BREAKING NEWS
Search

ரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடி! – அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான்! – அபிஷேக் பச்சன்

எந்திரன் / ரோபோ பார்த்த எல்லோருமே சொன்ன விஷயம்தான் இது… ஆனால் இப்போது இதே வார்த்தையை ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சனே கூறியிருப்பதுதான், விசேஷம்!

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த படம் எந்திரன். சன் பிக்சர்ஸின் முதல் படம்.

படையப்பாவிலிருந்து தனது படங்களுக்கு ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார் ரஜினி. பல்வேறு காரணங்களால் அமையாமல் போய்விட, இறுதியாக எந்திரனில் ஜோடி சேர்ந்தனர்.

ஐஸ்வர்யா ராய் திரையில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த போதெல்லாம் கிடைக்காத வெற்றியும் புகழும், அவருக்கு ரஜினியுடன் நடித்ததில் கிடைத்திருக்கிறது. இந்த ஜோடியின் வெற்றி இன்று உலகமெங்கும் பெரிதும் பேசப்படுகிறது.

சமீபத்தில் ஸ்டார் டிவியில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் – ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர். ரஜினியை கடவுளுக்கு நிகராக மதிப்பவர்.

அபிஷேக் பச்சனிடம், ஐஸ்வர்யாவுக்கு பர்பெக்ட்டான சினிமா ஜோடி யார்? என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு சற்றும் தயக்கமின்றி அபிஷேக் சொன்னது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தொடர்ந்து அவர் கூறுகையில், “ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக்கும் திரையில் அழகான ஜோடிகளாகத் தெரிகின்றனர். ஷாரூக்குடன் ஐஸ்வர்யா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து ஷாரூக்கின் படங்களில் ஐஸ் நடிப்பார். ஆனால் ரஜினி சார்… இவருடன்தான் ஐஸ்வர்யா ராயின் ஜோடிப் பொருத்தம் மிகக் கச்சிதமாக இருந்தது. நான் எந்திரன் / ரோபோ பார்த்தேன். ரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடியாக ஜொலித்தனர் (Rajini sir – Aishwarya a dhamaal jodi!)” என்றார்.

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கத் தெரிந்த மனிதர்… முதல்நிலையில் உள்ள நாயகியை மனைவியாக வாய்க்கப் பெற்ற பலருக்கும் இல்லாத புரிந்து கொள்ளலுடன் வாழும் ஒரு இளைஞர் அபிஷேக் பச்சன் என்பது இந்தப் பேட்டியின் மூலம் மீண்டும் நிரூபணமானது!

-என்வழி
6 thoughts on “ரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடி! – அபிஷேக் பச்சன்

 1. எப்பூடி

  எல்லாமே பாக்கிறவன் கண்ணில்தான் இருக்கு. நீல கண்ணாடி போட்டு பார்த்தா எல்லாமே நீலமாத்தான் தெரியும், அதிலும் ஒரு மஞ்சள் எழுத்தாளர்(?) நீலக்கண்ணாடி போட்டுப்பார்த்தா எப்பிடி தெரியும்?

 2. DEEN_UK

  அண்ணா எப்பூடி!!!
  எப்பூடி இப்டிலாம்?!!
  மஞ்சள் எழுத்தாளர்,நீலக்கண்ணாடி எல்லாம் அந்த சாருக்கு தானே பொருந்தும்?!!
  நான் யாரையும் சொல்லலப்பா!! சாருன்னா , ஐயான்னு சொல்ல வந்தேன்!!
  சாருன்னா ஐயா தானே?!!
  இன்னொன்னு கேள்வி பட்டீங்களா? அவரு எழுத்துலக சூப்பர் இட்சுச்டாராமாம்! கேள்வி பட்டீங்களா இந்த கொடுமையை?!!

 3. எப்பூடி

  நீங்க சாருநிவேதான்னே சொல்லலாம், அந்தாளு இல்லாததை இருக்கிறமாதிரி சொல்லும்போது, நாம உள்ளதை உள்ளமாதிரி சொல்ல எதுக்கு தயங்கணும்?

  அவரும், அவரது எழுத்துக்களுக்கு ஆமாம்சாமி போடும் பூம்பூம் மாடுகளும் வேணுமின்னா அவரை எழுத்துலக சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளட்டும், என்னைப்பொறுத்தவரை அவரு ‘எழுத்துலக ரீ.ஆர்’ அப்பிடின்னுதான் தோணுது, இதுக்கு ரீ.ஆர் எங்ககூட சண்டைக்கு வராம இருந்தா சரி.

  கேள்வி: சாரு, ஞானி; ரெண்டு பேரும் யாருமே இல்லாத சமயம் ஒரு மூத்திரசந்தில மாட்டிக்கிட்டாங்க, ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் கவனிக்கலாம், யாரை கவனிப்ப்பீங்க?

  பதில் : Hypothetical Question

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *