BREAKING NEWS
Search

ரஜினி ஏற்பாட்டில் ஒளிர்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரங்கள்!

ரஜினி ஏற்பாட்டில் ஒளிர்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரங்கள்!

திருவண்ணாமலை: சூப்பர் ஸ்டார் அமைத்துக் கொடுத்த சக்தி வாய்ந்த மின் விளக்குகளின் (Focus lights) ஒளிமழையில் ஜொலித்தது அருள்மிகு அருணாச்சேஸ்வரர் திருக்கோயில்.

இந்த விளக்குகளை நிரந்தமாக அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான முறையான ஒப்புதல் கோரும் கடிதத்தை நடிகர் மயில்சாமி மூலம் நேற்று அனுப்பி வைத்தார் ரஜினி.

திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்று வருகின்றனர். கடந்த 2000-ம் ஆண்டு கிரிவலப்பாதை முழுவதும் ரூ 10 லட்சம் செலவில் 14 கி மீ தூரத்துக்கு 148 சோடியம் விளக்குகளை அமைத்துக் கொடுத்தார் ரஜினி.

இந்த நிலையில் இந்த ஆண்டு மகாதீபத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ரஜினி முன்வந்தார்.

ஒளிர்ந்தன கோபுரங்கள்!

அதற்கு கோவில் நிர்வாகம், ‘நான்கு கோபுரங்களும் ஜொலிக்கும் வகையில் மின்விளக்கு அமைக்க வேண்டும்’ எனக் கூறியதன் பேரில், கோவிலின் 4 கோபுரங்களும் ஒளிரும் வகையில் 16 சக்தி வாய்ந்த மின் விளக்குகள் கடந்த 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சோதனை ஓட்டமாக பொருத்தப்பட்டன.

இந்த மின் விளக்குகள் மூலம் அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரங்கள் 8 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை பிரகாசமாக தெரிந்தது. கோபுர தரிசனம் பார்க்க விரும்பிய பக்தர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது.

எனவே அந்த விளக்குகளை நிரந்தரமாகப் பொருத்த ரஜினிகாந்த் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவரது ராகவேந்திரா பொது நல அறக்கட்டளை சார்பில் முறைப்படி ஒப்புதல் கேட்டு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டது.

அந்த கடிதத்தை நடிகர் மயில்சாமி, கோவில் இணை ஆணையர் தனபாலிடம் கொடுத்தார்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் தனபால் கூறுகையில், ‘நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த மின் விளக்குகளை நிரந்தரமாக பொருத்த, அறநிலையத் துறை அமைச்சரிடமும், ஆணையரிடமும் முதல் கட்டமாக அனுமதி வாங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரஜினிகாந்த் தரப்பில் திட்ட அறிக்கை வந்ததும், அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் குழுவை கொண்டு இந்த மின் விளக்குகளின் ஒளியால் கோபுரங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆராய்ந்து, பின்னர் கோவிலில் நிரந்தரமாக பொருத்தப்படும். சில தினங்களில் இந்தப் பணிகள் துவங்கும்,’ என்றார்.




10 thoughts on “ரஜினி ஏற்பாட்டில் ஒளிர்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரங்கள்!

  1. Dinesh

    “கோவிலுக்கு செலவு செய்யும் காசில் அவர் ஏழைகளுக்கு உதவி இருக்கலாம்” என்று எதிர் பதிவுகள் வராமல் இருந்தால் சந்தோசமே…

  2. kamatchinathan

    ஏழைகளுக்கும் அவர் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார் .

  3. Sathees Baasha

    சார் நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன்
    அதனால் எனது திருமணத்தை அவருடைய பிறந்த நாள் அன்று வைத்திருக்கிறேன். எனக்கு தலைவர் ஆட்டோகிராப் போட்ட ஒரே ஒரு வாழ்த்து அட்டை கிடைத்தால் நான் ரொம்ப பெருமை படுவேன்.
    ______

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பரே.
    உடனடியாக தங்கள் திருமண அழைப்பிதழை ராகவேந்திரா மண்டபத்தில் தந்து, விருப்பத்தையும் தெரிவி்க்கவும்.

    -வினோ

  4. karthik

    ஓம் அருநாச்சலஸ்வறையா நமஹா..

    நல்ல விசயம்.. அனால் நீங்கள் கொடுத்த தலைப்பு கொஞ்சம் குத்துது…
    மனிதர்கள் யாரும் கடவுளுக்கு கொடை தர முடியாது, கடவுள் தான் மனிதர்களுக்கு தர முடியும். எனக்கும் சரியான தலைப்பு தெரியல.. ஆனா நேர்த்தி கடன், உபயம் போன்ற அர்த்தம் வருவதாய் இருந்தால் நன்றாக இருக்கும்.

  5. karthik

    @Ganesh
    //“கோவிலுக்கு செலவு செய்யும் காசில் அவர் ஏழைகளுக்கு உதவி இருக்கலாம்” என்று எதிர் பதிவுகள் வராமல் இருந்தால் சந்தோசமே…//

    ஹ ஹ.. நல்ல தான் யோசிகிரிங்க.. சொள்ளரவங்கள போய் எழைகளுக்கு உதவ சொல்லுங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *