதும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிவு செய்யும் விதத்திலும் செயலாற்றுவதே ரஜினி ரசிகர்களின் சரியான பாதையாக இருக்கும்.

ஒருவேளை அவர் அரசியலுக்கு வராமலே கூட போகலாம். அன்றைக்கும் அவரை தலைவராக வரித்துக் கொண்டவர்களின் தரம் மாறாது. நல்ல தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் வந்துவிடும் அல்லவா…

இன்னொரு பக்கம் நடிகர்களும் வேறு துறையினர் பலரும் புதிது புதிதாக கட்சிகளைத் துவங்கிய வண்ணம் உள்ளனர். இதுகூட நல்லதற்குத்தான்.

‘கெட்டது பல்கிப் பெருகும்போது, நல்லதின் அருமை புரிய ஆரம்பித்துவிடும்’ என்கிறது விவிலியத் திருமறை.

-சங்கநாதன்
(ரஜினிபேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரை… சில மாற்றங்களுடன்!)
14 thoughts on “ரஜினி… ஒப்பீடுகள் சரிதானா?

 1. Xmen

  Comparing is the india’s worst habit.
  Similarly people compared Sachin with Sehwag.

  Many persons can’t be compared like Maniratnam,Shankar,Super Star,Rahman,Illayaraja,sachin and Kamal also.

 2. Kamesh

  அருமையான பதிவு
  அற்புதமான கருத்துக்கள்
  தீர்ந்தது சந்தேகம்
  பொற்கிழியை சங்கனதனுக்கு கொடுத்துவிடுங்கள் வினோ

  காமேஷ்

 3. கிரி

  //பொற்கிழியை சங்கனதனுக்கு கொடுத்துவிடுங்கள் வினோ//

  🙂

  வினோ நல்ல பதிவு விரிவாக பிறகு வருகிறேன்

 4. endhiraa

  ஏற்கனவே rajinifans ல படிச்சது தான். ஆனா நல்ல ஆழமான கருத்துக்கள். பாராட்டுக்கள் !!

 5. FUTURE DIRECTOR

  rajiniyai pathi pesum pothu en vijay perai podukirirgal ippadi nengal poduvathe oruvitha payathai ungalukku thotrivaipathai pol therikirathu inimel rajini pathiya cover story yil vijay yai pathi eluthaathirgal.

 6. Suresh கிருஷ்ணா

  வாவ்… அருமை. இதுபோன்ற கட்டுரைகள் இன்னும் நிறையத் தாருங்கள் ‘சங்கநாதன்…’

  ரசிகர்களை ஒருமுகப்படுத்தவும், சரியான கோணத்தில் சிந்திக்கவும் தூண்டிய கட்டுரை.

  -Suresh கிருஷ்ணா

 7. Manoharan

  Really Rajini is incomparable. He cant be compared to any individual in India.
  He has already gone beyond Comparision.

 8. harisivaji

  Rajini enga irukaaru ivung ellam enga
  ellam avunga manasatchiku theryum
  rajini in record ellam satharanma ithula invunga pathi senchaave athu persu
  apadi enna paneetanga rajini ku munadi kooda illa
  rajniyin mudiku kooda ivunga ellam equal aaga maatanga
  just chk this video..
  http://www.youtube.com/watch?v=bUzelHAHD4c
  Vino nenga rajini pathi pottathula ithan enaku besta therythu
  and thank you very much by not saying anything regarding that finger fellow this will be aslo an great insult to him.

 9. கிரி

  //நமக்கும் கீழே உள்ள ஒருவரோடு நம்மை அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்து திருப்தி கொள்வது, நமது ஈகோவை வேண்டுமானால் திருப்திப்படுத்தலாம். ஆனால்- நம் தரத்தையோ தகுதியையோ ஒரு போதும் அது உயர்த்திவிடாது. //

  மிகவும் சரி.

  இதை போல ஒப்பீடுகள் செய்வது அவர்களை கேவலப்படுத்துவதை போன்றே

  //ரஜினிக்கு மக்கள் மனதில் உள்ள இடம் அத்தனை உயர்வானது. சில மூன்றாம் தர பத்திரிகை விமர்சனங்களுக்காக ஒட்டுமொத்த மக்களையும் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.//

  சில பத்திரிக்கைகள் (தினமலர் போல) தொடர்ந்து அவதூறாக செய்திகள் போடும் போது அதை படிக்கும் மக்கள் கொஞ்சம் குழம்புவது அல்லது நம்புவது இயல்பு தான்..அது தவிர்க்க முடியாதது

  அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க அவர்களுக்கு நேரமும் இல்லை.. அது அவர்கள் வேலையும் இல்லை.

  //இங்கே 500 ரூபாய் நோட்டும், குவார்ட்டரும் இல்லாமல் இனி ரஜினி போன்றவர்களால் ஓட்டு வாங்க முடியுமா?

  எனக்கு பலத்த சந்தேகம்…

  சன் டிவி போன்றவர்கள் ஏதாவது செய்தியை போட்டு பரபரப்பாக்கி ஒட்டுமொத்தமாக திருப்பி விடும் வேலைய செய்பவர்கள்.. அதுவும் ரஜினி போன்ற விசயத்தில் அது உடனே காட்டுத்தனமாக பரவும். நமது மக்களும் உணர்ச்சிவசப்பட்டவர்கள் ஆதரித்தால் ஒட்டுமொத்தமாக எதிர்த்தாலும் ஒட்டுமொத்தமாக.

  //கெட்டது பல்கிப் பெருகும்போது, நல்லதின் அருமை புரிய ஆரம்பித்துவிடும்//

  இதையே நானும் நினைத்தேன்..ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்த பிறகு ..பொறுமையுடன் வருவதே சிறந்தது (கூடுமானவரை அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வெளிவந்து விட்டது).. அந்த பொறுமை காலம் தாழ்த்தாமல் பார்த்துக்கொள்வது ரஜினியிடம் தான் உள்ளது.

 10. kayamozhi

  mostly correct in vijayakanth case, but not in chiranjeevi …bcas he is also

  equal to rajni (only in cinema). but rajni never belive most of his fanclub

  leaders & members. They are very correptive, they want to make money by rajni.

  If u need i can show u many samples in madurai & every city in t.n…

  in 1996 he realise that greedy fans.bcas, they behaved like ministers at that

  time. Even in this election they got money frm politetions frm many parties &

  acted like they are the public leaders. With these type of fellos he never

  comes to politics….! bcas , basically he is a good human.

 11. Thameez

  மிகச் சரியான பதிவு. உண்மையான ரஜினி ரசிகனின் குமுறல் இது. வேறு பதிவில் படிக்கும் பொது கரூர் பழனிசாமி ரஜினி ரசிகர்களின் ஆதரவு அப்படின்னு படித்தேன். பழனிசாமி என்ன ஆனார்? சிரஞ்சீவி ஆட்டம் கண்டுவிட்டார். இது தேர்தலுக்கு முன்பே அவருக்கு தெரிந்து விட்டது. ஆனால் இந்த அளவு மோசம் போவார் என்று எதிர் பார்த்து இருக்க மாட்டார். ரஜினி சொன்னது போல “எந்திரன்” அப்புறம் பேசலாம் என்று சொன்னதே இதற்கு தான். ரசிகர்களுக்கு தெளிவு வந்து விடும் என்று தான். விஜயகநத்தையும், சிரஞ்சீவி யும் சொல்ல மாட்டார்களா என்று தான். வெற்றி கொண்டான் சொன்னது போல ரஜினி ஒரு ராஜதந்திரி. அவர் அரசியலுக்கு சஸ்பென்ஸ் வைத்து பொறுமை சொத்தே விஜயகாந்தை உள்ளை விட்டு வேடிக்கை பார்த்தவர். அது உண்மை என்று இப்போது தெரிகிறது

 12. T.Subramaniam

  Hats off vino!!!!!!!
  (regularly reading but comment panna time kidaikala…innaiku comment panna time irukku aana vaarthai illa)

 13. Manoharan

  A GOOD NEWS REG VIKATAN ;
  Nayanthara denied reports that she married choreographer-actor-director Prabhu Deva, when behindwoods contacted her for a confirmation. The actress, presently camping in Thiruvalla in Kerala with her parents, said that she would fly down to Chennai on June 13th and disclose other details.

  However, the lady also stated that her main purpose for the visit is to lodge a complaint with the Chennai Police Commissioner against popular Tamil magazine Vikatan, and file a lawsuit.

  Nayan rued that the magazine had published a morphed photograph that showed her and Prabhu as husband and wife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *